Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

7, December - 85
7, December - 85
7, December - 85
Ebook94 pages1 hour

7, December - 85

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சிம்லா பெயருக்கேற்ப குளுமையானவள் தான். தன் நடனத்தில் ஆண்வர்க்கத்தை தன் கட்டுக்குள் வைப்பவள் தான். ஏன் அவள் நிலைமை இந்த நிலைக்கு வந்தது. அதற்கு காரணமானவன் யார்? அவளின் அந்நிலைமையைக் கண்டு அவருக்கு உதவி செய்பவர்கள் யார்? ஏன் அவளுக்கு உதவ வேண்டும். அந்த உதவியால் யார், யார் காப்பாற்றப்படுவார்கள்? கதையின் இறுதியில் யார் கொல்லப்பட்டார்கள்.விறுவிறுப்பான திருப்பங்களுடன் கதையின் களம் நகர்கின்றன. வாசித்து தெரிந்துகொள்வோம்...

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580100907004
7, December - 85

Read more from Pattukottai Prabakar

Related to 7, December - 85

Related ebooks

Related categories

Reviews for 7, December - 85

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    7, December - 85 - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    7, டிசம்பர் – 85

    7, December – 85

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    கார் விரைந்து கொண்டிருந்தது.

    தொங்கிக் கொண்டிருந்த குதிரை வால் கொண்டை போட்டிருந்த பொம்மை அசைந்து கொண்டிருந்தது.

    வழிந்து கொண்டிருந்த திடும் – திடும் – திடும் - சங்கீதத்திற்கேற்ப ஸ்டியரிங்கின் மேல் அவன் விரல்கள் தாள மிட்டன.

    தீ பிடித்து விட்டதைப் போல சாலையில் அவசர மக்கள். ஒரு வாரதொடர் மழைக்குப் பிறகு காயத் தொடங்கியிருக்கும் கட்டிடங்கள். உறுத்தாத உஷ்ணம். காற்றுக்குள் குளிர் ஒளிந்திருந்தது.

    அவன் முன் நெற்றியில் புரண்ட ஒற்றைக் கூந்தல் சுருள் அலைக் கழிந்து கொண்டிருக்க... ராகமில்லாமல் ஒரு உற்சாக விசில் அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்தது.

    சிக்னலுக்காக நிறுத்தினான்.

    வலது பக்கம் அறுபதடி கதாநாயகன் துப்பாக்கி காட்டி மிரட்டினான். இடது பக்கம் பஸ் ஸ்டாப்பில் புத்தகங்களை மார்பில் அழுத்தின பள்ளி மாணவிகளைப் பார்த்தான்.

    கோட் பாக்கெட்டில் இருந்து கார்டு சைஸ் கலர் புகைப் படத்தை எடுத்து ஸ்டியரிங் மேல் வைத்து பார்த்தான்,

    அந்த இளமையில் நீந்தும் பெண் காமிராவை நேராகப் பார்த்து அளவாகச் சிரித்திருந்தாள். கன்னங்களில் அமுல் ஸ்ப்ரேயின் வெற்றி தெரிந்தது. கண்களில் தூண்டில் இருந்தது. ஈரமான உதடுகளின் லேசான மினுமினுப்பையும் கவனமாகக் கவர்ந்திருந்தது காமிரா. செதுக்கின கழுத்து. அப்புறம். இன்னொருவனுக்கு மனைவியாகப் போகிற பெண்ணை இதற்குக் கீழே வர்ணிப்பது அநாகரிகம்.

    ஹாய் சித்ரா! என்றான்.

    சிக்னல் மாறினதும்... புறப்பட்டான்.

    காரை ஓட்டிக் கொண்டே, சித்ராவை உயர்த்தி தன் உதடுகளின் மேல் பொருத்தி, பத்து சதவீதம் கற்பழிப்பை முடித்துக் கொண்டு பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான்.

    அந்த அலுவலகக் கட்டிடத்தின் போர்டிகோவில் காரை நிறுத்தினதும்... காத்திருந்த பியூன் கதவை திறந்து விட்டு, பிரீஃப்கேஸை வாங்கிக் கொண்டான்.

    லிஃப்டில் பயணித்து ஹாலில் அத்தனை காலை வணக்கங்களுக்கும் தலையசைத்து விட்டு... மானேஜர் என்று கதவில் எழுதப்பட்ட அறைக்குள் நுழைந்தான்.

    நீளமான மேஜை. டெலிபோன்கள். இளம் பச்சையில் சுவர் காகிதங்கள். ஒருபக்க கண்ணாடி ஜன்னலுக்கு அந்தப் பக்கத்தில் தத்தளிக்கும் கடல் மேல் காத்திருக்கும் சரக்குக் கப்பல்கள்.

    அமர்ந்தான். அவன் பார்வைக்கு வர வேண்டிய அன்றைய கடிதங்கள் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்க பார்வையிட்டான். டெலிபோன்.

    ஹலோ... விவேக். ம்... கொடுங்க. ஹலோ அங்கிள். சொல்லுங்க."

    வணக்கம் மாப்பிள்ளை. காலைல என்ன எங்கேஜ் மெண்ட்ஸ் உங்களுக்கு?

    ஃபாக்டரி விசிட் இருக்கு. முடிச்சுட்டு தாஜ்ல மத்தியானம் ஒரு டெல்லி பார்ட்டியோடு லன்ச். என்ன விஷயம் மாமா?

    கல்யாண விஷயம்தான். தேதி குறிச்சி வாங்கினேன். வர்ற ஏழாம் தேதி நல்ல முகூர்த்தம். அதைவிட்டா இன்னும் இருபது நாள் தள்ளிதான் முகூர்த்த நாள் வருதாம்.

    ஏழா? யூ மீன் டிசம்பர் ஏழு?ஆமாம்."

    இன்னிக்கு நவம்பர் 26. பத்து நாள் தான் இருக்கு மாமா நடுவிலே.

    அதுக்காகக் கவலைப்பட வேண்டியவன் நான் தானே மாப்பிள்ளை? காசை வீசி எறிஞ்சா ரெண்டே நாளிலே கூட கல்யாண ஏற்பாடு எல்லாத்தையும் செஞ்சிடலாம். ஆபட்ஸ் பரி விசாரிச்சுட்டேன். நம்ம அதிர்ஷ்டம் ஏழாம் தேதி இன்னும் புக் ஆகலை. அதான் உங்களை ஒரு வார்த்தை கேட்டு கிட்டு ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்.

    இவ்வளவு சீக்கிரமாவா?

    இதிலே உங்களுக்கு சிரமம் என்ன மாப்பிள்ளை?

    டிரெஸ் எல்லாம் எடுக்கணும் பத்திரிகை அடிக்கணும் டிஸ்ட்ரிபியூட் பண்ணனும்.

    "அவ்வளவுதானே? ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1