Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nagarangal Moondru Sorgam Ondru
Nagarangal Moondru Sorgam Ondru
Nagarangal Moondru Sorgam Ondru
Ebook463 pages2 hours

Nagarangal Moondru Sorgam Ondru

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அழகிய வானத்தில் பரிதி பளபளப்போடு சுடர் விட்டுக் கொண்டிருக்க, எல்லாம் இயல்பாக, முறைப்படி இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் -
திடீரென்று ஒரு காற்று அடிக்கிறது.
நெடிதுயர்ந்த மரத்தின் உச்சாணிக் கிளையிலிருந்த வண்ணப் பூ கழன்று குப்பைத் தொட்டியில் இறங்குகிறது.
புழுதியில் சுருண்டு கிடந்த ஒரு சருகு குபீரென்று மேலே தூக்கப்பட்டு, தொலைக்காட்சிக் கோபுரத்தின் சிகரத்தில் கொண்டு சேர்க்கப்படுகிறது.
மொட்டை மாடியில் கொடியில் உலர்ந்து கொண்டிருந்த 'பிரா' பறந்து பக்கத்து வீட்டில் விழுகிறது, அதன் விளைவாக அந்த வீட்டு வாலிபனுக்கும் இந்த வீட்டுப் புறாவுக்கும் இடையில் ஓர் 'இது' உண்டாகிறது.
கண்காட்சிக்குச் சென்று தாத்தாவுடன் திரும்பிக் கொண்டிருக்கும் குழந்தையின் கையிலிருந்த பலூன் நழுவிச் செல்ல, அதைப் பிடிக்கக் குழந்தை சாலையில் இறங்க, அந்த வழியாகப் பேருந்தைச் செலுத்தி வந்து கொண்டிருக்கும் ஓட்டுனரின் கண்ணில் தூசி விழுந்து அவர் பார்வையை மறைத்து விடுகிறது.
காற்று வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்கிறதா? அல்லது -
அதுவும் சந்தர்ப்பச் சேர்க்கையினால் உந்தப்பட்டு, தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் சக்தியை இழந்து, பலன்களை உணராமல், அல்லது உணர்ந்தும் அவற்றைத் தவிர்க்க முடியாத நிலையில், கன்னாபின்னாவென்று நடந்து கொள்கிறதா?
அல்லது எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு சட்டம் இருக்கிறதா?
தெரியவில்லை.
இந்தக் கதையின் நாயகனுக்கும் நாயகிக்கும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க முடியாது.
அவன் பெயர் யோகு. சாதாரண வேலையிலிருக்கும் சாதாரண இளைஞன். அவள் பெயர் இளமதி.
வேறு யார் வாழ்க்கையிலோ என்ன என்னவோ நிகழ, அதன் தொடர்பாக யோகுவுக்கு ஒரு முக்கிய பதவி-பதவி என்பதைக் காட்டிலும் பொறுப்பு என்றால் பொருத்தமாக இருக்கும்-வந்து வாய்க்கிறது.
உயர் பதவி, தனியே வரவில்லை. ஆபத்தையும் அழைத்து வந்திருக்கிறது.
அந்தக் கதைதான் இது.
- எஸ்.ஏ.பி.
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580136705922
Nagarangal Moondru Sorgam Ondru

Read more from S.A.P

Related authors

Related to Nagarangal Moondru Sorgam Ondru

Related ebooks

Reviews for Nagarangal Moondru Sorgam Ondru

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nagarangal Moondru Sorgam Ondru - S.A.P

    http://www.pustaka.co.in

    நகரங்கள் மூன்று சொர்க்கம் ஒன்று

    Nagarangal Moondru Sorgam Ondru

    Author:

    எஸ். ஏ. பி.

    S.A.P

    For more books

    http://www.pustaka.co.in/home/author//s-a-p

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    முன்னுரை

    அழகிய வானத்தில் பரிதி பளபளப்போடு சுடர் விட்டுக் கொண்டிருக்க, எல்லாம் இயல்பாக, முறைப்படி இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் -

    திடீரென்று ஒரு காற்று அடிக்கிறது.

    நெடிதுயர்ந்த மரத்தின் உச்சாணிக் கிளையிலிருந்த வண்ணப் பூ கழன்று குப்பைத் தொட்டியில் இறங்குகிறது.

    புழுதியில் சுருண்டு கிடந்த ஒரு சருகு குபீரென்று மேலே தூக்கப்பட்டு, தொலைக்காட்சிக் கோபுரத்தின் சிகரத்தில் கொண்டு சேர்க்கப்படுகிறது.

    மொட்டை மாடியில் கொடியில் உலர்ந்து கொண்டிருந்த 'பிரா' பறந்து பக்கத்து வீட்டில் விழுகிறது, அதன் விளைவாக அந்த வீட்டு வாலிபனுக்கும் இந்த வீட்டுப் புறாவுக்கும் இடையில் ஓர் 'இது' உண்டாகிறது.

