Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innamum Brammachari
Innamum Brammachari
Innamum Brammachari
Ebook53 pages27 minutes

Innamum Brammachari

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அமெரிக்கா சென்று வரும் ஒரு இந்திய பெண் தன் பெட்டியை தொலைத்துவிட்டு தேடுகிறாள் அவள் நண்பன் குமாரை உதவிக்கு அழைத்துக் கொள்கிறான் இருவரும் மிகவும் தீவிரமாக பெட்டியை தெரிகின்றனர் ஏன் பெட்டிக்குள் இருப்பது என்ன பார்ப்போம்.

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580152608194
Innamum Brammachari

Read more from Rajendrakumar

Related to Innamum Brammachari

Related ebooks

Reviews for Innamum Brammachari

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Innamum Brammachari - Rajendrakumar

C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

https://www.pustaka.co.in

இன்னமும் பிரம்மசாரி

Innamum Brammachari

Author:

ராஜேந்திரகுமார்

Rajendrakumar

For more books

https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

1

டொட்...

எழுதுவதை நிறுத்தி நிமிர்ந்து பார்த்தேன்.

டொட் டொட்.

யார்ரா அது? என்று இரைந்தேன்.

பதிலில்லை.

கதவுக்குக் கீழேயிருந்து வந்த வெளிச்சத்தில் நிழலாடியது.

முணுமுணுப்புடன் எழுந்து கதவைத் திறந்தவன் அயர்ந்து போனேன். ஹேய் யூ ஜென்னி! என்று கூவினேன் வியப்பாக..

ஹாய்! எப்படி இருக்கே? கையில் ஒரு பெட்டியுடன் சுதந்திரமாக உள்ளே நுழைந்தாள் ஜென்னி. முகம் சுளித்தாள். என்ன, ரூமை இப்படி கந்தரகோளம் பண்ணி வச்சிருக்கே? ஆமா; ஏன் இன்னும்கூட இங்கேயே தங்கியிருக்கே? கல்யாணம் பண்ணிக்கல்லே?

நோ. இன்னமும் பிரம்மச்சாரி. குறும்புடன் சொன்னேன். ஸ்டேட்ஸுக்குப் போயிட்ட என் கல்யாணப் பெண்ணுக்காகக் காத்து இருக்கேன்.

ஏய்ய்... என்றாள் செல்லமாக முறைத்து.

சிரித்தேன். ஆமா; நீ எப்ப திரும்பினே ஸ்டேட்ஸிலேருந்து?

காலையிலே பம்பாய் வந்தேன். மத்தியானமா மெட்ராஸுக்குப் புறப்பட்டேன்.

வியப்புடன் வாட்சைத் திருப்பிப் பார்த்தேன். பாம்பே ப்ளேன் இப்பதானே வந்திருக்கும். அப்போ, இறங்கி நேரே என்னைப் பார்க்க வந்துட்டியா? வீட்டுக்குக்கூடப் போகாம?

உயிரோட இருக்கியா இல்லையான்னு சந்தேகம் வந்தது. கன்ஃபர்ம் பண்ணிக்க வந்தேன்.

என் கண்ணு...

ச்சீய்.

என் செல்லம்.

ஐய...

என் குட்டிக் களுதே! என்று மூன்றாவதாகக் கன்னத்தைக் கிள்ளும்போது அவளுக்கு மிகவும் வலித்திருக்க வேண்டும்.

கன்னத்தைத் தடவியவாறு விலகி நின்றாள். ஸ்டேட்ஸுக்குப் போய் திரும்பினதுலே ஏதாச்சும் வித்தியாசம் தெரியுதா?

உம்? உதட்டைக் கசக்கியவாறு பார்த்தேன். முந்தி இருந்ததற்கு இப்ப உடம்பிலே துணி கணிசமாக் குறைஞ்சிருக்கு."

கொஞ்சம் சதை பிடிச்சிருக்கு. என்றவன் அச்சத்துடன் அவள் வயிற்றை ஆராய...

முதலில் புரியாமல் பார்த்தவள்- புரிந்ததும் கத்தினாள். "டாமிட் ஐ ஸே. உன் அசிங்கமான கற்பனையைக் கொஞ்சம் நிறுத்தறியா? நான் ஒண்ணும் கர்ப்பமில்லே.

Enjoying the preview?
Page 1 of 1