Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bharath Varum Neram
Bharath Varum Neram
Bharath Varum Neram
Ebook110 pages54 minutes

Bharath Varum Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பிரபல நடிகையின் கணவர் தன் மனைவியை சந்தேகித்து பரத்திடம் சென்று துப்பறிய சொல்கிறார். பரத்தும் சுசீலாவும் நடிகை மற்றும் சக நடிகரை போலியான பெயரில் தொடர்புகொண்டு உண்மையை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இதற்கிடையில் பரத்திற்கு ஒரு போன் வருகிறது, தான் யார் என்று கண்டுபிடிக்க சொல்கிறாள்? அந்த விபரீத விளையாட்டில் சுசிலாவிற்கு தெரியாமல் ஈடுபடுகிறான். அந்த விலாசத்தை கண்டுபிடித்து அங்கு செல்லும் போது மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்ன அதிர்ச்சி? பட்டுக்கோட்டை பிரபாகரின் விறுவிறுப்பான நடையில் காண்போம்...

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580100908221
Bharath Varum Neram

Read more from Pattukottai Prabakar

Related to Bharath Varum Neram

Related ebooks

Reviews for Bharath Varum Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bharath Varum Neram - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பரத் வரும் நேரம்

    Bharath Varum Neram

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    மூன்லைட் டிடெக்டிவ் ஏஜென்சீஸ்.

    பரத் ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களில் ஈடுபட்டிருந்தான். ஒன்று: கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் நடுவில் ரிசீவரை இருக்கிக் கொண்டு மறுபடி மறுபடி 197 எண்ணை முயல்வது. இரண்டு: அதே நிலையில் டீ உறிஞ்சுவது.

    மூன்றாவது காரியத்திற்காக கொளுத்தப்பட்ட சிகரெட் ஆஷ்ட்ரே பள்ளத்தில் காத்திருந்தது.

    ரவி கொளுத்திய ஏர்கண்டிஷனரின் ஓரத்தில் இருந்த இடுக்கில் செருகி வைத்திருந்த ஊதுபத்தியிலிருந்து வாசனையாகப் புகை நெளிசல்கள்.

    எங்கேஜ்ட் சவுண்டில் சலித்துப் போய் ரிசீவரை வைத்தான். குடித்துவிட்டு டீக்கோப்பையை வைத்தான். சிகரெட்டை எடுத்துக் கொண்டான்.

    இண்ட்டெர்காமில், மாதவி, நான் ஒரு அட்ரஸ் சொல்றேன் நோட் பண்ணிக்கோ, அந்த அட்ரஸ்ல டெலிபோன் நம்பர் இருக்கான்னு டைரக்டரி என்கொயரில் கேட்டுச் சொல்றியா? என்றான்.

    சரி சார்.

    அட்ரஸ் சொன்னான், அப்புறம்... உங்க வீட்டுக்கு நேத்து புதுசா கண் மை தயாரிக்கிற கம்பெனிலேர்ந்து சேல்ஸ் கேர்ள் வந்து சாம்ப்பிள் டப்பா இலவசமா கொடுத்துட்டுப் போனாளா? என்றான்.

    அட! ஆமாம் சார். எப்படி சார் தெரியும்? நீங்கதான் அனுப்பி வெச்சிங்களா?

    நான் அனுப்பி வைக்கலை. நீதான் அப்பி வெச்சிருக்கே. நடுவுல நேரம் கிடைச்சா ஒரு தடவை கண்ணாடில உன் கண்ணைப் பார்த்துக்கோ மாதவி என்று வைத்தான்.

    மேஜை மீதிருந்த ஃபைல்களை ஒழுங்குபடுத்தினான். அவன் கையெழுத்திட வேண்டிய டைப் செய்யப்பட்ட ரிப்போர்ட்களை ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடத் துவங்கிய போது...

    டெலிபோன் ஒலித்தது.

    ஹலோ பரத் ஹியர் என்றான்.

    சோனாலி ஹியர் என்று ஒரு ஜீரா போட்ட குரல்.

    என்ன லி?

    ஐயம் மிஸ். சோனாலி

    கான்வர்சேஷன் கடைசில ‘ஸாரி, ராங் நம்பர்’னு சொல்றதுக்கு முன்னாடி இப்பயே உறுதி செய்துக்கலாம், நீங்க பேச விரும்பினது என்னோடதானே?

    யா! நீங்கதானே மூன்லைட் டிடெக்டிவ் ஏஜன்சி பரத்?

    ஆயிரம் சதவீதம் சரியான நபரோடத்தான் பேசறிங்க, இந்த பிரபஞ்சத்தில் உங்களுக்காக என்னால என்ன செய்ய முடியும் மிஸ். சோனாலி? உங்க பேரை கரெக்ட்டா உச்சரிச்சேனா?

    யெஸ். ஏன்?

    ஏன்னா ஒரு தடவை பண்டரிநாதன்ற பேரை இங்கிலீஷ்ல பார்த்து நான் கேனத்தனமா உச்சரிச்சு வாங்கிக் கட்டிக்கிட்டேன். அதிலேர்ந்து புதுசா அறிமுகமாறவங்க யாரா இருந்தாலும் நான் அவங்க பேரை உச்சரிக்கிறது சரியா இருக்கான்னு ஒரு தடவைக் கேட்டுக்கறதை ஜென்ம குணமா சேர்த்துக்கிட்டிருக்கேன்.