    கண்காட்சிக்குச் சென்று தாத்தாவுடன் திரும்பிக் கொண்டிருக்கும் குழந்தையின் கையிலிருந்த பலூன் நழுவிச் செல்ல, அதைப் பிடிக்கக் குழந்தை சாலையில் இறங்க, அந்த வழியாகப் பேருந்தைச் செலுத்தி வந்து கொண்டிருக்கும் ஓட்டுனரின் கண்ணில் தூசி விழுந்து அவர் பார்வையை மறைத்து விடுகிறது.

    காற்று வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்கிறதா? அல்லது -

    அதுவும் சந்தர்ப்பச் சேர்க்கையினால் உந்தப்பட்டு, தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் சக்தியை இழந்து, பலன்களை உணராமல், அல்லது உணர்ந்தும் அவற்றைத் தவிர்க்க முடியாத நிலையில், கன்னாபின்னாவென்று நடந்து கொள்கிறதா?

    அல்லது எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு சட்டம் இருக்கிறதா?

    தெரியவில்லை.

    இந்தக் கதையின் நாயகனுக்கும் நாயகிக்கும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க முடியாது.

    அவன் பெயர் யோகு. சாதாரண வேலையிலிருக்கும் சாதாரண இளைஞன். அவள் பெயர் இளமதி.

    வேறு யார் வாழ்க்கையிலோ என்ன என்னவோ நிகழ, அதன் தொடர்பாக யோகுவுக்கு ஒரு முக்கிய பதவி-பதவி என்பதைக் காட்டிலும் பொறுப்பு என்றால் பொருத்தமாக இருக்கும்-வந்து வாய்க்கிறது.

    உயர் பதவி, தனியே வரவில்லை. ஆபத்தையும் அழைத்து வந்திருக்கிறது.

    அந்தக் கதைதான் இது.

    - எஸ்.ஏ.பி.

    1

    அறை எண் 201.

    இளமதிக்கு ஏன்தான் இந்தத் திரவியம் அண்ணாவுடன் பெங்களூர் புறப்பட்டு வந்தோமோ என்று இருந்தது. சே! கதைப் புத்தகத்தை எரிச்சலுடன் மூடி வைத்தாள்.

    காலையில் அறைக்குச் சிற்றுண்டி கொண்டுவரச் சொல்லிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது டெலிபோன் மணி அடித்தது. மெட்ராஸிலிருந்து பேசினார்கள் போலும். அவன் ஸ்லாக்கை எடுத்து மாட்டிக்கொண்டு, மதி! அரை மணியில் வந்து விடுகிறேன், என்று கிளம்பிவிட்டான்.

    விதான சவுதா காட்டுகிறேன் என்று சொன்னீர்களே, அண்ணா? என்று ஞாபகப்படுத்தினாள்.

    ஸ்பிரிங் பொருத்திய கதவு திரும்ப வந்து மூடிக் கொள்ளுமுன், சந்து வழியாக, டிரெஸ் பண்ணிக்கொண்டு தயாராக இரு. வந்ததும் போகலாம், என்று உறுதி கூறிச் சென்றான்.

    இப்போது, பக்கத்து அறைக்காரர் பணியாளைக் கூப்பிட்டு, இரண்டு மீல்ஸ். சப்பாத்திக்குப் பதில் ரைஸ், என்று கட்டளையிடுவது கேட்கிறது.

    ஆனால் திரவியம் அண்ணாவின் கெடியாரத்தில் இன்னும் அரை மணி ஆகவில்லை போலும். கோபத்தில் அவள் உதடுகள் லேசாகத் துடித்தன.

    எதிர்பாராத இடையூறுகள் யாருக்கும் ஏற்படுவது இயற்கை என்று அவளுக்குத் தெரியும். அதிலும், திரவியம் அண்ணா, இன்னொருவரிடம் கைநீட்டிச் சம்பளம் வாங்குபவர். நெருங்கிய உறவுதான் என்றாலும் எஜமானர்கள் எஜமானர்கள் தானே? அவர்கள் வேலையாக இங்கு வந்திருக்கும்போது, நினைத்தபடி வரமுடியாது, போகமுடியாது; எல்லாம் உண்மை. ஆனால் போகும் போது சும்மா போயிருக்கலாம் அல்லவா? குறைந்தது, 'சீக்கிரம் வர முயற்சி பண்ணுகிறேன். வந்துவிட்டால் வெளியில் போகலாம்,’ என்றாவது சொல்லியிருக்கலாம் அல்லவா? டிரெஸ் பண்ணிக்கொண்டு தயாராக இருக்க வேண்டுமாம், தயாராக. எதற்கு? இப்படிப் போர் அடித்துச் சாகவா?

    புறப்படும்போதே அம்மா சந்தேகம் எழுப்பினாள். ஏம்ப்பா திரவி, நீபாட்டுக்கு ஆபீஸ் வேலையாக அலைவாய். இவளும் வருகிறேன் என்கிறாளே; ஊரைச் சுற்றிக் காட்ட, கடை கண்ணிக்குப் போக உனக்கு நேரம் இருக்குமா?

    எஸ். எஸ். எல். சி. முடித்துவிட்டு வீட்டோடு இருந்து விட்டவள் இளமதி.

    அதெல்லாம் முடியாது. அண்ணாவுடன் போகத்தான் போவேன் என்று அடம் பிடித்தாள். வேண்டுமானால் நீயும் வா.

