Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oomai Karu
Oomai Karu
Oomai Karu
Ebook157 pages54 minutes

Oomai Karu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பரிமளா மற்றும் சுகன்யா நெருங்கிய தோழிகள், தன் உயிர் தோழியை ஒருவன் கதற கதற கொலை செய்கிறான். இவன்தான் கொலைகாரன் என்று தெரிந்தும் அவனுக்கு தண்டனை பெற்று தர முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறாள். இதற்கான காரணம் என்ன? கொலைக்காரனை தண்டிப்பேன் என்ற சபதத்தை நிறைவேற்ற அவள் எடுத்த முடிவு வித்தியாசமானது மட்டுமல்ல... விவாதத்துக்குரியதுமாகும்...

Languageதமிழ்
Release dateFeb 19, 2022
ISBN6580152608037
Oomai Karu

Read more from Rajendrakumar

Related to Oomai Karu

Related ebooks

Reviews for Oomai Karu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oomai Karu - Rajendrakumar

    https://www.pustaka.co.in

    ஊமைக்கரு

    Oomai Karu

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    பரிமளா:

    ஊர் அடங்கி நெடுநேரமாகிறது.

    இரவு காட்சி முடிந்து, கும்பலினால் தீர்ந்துபோன பால் காய்ச்சும் கடாயை துலக்கி அலம்பி வைக்கும் நினைப்புடன் அந்த மலையாளப் பையன் எழுந்தபோது,

    அவள் வந்து நின்றாள்.

    நள்ளிரவு நேரத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாத அவளது ஆடைகளே அவளது தொழிலை சொல்லின. கண்ணிலே வெறி எழுதி இருந்தது. அவள் பூசியிருந்த மட்டமான பவுடரின் மணத்துக்கு,

    கடைக்கார பையன் முகம் சிணுங்கினான். என்ன ஆண்டாளு, பாலா? தீர்ந்து போச்சே.

    அது எதுக்கு? வாணாம். ஒரு சோடா குடு

    அவன் பெரிய புட்டி சோடாவை எடுக்க முயலும்போது அவன் கையை தொட்டு தடுத்தாள்.

    வாணாம் என்கிட்டே அம்புட்டு காசு இல்லே. எளவு, இன்னைக்குன்னு ஒரு கிராக்கியும் மாட்டல்லே. இதென்ன ஊரு இப்படி கெட்டுப் போச்சு? ஆம்பிளைங்களே குறைஞ்சு போயிட்டாங்களா? இல்லே, இருக்கிறவனுக்கும் ஆசை மறத்துப் போச்சா? இல்லே, எல்லா பயலுங்களுக்கும்

    அவள் சொன்ன கடைசி வாக்கியம் தமிழ் அதிகம் வராத அந்த மலையாளப் பையனுக்கே அதிர்ச்சியைத் தந்தது. கடையை மூடப்போகிற நேரத்திலே இப்படி ஒரு தொல்லையா?

    கோலி சோடா ஒன்றை உடைத்துக் கொடுத்தான்.

    வாயே என்னமோ மாதிரி இருக்குது. அந்த எலுமிச்சங்கா ஊறுகாயை கொடேன்.

    மாட்டியிருந்த அட்டையிலிருந்து சிவப்பும் மஞ்சளுமாக எண்ணெய் கிணற்றில் மிதந்த ஊறுகாய் கண்ணாடி தாளை பிய்த்து எடுத்துக் கொடுத்தான். துட்டெடு

    அட ஏன் அவசரப்படறே? கண் அடித்தாள். ஒரு கிளாசை தர்றியா?

    அவனுக்கு புரிந்து போயிற்று. சலிப்பாக பார்த்தான்.

    அய குடு. இல்லேன்னா ராத்திரிக்கு தூக்கம் வராது

    எடுத்துக் கொடுத்தான். சீக்கிரமா ஆகட்டும்.

    தட்டி தடுத்த இருட்டான இடத்திலே போய் உட்கார்ந்து கொண்டாள்.

    தெருக்குழாயில் கடாயை துலக்கிக் கொண்டிருந்த பையன் முகத்தை சுளுக்கினான்.

