Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkey Theriyum Suganthi
Unakkey Theriyum Suganthi
Unakkey Theriyum Suganthi
Ebook125 pages43 minutes

Unakkey Theriyum Suganthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வக்கீல் சுகந்தியின் கணவன் ஒரு நரம்பியல் டாக்டர். அவனால் சுகந்தியின் மூன்று தோழிகளுக்கு ஏற்பட்ட அவல நிலைகள் புரியாத புதிர்போல இருந்தது. வேலைக்காரி வேலம்மாவுக்கும், எம்.எம் என்பவனுக்கும் என்ன தொடர்பு? டாக்டரின் சுயரூபம் என்னவென்று வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateAug 19, 2023
ISBN6580152609595
Unakkey Theriyum Suganthi

Read more from Rajendrakumar

Related authors

Related to Unakkey Theriyum Suganthi

Related ebooks

Reviews for Unakkey Theriyum Suganthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakkey Theriyum Suganthi - Rajendrakumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உனக்கே தெரியும் சுகந்தி

    Unakkey Theriyum Suganthi

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    சுகந்தி என்ற கணவரின் அழைப்புக்கு... மாடியிலிருந்து தேவதை ஒருத்தி மெல்லப் பறப்பதுபோல இறங்கிவந்தாள். ஹால் சோபாவில் சோர்வாக அமர்ந்திருக்க செல்வம் சிரிப்புடன் பார்க்கப் பார்க்க,

    சோபாவின் ஒரு கைப்பிடியில் அமர்ந்து அவன் மடியில் சரிந்து இன்னொரு கைப்பிடியில் சாய்ந்து அவன் கழுத்தைப் பிணைத்துக் கொண்டாள்.

    டார்லிங்

    கெஞ்சாதே! நான் கோபத்திலிருக்கேன்...

    அம்மாடியோவ் நெஞ்சில் கை வைத்துப் போலியாகப் பயந்த்தாள். ஏனாம்?"

    ஆறு மணிக்கு வந்திருந்தேன். அப்போ நீ இங்கேயே இல்லே...

    சேம்பருக்குப் போயிருந்தேன். ஒரு சின்னக் குறிப்புக்காக ஏழே காலுக்கு வந்தேன். அப்போ நீங்க இல்லே.

    ஆபரேஷன் செய்த பேஷண்ட்டுக்கு ஃபிட்ஸ் வந்துவிட்டதாகப் போன் வந்து போய்விட்டேன்.

    அவள் தொடையைக் கிள்ளி அலற வைத்தான்.

    மறுபடியும் எட்டு மணிக்கு நான் திரும்பி வந்தேன்.

    அந்த நேரம் நான் என் சினேகிதிகளோடு சாயா நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்விட்டேன்!

    நியூஸன்ஸ் கேஸா? மறுபடியுமா? அதை நிறுத்தச் சொன்னால் கேட்கமாட்டியே?

    மை டியர் சார், அதை நிறுத்திச் சரியாக மணி ஒன்று, நிமிஷம் இருபது, செகண்ட் இருபத்தாறு ஆகிறது.

    சிரித்தான்.

    உனக்கு இருபத்தெட்டு வயசுன்னு சொன்னால்கூடச் சண்டைக்குத்தான் வருவாங்க. எப்படி உன் அழகைத் தக்க வைச்சுக்கறே?

    கண் அடித்தாள்.

    என்ன விஷயம் இன்னிக்கு செம மூடுலே இருக்கீங்க?

    நானா? இப்படியொரு தேவதை பறந்து வந்து மடியிலே விழுந்தால் உணர்ச்சி செத்த கிழவன்கூட மூடுக்கு வந்துவிடுவான். பையன் எங்கே?

    இவ்வளவு நேரம் சண்டை போட்டுட்டு இப்பத்தான் தூங்கிட்டான்.

    அவளை நிமர்த்தி எழுப்பினான். தொடரும்.

    என்ன தொடரும்?

    மீதியைப் படுக்கை அறையில் காண்க.

    ச்சீய்! என்று அவன் தலையைக் கலைத்தாள், செல்லமாக.

    அவளை இடுப்பில் அணைத்தவாறு படி ஏறினான். பையன் இவ்வளவு நேரம் சண்டை போட்டான்னு சொன்னே?

    ஆமாம்...

    ஏன் என்னன்னு சொல்லல்லே?"

    சாண் பிள்ளைன்னாலும் ஆண் பிள்ளைங்கறதை நிரூபிக்கிறாங்க...

    மை காட்! ஏழு வயசிலேயேவா? அதெல்லாம் ஒண்ணும் பிரயோசனமில்லே ஒண்ணும் செய்ய முடியாது...

    பின்னே ஏன் வெகேஷன் ஆரம்பிச்சாச்சு. வத்தலகுண்டுக்கு அத்தை வீட்டுக்குப் போறேன். ரோகிணியோட விளையாடணுங்கறானே...

    விளையாடுவான். கொஞ்ச நேரத்திலே, ‘அத்தை உன் ரோகிணி என் நிஜாரை நனைச்சிட்டா’ன்னு கத்தப் போறான்...

    சிரித்தாள். அவன் குளிக்கப் போனபோது, சோபாவிலிருந்தே கேட்டாள், டியர், ஒரு விஷயம் பேசணுமே?