    இந்த உடம்பை வைத்துக் கொண்டா! என்று அம்மா பெருமூச்சுவிட்டாள்.

    ஏதோ உற்சாகத்தில் தங்கைக்கு வார்த்தை கொடுத்து மாட்டிக்கொண்டுவிட்ட திரவியம், வேறு வழியின்றி அவளை அழைத்து வந்திருந்தான்.

    திரவியம் அண்ணா இப்படிப் பண்ணுவார் என்று தெரிந்திருந்தால் நான் பெங்களூருக்கே வந்திருக்க மாட்டேன் என்று இளமதி தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.

    சிவகாமி அத்தைகூட அடிக்கடி குறை கூறுவதுண்டு. இந்தத் திரவியத்தை நம்பவே கூடாது. மோசக்காரன். தன்னப்போணி! என்று. இளமதி கேலி செய்வாள், அதென்ன போணி அத்தை? பித்தளையா, அலுமினியமா? என்று. அகராதியில் உண்டோ இல்லையோ, அந்தச் சொல் சிவகாமி அத்தையின் வாயில் அடிக்கடி அடிபடும். தன்னை மட்டுமே பேணிக் கொள்பவன், சுய நலக்காரன் என்று பொருள் போலும். இப்போது அண்ணாவின் மேலிருந்த ஆத்திரத்தில், சிவகாமி அத்தையின் மதிப்பீடு சரியாகத்தான் இருக்கும் போலும் என்று இளமதிக்குப் பட்டது.

    உடுத்திக்கொண்ட நல்ல புடவையைக் களைந்து விட்டுப் பழையதை எடுத்துக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துப் பெட்டியண்டை செல்லும்போது, சுவரில் பதித்திருந்த அகலமான நிலைக் கன்னடியில் அவள் உருவம் தெரியவே சற்று நின்றாள். அணிந்து இருந்த புடவையின் நிறம், கரை, புடவைக்குப் பொருத்தமான ஜாக்கெட் எல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தன. முகத்தை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்த போது, காது வளையங்கள் அழகாக ஊசலாடின. தான் செய்துகொண்டிருந்த ஒப்பனை அவளுக்கு மிகுந்த திருப்தியைக் கொடுக்கவே, அதையொட்டி, தமையன் மேலிருந்த ஆத்திரமும் தணிந்தது. பாவம், அவசரமாக என்ன வேலை வந்ததோ? அவள் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள். வேண்டுமென்று அவளைக் காக்க வைக்கக்கூடியவனல்ல அவன். சிவகாமி அத்தைக்கு யாரைக் கண்டாலும் பிடிக்காது. குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தீர்மானித்துக் கொண்டபோது, குழந்தைகள் ஆட்டம் போடும் சப்தம் வெளியிலிருந்து கேட்டது.

    ஒன்றையொன்று ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன போலும். அவற்றின் சிரிப்பையும் ஆரவாரத்தையும் கேட்க அவள் மனத்துக்கு இதமாக இருந்தது. அவளை அறியாமலே அவள் முகத்தில் புன்னகை அரும்ப, குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் தூண்டப்பட்டவளாய், கதவைத் திறந்தாள்.

    அந்த மாடியில் சுமார் பதினாறு அறைகள் இருக்கக் கூடும். அந்தப் பக்கம் எட்டு, இந்த வரிசையில் எட்டு. நடுவில் நடை.

    கதவைத் திறந்தவள் திடுக்கிட்டாள்.

    எதிர்த்தாற்போலிருந்த அறையின் (எண் 208) கதவைத் திறந்து வைத்துக்கொண்டு ஓர் இளைஞன் - லுங்கியோடு - நின்றிருந்தான்.

    அவளுக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. சரேலென்று கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்துவிடலாம் என்று மூடினால், ஸ்பிரிங் வைத்த கதவாகவே அது உடனே சாத்திக்கொள்ள மறுத்தது.

    ஒரு வழியாக அது நிலையோடு பொருந்தவும் தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஓடிவந்து சோபாவில் உட்கார்ந்தவளுக்கு மூச்சு வாங்கிற்று. மனம் படபடவென அடித்துக் கொண்டது. புத்தகத்தை எடுத்து! வைத்துக் கொண்டாள்.

    சில வினாடிகள் கழிந்த பிறகு நினைத்துப் பார்க்கையில், அவளது பதட்டம் அவளுக்கே விசித்திரமாக இருந்தது. என்ன தவறு நடந்துவிட்டதென்று அவள் அப்படி வெட்கப்பட்டு விழுந்தடித்துக்கொண்டு ஓடி வரவேண்டும்? திரவியம் அண்ணா திடீரென்று நுழைந்து 'நீயா கதவைத் திறந்தாய்?' என்று சினத்துடன் கேட்கப்போவது போலவும், 'இல்லையே. நான் இங்கே உட்கார்ந்து புத்தகம் அல்லவா படித்துக் கொண்டிருக்கிறேன்,’ என்று சாக்குச் சொல்வதற்குச் சான்று தேடிக்கொள்வது போலவும் அவசரம் அவசரமாகப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிப்பவள் போல் அவள் ஏன் நடிக்க வேண்டும்?

