Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Julie Kodutha Vilai
Julie Kodutha Vilai
Julie Kodutha Vilai
Ebook149 pages55 minutes

Julie Kodutha Vilai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த கங்காணி ராஜா - சிங்காரி இருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பத்துக்கு காரணம் ஜூலியா? யார் இந்த ஜூலி? இவள் பின்னணி என்ன? ஜூலியின் வருகை... அதிர்ச்சியா? மகிழ்ச்சியா? இதற்காக ஜூலி கொடுத்த விலை என்ன? இளமை துள்ளலுடன் வேகமான வாசிப்புக்கு உங்களையும் அழைக்கிறாள் ஜூலி!

Languageதமிழ்
Release dateFeb 19, 2022
ISBN6580152608039
Julie Kodutha Vilai

Read more from Rajendrakumar

Related to Julie Kodutha Vilai

Related ebooks

Reviews for Julie Kodutha Vilai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Julie Kodutha Vilai - Rajendrakumar

    https://www.pustaka.co.in

    ஜீலி கொடுத்த விலை

    Julie Kodutha Vilai

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    மலேஷியா: டிரம்ஸ் வாத்தியத்தின் பெரிய முத்தாய்ப்புடன் ஆடி முடித்த பாப்பா மேஜை மேஜையாக நடந்து போனாள். வியர்த்துப்போன டீன் ஏஜ் பையனின் முகத்தை மார்பில் வைத்து அணைத்துக்கொள்ளவே அவன் வெட்கத்துடன் மூச்சுத் திணறினான்.

    பின்புறம் அந்தரங்கமாகத் தடவும் பெரியவரின் கையைத் தள்ளிவிட்டு அவர் வழுக்கையைத் தடவினாள். நோ கிராண்ட்பா. நாட் ஹியர். நகர்ந்தாள்.

    பயத்தால் வாயைப் பிளந்த ஒருத்தனின் மடியில் சாய்ந்து மல்லாந்தாள். அப்படி வாயைப் பிளக்காதே. இந்த ஊர் பொல்லாதது, என்றாள்.

    இரண்டாவது ரவுண்டு ஆட்டத்துக்காக மேடை ஏறியபோதுதான் அவர்கள் கண்ணில்பட்டார்கள். முரட்டு அராபியர்கள். அவர்களை அவளுக்குத் தெரியும். மிக அந்தரங்கமாகத் தெரியும். பார்... பார்க்க...

    அவள் உடலின் அணு அணுவிலும் அப்போதே வலிக்கத் தொடங்கியது.

    ***

    ஆயிரம் தான் சொல்லு. மேஜை டிராயரை இழுத்துப் பார்த்தாள் ஜூலி. காலி பீரோவைத் திறந்தாள். ஓரத்தில் கிடந்த பழைய டைரியைத் தவிர மற்றபடி காலி. திருப்தியுடன் அவள் திரும்பியபோது சூட்கேஸ் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

    இந்த இந்தியாவின் சீதோஷ்ண நிலை... இந்த மெட்ராஸின் அழகு... இந்த லேடிஸ் ஹாஸ்டலின் கட்டுதிட்டங்கள்... இந்த அழகான அறைகள் காள்னு கத்தினாலும் பாசம் குறையாத வார்டன் ருத்ரம்மா சைமன்... இதை எல்லாம் விட்டுட்டுப் போக மனசே வரல்லேடி.

    ஸூட்கேஸை மூடமுடியாமல் தவித்தாள். பொருந்திக்கொள்ள மறுத்தது. வொய் டோண்ட் யூ ஹெல்ப் மீ, ஐ ஸே?

    கட்டிலில் கவிழ்ந்து கன்னத்தைக் கைகளால் தாங்கி இவளையே பார்த்தவாறு இருந்த அந்தப் பெண் செல்வி, எழுந்து வந்தாள். ஜூலியை அப்பால் நகர்த்திவிட்டு ஸூட்கேஸைத் திறந்தாள். பக்கவாட்டில் பிதுங்கி நின்ற புடவையை உள்ளே தள்ளி, பட்டென்று சாத்தவே ‘சிக்'கென்று பொருந்திக் கொண்டது. நீ எப்பவுமே இப்படித்தான். அவசரக்காரி. கவனம் போதாது. ரொம்பவும் சிரமப்படுவே.

