Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadhal XYZ
Kadhal XYZ
Kadhal XYZ
Ebook111 pages40 minutes

Kadhal XYZ

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466671
Kadhal XYZ

Read more from Rajendrakumar

Related to Kadhal XYZ

Related ebooks

Related categories

Reviews for Kadhal XYZ

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadhal XYZ - Rajendrakumar

    7

    1

    கடிதம் : அமிர்தலிங்கம் பூஜை அறையிலிருந்து கம்பீரமாக நடந்து வந்தார். (வயது ஐம்பது. நம்புங்கள்).

    மேஜை அருகே அமர்ந்து லெட்டர் ஹெட்டை எடுத்து வைத்த அதே வேகத்தில் பாய்ந்து பேனாவை எடுத்து உச்சியில் அழுத்த; கோபமாக வெளிப்பட்டது பால் பாயிண்ட் முனை.

    பிள்ளையார் சுழி போட்டார்.

    என் செல்வ மகள், சௌபாக்கியவதி மீனலோசனிக்கு உன் அப்பாவின் அநேக கோடி ஆசீர்வாதங்கள் - கடிதம் உருவாகலாயிற்று.

    கலே துறையில் நின்டுயிருந்த அந்த ஹோவர் கிராஃப்ட் (மினி கப்பல்) புறப்படத் தயாராக இருந்தது. பிரான்ஸ் துறை.

    கண் கொள்ளுமட்டும் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தான் அந்த ஜோ, (பிரான்ஸ் நாட்டின் வளப்ப உடம்பில் மெருகேறித் தெரிந்தது).

    ‘மொன்ஸியார்’ என்று ஆரம்பித்து அந்த ஹோவர் கிராஃப்ட் ஆள் பரபரவென்று பிரஞ்ச் மொழியில் பேச ஆரம்பித்தான் (பேசுகிறானா? திட்டுகிறானா?).

    ஒரு சின்ன காம்பரமைஸ் செய்துக் கொள்ளுவோமா? இதில் நிறையப் பேர் பிரஞ்ச்சும், ஆங்கிலமும் பேசுவார்கள்.

    அதை அப்படியே எழுதினால் உங்களுக்கு சங்கடமாக இருக்கும். (எனக்கு அந்த மொழிகளில் பாண்டித்யமில்லை என்பது வேறு விஷயம்). அதனால் -

    இலக்கணத்தமிழில் வரும் வசனங்களைத் தேவைக்கேற்ப அந்தந்த மொழிகளாக நினைத்துக் கொள்ளுகிறீர்களா? பாஷை அடையாளத்துக்கு அங்கங்கே ஓரிரு வார்த்தைகள் வரும்.

    ‘தாங்க்யூ’.

    (ஸாரி).

    ‘நன்றி உங்களுக்கு’

    பருமனான அந்த ஹோவர் கிராஃப்ட் ஆள் நிறைய பேசியதன் சுருக்கம். நேரம் கடந்து விட்டது. இனியும் காத்திருப்பதற்கில்லை.

    ஜோவின் முகத்தில் எரிச்சல் வந்தது.

    சரி. நான் இறங்கிக் கொள்ளுகிறேன். அடுத்த ஹோவர் கிராஃப்டில் வருகிறோம். பாதி இறங்கியவனின் கண்ணில் பட்டது

    இவன் இறங்கிப் போவதற்காக காத்திருந்த ஆள்- அவன் மீண்டும் ஏறிவரவே - கேள்வியுடன் பார்த்தான்.

    வந்து விட்டார்கள்!

    க்ரீச்சென்ற ஓசையுடன் வந்து நின்று படகுக் காரிலிருந்து அவசரமாக இறங்கினாள் மீனா. பாப் தலையை உசுப்பிக்கொண்டு அவசரமாக வந்தாள்.

    வா. சீக்கிரம்!

    அவசரப்படுத்தும் கணவனை நிமிர்ந்து பார்த்தபோது எரிச்சலை விட அலட்சியமே அதிகமிருந்தது.

    திரும்பி காரில் இருந்தவனுக்கு கையசைத்துவிட்டு -

    டேனியம் ஜீன்ஸின் நழுவலை சரிப்படுத்தியவாறு அவசரமாக ஏறினாள்.

    ஹோவர் கிராஃப்ட் ஆள் முறைப்புடன் நகர்ந்தான். சில வினாடிகளில் -

    நீரை கிழித்துக்கொண்டு சரேலென்று கிளம்பியது ஹோவர் கிராஃப்ட்.

    "தொண்டை உலர்ந்திருக்கும். இந்தா!"

    ஜோ நீட்டிய கிளாஸைப் பார்த்த மீனா, கண்களை மட்டும் உயர்த்திப் பார்த்தாள்.

    பீயர் தான்!

    வாங்கிக் கொண்டாள்

    மறுபடியும் எப்போதாம் ஷூட்டிங்? அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

    அலுப்புடன் நாளை கழித்து மறுநாள். பீயரை உலுக்கியபோது உணர்ந்தாள். கொஞ்சம் அப்பால் -

    பேசிக்கொண்டிருந்த இரண்டு ஜப்பானிய உல்லாசப் பயணிகளின் பேச்சு இவளைக் கண்டதும் நின்றது. ஜோ எழுந்து ஸ்காட்சுக்காக போனான்.