    தன் செய்கைகளை நினைத்துத் தன்னைத்தானே பரிகாசம் செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தவளுக்கு எதிர் அறைக்காரனின் முகபாவத்தை மனக்கண்முன் கொண்டுவந்து பார்க்கையில் சிரிப்பே வந்துவிட்டது.

    அவனும் அந்தக் குழந்தைகளைப் பார்ப்பதற்காகக் கதவைத் திறந்தானோ, அல்லது பணியாளைக் கூப்பிட நினைத்தானோ-எதிர்பாராத விதமாக அவள் கதவைத் திறந்ததும் அவன் முகம் போன போக்கு!

    ஆண்களில் யாரும் இப்படிக் கூச்சப்பட்டு அவள் பார்த்ததில்லை. ஏதோ பேயைக் கண்டவன்போலல்லவா மிரண்டுவிட்டான்! அவன் கண்களில் தெரிந்த அந்த மருட்சியையும், என்ன செய்வதென்று புரியாமல் விழித்த விழிப்பையும் அவளால் மறக்க முடியவில்லை.

    ராஜி அத்தானுக்கும் இவனுக்கும் எவ்வளவு வித்தியாசம்! ராஜி இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்தான். புடவை மாற்றிக்கொள்ள வேண்டும். தயவுசெய்து கொஞ்சம் வெளியே போகிறாயா? என்று முகத்தில் அடித்தாற்போல் கேட்க வேண்டும். அதுவரை நகர மாட்டான். பக்கத்து வீட்டில் ஏகாம்பரம் என்று ஒரு பைத்தியம். அவள் வெளியே புறப்படுவது எப்படித்தான் அதன் மூக்கில் வியர்க்குமோ, பின்னாலேயே வந்துவிடும். அவள் பஸ் ஏறினால் அதுவும் அதே பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும். முறைத்துப் பார்த்தால், பல்லைக் காட்டும். ஆனால் எதிர் அறைக்காரன் இருக்கிறானே 208? அவன் ஒரு தனி ரகம்.

    அவனை நினைக்கும் போது அவளுக்குப் பாதி வேடிக்கையாகவும், பாதி பாவமாகவும் இருந்தது. மிஸ்டர்! ஒன்றும் நடந்துவிடவில்லை. பயப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்! என்று அவனுக்குத் தேறுதல் கூறவேண்டும் போலிருந்தது.

    சென்னை திரும்பியதும் சினேகிதிகளிடம் இதைப்பற்றிக் கட்டாயம் விவரிக்க வேண்டும் என்று அவள் மனத்துக்குள் குறித்து வைத்துக் கொண்டாள். அவன் நின்றிருந்த விதம், திகைப்புடன் அவளைப் பார்த்த பார்வை ஆகியவற்றை நடித்துக் காட்டினால் எல்லோரும்-குறிப்பாக, உஷாவும் அபிராமியும்-விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

    குழந்தைகளின் இரைச்சல், தாயார்க்காரி இந்தியில் ஏதோ அதட்டல் போட்டதும் அடங்கிவிட்டது.

    சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்த இளமதிக்கு, மறுபடி கதவைத் திறந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் உதித்தபோது அதை அடக்கிக் கொண்டாள். அவளைப் போலவே அவனும் மீண்டும் வந்து நின்றால் அசிங்கமாகப் போய்விடும் என்று தோன்றிற்று. எழுந்து 'ஸிட் - அவுட்'டில் போய் நின்று கீழே பார்த்தாள். இரண்டு ஆட்டோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. அப்புறம் ஒரு பெரிய வேன்.

    யாரோ கதவைத் தட்டிய மாதிரி இருந்தது. சில பேர், அழைப்பு மணி இருப்பது தெரியாமல் கதவைத் தட்டுவது உண்டு. அல்லது அவனாக இருக்குமோ? அவனா? ஒருக்காலும் இருக்காது.

    தாழ்ப்பாளை நீக்குமுன் அவள் சற்று நிதானித்தாள். புடவை மடிப்புக் கலையாமல் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டு, தலைமயிரை ஒருமுறை மேலாகத் தொட்டுப் பார்த்தபின், மார்பு அடித்துக்கொள்ளும் வேகம் காதுக்கு எட்ட, மெதுவாக, ஓர் அங்குலம் திறந்தாள். அப்புறம் இன்னும் கொஞ்சம் திறந்தாள். யாரையும் காணோம். ஒருவருமில்லை என்றதும் உடனே திரும்ப வேண்டியவள், அங்கேயே நின்று எதிர் அறைக் கதவை நோக்கினாள். அது எவ்விதச் சலனமும் உணர்ச்சியும் இன்றி, மரக்கட்டையாக, சாத்தியபடி இருந்தது. ஏமாற்றம் மனதை நெருட, திரும்ப வந்து உட்கார்ந்தாள். ஏதோ ஒருவிதமான அதிருப்தி அவளை ஆட்கொள்ள, அதை நியாயப்படுத்தும் வகையில் அவள் மீண்டும் திரவியம் அண்ணாவை நினைத்துக்கொண்டாள். அவன் வந்ததும் அவனுடன் பெரிதாகச் சண்டை பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

    திரவியம் ஒரு மணி சுமாருக்கு மிகவும் தளர்ச்சியுற்றவனாய் வந்தபோது, அவனோடு மோத வேண்டும் என்று இளமதி போட்டிருந்த திட்டம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

    பெங்களூரின் குளுமையிலும் வியர்வை அவன் நெற்றியிலும், கழுத்திலும் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.