    பிறகு ஜூலியின் தோள்களில் அவள் தன் கைகளைப் பொருத்திப் பின்னங் கழுத்தில் கோத்துக் கொண்டாள். எதையும் பிரிய மனசு வரல்லே. சரி. மூணு வருஷமா ஒரே அறையிலே பழகின இந்தச் செல்வியைப் பிரிய மட்டும் மனசு வருதாக்கும்?

    ஜூலியின் கண்கள் கலங்கின. செல்வியை அணைத்துக் கொண்டாள்.

    ஏ... ஏய் பைத்தியம். அவள் முதுகைத் தட்டினாள் செல்வி. ஏண்டி, அழறே? அடிபோடி, என்ன பெரிய ஃபாரின்? இதோ இருக்கிற மலேஷியா. ப்ளேனிலே போனா சில மணி நேரம். ஷிப்பிலே போனா இன்னும் கொஞ்சம் அதிகம். நினைச்சா நினைச்ச நேரத்திலே இந்தப் பைத்தியக்கார சினேகிதியைத் தேடிகிட்டு ஓடி வந்துட மாட்டியா? ஒன் திங். மறக்காம எனக்குக் கல்யாண இன்விடேஷனை அனுப்பு. கேபிள்லேயே வாழ்த்து சொல்றேன். திஸ் இயர் ஜாய் அண்ட் நெக்ஸ்ட் இயர் பாய்னு.

    போடி ச்சீ. ஜூலி வெட்கப்பட்டாள்.

    ஏண்டி? செல்வி கேட்டாள். சபதம் பண்ணியே அது என்ன ஆச்சு?

    சிரித்தாள் ஜூலி. சிரிச்சுட்டா சரியா போச்சா? எனக்கு பதில் வேணும்.

    கேள்வியே புரியல்லே.

    உங்க தென்னிந்தியாவும் அதன் கலாசாரமும் எனக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. இங்கேயே ஒருத்தரைக் காதலிச்சுக் கல்யாணமும் பண்ணிக்கப் போறேன்னு சொன்னியே? அதைக் கேட்கிறேன்.

    ஓ. அதுவா?

    மறுபடியும் சிரிப்பா? பதிலைச் சொல்லுடி.

    வாலிபக் கனவுகள் எப்பவுமே வாழ்க்கைக்கு உதவாதடி செல்வி. ஜூலி பெருமூச்சு விட்டாள். இந்த அழகான தமிழ்நாடு, இதன் அர்த்தமுள்ள கலாசாரம், கண்ணியமான பண்பாடு இதெல்லாம் எனக்குப் பிடிச்சு என்ன லாபம்? உங்க ஊர் மாப்பிள்ளை யாருக்காவது என்னைப் பிடிக்க வேணாமா?

    வாட் டு யூ மீன்?

    ஒரு கையை மட்டும் தட்டி க்ளாப் பண்ண முடியாது தெரியுமா? மனித வாழ்க்கையிலே நிறைவேறாத ஆசைகள் எத்தனையோ. ஹூம்... அந்த லிஸ்டிலே இதையும் சேர்த்துக்கறேன்.

    உன் சாமர்த்தியக் குறைவுக்கு ஏண்டி இந்த ஊர் மாப்பிள்ளைகளைப் பழிக்கறே?

    சிரித்துக்கொண்டாள் ஜூலி.

    மறுபடியும் சிரிச்சியோ... சுட்டுவிரலைக் காட்டி எச்சரித்தாள் செல்வி. எனக்குக் கெட்ட கோபம் வரும்.

    சரி. சிரிக்கல்லே. போலியாக பயந்தாள் ஜூலி. எதனாலே என்னை சாமர்த்தியக் குறைவுன்னு சொல்றே? அதை நான் தெரிஞ்சுக்கலாமா?

    பாவம் அந்த ராஜ்.

    ஓ...

    உன்னையே சுத்திச் சுத்தி வந்தான். உனக்காகத் தவமே இருந்தான். எனக்குத் தெரியும்.

    ஹூம்..

    நீதான் அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கல்லே.

    நான் அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காதது மட்டும்தான் உனக்குத் தெரியும்... ஜூலி கேட்டாள். நான் அவனைப்பத்தி விசாரிச்சது உனக்குத் தெரியாதில்லே?

    என்னது? நீ அவனைப்பத்தி விசாரிச்சியா? செல்வி வியந்தாள். இட்ஸ் நியூஸ் ஃபார் மீ. எப்ப?

    அவனைத் தேடி ஒருதரம் அவங்க வீட்டுக்குப் போனேன். அப்ப அவன் அங்கே இல்லே. அந்த வீட்டு சூழ்நிலை, அவன் குடும்பமிருக்கிற நிலை எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்.