    அவர்களுக்குள் ஏதோ பரப்பரப்புடன் பேசுவது உணர்ந்ததும் -

    மௌனமாக எழுந்து நடந்து மேல் தளத்துக்கு வந்தாள்.

    தண்ணீருக்கும் மேலே காற்றைக் கிழித்து முன்னேறிக் கொண்டிருந்தது ஹோவர் கிராஃப்ட்,

    தன்னை மறந்த நிலையிலிருந்த அந்த ஸ்வீடிஷ் ஜோடி இவளை அலட்சியப்படுத்தியது. இவள் அங்கே இல்லாதது போன்ற நினைப்பில் அவளைக் கவ்விக் கொண்டிருந்தான் அவன்.

    இவளை சினேகமாக பார்த்துச் சிரித்த அந்த ஜப்பானிய கேய்ஷா பெண் ‘கோஷ் மிஷி’ என்று ஏதோ கேட்டது.

    சிரிப்புடன் அவளை ஒதுக்கிவிட்டு ஓரத்தில் கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றாள்.

    கடல் பறவைகள் உற்சாகமாக கூவியவாறு குறுக்கும் நெடுக்குமாக பறந்தன. அவற்றின் சுறுசுறுப்பை மிகவும் ரசித்தாள்.

    அலைகளற்ற கடல் ஆழத்துக்கு சாட்சியம் கூறி பயமுறுத்தியது.

    நீ இங்கேயா இருக்கிறாய்? கீழே தேடி ஏமாந்து தவித்தேன்

    திரும்பாமல் நின்றாள்.

    நல்லவேளை. இவர்கள் சொல்லித்தான் தெரிந்தது - நீ மேலே ஏறி வந்தது.

    புருவங்கள் நெறிந்தன திரும்பிப் பார்த்தபோது -

    அவர்கள் மூஞ்செல்லாம் பல்லாகச் சிரித்தார்கள்.

    நோ மெஷ்தே என்று கும்பிட்டார்கள். (இந்தியாவுக்கு வந்து ரகஸிய கல்கத்தாவின் தெருவில் நிறைய சுற்றியவர்களாயிருப்பார்கள் போலிருந்தது). சந்தேகமாகத் திரும்பிப் பார்த்தபோது -

    அந்த கெய்ஷா பெண் பாதி மூடிய கண்களால் குறுகுறு வென்று பார்த்துக்கொண்டு இருந்தது. அவள் பார்வையில் நிறைய சந்தேகம் இருந்தது.

    மீண்டும் திரும்பி அவர்களைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள்,

    அவன் கிடுகிடென்று ஜப்பானிய மொழியில் அவர்களிடம் பேசினான்.

    ‘மீனா’ என்ற பெயர் வந்ததினால் அறிமுகப்படுத்துகிறான் என்பது வரை புரிந்தது.

    அவனுக்கு எல்லா நாட்டு மொழிகளும் தெரியும்- தமிழைத் தவிர.

    அந்த இரண்டு பேரும் பார்வையாலேயே அவளை நிறைய இடங்களில் தொட்டுப் பார்த்தார்கள். வருடினார்கள்.

    டார்லிங் ஜோ சொன்னான். அவர்கள் உன்னை இரவுநேர சாப்பாட்டுக்குக் கூப்பிடுகிறார்கள். போகிறாயா?

    இல்லை. மீனா சொன்னாள், நான் ரொம்பவும் களைத்துப் போய் இருக்கிறேன்.

    அவன் பார்வை மாறியது. முறைத்துப் பார்த்தான். நீ போகிறாய் என்றான் அதட்டலாக.

    முகத்தைத் திருப்பிக்கொண்டாள், பறந்துவந்த கடல்பறவையொன்று அவள் தோளில் சிநேகமாக வந்து அமர்ந்து கொண்டது. உற்சாகமாகக் கூவியது.

    நீ ஏன் இங்கே வருகிறே? நீ சுதந்திரப் பறவையாச்சே போ. பறந்து விளையாடு தள்ளிவிட்டாள்.

    அடிமை. நான்தான் அடிமை.

    என்ன சொல்கிறாய்? என்ன பாஷை அது?

    தமிழ்!

    என்ன சொன்னாய்?

    என்னிடமில்லாத சுதந்திரம் அதற்கு இருக்கிறதே. பொறாமைப்பட்டேன்.

    அவன் அலட்சியப்படுத்தினான். தொலைவில் -

    டோவர் துறையின் கலகலப்பு கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது. இறங்கினால் இருபது நிமிடத்தில் லண்டன் போய் விடலாம்.

    ஹோட்டல் (ஐந்து நட்சத்திரம்) டைனிங் ஹாலில் மெலிதான இருட்டுக்குள் பல ரகசியங்கள் அடர்ந்திருந்தன.

    பிஸினஸ் பேச அமர்ந்திருந்த இரண்டு பெரியவர்களைத் தவிர மற்றவர்களின் மன நிலையில் ஒரு கொதிப்பு இருந்தது! பார்வையில் - பேச்சில் - லேசான உரசலில் -

    ஒரு ஏக்கம் இருந்தது! அறையின் அந்தரங்கத்துக்கு சின்ன சின்ன முஸ்தீபுகள்.

    ஹிப்பி ஜோடி

    Enjoying the preview?
    Page 1 of 1