    முகம் கழுவிக் கொண்டு வாருங்கள் அண்ணா என்றபடி அழைப்பு மணி விசையண்டை சென்றாள். சாப்பாட்டுக்குச் சொல்லட்டுமா?

    ஊம். ஒரு சாப்பாடு போதும். நீ சாப்பிடு.

    நீங்கள்?

    சாப்பிட்டாயிற்று.

    சும்மா சொல்கிறான் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

    பணியாளைக் கூப்பிட விசையை அழுத்தப் போனவள், திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டாள்.

    சாப்பாட்டுக்குச் சொல்லவில்லை?

    இல்லை.

    ஏன், மதி?

    நானும் சாப்பிட்டாயிற்று.

    அவன் முனகிக்கொண்டே வேண்டா வெறுப்புடன் எழுந்தான்.

    உன்னோடு பெரிய தொல்லையாகப் போய்விட்டது.

    பணியாளை அழைத்து இரண்டு சாப்பாடு கொண்டுவரச் சொல்லிவிட்டு, முகம் கழுவிக்கொண்டு வந்தான்.

    அவள் துண்டு எடுத்துக் கொடுத்தாள்.

    இரண்டு 'டிரேக்'களில் சாப்பாடு வந்தது. அதன் மணம் அவள் பசிக்குத் தூபம் போட்டது. இருந்தாலும் அவன் திருப்தியாக உண்ணாமல் சும்மா பெயர் பண்ணியதைப் பார்த்ததும் அவளது பசி தூர்ந்துவிட்டது. அதைக் கண்டதும் அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வர, வள்ளென்று விழுந்தான்.

    அவள் கண்கள் கலங்கிவிட்டன. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, என்ன அண்ணா நடந்தது? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? என்றாள். அவன் பழையபடி சூடாக ஏதோ சொல்ல வாயெடுத்தான். அவள் முகத்தைக் கண்டதும் அடக்கிக் கொண்டான்.

    சொன்னால் உனக்குப் புரியாது.

    புரியாவிட்டால் பரவாயில்லை. வாய்விட்டுச் சொன்னால்தான் உங்களுக்கும் பாரம் குறையும்.

    அவன் விளக்க முயன்றான்.

    அவனுடைய எஜமானர்களுக்கு அந்தக் காலத்தில் இருந்து குடகுப் பக்கம் ஒரு பெரிய காப்பித் தோட்டம் உடைமையாக இருந்து வருகிறது. பெரியவர் இருந்த வரைக்கும் அதை நேரடியாகக் கண்காணித்து வந்து இருந்தார். சின்னவர்களுக்கு அந்தத் துறையில் ஈடுபாடு இல்லை. தவிர, அவர்களுடைய நேரத்தைக் கவர, இன்னும் லாபகரமான வேறு பல தொழில்கள் இருந்தன. ஆகவே நிர்வாகத்தைப் பெரும்பாலும் திரவியத்திடமே விட்டிருந்தார்கள். தோட்டத்தை விற்றுவிட அவர்கள் முடிவு செய்தபோது, விலை பேசும் பொறுப்பும் திரவியத்திடமே ஒப்படைக்கப்பட்டது. கிரயப் பத்திரம் இரண்டொரு நாளில் பதிவாக வேண்டும். எஜமானர்களுக்கு முக்கியமான வேலை இருந்தது. நேரில் வர சௌகரியப்படவில்லை. ஆகவே, திரவியத்தின் பெயருக்கு அதிகாரம் கொடுத்து அவர்கள் சார்பாகக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்துவிட ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    என்ன காரணமோ, தெரியவில்லை. எனக்குப் பவர் கொடுக்காமல், வேறு யாருக்கோ கொடுத்து அனுப்பியிருக்கிறார்களாம். தலையில் கை வைத்துக் கொண்டான் திரவியம்.

    அவனது சோர்வுக்குக் காரணம் தெரிந்ததும், அதுவரை கவலையுடன் கேட்டுக்கொண்டிருந்த இளமதிக்கு நிம்மதி ஏற்பட்டது.

    இவ்வளவுதானே? இதற்காகவா மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டீர்கள்? பத்திரத்தை நீங்கள் பதிவு செய்தால் என்ன, இன்னொருத்தர் செய்தால் என்ன? நமக்கு என்ன நஷ்டம்?

    என்ன நஷ்டமா? ஏதோ தொடர்ந்து சொல்லப்போன திரவியம் நிறுத்திக்கொண்டான். பிறகு, எழுந்து இருப்புக் கொள்ளாமல் உலவியபடி, யாருக்குக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள் என்று உடனே கண்டு பிடித்தாக வேண்டும். ஆள் நேற்று பெங்களூர் மெயிலில் புறப்பட்டு வந்திருக்கிறானாம், என்றான்.

    அவன் கை கழுவச் சென்றிருந்தபோது –

    டெலிபோன் மணி அடித்தது.

    எடுத்து, ஹலோ என்றாள்.