    அங்கிருந்து பேசறியா? கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான். இல்லே உள்ளே வந்து கிசுகிசுப்பாச் சொல்லப் போறியா?

    உம்? ஆசை, கதவைச் சாத்துங்க. சோப் பூசின மூஞ்சியோட எட்டிப் பார்த்தால் பயமா இருக்கு.

    தலையை உள்ளுக்கு வாங்கிக் கதவைச் சாத்தி அவன் சிரித்து அசரீரியாகக் கேட்டது, சொல்லேன்."

    பெண்டிங் கேஸ் எதுவுமில்லே.

    வாய்தா வாங்கிட்டியாக்கும்.

    ச்சீய்! கோடை விடுமுறை வேறு வருது. ஒண்ணு செய்யலாமா?

    இதோ வரேன்... செய்யலாமா!

    அதில்லீங்க. பையனைக் கூட்டிட்டுப் போய் வத்தலகுண்டுவில் விட்டுட்டு நாம் கொடைக்கானல்லே ஒரு வாரம் பத்து நாள் தங்கிட்டு வந்தா என்ன?

    உள்ளேயிருந்து ‘வொய்ங்’ என்று விசில் கேலி செய்யவே.

    உஸ். என்ன குறும்பு இது? கீழே வேலம்மா முழிச்சிட்டிருந்தா அசிங்கமா நினைப்பா!

    அவள் நினைக்கிறது இருக்கட்டும் நீ என்ன நினைக்கிறே? இரண்டாது ஹனிமூனா? பையனுக்கு ஏழு வயது. ‘கிளுகிளுப்பாய்ச் சிரித்தான்’ போதிய இடைவெளி.

    இப்படியெல்லாம் கேலி பண்ணினால் கீழே ஹால் சோபாவில் போய்ப் படுப்பேன் என்றவள்...

    செய் என்றதும், திக்கென்றது விழித்தாள்.

    இந்த மோசமான இரட்டைக் கட்டிலைவிட அந்தச் சோபாவே மேலானது. நெர்...ர்...ர்...ருக்கமாயிருக்கும் வெளியே வந்தவன் இடுப்பில் துவாலை மட்டுமே இருந்தது, எந்த நிமிடமும் அவிழும் போலப் பலவீனமாகத் தொற்றியிருந்தது.

    சிக்ரிம் நைட் டிரெஸ்ஸுக்கு மாறுங்க எனக்குத் தூக்கம் வருது. கைகளை உயர்த்திப் போலியாக உடம்பைத் திருகிக் கொட்டாவி விட்டவள் முகத்தில் சொத்தென்று வந்து விழுந்தது துவாலை.

    ஏய்... ய்... என்று அவள் தயக்கமாகத் துவாலையை விரித்து அச்சமாகத் திரும்பிப் பார்த்தபோது...

    கட்டிலில் போர்வைக்குள்ளே. போயிருந்தான். நீயும் சீக்கிரமா வா... கண் அடித்தான். என்னை மாதிரியே தயாராக...

    முதலில் பிராமிஸ் பண்ணுங்க...

    சத்தியமா அடுத்த பத்தாவது மாசமே பெண் பிறக்க வைக்கிறேன்.

    தூத்! அதையா சொன்னேன்? கொடைக்கானல் புரோகிராமைப் பற்றிச் சொல்லுங்க. ஓகே...?

    ஓகே கட்டை விரலை உயர்த்தினான். டன்...

    அவள் நைட் கவுனின் நாடாவை உருளிச் சிலிர்க்க கவுன் தரையில் சரிய...

    ஓ... நோ... என்றான் சலிப்பாக. அவள் உள்ளாடைகளுக்குத் தலையைக் கலைத்துக் கொண்டான்.

    நரம்பியல் நிபுணர் டாக்டர் செல்வ கணேசனுக்கும் அவர் பெருமைக்கும் இந்த ஆத்திரம் கூடாது.

    ஆத்திரமில்லே. செக்ஸ் உணர்வு.

    அதுதான் கூடாதுங்கறேன். இவ்ளோவ் பெரிய டாக்டருக்கு...

    ஏன்? இவ்வளவு பெரிய டாக்டரெல்லாம் செக்ஸ் வைச்சுக்கக் கூடாதுன்னு எவன் சொன்னான்?

    சிரித்தவாறு போர்வைக்குள் போனான். சிலுமிஷம் பண்ணாமத் தூங்குங்க...

    அப்புறம் எப்படிப் பத்தாவது மாதம் சரியா...

    முதலில் அவன் வாயைப் பொத்திப் பின் அணைத்துக் கொண்டாள்.

    பையனுக்குத் தெரிஞ்சா ரொம்பச் சந்தோஷப்படுவான்.

    பாவி, இதெல்லாமா பையன்கிட்டே சொல்றே?

    இல்லீங்க.

    பின்னே? பத்தாவதுமாதம் தங்கை வரப் போறான்னு சொல்லு...

    சே! ஊருக்குப் போறதைச் சொன்னேன்.

    இறுக்கினான்.

    அதே வீட்டின் பின்புறம்...

    ஒரு சின்ன அவுட் ஹவுசில் தனியே படுத்திருந்த வேலம்மா யாரோ மெதுவாகக் கதவைத் தட்டுவது உணர்ந்து கொஞ்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1