    அவள் இருந்த இடத்திலிருந்து காற்றில் வந்த மட்டரக பட்டை சாராய வாசனை கொஞ்சம்கூட ரசிக்கும்படி இல்லை.

    ஆச்சா?

    இரு.

    கடையின் கீழே இருந்த சின்ன வழி வழியாக உள்ளே புகுந்து எழுந்தான். கடையை மூட ஆயத்தம் செய்தான்.

    தொங்கும் வாழைப்பழ குலைகளை எடுத்து வைத்தான். புட்டிகளையும் கண்ணாடி ஜாடிகளையும் எடுத்து உள்ளே அடுக்கினான். மெலிதாக கொட்டாவி விட்டான்.

    இன்னுமா ஆவலே?

    இதோ ஆச்சு.

    நேரமாவது ஆண்டாளு.

    இர்ரா பன்னாடை.

    அலுப்புடன் கல்லாபெட்டியை இழுத்து நாற்காலியில் அமர்ந்தான். ரூபாய் நோட்டுகளை வரிசைப்படி அடுக்கி டப்பாவில் வைத்து மூடினான். சில்லறை நாணயங்களை ரக வாரியாக அடுக்கி வைத்து ஒவ்வொன்றாக எண்ணி நிமிர்ந்தவன் திடுக்கிட்டான்.

    மேடையில் தவழ்ந்து அவன் அருகில் சிரித்த அவள் சிரிப்பு இயற்கையாக இல்லை.

    கொஞ்சம் பயந்தாலும் காட்டிக் கொள்ளாமல் கேட்டான். ஆச்சா?

    ஆச்சே கிளாசை நீட்டினாள். இந்தா.

    முகம் சுளித்தான். அப்படியே குடுத்தா? போய் குழாவிலே கழுவி கொண்டா.

    அவள் போனதும் கல்லாப் பெட்டியை இழுத்து சில்லறையை கிண்ணங்களில் சரித்தான். நோட்டு டப்பாவை ஒளித்தான். டிராவை மூடி பூட்ட முயலும்போது,

    உயர்த்திக் கட்டிய லுங்கியினுள் ஏதோ ஊர்வதை உணர்ந்து வெலவெலத்து எழுந்தான்.

    கடைக்குள் வரும் சந்து வழியே எட்டிப் பார்த்து போதையுடன் இளித்தாள்.

    நடுங்கிப்போன பையன் நாற்காலியை பின்னுக்குத் தள்ளி எழுந்து விலகவே முழுவதுமாக உள்ளே நுழைந்து வந்தாள், அந்தி ஆண்டாளு.

    ஏய், ஏன் உள்ளே வந்தே? போ, போ வெளியே.

    கோவிச்சுக்காதே ராசா. ராத்திரியானா எனக்கு ரெண்டு சங்கதி கண்டிப்பா வேணும். இல்லேன்னா தூக்கம் வராது. ஒண்ணு கிடைச்சிடுச்சு விக்கினாள். இன்னொன்னை நீதான் கவணிக்கணும். வாடா என் கன்னு குட்டி. அஞ்சு ரூவா குடு போதும்.

    ச்சீய் போடி வெளியே

    ஏன்? நீ இன்னுமா ஆம்பளை ஆவல்லே. மீசை வந்துடுச்சே என்றவள் தொட முயல,

    விலகினான். அபரிதமான பயத்துடன் அவன் சொன்ன வார்த்தைகளினால் பாதிக்கப்பட்டாள். மட்ட சாராயத்தினால் சிவந்திருந்த கண்கள் மேலும் சிவந்தன.

    இன்னாடா ராங் பண்றே? அழுத்தமாகச் சொன்னாள். வாடா என் மவனே.

    அவள் தொழிலையும், சொன்ன உறவையும் இணைத்துப் பார்த்து அருவெறுத்தான் பையன்.

    மருவாதியா வந்திருந்தா அஞ்சு ரூவாயோட போயிருக்கும் மவனே. இப்ப என்னை இம்புட்டு அசிங்கமா பேசிட்டியோ, உன்னை விடமாட்டேன். எடு, எல்லாத்தையும் எடு.

    எல்... எதை சொல்றே?