    மறுமுனையில் மௌனம்.

    ஹலோ என்றாள் மறுபடியும்.

    ரூம் நம்பர் 201 தானே?

    அது பெண் குரல்.

    ஆமாம்.

    திரவி இருக்கிறாரா?

    பாத்ரூமில் இருக்கிறார்.

    நீங்கள் யார்?

    ஏனோ அந்தக் குரல் இளமதிக்குப் பிடிக்கவில்லை. அவர் தங்கை.

    அவர் வந்ததும், 'பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது' என்று ஞாபகப்படுத்துங்கள். சரிதானா?

    இளமதி கேட்டாள். நீங்கள் யார்?

    பதில் இல்லை. ரிஸீவர் வைக்கப்படும் ஓசை கேட்டது.

    யாராக இருக்கும்? இளமதிக்கு யோசனையாக இருந்தது. பொழுது சாய்ந்து கொண்டு இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? அவளுக்குப் புரியவில்லை. அதுவும் பட்டப்பகலில்?

    2

    அப்பாடா! அதோ ஓர் ஆட்டோ!

    டெலிபோனில் வந்த அழைப்பை அலட்சியம் செய்ய முடியாத சூழ்நிலை ஒருபுறமும், இப்போதும் தங்கையை வெளியில் அழைத்துச் செல்ல முடியாது போய்விட்டதே என்ற உறுத்தல் மறுபுறமுமாக ஓட்டல் வாசலில் நிலை கொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்த திரவியம், ஆட்டோவைக் கண்டு சற்று ஆறுதல் அடைந்தான்.

    வண்டி நின்றதும் நிற்காததுமாய், எம்.ஜி. ரோடு! ஜல்தி! என்று முன்கூட்டி அறிவித்தபடியே ஏறி உட்கார அவன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, இரண்டு பயணிகளுடன் வந்த அந்த ஆட்டோ நின்றது. ஒருவர் இறங்கிக்கொண்டார், மற்றவர் இறங்கவில்லை. இறங்கியவர் இறங்காதவரிடம் நன்றி சொன்னார். இறங்காதவரோடு ஆட்டோ இரக்கமில்லாமல் திரும்பிப் போய்விட்டது.

    திரவியம் எரிச்சல் தாளாமல் முணுமுணுத்துக் கொண்டான். தேவையில்லாத சமயம் ஒன்றன் பின் ஒன்றாக நூறு ஆட்டோ வருவான். நம்மைக் கண்டதும் ஸ்லோ பண்ணி, ‘தரும துரையே, பிச்சை போடமாட்டீர்களா?' என்று கேட்கிற மாதிரி பரிதாபமாகப் பார்ப்பான். தேவைப்படும்போது, ஒருத்தன் அகப்பட மாட்டான்! துத்தேறி!

    போன மாதத்துக்கு முன்பு வரை அவனுக்கு வாகனப் பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. சென்னையிலிருந்து புறப்படுமுன் குடகுத் தோட்டத்துக்குத் தகவல் தெரிவித்தால் போதும், எஸ்டேட் கார் ஓடி வந்துவிடும். டிரைவருக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, இஷ்டத்துக்குச் சுற்றுவான். ஒப்புக்குத் தோட்டத்துக்குப் போய்த் தலையைக் காட்டிவிட்டுத் திரும்புவதோடு 'மேற்பார்வை' சரி.

    எந்தப் புண்ணியவான் கண் வைத்தானோ, நிலைமை மாறிவிட்டது.

    திரவியம் கைக்கெடியாரத்தை நோக்கினான்.

    போன் செய்துவிட்டு அங்கே மில்லியும் திலீப்பும் காத்துக்கொண்டிருப்பார்கள், சீக்கிரம் போக வேண்டும். ஆனால் ஆட்டோ?

    நேரத்தை இப்படி வீணாக்கிக் கொண்டிராமல், சென்னையுடன் மறுபடி தொடர்பு கொண்டு, மேற்கொண்டு விவரம் ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தால் என்ன என்ற யோசனை உதித்தது.

    ஓட்டல் வரவேற்பில், எப்படியும் ஓர் அறை வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருந்த கறுப்பு சூட்காரரிடம், நான்தான் சொன்னேனே சார்! ஒரே ஒரு டபுள் ரூம்தான் - அதுவும் டிலக்ஸ் - இருக்கிறது. ஸிங்கிள் ரூம் காலி இல்லை. வைத்துக்கொண்டா இல்லை என்கிறோம்? என்று கூறி அனுப்பிய விசுவநாதம், ஏய், மூர்த்தி! என்றார்.

    மூலையில், டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் உட்கார்ந்து இருந்த இளைஞன் திரும்பிப் பார்த்தான். சார்?

    201க்கு அரைவல் டைம் போடவில்லையே, ஏன்?

    மூர்த்தி எழுந்து வந்தான். ஓட்டலில் தங்கியிருப்பவர்களுடைய பெயர்ப் பட்டியல் கொண்ட தடித்த புத்தகத்தில் அவர் காட்டிய இடத்தைப் பார்த்துவிட்டு, காதைச் சொறிந்துகொண்டே, அவசரத்தில் போட மறந்து போய்விட்டார் போலிருக்கிறது என்றான் தாழ்ந்த குரலில்.

