Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pirantha Naal
Pirantha Naal
Pirantha Naal
Ebook618 pages3 hours

Pirantha Naal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வத்தலக்குண்டுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் எழ்மையில் வளரும் மேனகா. பல அவமனங்களை கடந்து பணம் சம்பாரிக்கும் ஆசையில் சென்னை செல்கிறாள். அவளுக்கும் தேவனுக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பு காதலில் முடிகிறது. அவனனோ நொடிந்த போன ஒரு மிகப்பெரிய வம்சத்தின் வாரிசு. தேவனை சுவீகாரம் செய்து கொள்ள முடிவு செய்யும் சென்னையில் உள்ள மிகப்பெரிய பணக்கார்ரான ரங்கநாயகம் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன? தேவனின் பிறந்த நாளில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? மேனகா காதல் கைக்கூடியாத? இல்லையா என்பதை கதைக்குள் சென்று பார்ப்போம்.
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136705915
Pirantha Naal

Read more from S.A.P

Related to Pirantha Naal

Related ebooks

Reviews for Pirantha Naal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pirantha Naal - S.A.P

    http://www.pustaka.co.in

    பிறந்த நாள்

    Pirantha Naal

    Author:

    எஸ். ஏ. பி.

    S.A.P

    For more books

    http://www.pustaka.co.in/home/author//s-a-p

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பெட்ரோல் பங்க் மேனகா

    2. இருளில் நடந்த சந்திப்பு

    3. தந்தை சொல்

    4. எப்படி இருப்பார் ரங்கநாயகம்?

    5. மைக் கறை

    6. மாடர்ன் ஆர்ட்

    7. கார்த்திகேயினியின் கோபம்

    8. மேனகாவின் கூட்டாளி

    9. உதயமூர்த்தி தந்த செக்

    10. கார்த்திகேயினி காட்டிய நன்றி

    11. இவள்தான் மேனகா

    12. ஈஸ்வரின் கட்டளை

    13. தேவன் பிறந்த தேதி

    14. அத்திப் பழ மிட்டாய்

    15. சுவீகார ஏற்பாடு

    16. வளையல்கள்

    17. அப்பாவும் பிள்ளையும்

    18. அறிவிப்பு

    19. முதல் சிரிப்பு

    20. சூடு

    21. கடிதம்

    22. உடனே புறப்படவும்

    23. அறை 248

    24. கமலியின் கவலை

    25. கமலி செய்த உதவி

    26. உதயமூர்த்தியின் சிகரெட்

    27. தேவனா! யார் அவன்?

    28. விசாரணை

    29. மேனகா வந்தாள்

    30. யாருக்கு?

    31. முனகல்

    32. யோசிக்க வேண்டிய விஷயம்

    33. அம்மாவும் பெண்ணும்

    34. சுவருக்கும் காது உண்டு

    35. ஒரு தந்தி

    36. வழக்கு

    37. கடிதத்தின் விலை

    38. தீர்ப்பு

    39. சோமநாதபுரக் கடிதம்

    40. உதயமூர்த்தியின் வீட்டில்

    41. சோதனை

    1. பெட்ரோல் பங்க் மேனகா

    அரைமணி நேரத்துக்கு முன்பாகவே ஆயத்தமாகி கொடை ரோடு ஸ்டேஷனை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தார் அந்த ட்வீட் ஸூட் அணிந்த நடுத்தர வயதுள்ள முதல் வகுப்புப் பிரயாணி.

    ரயிலின் வேகம் குறையத் தொடங்கியது. தட்டையான கறுப்புப் பெட்டியையும், இறுக்கமாகச் சுருட்டப்பட்ட மெல்லிய குடையையும் கையில் எடுத்துக்கொண்டு அவர் எழுந்து நின்றார்.

    பொழுது விடிந்தும் வானம் வெளுக்காத அந்த மழைக்கால மசமசப்பினூடே, திருவனந்தபுரம் மெயில், கொடை ரோடு ஸ்டேஷனை அடைந்தபோது பிளாட்பாரத்தில் பரபரப்பே இல்லை.

    போர்ட்டர்! என்று கூப்பிட்டார் அவர்.