    நான் புதுசா அறிமுகமாறவ இல்லை மிஸ்டர் பரத்.

    வெய்ட். என் ஞாபக அடுக்குகள்ல அல்ஃபபெட் வரிசையில் சோனாலி புதுசா இருக்கே? பொதுவா என் சிறுமூளை தப்பு செய்றதில்லையே?

    அதாவது உங்களை எனக்குத் தெரியும். என்னை உங்களுக்குத் தெரியாது.

    உதாரணமா எனக்கு செய்தி வாசிக்கிற சந்தியா ராஜகோபாலைத் தெரியும். அவங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்கு மிஸ் வர்ல்ட் ஐஸ்வர்யாவைத் தெரியும். அவங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்கு தமிழ் சினிமாவின் அடுத்த பப்ளிமாஸ் புயல் நக்மாவைத் தெரியும். அவங்களுக்கு என்னைத் தெரியாது. அந்த மாதிரிதானே? இந்த நக்மா பேரைக்கூட ஜாக்கிரதையா உச்சரிக்கணுங்க.

    எதிர் முனையில் கல கல கல கல.

    மேடம், பக்கத்துல வாஷ்பேசின்ல யாரோ தண்ணியைத் திறந்து மூடாமல் போய்ட்டாங்க போலிருக்கு!

    இல்லைங்க, நான் சிரிச்சேன்.

    இந்த சத்தத்துக்குத்தான் இசைத்துறையில் ஜலதரங்கம்னு பேர் வெச்சிக் கூப்பிடுவாங்க சோனாலி.

    அய்யோ! நீங்க என்னை ரொம்ப புகழறிங்க.

    புரிஞ்சிடுச்சா? சரி. நமக்குள்ளே எப்படி பந்தம்? இன்னும் அரைப்பக்கத்துக்கு சஸ்பென்ஸ் வைக்காம சொல்லிடுங்களேன்.

    பரத், உங்க ஆபீஸ் இருக்கிற இதே பில்டிங்லேர்ந்து வேற ஒரு ஆபீஸ்லேர்ந்து நான் பேசறேன். நான் இந்த ஆபீசுல சேர்ந்து பத்து நாளாகுது. இந்தப் பத்து நாளும் கார் பார்க்கிங் பிளேஸ்ல, லிஃப்ட்ல உங்களை தினமும் சந்திச்சிருக்கேன். உங்ககிட்டே வந்துப் பேச தயக்கம்.

    ஏன்? வாயில் துர்நாற்றமா? குளோஸப்!

    அதில்லை.

    தற்காலிக முகப் பருவா? கிளியர்சில்!

    அய்யோ! அதெல்லாம் இல்லை. நான் உங்க ரசிகை சார். உங்க கூட ரொம்ப நேரம் மனசு விட்டுப் பேசணும்னு ஆசை.

    வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்களை குறிப்பா ரசிகைகளை அன்போட வரவேற்கிறது தமிழர் பண்பாடுங்க, நான் தமிழன்ங்க. எந்த ஃப்ளோர்ல எந்த ஆபீஸ்ல வேலைப் பார்க்கறிங்கன்னு சொல்லுங்க.

    மாட்டேன். அதைச் சொல்றதா இல்லை.

    அய்யோ! நான் ரவுடிப் பையன் இல்லைங்க. தமிழ் டிக்ஷனரி புரட்டிப் பாருங்க, அப்பாவின்ற வார்த்தைக்கு நேரா என் பேரைத்தான் போட்ருப்பாங்க.

    எவ்வளவு பெரிய டிடெக்டிவ் நீங்க! என்னை நீங்களே கண்டுபிடிச்சு வந்து ஹலோ சொல்லுங்க பார்க்கலாம்.

    என்னங்க இது. முதல் சாப்டர்லயே சவாலா? இந்த பில்டிங்ல நேத்தையக் கணக்குப்படி நூத்தி நாப்பத்தி ரெண்டு ஆபீஸ் இருக்குதுங்க. இதில் நான் எப்படி உங்களைக் கண்டுபிடிக்கிறது?

    அதான் சேலன்ஞ்!

    ஏங்க என்னை என்ன பொழுது போகாம உக்காந்து தாயம் விளையாடிட்டிருக்கிறவன்னு நினைச்சிங்களா? உழைப்புக்கு ஒரு கூலி இருந்தாத்தான் அந்த உழைப்புக்கு மரியாதை, வெறுமனே சவால் விட்டா எப்படி? சவால்ல ஜெயிச்சா இன்னது கிடைக்கும்ப்பான்னு சொன்னாத்தானே மெனக்கெடறதில ஒரு அர்த்தம் இருக்கும்?

    எதிர் முனையில் மௌனம்.

    என்னங்க சோனாலி? போனை வெச்சிடலையே? ஹலோ...

    "இல்லை! பரத்,

    Enjoying the preview?
    Page 1 of 1