Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konal Nizhalai Thurathi!
Konal Nizhalai Thurathi!
Konal Nizhalai Thurathi!
Ebook144 pages51 minutes

Konal Nizhalai Thurathi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரவி, புனிதா இருவரும் காதலர்கள். தங்களது திருமணத்திற்காக, பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டு ஊட்டியில் இருக்கும் ரவியின் பங்களாவிற்கு செல்கின்றனர். ஊட்டி குளுமை அவர்களை குளிர்வித்ததா? இல்லையா? அங்கு நடந்தது என்ன? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateSep 9, 2023
ISBN6580152609596
Konal Nizhalai Thurathi!

Read more from Rajendrakumar

Related to Konal Nizhalai Thurathi!

Related ebooks

Related categories

Reviews for Konal Nizhalai Thurathi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konal Nizhalai Thurathi! - Rajendrakumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கோணல் நிழலைத் துரத்தி!

    Konal Nizhalai Thurathi!

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அறிமுகம் ஒன்று: ராஜசேகர்

    அறிமுகம் இரண்டு: ரமணி

    அறிமுகம் மூன்று: தசரத மைந்தன்

    அறிமுகம் நான்கு: ரவி

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அறிமுகம் ஒன்று: ராஜசேகர்

    சட்டென்று எழுந்து நின்று ஒற்றை விரலை உயர்த்திக் காட்டினான் ராஜசேகர். ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்.

    தூங்கி வழிந்த கோர்ட்டில் பரபரப்பு வந்தது.

    எதிர்த்தரப்பு வக்கீலின் சாரமற்ற விமர்சனங்களைக் கேட்டுத் துவண்டிருந்த பார்வையாளர்களின் கூட்டம், ராஜசேகரின் குரல் கேட்டதும் நிமிர்ந்தது என்றால் அதற்குக் காரணம் உண்டு. அவன் எழுந்து நின்றதும் இரண்டில் ஒன்று நடக்கும்.

    1. எதிர்க்கட்சி வக்கீல் வாய்தா கேட்பார்.

    2. வழக்கு அதோடு முடிந்து விடும்.

    என் அன்புக்குரிய எதிர்த்தரப்பு வக்கீல் காரணமின்றி என் கட்சிக்காரரை குற்றவாளி என்று மூன்று முறை குறிப்பிட்டுவிட்டார். என் கட்சிக்காரர் இன்னும் ‘குற்றம் சாட்டப்பட்ட’ நிலையிலே இருப்பவர். குற்றவாளி என்று குறிப்பிடும் உரிமை மகாகனம் பொருந்திய நீதிபதி அவர்களுக்கே உண்டு.

    ஆட்சேபணை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    எதிர்த்தரப்பு வக்கீல் சர்மா முகம் வெளிறினார். சொன்னதாக நினைவில்லை. அப்படியே சொல்லியிருந்தாலும் அது தற்செயல். கவனக்குறைவு

    தற்செயல் கவனக் குறைவாகக் கேஸைக் குழப்புகிறீர் என்று நானும் சொல்ல அனுமதியுண்டா? ராஜசேகரின் முகத்திலிருந்த குறும்புச் சிரிப்பே சர்மாவை நடுங்க வைத்தது. ‘பெரிய சட்டப் பாயிண்ட் எதையோ பிடித்துவிட்டான் மனுஷன். தான் தொலைஞ்சேன்’, என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டவர், நீதிபதியைப் பார்த்தார். ஒரு வேண்டுகோள்! எனக்குத் திடீரென்று உடம்பு சரியில்லாமல் போனதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டுகிறேன்

    கனம் நீதிபதியவர்களே! நண்பரை அனுமதிப்பதை ஐந்து நிமிடம் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ஏன்?

    "அஞ்சே நிமிஷத்தில் வழக்கு முடிந்துவிடும். வாய்தாவுக்குத் தேவையே இருக்காது மிலாட். இது வழக்கே அல்ல. ஜோடிக்கப்பட்ட நாடகம். குற்றம் நடந்த இடத்தில் கண்ணாடிக் கோப்பையிலும் எவர்சில்வர் தம்ளரிலும் கொல்லப்பட்ட பெண்ணின் ரேகையோ, குற்றம் சாட்டப்பட்ட என் கட்சிக்காரர் ரேகையோ இல்லை. முற்றிலும் அந்நியமான ரேகை இருக்கிறது.