    அவருடைய அதட்டலான குரல், கொட்டாவி விட்டுக்கொண்டு நின்றிருந்த ஒரு நீலச் சட்டைக்காரனை ஆவலுடன் ஓடிவரச் செய்தது. பெட்டியை அவனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் டக்டக்கென்று வெளியில் நடந்தார்.

    சில்லென்ற காற்றுடன் சன்னமான மழைத் துளிகள் தூவானம்போல் தெறித்து விழுந்து கொண்டிருந்தன. திரண்ட மலைகளின் கருமையும், அடர்த்தியான மேகங்களின் கருமையுமாகச் சேர்ந்து, நீரில் மொதும்பிய சிவப்பு நிலத்தையும் பசுமையான சோளக் கொல்லைகளையும் கூட ஒரு வகைக் கருமையுடன் ஜொலிக்க வைத்துக் கொண்டிருந்தன.

    போர்ட்டர் எதிர்பார்த்தது போல் ட்வீட் ஸுட்காரர் கொடைக்கானல் வண்டிக்காகக் காத்திருக்கவில்லை. எதிரில் நின்றிருந்த பஸ்ஸின் கண்டக்டரிடம், வத்தலகுண்டு போகிறதல்லவா? என்று கேட்டுக் கொண்டே ஏறி, காலியாக இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

    வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் சிறிது நேரம் கழித்து இறங்கியதும், எதையோ தேடியவாறு சுற்றுமுற்றும் பார்த்தவர், சோடா கலர், பிளாஸ்டிக் சாமான்கள் விற்கும் ஒரு கடையண்டை வந்து நின்றார். சுருக்கம் விழுந்த முகமும் நரைத்த மீசையுமாக உட்கார்ந்திருந்த கடைக்காரரையே சற்று எட்டத்திலிருந்தபடி கவனித்தார். தாம் தேடிவந்த நபரை உடனே காண முடியாத ஏமாற்றம் முகத்தில் தெரிந்தது. கெடியாரத்தைப் பார்த்த படி ஒரு வினாடி நின்றார்.

    பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியில் வந்தார். எதிரில், காவல் நிலையத்து வாசலில் நின்றுகொண்டிருந்த போலீஸ்காரரிடம், டிராவலர்ஸ் பங்களாவுக்கு எப்படிப் போக வேண்டும்? என்றார்.

    டிராவலர்ஸ் பங்களாவா? என்று இழுத்தார் போலீஸ்காரர். அதிலே எம்.எல்.ஏ. வந்து தங்கியிருக்கிறார். சுமாரான லாட்ஜிங் இரண்டு மூன்று இருக்கிறது. போய்ப் பாருங்கள். அதோ அங்கே ஒன்று இருக்கிறது. இங்கே ஒன்று, என்று கையைக் காட்டினார். அவர் கடைசியாகச் சுட்டிக் காட்டிய திசையில் ட்வீட் ஸுட்காரர் நடக்கலானார்.

    கீழே கடைகளும், மாடியில் வாடகைக்கு விடப்படும் அறைகளுமாக இருந்த அந்தக் கட்டிடத்தில் அவர் நுழையவும், முழங்காலளவுக்கு முண்டு மட்டும் கட்டிக் கொண்டிருந்த ஒரு நெடிய மனிதர் குழப்பத்துடன் எழுந்து, என்ன வேண்டும்? என்றார்.

    ரூம்.

    விடுதிக்காரர், வந்திருப்பவரின் செழிப்பான தோற்றத்தை மறுபடி பார்த்தார்.

    'எங்கள் லாட்ஜிங்கிலா தங்க வந்திருக்கிறிர்கள்?' என்று ஆச்சரியப்படுகிறவரைப்போல், நீங்கள்... என்று மென்று விழுங்கினார்.

    ரூம், என்றார் வந்தவர்.

    வேறு வழியில்லாமல் விடுதிக்காரர் மாடிப்படி ஏறினார்.

