Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanimara Thoppu
Thanimara Thoppu
Thanimara Thoppu
Ebook154 pages55 minutes

Thanimara Thoppu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணவரை இழந்து, பிள்ளைகளால் உதாசீனப்படுத்தப்பட்டு தனிமை எனும் கொடுமைக்கு தள்ளப்பட்டவள் அனாமிகா. பாசத்துக்காகவும், உறவுகளுக்காகவும் ஏங்கி, தனிமை என்னும் கொடுமையை அனுபவித்திருந்த அவளது வாழ்க்கையில் நுழைகிறான் சஞ்சீவி... அவனால் அனாமிகாவுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்... உணர்வுகள்... உறவுகள்... தனிமரம் தோப்பாகுமா... ஆகாதா... வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateMar 5, 2022
ISBN6580152608158
Thanimara Thoppu

Read more from Rajendrakumar

Related authors

Related to Thanimara Thoppu

Related ebooks

Reviews for Thanimara Thoppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanimara Thoppu - Rajendrakumar

    http://www.pustaka.co.in

    தனிமரத் தோப்பு

    Thanimara Thoppu

    Author :

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    நன்றி மலர்கள்

    வாசக அன்பர்களின் கரங்களில் தவழும் தனிமரத் தோப்பு, திரு. ராஜேந்திரகுமார் அவர்களின் படைப்பு.

    ‘அமுதசுரபி’ இதழும் பார்க் டவுன் பெனிபிட் பண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதற்பரிசு பெற்ற கதை இது.

    இதைப் பற்றிய சுவையான ஓர் உண்மையை நான் சொல்லியாக வேண்டும். அவரது வளர்ப்பு மகனாக, அன்பான அரவணைப்பு என்னும் அவரது நிழலிலேயே வளர்ந்து, பேனா பிடித்து இன்று பத்திரிகையாளனாக இருந்து வரும் நான், என் அறிவுக்கெட்டியவரை, அவர் நேரடியாக மேடையேறிப் பரிசு பெற்றதைப் பார்த்ததில்லை.

    600க்கு மேற்பட்ட நாவல்கள்.

    500க்கு மேற்பட்ட சிறுகதைகள்.

    என எழுதிக் குவித்த அவருக்கு, இப்படியொரு பரிசு பெறும் வாய்ப்பைத் தந்தது ‘அமுதசுரபி’யை வெளியிடும் ஸ்ரீராம் டிரஸ்ட் நிறுவனம்தான் என்பது பெருமைக்குரியது.

    தாமே ஒரு ‘தனிமரத் தோப்பாக’ வாழ்ந்து மறைந்த என் அன்புத் தந்தையாருக்கு நினைவு மலர்களைத் தூவி வணங்கத்தக்க வகையில், இந்நாவலை நூலாக வெளியிட முன்வந்த ‘அமுதசுரபி’ ஆசிரியர் கலைமாமணி விக்கிரமன் அவர்களுக்கும், ஸ்ரீராம் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் திரு. ஏ.வி.எஸ். ராஜா அவர்களுக்கும் என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்.

    நாகராஜகுமார்

    1

    மரத்தாலான பாளங்களைப் பதித்த மாடி வராண்டாவில் குதிகால் செருப்புகள் ஓசைப்பட நடந்து கொண்டிருந்தாள் அவள். பெயர் அனாமிகா.

    இருட்டும் விலகாத, பொழுதும் விடியாத கங்குல் நேரம். நிலவைத் தொலைத்த அமாவாசை இருட்டு. நட்சத்திரங்கள் சிந்தும் கஞ்சத்தனமான ஒளியினால் அனைத்துக் காட்சிகளும் சில்அவுட்டாகத் தெரிந்தன.

    நடந்தவளின் நடை நின்றது. மரத்தாலான கைப்பிடிச் சுவரைப் பற்றிக்கொண்டு கண்கொள்ளு மட்டும் பார்த்தாள்.

    சற்றே தொலைவிலிருந்த கடலில் அலைகளின் ஓசை மட்டும் விட்டுவிட்டு ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

    பார்த்தாள்.

    எங்கோ கடலில் போகும் கப்பல் ஒன்று, சிக்னல் என்கிற பெயரால் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது.

    அந்த இருட்டுச் சூழ்நிலையிலும்கூட அவள் முகத்தின் சோகத்தை உணர முடிந்தது.

    நிமிர்ந்தவள் மீண்டும் பின்னங் கைகளைக் கட்டிக்கொண்டு மீண்டும் உலாவத் தொடங்கினாள். தூக்கமில்லாத இரவின் தளர்ச்சி அவள் கால்கள் பின்னுவதில் தெரிந்தது. சோர்வு தாக்கியிருந்தது.