    விசுவநாதம் கடிந்து கொண்டார்.

    ஒழுங்குதான்! நாம்தான் கவனித்துப் போடச் சொல்ல வேண்டும். எதற்கு இருக்கிறோம்?

    மெட்ராசுக்கு ஒரு கால் புக் பண்ணுகிறீர்களா?

    குரல் கேட்டு மூர்த்தி நிமிர்ந்து பார்த்தான். மலர்ச்சி. அவரே வந்துவிட்டார். சார், நேற்று நீங்கள் ரூம் எடுத்துக்கொண்டபோது மணி என்ன? விட்டுப் போயிருக்கிறது. தயவு செய்து குறித்துவிடுங்கள்.

    அவன் நீட்டிய பால்பாயிண்ட் பேனாவை வாங்கிக்கொண்டான் திரவியம்.

    உள்ளபடிக்கு அவர்கள் வந்தபோது மணி மூன்று. பிருந்தாவன் எக்ஸ்பிரஸிலிருந்து இறங்கி - ரயில் கொஞ்சம் தாமதம் - நேரே ஓட்டலுக்கு வந்துவிட்டனர். மூன்று என்று போட்டால், அறையை என்றைக்குக் காலி செய்வதாக இருந்தாலும் மூன்று மணிக்குள் காலி செய்தாக வேண்டும். மூன்றுக்கு மேலானால் இன்னொரு முழு நாளைக்கான வாடகை வசூல் பண்ணி விடுவார்கள். ஞாபகப்படுத்திக்கொள்ள முயல்பவன் போல் சற்றுத் தயங்கியவன், 'நாலரை' என்று எழுதப்போன சமயம், தன்னுள் ஏதோ ஒன்று தடுப்பதை உணர்ந்தான். உனக்கு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டிய நேரம் இது. அதற்கு ஏற்றாற்போல் பெரிய திட்டம் ஒன்று போட்டிருக்கிறாய். இந்தச் சின்ன விஷயத்தில் சபலப்பட்டுத் தவறு செய்தாயானால், அதிர்ஷ்டக் கணக்கு இத்தோடு தீர்ந்து போய்விடும். ஜாக்கிரதை!

    மூன்று என்று உண்மையை எழுதிவிட்டுச் சென்னையைக் கூப்பிடச் சொல்லி டெலிபோன் எண்ணைக் கொடுத்தவன், எதிரில் இருந்த சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டான்.

    சென்னை அலுவலகத்தில் அவனுக்கு வேண்டியவர்களைக் காட்டிலும் வேண்டாதவர்கள் அதிகம். காலையில் போன் செய்தபோது, சரியான தகவல் கிடைக்கவில்லை. யோகு என்று ஒரு பையன். நல்லவன். தனக்கு வேலை கிடைக்கத் திரவியம்தான் காரணம் என்பதை மறக்காதவன். அவனைப் பிடிக்கலாம் என்று பார்த்தால், லீவில் இருக்கிறானாம். நகத்தைக் கடித்தபடி திரவியம் யோசித்துப் பார்த்தான். யாரை அனுப்பியிருப்பார்கள்? மானேஜர் பாண்டியன் வயதானவர். வெளியூர் போக வர ஒப்புக்கொள்ள மாட்டார். அடுத்தது, சேஷாத்ரி அக்கவுண்டன்ட். அவன் வந்து தொலைத்தால் ஆபத்து. கழுகு மாதிரி, எதுவும் அவன் பார்வையிலிருந்து தப்பாது.

    என்ன ஆயிற்று மெட்ராஸ் கால்?

    மத்திய எக்ஸ்சேஞ்சை விசாரித்த மூர்த்தி ஏமாற்றமான செய்தி சொன்னான்.லைன் அவுட் ஆஃப் ஆர்டராம்.

    ஹூம். அரை மணி நேரம் வீண்! திரவியம் எழுந்து, சாலைக்கு வந்தான்.

    நடைபாதையில் நடக்கலானான். மழைக்கான அறிகுறிகள் தெரியலாயின. அதிர்ஷ்டவசமாக, சிறிது தூரம் செல்வதற்குள் காலியாக ஓர் ஆட்டோ கிடைத்தது.

    சாய்ந்து உட்காரப் பொறுமையில்லாமல், கம்பியிலிருந்து தொங்கும் பிடியைப் பற்றியபடி, இருக்கையின் விளிம்பில் பொறுமையில்லாமல் தொற்றிக்கொண்டு, நெரித்த புருவத்துடன் சாலையைப் பார்த்தும் பார்க்காதவனாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த அவனுடைய மனம், அந்தக் கிரயப் பத்திரத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