    மஞ்சள் வண்ணம் அடித்து, 1, 2, 3 என்று கோணல் மாணலாக எண்கள் எழுதப்பட்ட பலகையில் ஏழு சாவிகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றை எடுத்து ஓர் அறையைத் திறந்து விட்ட விடுதிக்காரர், ஆவலை அடக்கமாட்டாமல், சார் எங்கிருந்து வருகிறீர்களோ? என்றார்.

    அறையின் கதவு படீரென்று அவர் முகத்தில் சாத்தப்பட்டது தான் அவருக்குக் கிடைத்த பதில்.

    மிக எளிய அறை அது. ஒரு மலிவான மரக்கட்டில். கதவில்லாத சுவரலமாரி. மணல் பரப்பிய மூலையில், பானை நிறையத் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. தரையில் கம்பளமோ, ஜன்னலுக்குத் திரையோ, டிரெஸ்ஸிங் டேபிளோ, நாற்காலியோ கிடையாது. அறையின் குறுக்கே துணி உலர்த்தும் கொடியொன்று ஓடிற்று. வந்தவர், அதிருப்தியுடன் சுற்றுமுற்றும் பார்த்தார். கட்டிலில் உறைபோடாத மெத்தையும் ஒரு தலையணையும் இருந்தன. 'லாண்டரி என்றால் என்ன?' என்று கேட்கக்கூடிய விரிப்பொன்று படுக்கைமீது மடித்து வைக்கப்பட்டிருந்தது.

    பெட்டியைச் சுவரலமாரித் தட்டொன்றில் வைக்கப் போனவர் அதில் உள்ள தூசியைப் பார்த்துவிட்டு கட்டில் மீது வைத்துக்கொண்டு அவரும் உட்கார்ந்தார். பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார். 'தேவராஜ் கல்லூரி மாணவன். வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் கண்ணப்பரின் மகன்,' என்ற வரிகளைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தார். பிறகு அதை உள்ளே வைத்து மூடி விட்டு, சிறிது சாயலாம் என்ற எண்ணத்துடன் கோட்டைக் கழற்றினார். அழுக்கு பெட்ஷீட்டை விரிப்பதைக் காட்டிலும், வெற்று மெத்தையில் படுப்பது பரவாயில்லை என்று தோன்றிற்று. விரிப்பை இரண்டு விரல்களால் தூக்கியபோது அதிலிருந்து சில மூட்டைப் பூச்சிகள் உதிர்ந்து சாவகாசமாக நகர்வதைக் கண்டார். அந்த வினாடியே விரிப்பை தூர எறிந்து விட்டுக்கோட்டை மாட்டிக்கொண்டு, பெட்டியையும் குடையையும் எடுத்துக்கொண்டு மளமளவென்று இறங்கி வந்தார்.

    வாடகை எவ்வளவு? என்று கேட்டபடி பர்ஸைத் திறந்தார்.

    விடுதிக்காரர், குளிக்கலாமே? டிரம்மில் தண்ணீர் பிடித்து பாத்ரூமில் வைத்திருக்கிறேன், என்றார்.

    வாடகை எவ்வளவு?

    இரண்டு ரூபாய், என்றார் விடுதிக்காரர்.

    ஐந்து ரூபாய் நோட்டொன்றை அவரிடம் வீசிவிட்டு அந்த மனிதர் விடுவிடுவென்று நடந்தார்.

    இம்முறை பஸ் ஸ்டாண்டு கடையில், கிழவரோடு அவர் பிள்ளையும் இருந்தான். சிரித்த முகமும் கலகலப்பான பேச்சுமாக இருந்த அவனிடம் அவன் தந்தை தேவா! சாருக்கு என்ன வேண்டும் கேள், என்றார்.

    என்ன கூல்டிரிங்க் இருக்கிறது? என்றார் ட்வீட் ஸுட்காரர்.

    அவன் இரண்டு மூன்று பெயர்களைச் சொன்னான். பிறகு, எங்களிடம் ஸ்பெஷல் சர்பத் இருக்கிறது. சாப்பிட்டுப் பார்க்கிறீர்களா? என்றான்.