    இப்படிப்பட்ட சோர்வு இப்போதெல்லாம் அடிக்கடி தாக்குகிறது.

    நடந்தாள்.

    வீட்டைச் சுற்றிலும், சண்டை போட்டுக்கொண்ட குழந்தைகள் போலப் பல திக்குகளைப் பார்த்து நிற்கும் தனித்தனி வீடுகள்.

    தனித்தனியே குடும்பத்தோடு ஒருநாள் வாடகை நூற்றி ஐம்பது கொடுத்தால் தற்காலிகக் குடும்பம் நடத்தும் வசதிகொண்ட ஸூட்கள்.

    அது ஒரு காலம்! வாங்குவதற்கு ஆளில்லாமல் போன கால கட்டத்தில், இவள் அப்பா வாங்கிப்போட்ட இருபது ஏக்கர் நிலப்பரப்புக்கு நடுவே தனிமரமாகத்தான் இந்த பங்களா கட்டப்பட்டிருந்தது.

    இங்கிருந்துதான் தினம் மாட்டு வண்டி ஏறி டவுனுக்குப் போய், படித்துவிட்டு வந்தாள். இங்குதான் கல்யாணமும் நடந்தது.

    1947இல் இந்தியாவைவிட்டு ஓடும் அவசரத்தில் இருந்த ஒரு பிரிட்டிஷ் என்ஜினியர் அவசரமாகத் தயாரித்துக் கொடுத்த வரைபடத்தை வைத்து அப்பா நேரடிப் பார்வையில் கட்டிய பங்களா.

    உயர உயர விதானம். தூண்கள் தாங்கி நிற்க, நீண்டு படர்ந்திருந்த படிக்கட்டுகளின் உச்சத்தில் கட்டடம் கம்பீரமாக நின்றது. தரையிலும், மாடியிலும் மரப் பலகைகளினால் ஆன தளங்கள். (அந்நிய நடமாட்டமிருந்தால் காட்டிக் கொடுத்துவிடும்.)

    இத்தனை நாள்களாகத் தனிக்காட்டு ராஜாவாக இருந்த அந்த பங்களாவைச் சுற்றிச் சின்னஞ்சிறு குடியிருப்புகள் சமீபத்தில்தான் முளைத்திருந்தன.

    காரணம்? அரசாங்கம்!

    தேவைக்கு மேல் இருக்கும் உபரி நிலத்தை அரசு கையகப்படுத்தும் என்ற அரசு நோட்டீஸ் வந்ததும், முதல் வேலையாக இருபது ஏக்கர் நிலத்தைச் சுற்றிலும் பிரமாண்டமான மதில் சுவரை எழுப்பினாள். அவசரம் அவசரமாக நிறைய வீடுகளைக் கட்டி, வாசல் வளைவில் ‘தங்க சொர்க்கம் பீச் ரிஸார்ட்’ என்று எழுதி வைத்தாள்.

    ‘தங்க’ இரட்டை அர்த்தச் சொல். ‘தங்கம்’ என்றும் சொல்லலாம்; தங்குவதற்கு என்றும் சொல்லலாம்.

    பக்கத்தில் கன்னியாகுமரிக்கு உல்லாசப்பயணம் வரும் பயணிகளுக்குத் தங்குமிடம் என்று பெயர். ஆனால் வரத்தான் ஆள் இல்லை. ஈயோட்ட வேண்டியிருந்தது. ஆனால்,

    அரசு வாய் பொத்திக்கொண்டு விட்டதுதான் லாபம்.

    ஆரம்ப நாள்களில் தனிமையை அறிந்த ஹிப்பிகள் நிறையப் பேர் வந்தார்கள். கஞ்சா பிடித்து, பிறந்த மேனியாகத் திரிந்து, நீச்சல் அடித்து நாறடித்தார்கள்.

    பார்க்கச் சகிக்காமல் போலீஸாரை விட்டுத் துரத்தியடித்து விட்டாள்.

    கண்ணியவான்களும் காரில் வந்து தங்குவதுண்டு. கதை டிஸ்கஷன், பாட்டு கம்போஸிங் என்றால் சில இசை அமைப்பாளர்கள் தபேலா, ஹார்மோனியத்துடன் வந்து, வாரம் பத்து நாள் தங்கி, தயாரிப்பாளர் செலவில் தட்டுத் தட்டாக முந்திரிப் பருப்பும், ஆப்பிள் ஜூஸுமாக வாங்கிச் சாப்பிட்டுத் தொந்தியைக் கணிசமாக வளர்ப்பார்கள்.

    அவர்களுக்காகவே ரெஸ்டாரெண்ட் ஒன்றும் கட்டியிருந்தாள்.

