Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maranam Thappinal Maranam
Maranam Thappinal Maranam
Maranam Thappinal Maranam
Ebook96 pages59 minutes

Maranam Thappinal Maranam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காணாமல் போன கிருஷ்ணனின் மனைவி வித்யாவை கண்டுபிடிக்க செல்லும் பரத்-சுசீலா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன? ஊட்டியில் யாரும் அதிகமாக பயன்படுத்தாத அந்த இடத்தில் வித்யாவின் உடைமைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. பரத்தின் தீவிரமான நடவடிக்கைகள் மூலம் முக்கியமான ஆதாரங்கள் கிடைக்கின்றன இந்த ஆதாரங்களின் மூலமே வினோத் என்பவன் கைது செய்யப்படுகின்றான். அவனை ஏன் கைது செய்தார்கள்? வித்யாவை கண்டுபிடித்தார்களா? பல திடுக்கிடும் தகவல்களை வாசித்து அறிவோம் மரணம் தப்பினால் மரணம்.

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580100908050
Maranam Thappinal Maranam

Read more from Pattukottai Prabakar

Related to Maranam Thappinal Maranam

Related ebooks

Reviews for Maranam Thappinal Maranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maranam Thappinal Maranam - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    மரணம் தப்பினால் மரணம்

    Maranam Thappinal Maranam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 1

    யெஸ்! பரத் ஹியர் என்றான் பச்சை போனில். எதிர்முனையில் மௌனம்.

    அகல கண்ணாடி ஜன்னலுக்கு அப்புறம், ஊமை வாகனங்களின் இயக்கம். சதா குளிர்சாதனத்தின் முனகல். மேஜைமேல் கனம் வைக்கப்பட்டக் காகிதங்களின் துடிப்பு. சுவர் கடிகாரத்தில் 5-17. வினாடி முள் தத்தித் தத்தி நகர...

    ஹலோ என்றான் மறுபடியும்.

    என் குரல் ஞாபகமிருக்கா?

    வளையல் அணிந்த குரல். குயிலுக்கு டியூஷன் கற்றுக் கொடுத்த குரல். எங்கே கேட்டேன்?

    இந்தியன் ஏர்லைன்ஸ் அளென்ஸஸ் த ஃபலைட் நம்பர்... ம்கூம், ஈஸ் இட் டபிள் ஃபோர், டபிள் டு, எய்ட் செவன், யு ஹேவ் எ கால் ஃபரம் ஹைதராபாத்... ம்கூம், மேலும் ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார். இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட்டில் பாரதம் ஏழு விக்கெட் இழப்பிற்கு... ம்கூம்.

    எக்ஸ்க்யூஸ் மி மேடம். உங்க குரல் எனக்கு நினைவிருக்கு, அடிக்கடி கேட்ருக்கேன். ஆனா நினைவில்லை.

    பல் எல்லாம் ஒவ்வொண்ணா பேத்துடுவேன்.

    வாட்?

    நான் சுசி பேசறேன். என்ன சொன்னீங்க? நினைவில்லையா?

    பாவி! நீ எப்ப வந்தே? உன் குரலா அது?

    கர்சீப் போட்டு பேசினேன்.

    அதானே பார்த்தேன். என்னடா இவ்வளவு இனிமையா இருக்கேன்னு. நீ ஏன் எப்பவும் வாய்க்கு குறுக்கே ஒரு கர்சீப் கட்டிக்கிட்டுப் பேசக் கூடாது சுசி?

    திமிரா? டைப்பிஸ்ட் யாரும் புதுசா சேர்ந்திருக்காங்களா?

    ஆமாம், ஏன்?

    இன்னும் ஆஃபீஸைவிட்டு புறப்படலையே ஐயா, அதான் கேட்டேன், என்ன வயசு?

    போன மாசம்தானே முப்பத்தி ரெண்டாவது பர்த்டே கொண்டாடினேன், மறந்துட்டியா?