    ட்வீட் ஸூட்காரர் பானத்தை அருந்திக்கொண்டே தேவனுடன் பேச்சுக் கொடுத்தார். ஏதோ சாக்கில் அவனை நடக்கச் செய்து தலை முதல் கால்வரை கவனித்துப் பார்த்தார். பிறகு, பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியில் வந்து டாக்ஸி ஒன்றில் ஏறி உட்கார்ந்து ஆரனை அழுத்தினார்.

    டிரைவர் வந்ததும், மதுரை, என்றார் சுருக்கமாக.

    மேனு! என்று வலுவிழந்த குரலில் கூப்பிட்டார், கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த சரவணமுத்து. நேற்றைக்கு லெட்டர் ஏதோ வந்தாற்போலிருக்கிறதே, யார்

    வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த மேனகா, சைக்கிளின் மிதி கட்டையைக் கழற்றிச் சங்கிலி சரியாக இருக்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தாள். பார்த்தேன், தாத்தா.

    வத்தலகுண்டிலிருந்து ஐந்தாவது மைலில், பெரிய குளம் சாலையிலிருந்து கொடைக்கானலுக்குப் பாதை பிரியும் 'காட்டு ரோடு' என்ற இடத்திலுள்ள பெட்ரோல் பங்க்கில் அவள் காஷியர். பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வது கம்பெனியின் கொள்கைக்கு விரோதமென்றாலும், அவள் தாத்தா சரவணமுத்துவின் விசுவாசமான உழைப்புக்காக எஸ்.எஸ்.எல்.ஸி. படித்து விட்டு சும்மா வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த அவரது தாயில்லாத பேத்தி விஷயத்தில் விதிவிலக்கு அளித்திருந்தார்கள். ஒதுப்புறமாக உள்ள அந்த இடத்தில் மாலை ஐந்து மணிக்கு மேல் அவள் இருக்க வேண்டியதில்லை. என்பது மற்றொரு சலுகை. ரொக்கப் பொறுப்பு அவளிடம் விடப்பட்டிருந்தது. மற்ற வேலைகளுக்கு மாணிக்கம் என்றொரு பையன் இருந்தான்.

    கடிதத்தைப் பற்றிப் பேத்தி மேற்கொண்டு எதுவுமே சொல்லாதது கிழவருக்கு வியப்பாக இருந்தது, உன் சினேகிதிதானே எழுதியிருக்கிறாள்? கமலி என்பாயே? என்றார்.

    உம், என்றாள் அவள். சினேகிதியாமே, சினேகிதி! கமலியை நினைக்கையில் - குறிப்பாக, அவளுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்னை சென்று பத்து நாள் அவள் வீட்டில் தங்கியபோது நிகழ்ந்த சம்பவங்களை நினைக்கையில் - மேனகாவின் கண்களில் நீர் நிறைந்தது.

    கமலியின் வீட்டில் போய் இறங்கியதும், காப்பி டம்ளர்களைக் கொண்டு வந்த பணிப்பெண் தட்டை முதலில் தன்னிடம் நீட்டுவதைக் கண்ட மேனகா, ஏழை விருந்தாளிக்குக் கொடுக்கப்படும் மரியாதையை நினைத்து மகிழ்ந்து தான் போனாள். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட டம்ளரிலேயே அவளுக்குக் காப்பி கொடுத்து வந்தார்கள். ஒருநாள் தவறுதலாக அவள் வேறொரு டம்ளரை எடுத்துக் குடிக்க நேர்ந்தபோது தான் மற்ற டம்ளரில் உள்ள காப்பியின் தரத்துக்கும் தனக்குக் கொடுக்கப்பட்ட காப்பியின் தரத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தது. இவ்வளவு பெரிய பணக்காரர்களுக்கு இத்தனை ஈன புத்தியா! என்று அதிர்ந்து போனாலும், ஆத்திரத்தை அடக்கிக்கொண்டாள். ஒரு நாள் சினிமாவுக்குப் போனார்கள். மேனகாவிடம் அன்பாக, ஒன்றேகால் ரூபாய் ஸீட் போதும் இல்லையா? என்றாள் கமலியின் அம்மா. ஓ, என்று தலையாட்டினாள் மேனகா. அவளுக்கு மட்டும் ஒன்றேகால் ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொடுத்து விட்டு அவர்கள் எல்லோரும் முதல் வகுப்புக்குப் போய்விட்டார்கள்! அன்றைக்கே மேனகா ஊருக்குப் புறப்பட்டு வந்து விட்டாள். 'வக்கில்லாதவள் என்று நினைத்துத்தானே அப்படிக் கேவலமாக நடத்தினார்கள். நாமும் ஒரு பணக்காரியாகிக் கமலியின் கண் முன்னால் ஆடம்பரமாக வாழ்ந்து காட்ட வேண்டும்,' என்ற ஆங்காரம் அவளுக்கு உண்டாயிற்று.