    அண்மைக் காலம் வரையில் வாழ்க்கையை உல்லாசமாகவும், பொறுப்பே இல்லாமலும் கழித்து விட்டவன் அவன். மாற்றுவதற்குத்தான் நோட்டு, அனுபவிப்பதற்குத்தான் இரவு - இப்படிக் காலம் சென்றுவிட்டது. ஒரு வகையில் பெரியவர்தான் - அவனுடைய ஒன்றுவிட்ட மாமா அவர் - அதற்குப் பொறுப்பு என்று அவனுக்குத் தோன்றும். அன்புடன் அவர் அவனுக்குப் பல சலுகைகள் கொடுத்து வந்திருந்தார். அவன் அம்மா ஒரு தடவை அவரைச் சந்தித்துக் கெஞ்சியது அவனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. அண்ணா! திரவி மேலே நீங்கள் காட்டுகிற பிரியத்தைக் காணும்போது, அவர் இல்லையே பார்த்து சந்தோஷப்பட என்று இருக்கிறது. மைசூர், பெங்களூர் என்று போகிற போதெல்லாம் கூடவே காரில் கூட்டிப் போகிறீர்கள். துணிமணி எல்லாம் புதிது புதிதாக வாங்கித் தருகிறீர்கள். நினைத்தபோதெல்லாம் இந்தா வைத்துக்கொள் என்று ஐம்பதும் நூறுமாய் செலவுக்குக் கொடுக்கிறீர்கள். மதி கூடச் சொல்வாள், எட்டு ஜன்மம் எடுத்தாலும் இந்தக் கடனை அடைக்க முடியாது என்று. ஆனால், அண்ணா! நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்வேன். உருப்படியாக ஒரு வேலை என்று போட்டுக் கொடுக்கக் கூடாதா? இத்தனை மணிக்கு வர வேண்டும், இத்தனை மணிக்குப் போகவேண்டும், மாதம் பிறந்தால் இவ்வளவு சம்பளம், அதற்குமேல் சல்லிக் காசு கிடையாது என்று ஒரு கட்டுப்பாடு பண்ணி வைக்கக் கூடாதா? சொந்தப் பிள்ளைகளான நீலம்கிட்டேயும் சந்துருகிட்டேயும் அவ்வளவு கண்டிப்பாக இருக்கும் நீங்கள், அதில் ஒரு கால்வாசியாவது திரவிகிட்டே காட்டக் கூடாதா? அவனுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது, என்று மன்றாடினாள்.

    ஏற்பாடு பண்ணுகிறேன். நீ கவலைப்படாமல் போ, என்று அம்மாவைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஓர் ஏற்பாடும் செய்யாமலே போய்விட்டார்.

    சாம்ராஜ்யம், மாமா பிள்ளைகளான நீலகண்டன், சந்திரமோகன் கைக்கு வந்ததும், திரவியத்திற்குத் தலைவலி ஆரம்பமாகிவிட்டது. சகோதரர்கள் வெளித் தோற்றத்துக்குத்தான் சகோதரர்கள். உள்ளுக்குள் இடைவிடாத கெடுபிடி யுத்தம், போட்டி. திரவியத்தால் சமாளிக்க முடியவில்லை. இவனுக்குச் சலாம் போட்டால் அவனுக்கு ஆகவில்லை. அவனுக்குத் தலையாட்டினால் இவன் கடுகடுக்கிறான். நல்லகாலம், இந்த லால்சந்த் போலாராம் வந்து சேர்ந்தார், காப்பித் தோட்டத்துக்குக் கொழுத்த விலை கொடுத்து வாங்க. விலை பேசி முடித்த திரவியம், 'நானும் அதிர்ஷ்டக்காரன் தான்' என்று பெருமைப்பட்டுக் கொண்டான். நோட்டுக் கற்றையை எண்ண விரல்களில் நமைச்சல் எடுத்துக் கொண்டிருக்கும் போதுதான், எஜமானர்கள் இருவரும் 'சதி' செய்து விட்டார்கள்.

    ஹோல்டான்!

    அவன் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது.

    கூட்டம் சேருவதற்கான நேரம் வராததால், 'பார்' இணைந்த சிற்றுண்டிசாலை வெறிச்சிட்டுக் கிடந்தது. மூலையிலிருந்த மேசையைச் சுற்றி, திரவியம், திலீப், சுந்தரம் மூன்றே பேர் தான்...

    ஏன் திலீப், மில்லி எங்கே? அவளை இப்படித்தான் போன் பண்ணச் சொல்கிறதா? என்று காட்டத்தோடு கண்டித்தான் திரவியம். என் தங்கை குடைகிறாள், 'யார் அண்ணா அது! ரொம்பப் பழக்கப்பட்டவர்கள் மாதிரி திரவி இருக்கிறாரா என்று கேட்டுவிட்டு, 'பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது' என்று ஞாபகப்படுத்தச் சொன்னார்கள். பெயர் கேட்டேன். டக்கென்று வைத்து விட்டார்கள்! யார் அது?' என்று.

    திரவியத்துக்கு நேர் எதிரில் திலீப், அகலமான சிவப்பு, வெள்ளைப் பட்டைகள் கொண்ட ஸ்வெட்டர் அணிந்திருந்தான். மீசையும் கிருதாவும் இணைந்திருக்க, மோவாய் சுத்தமாக மழிக்கப்பட்டிருந்தது.

    திரவியம் கூறியது காதிலேயே விழாததுபோல் அவன் கிளாஸில் இருந்ததைச் சாவதானமாக உறிஞ்சினான்.

    பிறகு "எஸ்டேட் ஓனர் ரொம்பக் கோபமாக

    Enjoying the preview?
    Page 1 of 1