    செல்வி முகம் மாறினாள். ஏன்? என்ன?

    ஆஸ்துமாவோட போராடிக்கிட்டே ஆபீஸிலிருந்து திரும்பின அப்பா... காலம் கடந்த நிலையிலே அவருக்கு வாழ்க்கைப்பட்ட அவனுடைய சின்னம்மா... கல்யாணத்துக்கு வளர்ந்தும் வழியில்லாத நிலையிலே மௌனக் கண்ணீர் வடிக்கிற அவனுடைய அக்கா... ஸ்கூல் போகிற வயசிலே நாலு தம்பிகள்... எல்லாருமே, 'இவன் படிப்பை முடிச்சுட்டு வேலைக்குப் போகமாட்டானா, ஒரு வேளை சாப்பாடாவது திருப்தியாகச் ‘சாப்பிட மாட்டோமா’ன்னு ஏங்குகிற ஏக்கம் எல்லாத்தையுமே பார்த்தேன். அப்புறம்தான் அவனை வெறுக்கவே ஆரம்பிச்சேன்.

    ஆமா ஆமா. உன் பணக்கார எதிர்பார்ப்புக்கும், எதிர்கால கனவுகளுக்கும் அந்த வீட்டு வறுமை இடம் கொடுக்கல்லியாக்கும்.

    செல்வி! - அதட்டினாள் ஜூலி. ஸாரி செல்வி. என்னை அவ்வளவு கேவலமாகவா நினைக்கிறே?

    பின்னே அவனுக்கென்ன குறை? அழகில்லையா?

    நீயே பலதடவை அவனைப் பார்த்துப் பெருமூச்சு விட்டிருக்கே. அது எனக்கே தெரியும்.

    டல் ஸ்டூடண்ட்டுன்னு நினைக்கிறியா?

    நோ நோ. ப்ரின்ஸிபாலே ரெகமெண்ட் செய்து ஸ்காலர்ஷிப் வாங்கித் தருகிற அளவுக்கு பிரில்லியண்ட்.

    ஆண்மையை சந்தேகப்படறியா?

    சேசே...

    பின்னே? அப்புறம் என்னதான் அவனுக்குக் குறை?

    அழகும் படிப்பும் மட்டும் இருந்திட்டா போதாது செல்வி. கொஞ்சம் பொறுப்பும் குடும்பத்திலே பாசமும் இருக்கணும்.

    அவன் பொறுப்பில்லாதவன்னு எப்படிச் சொல்றே? உனக்கெப்படித் தெரியும்?

    கண்டுபிடிச்சேன்.

    கண்டுபிடிச்சியா?

    ஆமா. ஒருதடவை தாஜ் கொரமண்டல்லே டின்னரி சாப்பிடக் கூப்பிட்டான். போனேன். பில் நாற்பத்தைஞ்சு ரூபாய்க்கு வந்தது. அந்த நாற்பத்தைஞ்சு ரூபாயைத் திரும்ப சம்பாதிக்க அவங்கப்பா மூச்சு இரைக்க இரைக்க எத்தனை மணி நேரம் ஓவர்டைம் ஒர்க் பண்ணணுமோன்னு நினைச்சுப் பார்த்தேன். ஒரு நிமிஷம் யோசிச்சேன்.

    யோசிச்சு?

    அவன் தடுத்தும் கேட்காம நானே பில் செட்டில் பண்ணிட்டேன். நீயே சொல்லு. அவ்வளவு பெரிய குடும்பப் பொறுப்பு இருக்கிற ஒருத்தனுக்குக் காதல் ஒரு கேடா? கல்யாணம்தான் தேவையா?

    ரொம்ப நல்லா இருக்கே நீ சொல்றது? செல்வி கேட்டாள். குடும்பம், பொறுப்புன்னு வந்திட்டா, அவன் தனக்காக வாழக்கூடாதுன்னு அர்த்தமா? இல்லே, வளமான வருங்காலத்துக்குக் கனவுகூடக் காணக் கூடாதுன்னு சட்டமா?

    நினைக்கக் கூடாதுன்னு சொல்லல்லே. நினைக்க அவனுக்கு உரிமையில்லேன்னுதான் சொல்றேன்.

    என்னடி சொல்றே?

    உறவுக்கு உதவாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? தன் குடும்பத்துக்குச் செய்கிற தியாகத்திலேதான் உண்மையான சுகம் இருக்கும். யூ நோ தட்?

    "நீ

    Enjoying the preview?
    Page 1 of 1