    தாத்தா ஒரு முறை இருமினார். பிறகு, கமலி வீட்டில் எல்லோரும் சௌக்கியமாக இருக்கிறார்களாமா? என்றார்.

    சௌக்கியத்துக்கு என்ன குறைச்சல்? என்று முணுமுணுத்தாள் அவள்.

    அவளுடைய பதிலின் தன்மையிலிருந்து கிழவர் நிலைமையைப் புரிந்து கொண்டுவிட்டார்.

    ஏம்மா, நீ போயிருந்த போது அவள் சரியாக நடந்து கொள்ளவில்லையா?

    சரியாகத்தான் நடந்து கொண்டாள், என்றாள் அவள். ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டவரிடம் இதையெல்லாம் சொல்லி மனத்துக்குக் கஷ்டம் கொடுக்க வேண்டாம் என்று அவள் நினைத்தாள். அத்துடன், தாத்தா பழங்கால மனிதர். சமாதானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவர் ஏதோ சொல்லப் போக, அது அவளது ஆத்திரத்தை மேலும் கிளப்புவதாக அமைந்து விடவும் கூடும்.

    என்னம்மா பண்ணிக்கொண்டிருக்கிறாய்? என்றார், அவர்.

    ஒரு சிறிய குறடால் சைக்கிள் சங்கிலி 'நட்'டை முடுக்கிக்கொண்டே, நேற்றுத்தான் டைட் பண்ணினேன். அதற்குள் லூஸாகிவிட்டது. என்றாள் அவள்.

    மேனு, இங்கே வாம்மா.

    ஒரு நிமிஷம். மூலையிலிருந்த கந்தையில் கைகளைத் துடைத்துவிட்டு அவள் வந்தாள். என்ன தாத்தா?

    இன்றைக்கும் சைக்கிளில்தான் போகப் போகிறாயாம்மா?

    அவள் புன்னகை செய்தாள்.

    இதோ இருக்கிறது காட்ரோடு. சைக்கிளில் போய் விட்டு வருவது ஒரு கஷ்டமா தாத்தா? நீங்கள் பேசாமல் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். மருந்தை மறக்காமல் சாப்பிடுங்கள். தண்ணீர் மருந்து ஒரு கோடு மஞ்சள் மாத்திரையில் பாதி. சரிதானா?

    தினசரி பத்து மைல் சைக்கிளில் போய்வருகிறாள். அதுவும் ஏற்றமும் இறக்கமும் நிறைந்த பாதையில். அவர் குரல் கரகரத்தது. தங்கம் இருந்தால் பொல்லாத சண்டைக்காரியாயிற்றே? - என் மகளை இதற்குத்தானா உங்கிட்டே விட்டுப் போனேன் என்று என்னை உலுக்கி எடுத்திருப்பாளம்மா!

    இல்லை தாத்தா. வாழ்க்கையெல்லாம் உழைத்த தாத்தாவுக்கு வயதான காலத்தில் இந்த உதவியாவது செய்கிறாயே என்று என் கன்னத்தில் முத்தம் கொடுத்திருப்பாள்.

    நான் சொல்கிறதைக் கேள், மேனு. பஸ்ஸிலேயே போய் வா.

    ஏன் தாத்தா, நீங்களும் இதே பெட்ரோல் பங்க்கில் அத்தனை வருடம் வேலை பார்த்தீர்களே. பஸ்ஸிலேயா வந்து போய்கொண்டிருந்தீர்கள்?

    நான் ஆண் பிள்ளையம்மா.