    நான் டைப்பிஸ்ட் வயசு கேட்டேன்.

    இருப்பத்தி மூணும் ஏழு மாதங்களும்.

    அவ்வளவு துல்லியமா கணக்கு வச்சிருக்கீங்களா? பேரென்ன?

    லோகநாதன்.

    அய்யே... ஓல்ட் ஜோக், புறப்பட்டு வர்றது.

    இதோ, முன்னைவிட இப்போ பெரிசா வளர்ந்திருக்கா உனக்கு?

    டீஸண்ட்டா பேசுங்க பரத், ச்சே!

    என்ன ச்சே? நகம் வளர்த்தியே, அதைப் பத்திக் கேட்டேன். சுசி, மொதல்ல நீ டீஸண்ட்டா நினைக்க கத்துக்கோ, வர்றேன். நேர்ல பேசலாம்.

    போனை வைத்துவிட்டு, பஸ்ஸர் அடித்து, பியூனை அழைத்தான்.

    லைட், ஏ.சி. எல்லாம் ஆஃப் பண்ணிடுப்பா.

    தன் சொந்தப் பேனாவை பாக்கெட்டில் செருகிக் கொண்டான். அறையை விட்டு வெளிப்பட்டு, காரிடாரில் நடந்து லிஃப்ட்டுக்கு வந்தான். பட்டன் அழுத்தி அழைத்தான். மேலேயிருந்து வந்து நின்றது, திறந்தது, உள்ளே மிஸ் அனிதா லிஃப்டின் சைடில் இருந்த கண்ணாடியில் பார்த்து லிப்ஸ்டிக் பூசிக் கொண்டிருந்தாள்.

    ஹலோ குட் ஈவினிங் பரத்.

    போச்சு, மறுபடி மாட்டிக்கிட்டேனா? என்று நுழைந்தான்.

    கதவைச் சாத்தி ஜி அழுத்த... லிஃப்ட் கீழே இறங்க ஆரம்பித்தது.

    ஏன் பரத், த சேம் கேள்வி, எந்த ஈவினிங் நீங்க ஃப்ரீ?

    மேடம், த சேம் பதில். பிப்ரவரி முப்பதாம் தேதி ஈவினிங்.

    என்னை நேரா பாருங்க, நான் அழகா இல்லையா?

    சேச்சே.

    அப்புறம்? வொய் நாட்?

    அதானே, வொய் நாட்?

    நிச்சயமா ஒரு நாள்

    பிப்ரவரி முப்பது?

    ஏன் மிஸ் அனிதா, இந்த பில்டிங்கல பதினேழு கம்பெனிகளோட ஆஃபிஸஸ் இருக்கு. அதென்ன பர்ட்டிகுலரா நான்? எலிஜபிள் பாச்சலர்ஸ் எத்தனை நூறு பேர் இருக்காங்க?

    ஆனா... ஐ லவ் யு ஒன்லி.

    சுசி தெரியுமா உங்களுக்கு?

    லிஃப்ட் கீழே வந்து நின்று, வெளியே நடந்தார்கள்.

    யாரு?

    என்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவ.

    ஸோ வாட்? நான் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னேனா கண்ணடித்தாள்.

    ஒரு நாள் அறிமுகப்படுத்தறேன். இதே வாக்கியத்தை அவளுக்கு முன்னாடி சொல்லுங்க. அப்புறம் நீங்க ப்ரைலி முறையிலே தான் நியூஸ் பேப்பர் படிக்க முடியும். தோண்டிடுவா ரெண்டு கண்ணையும்.

    பரத் தனது பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

    ஓக்கே, வழில என்னை ட்ராப் பண்ணலாமா?

    பெட்ரோல் ஊத்தி பைக்கையேக் கொளுத்திடுவா.

    சரியான ஹென்பெக்ட்! என்று நடந்தாள், திரும்பி, "என் முயற்சிகள் தொடரும். ஒரு நாள்

    Enjoying the preview?
    Page 1 of 1