    அநேகமாக மாதத்திற்குப் பாதி நாள் வாங்க ஆளில்லாமல் காப்பி தவிர வேறெதுவும் தயார் செய்யப்படாத ரெஸ்டாரெண்ட். சமையல்காரர்களும், சப்ளையர்களும் தனிச் சமையலைத் தவிர்த்து பங்களாவுக்கே வந்து சாப்பிட்டுவிட்டுப் போவார்கள்.

    அந்த அளவு ஈயடிக்கும்.

    ஆனாலும் அதைப்பற்றி அனாமிகா கவலைப்பட்டதே இல்லை.

    காரணம்?

    தனிமை அவளுக்குப் பழகிப்போன ஒன்று.

    ***

    மனம் திரும்பிப் பார்த்தது.

    திறந்திருந்த அடுத்த அறைக் கதவு வழியாக, தனது கணவர் போன் பேசுவதும், எழுதுவதுமாகத் தெரிந்தது.

    கட்டிலில் கவிழ்ந்து தலையணையைக் கண்ணீரால் நனைத்துக்கொண்டு இருந்தவள் எழுந்து போனாள்.

    மணி ஒண்ணரையாகுதுங்க...

    நிமிர்ந்தவர், மூக்குக் கண்ணாடியை உயர்த்தி உச்சந்தலையில் குந்த வைத்தார்.

    அரை மணிக்கு முன்னால் வாட்ச்சைப் பார்த்தப்ப மணி பதினொண்ணரை. இப்ப பன்னிரண்டு ஆயிருக்கும்னு எதிர்பார்த்தேன். ஒண்ணரை ஆயிடுச்சா? இருக்கும். இருக்கும்... நீ போய்ப் படு. ஒரு போன் பண்ணிட்டு வந்துடறேன்.

    இந்த ராத்திரியிலே யாரைத் தொல்லைப்படுத்தப் போறீங்க?

    ராத்திரியா, முண்டம்! இங்க ராத்திரி. அங்கே அமெரிக்காவிலே பகல் நேரம்டி. போ. போய்த் தூங்கு. பகல்ல பண்ணினாத்தான் அவனைத் தூக்கத்தில் இருந்து எழுப்ப வேண்டி வரும். அவசரமான ரெஃபரன்ஸ் ஒண்ணு கேட்கணும். போ. போய்த் தூங்கு.

    காத்திருந்து காத்திருந்து தூங்கிப் போனவள், விடியற்காலையில் எழுந்து பார்க்கும்போது அவர் மேஜை மீதே கைகளை மடித்துத் தூங்கிக் கொண்டிருப்பார்.

    எழுப்பிக் கைத்தாங்கலாக அழைத்துப்போய் கட்டிலில் படுத்தவரை விட்டுவிட்டுக் குளியலறையில் குளிக்கப் போய் விடுவாள்.

    சாப்பிடும் நேரத்தில் மட்டும், என்ன எப்படி இருக்கே? என்பார் அக்கறையாக. அநேகமான நாள்களில் இவளிடம் அவர் பேசும் பேச்சு இது ஒன்றாகத்தானிருக்கும்.

    கோபம் மிகுந்த ஓர் இரவில் கேட்டே விட்டாள்; மனைவி தேவையில்லாதப்ப எதுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?

    இதபார் அனாமிகா! நான் நைட் கிளப்புக்கோ, தண்ணியடிக்கவோ போகலை. ஆராய்ச்சிக் கட்டுரை சப்மிட் பண்ணற நாள் நெருங்கிக்கிட்டிருக்கு. தயார் பண்ண வேணாமா?

    தவறிப் போய் சில நாள்களில் நேரத்தோடு நெருங்கி வந்தார். விளைவு?

    குழந்தைகள்!

    பெரியவன் மகேஷ்குமார். மகள் வினிதா.

    குழந்தைகளைப் பார்க்க வந்த அம்மாவிடம் சொன்னாள். இனிமே நான் தனிமரமில்லைம்மா. எனக்காக ரெண்டு பிள்ளைங்க எனக்குத் துணை இருப்பாங்க.

    அவள் பூரிப்பு அதிக நாள்கள் தாங்கவில்லை. அவர்களுக்கும், இவளுக்கும் இருந்த உறவு, பத்து மாதம் வயிற்றில்; மூன்று வருஷம் எதிரில். பிறகு?

    ***

    அபூர்வமாக அவரே கூப்பிட்டுப் பேசினார். "இந்தக் கிராமச் சூழ்நிலையில் வளர்ந்தா அவங்களுக்கு உலகம் புரியாது.

    Enjoying the preview?
    Page 1 of 1