    ஆண் பிள்ளை என்பதற்காக, கூட இரண்டு கால் முளைக்கிறதா என்ன? விடுங்கள் தாத்தா. எனக்கு இது தான் சந்தோஷமாக இருக்கிறது.

    அவர் கண்கள் கலங்கின.

    ஏம்மா, நான் தூங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டு நேற்று ராத்திரி முனகிக்கொண்டே காலில் எண்ணெய் போட்டு நீவிவிட்டுக் கொண்டாயே, அப்போதுகூட சந்தோஷமாகத்தான் இருந்ததா?

    எப்போதாவது ஒரு நாள் தானே அப்படி? நான் வருகிறேன் தாத்தா.

    நில் மேனு. தினம் அறுபது காசு செலவழிக்கிற நிலையிலே நாம் இல்லை என்று உன் நினைப்பு இல்லையா?

    என்ன தாத்தா இது, வேலைக்குப் புறப்படும்போது வம்பு பண்ணிக்கொண்டு?

    மேனு. அந்தப் பெட்டியைத் திறம்மா.

    நேரமாகிறதே தாத்தா.

    எடு சொல்கிறேன். பழைய கார் சாமான் இருக்கிறது பார். அதற்குக் கீழே ஒரு கட்டு இருக்கும்.

    முணுமுணுத்துக் கொண்டே அவள் கள்ளிப் பெட்டியில் குடைந்தாள்.

    பச்சையாக ஒரு கவர், இருக்கிறது இதுவா?

    அதுதான் கொண்டு வா, பிரித்துப் படி.

    அவளுக்கு விந்தையாக இருந்தது.

    டிபாஸிட் ரசீது! என்ன தாத்தா இது.

    என்னம்மா முழிக்கிறாய்?

    ஒன்பதினாயிரம் ரூபாய்க்கு ரசீது!

    ஆமாம் மேனு. முப்பது வருடகாலமாக நான் உழைத்த உழைப்பைக் கட்டியாக உருட்டி வைத்திருக்கிறதம்மா அதிலே. ஒவ்வொரு மாதமும், பாதி சம்பளத்தை அப்படியே கம்பனியிலே போட்டுவிடுவது வழக்கம்.

    அவள் உணர்ச்சி மேலிட்டவளாய் அவரைப் பனித்த கண்களோடு நோக்கினாள்.

    என்னால் நம்பமுடியவில்லை தாத்தா, இதைச் சேர்க்கிறதற்கு நீங்கள் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி...

    எல்லாம் உனக்காகத்தான், மேனு. என் தங்கத்தின் பெண் இருக்கிறாளே அவளுக்காக ஆயுள் முழுதும் உழைத்தேம்மா. மேனு, பொழுது போகவில்லை என்கிறாய், வேலை செய்துவிட்டுப் போ. ஆனால் பல்லுக்கு காசு இல்லை என்பதற்காகப் பத்துமைல் காலை ஒடித்துக் கொள்ள வேண்டாம்மா. நான் சொல்கிறதைக் கேள். பேசும்போதே அவருக்கு மூச்சு வாங்கிற்று.

    அவள் பயந்துவிட்டாள்.

    என்ன தாத்தா? அப்படி இரைக்கிறது!

    பயப்படாதே அம்மா, உன்னை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்கு முன் நான் சாகமாட்டேன். மேனு, இனிமேல் பஸ்ஸிலேயே போம்மா

    ஆகட்டும் தாத்தா. நாளையிலிருந்து போகிறேன்.

    ஏம்மா. காலெஜ் லீவாம். தேவன் வந்திருக்கிறானாமே?

    அப்படியா? தெரியாதே, என்றாள் அவள். ஆனால் ஏனோ முகம் சிவந்தது.

    யாரோ சொன்னார்கள். வந்தால் என்னை வந்து பார்க்கச் சொல்.

    சரி தாத்தா. இந்தாருங்கள் ரசீது. நான் வருகிறேன். கதவைத் தாள் போட்டுக்கொள்ளுங்கள்.