    ஆய்! எண்ணி எண்ணி எடுத்து வச்சியே அத்தை எடு, தள்ளாடினாள் மிகவும் மோசமாக, எடு எல்லாத்தையும் எடு. பூடறேன்.

    மிரண்டுபோன பையன் உதவிக்கு ஆள் தேடி எட்டிப் பார்த்தான்.

    டாய், இன்னாடா அங்கே பார்க்கறே? எவன் வருவான் இந்நேரத்துக்கு வந்தா மட்டும் உட்டுருவேனா? வாடின்னு கூட்டிட்டு வந்து எல்லாத்தையும் முடிச்சிட்டு இப்ப துட்டு தராம தபாய்க்கிறான்னு கத்துவேன். எனக்கென்னடா ஊரறிஞ்சவ எடுரா.

    கல்லாபெட்டியை இழுத்துப் பார்த்து ஏமாந்தாள். பூட்டி இருந்தது.

    சாவியை குடுரா கசமாலம்.

    நடுங்கும் விரலால் சுட்டிக் காட்டினான். அங்கே மாட்டி இருக்கு அவள் திரும்பியதும் சரேலென்று குனிந்து வெளியேறி வந்து சாலையில் நின்று அலறினான்.

    ஐயோ... ஐயோ... திருடி... யாராச்சும் வாங்களேன். முத்தண்ணே வர்கீஸ் சேட்டா...

    டாய்.

    ஏமாற்றமும் கோபமுமாக கண்ணாடி ஜாடி ஒன்றை எடுத்து தெருவில் விட்டெறிய, அது சிதறி உள்ளே இருந்த பொறை பிஸ்கட்டுகள் சிதறின.

    அவன் கூக்குரலை கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள்,

    அவள் இரண்டொரு கோலி சோடாக்களை விட்டெறிந்ததும்,

    உடனே காணாமல் போனார்கள்.

    திறந்த கதவுகள் அவசரமாத சாத்திக் கொள்ளப்பட்டன.

    பையனின் அலறலை மீறி, புட்டி வெடித்து சிதறும் ஓசையையும் மீறி

    எவண்டா அவன் அந்த துணிச்சல்கார ஆம்பிளை, வாங்கடா டாய் என்ற அவள் வெறிக் கூச்சலையும் மீறி,

    சீற்றமாக வந்து நின்றது ஜீப், மெல்லத் திரும்பி, கோபமாகப் பார்த்தாள் பரிமளா.

    உறுதியுடன் இறங்கி கைப் பிரம்பினால் இட உள்ளங்கையை தட்டியபடி நின்றாள்.

    இரண்டு சோடா புட்டிகளை ஓங்கி போதை சிரிப்புடன் திரும்பிய அந்த ஆண்டாளுவின் சிரிப்பு உதட்டிலேயே உறைந்தது. ‘ஙே’ என்று விழிக்க ஆரம்பித்தாள்.

    இரண்டு கால்களையும் உறுதியாக ஊன்றி நின்ற பரிமளாவின் தோற்றம், இவளது அச்சத்தை கொஞ்சம் குறைத்தது.

    துணிச்சலுடன் ஒரு புட்டியை உயர்த்தினாள்.

    பூடு உட்டேன்னா டாப் களண்டுக்கும் போ பூடு.

    அழுத்தமாக அந்த பரிமளா எடுத்து வைத்த முதல் காலடி ஆண்டாளுவை நடுக்கிற்று.

    பயத்தை வெளிக்காட்டாமல் மிரட்ட நினைத்து ஆய்... என்ற பெரிய அலறலுடன் புட்டியை வீசி எறிய,

    அது பறந்து வந்து தனது தலையை தொடுமுன், கைப் பிரம்பினால் தட்டி திசை திருப்பிவிட்டாள் பரிமளா.

    பக்கத்து வீட்டு சுவரில் மோதி சிதறியது புட்டி.

    அடுத்து பறந்து வந்த புட்டிக்கு அலட்டாமல் லாவகமாகக் குனிந்து கொண்டுவிட ஜீப்புக்குக் கொஞ்சம் முன்னால் தரையில் விழுந்து சிதறியது.

    பயந்து போனாள் ஆண்டாளு.

    "யேம்மா,

    Enjoying the preview?
    Page 1 of 1