    கைரேகை நிபுணர்களின் சர்டிபிகேட்டும், எக்ஸிபிட் நம்பர் த்ரீ அண்ட் ஃபைவ்வும் சாட்சியங்கள்.

    தவிர, எக்ஸிபிட் நம்பர் டூ. சிகரெட் துண்டு. கொலை நடந்த இடத்தில் கிடந்த சிகரெட் துண்டு. எனது கட்சிக்காரரோ, கொலை செய்யப்பட்ட பெண்ணோ சிகரெட் பிடிக்காதவர்கள்.

    நான் கேட்கிறேன்.

    யார் அந்த மூன்றாவது நபர்? அவளை ஏன் போலீசார் சாட்சிக் கூண்டில் கொண்டு வந்து நிறுத்தவில்லை?

    "முக்கிய சாட்சியான அவரை அல்லது அவர்களைக் கொண்டுவராத வரையில் இந்த வழக்கு நடப்பது கோர்ட்டாரின் விலைமதிப்பில்லாத நேரத்தை வீணாக்குவதாகும்.

    ஆகவே, இந்த வழக்கு இறந்துவிட்டது. வழக்கை உடனடியாக முடித்து, குற்றம் செய்யாத என் கட்சிக்காரரை இந்த வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவித்துச் சுதந்திர மனிதனாக அறிவித்துத் தீர்ப்புக் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கைக்கெடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான் ராஜசேகர் ஐந்து நிமிடம் முடிந்துவிட்டது உட்கார்ந்துவிட்டான். முறைத்துப் பார்க்கும் சர்மாவை அலட்சியப்படுத்தினான்.

    வக்கீல் நண்பர் கேட்ட அந்த மூன்றாம் மனிதனைக் கோர்ட்டில் நிறுத்தப் போலீசாருக்குப் பதினைந்துநாள் அவகாசம் கொடுத்து குற்றவாளியைச் சென்னை நகரைவிட்டுப் பதினைந்து நாட்களுக்கு வெளியே போகக்கூடாது என்றும் தினம் மாலை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டுமென்றும் நிபந்தனையுடன் தற்காலிக விடுதலை அளிக்கிறேன். வழக்கை அடுத்த பதினாறாம் நாளைக்குத் தள்ளி வைக்கிறேன்.

    ஜட்ஜ் எழ, சர்மா முகத்தைத் துடைத்துக் கொள்ள அட்டகாசமாக எழுந்து வெளியேறினான் ராஜசேகர்.

    உற்சாகம் பிடித்துத் தள்ள வீட்டுக்குள்ளே போனவனை ஈர்த்தாள் கோமளா. வீங்கிய வயிற்றுடன் எழுந்து நின்றாள்.

    தெரியாமல்தான் கேட்கிறேன். என் புருஷன் கேஸ் ஜெயிக்கிறது என்ன புதுசா? போலியாகக் கண்களில் மயக்கம் காட்டினாள். சிரிப்புடன் ரிஸீவரை அதன் இடத்தில் பொருத்த அதற்காகவே காத்திருந்தது போல ஒலிக்கத் தொடங்கியது அது.

    மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டியவாறு எடுத்தான். பேசினான். நன்றி சொல்லி வைத்தான். அவள் கொண்டு வந்த காப்பியை வாங்கிக் குட்டை மேஜைமீது வைத்துவிட்டு அவளைக் கவனமாக இழுத்து மடியிலிருத்திக் கொண்டான். சிரித்தான். ச்சீய்! பகல்லேயேவா?

    இந்த ஒரு ரூமுக்கு மட்டும் பகல் இரவு என்று பேதமிருக்காது. கூடாது.

    குனிந்து அவள் வயிற்றில் காதை வைத்துக்கேட்டான். நிமிர்ந்தான் உன் வயிற்று இரட்டைக் குழந்தைகளும் பேசுது! கேட்டேனே!

    என்னவாம்?