    தாத்தா சொன்ன செய்தி அவள் எண்ணப் போக்கில் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணிவிட்டது. கிட்டத்தட்டப் பதினாயிரம் ரூபாய்! தாத்தா அவளுக்குச் சேர்த்து வைத்த சீதனம்!

    சைக்கிளில் ஏறிக்கொண்டு அவள் வேலைக்குக் கிளம்பினாள்.

    சென்னையில் சில நாள் இருந்துவிட்டு வந்த பிறகு அவளுக்கு வத்தலகுண்டு வாழ்க்கை அலுத்துப் போய் விட்டது. இப்போது அது ஒரு தீர்மானமாகவே உருவாயிற்று.

    கையில் காசில்லாமல் வெறும் எடுபிடிப் பையனாகச் சென்னைக்குச் சென்ற ஒருவர், பத்தே ஆண்டுக்குள் தவணை முறை வியாபாரத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்துவிட்டதைப் பற்றி ஒரு மாதப் பத்திரிகையில் அவள் நேற்றுத்தான் படித்திருந்தாள். அப்படியிருக்க, மூலதனமாகப் போடப் பதினாயிரம் ரூபாய் இருக்கும் போது என்ன தான் செய்ய முடியாது!

    தேவனுடன் சென்னை சென்று பிஸினஸ் ஆரம்பித்தால்... ஆர்வத்தில் அவள் கற்பனை வேகமாக வேலை செய்தது. கமலி. நான் கையாலாகாதவள் என்று உனக்கு நினைப்பு. அலட்சியமாக நடத்தினாய். இன்னும் ஐந்தே வருடத்தில் பார், என்று அவள் மனத்துக்குள் சவால் விட்டுக் கொண்டாள்.

    பெட்ரோல் பங்க் மாணிக்கத்துக்கு அவளைக் கண்டதும் அப்பாடா என்று இருந்தது. இன்றைக்கு எங்கே வராமல் இருந்து விடுவீர்களோ என்று பயந்து விட்டேன். பில் போடுவதற்குள் எனக்கு மூளையே குழம்பிப் போய்விட்டது போங்கள், இதோ பில் புஸ்தகம். இதோ பணம். சரிபார்த்துக் கொள்ளுங்கள், என்று ஒப்படைத்தான்.

    பதினொரு மணி இருக்கும்போது, அவன் சிரித்துக் கொண்டே, யாரோ வந்திருக்கிறாற் போலிருக்கிறது. என்று அறிவித்தான்.

    முக்கால் மைலுக்கு அப்பால், கங்குவார்பட்டியிலுள்ள பயணிகள் விடுதியில் தான் அவளும் தேவனும் சந்திப்பது வழக்கம். காட்ரோடு வட்டாரத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்குமாதலால் அங்கே சந்தித்துக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. தூரத்தில் தேவன் சைக்கிளில் வந்து கொண்டிருப்பதைக் கண்டதுமே மாணிக்கம் அவளுக்குத் தகவல் கொடுப்பான். அவள் முதலில் விடுதிக்குப் புறப்படுவாள். தேவன் சிறிது இடைவெளிவிட்டுப் பின் தொடர்வான்.

    பத்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன். நீ உஷாராக பில் போடு. 'கேஷ் ஏதாவது குறைந்தால் நீதான் பொறுப்பு,' என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

    மாணிக்கம் மோவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தான். நேற்று இதே மேனகா அவனிடம், தயவுபண்ணி நீயே பில் போட்டுவிடு, மாணிக்கம். நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன். கணக்கிலே அஞ்சு பைசா பத்துப் பைசா மிஸ்டேக் ஆகிவிட்டாலும் நான் போட்டுச் சரி பண்ணிவிடுகிறேன், என்று குழைந்தாளே! இன்று, பேச்சு ரொம்ப ஃபோர்சா இருக்கிறதே, ஏன்; அவனுக்குக் காரணம் புரியவில்லை. மேனகா, பதினாயிரம் ரூபாய்ப் பணக்காரியாகிவிட்ட விவரம் அவனுக்கு அதற்குள் எப்படித் தெரிந்திருக்க முடியும்?