    பேசாம கண்ணை மூடிச் சமர்த்தா தூங்கு! கொஞ்ச நேரத்திலே அப்பா வந்து எட்டிப் பார்ப்பார் என்கின்றன.

    முதலில் சரியாகப் புரியாமல் பார்த்தாள். பிறகு புரிந்ததும், ச்சேய்! த்தூ! வெட்கங்கெட்ட மாபாதகா! என்றவள், அடிக்க வர, விலகிப்போய்ச் சிரித்தான். நான் ரொம்பவும் ரசிச்ச நாட்டி ஜோக், என்று அவன் சொல்லும்போது, குமரன் குமாஸ்தா வந்தான். குமரன் பி.காம்., பெயரின் பின்னாலேயே அமைதி இருப்பதாலோ என்னவோ அவன் முகத்தில் எப்போதுமே ஒரு தினுசான அமைதி குடியிருக்கும். இவ்வளவு அமைதியாக இருப்பவன் சுலபமாக ஏமாறுவான் என்று நினைப்பவர்கள்தான் ஏமாறுவார்கள். அமைதியாகவே பணம் கறப்பான்.

    நாளைக்கு, வாய்தாவோட வழக்கு முடியணும். பணம் வந்தால்தான் அவருக்குப் பேசுகிற ‘மூட்’ வரும் நான் என்னத்தைச் சொல்ல? நீங்க சிரமப்பட வேண்டாம் சார். உங்க ஏரியா பக்கம் வருகிற வேலையிருக்கு. பணத்தைக் தயாராக வச்சிருங்க. நானே வந்து வாங்கிக்கறேன். கொடாக்கண்டர்களுக்கு அவன் ஒரு விடாக்கண்டன்.

    கற்றை நோட்டை எடுத்து வைத்தான். குட்... வெரிகுட்... சுப்பையாவினுடையதா? வசூல் பண்ணிட்டியா? ஆஹா! என் இனிய வசூல் இயந்திரமே...! கேட்டான்.

    ஸ்பென்சர்ஸ் எதிரே நிறுத்திய காரிலிருந்து ராஜசேகரனின் நினைவில், அவள் வந்து நின்று அழகாகச் சிரித்தாள்.

    ஜன்னல் தடுப்புக்கு அப்பாலிருந்த அவள் பாரத்தை வாங்கினாள். சீட்டாட டோக்கன்களை எண்ணித் தந்தாள். எனிதிங் எல்ஸ் சார்?

    உன் பெயரைத் தெரிஞ்சுக்கலாமா?

    வியப்பாகப் பார்த்தாள். அவசியம் தெரிஞ்சுக்கத்தான் வேணுமா?

    அவசியம் மட்டுமில்லே. அவசரமும்கூட.

    அப்போ கேட்டுக்கங்க, என்றவள், அழுத்தமாகச் சொன்னாள். முனீஸ்புரி. இவன் விழிப்பதைப் பார்த்துச் சிரித்தாள். சுற்றிலும் கார்கள் அவனை நகரச் சொல்லிக் கூச்சலிடவே, காரை நகர்த்தினான்.

    அறிமுகம் இரண்டு: ரமணி

    இன்ஸ்பெக்டர் ரமணியின் எதிரே நின்ற அந்த ஆளின் பார்வையே குற்றத்தை ஒப்புக்கொண்டது. தப்புச் செய்ததை ஒப்புக்கறியா? என்ற குரலின் கம்பீரத்துக்கு,

    ஆள் நடுங்கிப் போனான். தடுமாற்றமாக, இல்... என்று ஆரம்பித்து ...லீங்க என்று முடிக்குமுன், - இடது கன்னத்தில் இடியிறங்கியது. ஒன்றுமே நடவாத மாதிரி முழங்கையை நீவிக் கொண்டே ரமணி கேட்டான்.

    இப்ப சொல்லு. தப்பு செய்தியா?

    விலகி நின்று கதறினான் செய்தேனுங்க.

    மேஜை மீது தொற்றினாற்போல அமர்ந்து சுட்டுவிரலை ஆட்டி அவனை

    Enjoying the preview?
    Page 1 of 1