    மலையடிவாரத்தில், மஞ்சளாற்றங் கரையிலிருந்த பழைய பயணிகள் விடுதியின் வராந்தாவில் மேனகா உலவிக் கொண்டிருந்தாள். விடுதி பொதுவாகக் காலியாகத் தான் இருக்கும். காவற்காரர் இளகிய மனமுள்ளவராகையால், சின்னஞ் சிறிசுகள் எப்போதாவது ஒருமுறை தோட்டத்தில் சந்தித்து ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போவதை அத்தனை கண்டிப்பாக ஆட்சேபிக்க மாட்டார். தேவனின் சைக்கிள் மணியோசைக்காகக் காத்திருந்தாள் மேனகா. காட்ரோடிலிருந்து டிராவலர்ஸ் பங்களாவுக்கு சைக்கிளில் வர இவ்வளவு நேரமா?

    அதோ தேவன்!

    என்ன, நடந்து வருகிறீர்கள்! என்றாள் திகைப்புடன்.

    அவன் குனிந்து, தன்னுடைய கால்களிடம், பறந்து வாருங்கள் என்று சொன்னேனே, கேட்டீர்களா? இப்போது வாங்கிக் கட்டிக்கொள்ளுங்கள், என்றான் விளையாட்டாக.

    அவள் பதறினாள்

    சைக்கிள் எங்கே?

    சொந்தக்காரன் கிட்டே இருக்கிறது, என்றான் அவன். தினசரி இரவல் கொடுப்பானா?

    வத்தலகுண்டிலிருந்து எப்படி வந்தீர்கள்?

    பெட்ரோல் பங்க்கிலிருந்து இங்கே எப்படி வந்தேனோ அப்படித்தான்.

    தன்னுடைய முட்டாள் தனத்தை நொந்து கொண்டாள் அவள். வழக்கம்போல் அவன் சைக்கிளில் தன்னைப் பின்தொடர்ந்து வருவான் என்ற எண்ணத்தில் திரும்பிப் பாராமல் அவள் வந்ததன் விளைவாக, வத்தலகுண்டிலிருந்து காட்ரோடு வரைக்கும் நடந்தது போதாதென்று, காட்ரோடிலிருந்து கங்குவார்பட்டி வரைக்கும் அவன் நடக்கும்படி ஆகிவிட்டதே!

    என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், என்றாள் அவள். வழக்கப்படி நீங்களும் சைக்கிளில்தான் வந்திருக்கிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு... ஆமாம், நீங்களாவது கை தட்டிக் கூப்பிடக்கூடாதா? பாவம், முகமெல்லாம் எப்படி வியர்த்திருக்கிறது! துடைத்துக் கொள்ளுங்கள். நிற்கிறீர்களே, உட்காருங்கள்.

    குரலைக் கடுமையாக வைத்துக்கொண்டு ஒரு கன்டிஷன், என்றான் அவன்.

    என்ன?

    திரும்பிப் போகும்போது என்னைக் காரியரில் உட்கார வைத்துக்கொண்டு காட் ரோடில் கொண்டு போய் விடவேண்டும். சம்மதமா?

    குறும்பா? என்றாள் அவள். தனியாக நான் சைக்கிளில் போய் வந்து கொண்டிருப்பதே பல பேர் கண்ணை உறுத்துகிறது. உங்களைக் காரியரில் உட்கார்த்தி வைத்துக் கொண்டால், கேட்கவே வேண்டாம்.

    அவனுக்கு அடம்பிடிக்கும் 'மூட்.'

    அப்படியானால் நான் உட்காரவில்லை. நிற்கிறேன். நின்று கொண்டே இருக்கிறேன். இதோ பார். இப்போதே கால் வெடவெடவென்று நடுங்குகிறது. அவன் பேரம் பேசினான். மேனகா, காட்ரோடு இல்லாவிட்டாலும் அந்தத் திருப்பம் வரையிலாவது... ப்ளீஸ். ப்ளீஸ்.

    என்ன விளையாடுகிறீர்கள்? உட்காரப் போகிறீர்களா இல்லையா?

    முடியாது. கால் இரண்டும் இற்றுக் கீழே விழுகிற வரைக்கும்... ஐயோ, கடுக்கிறதே...

    அவள் சமரசத்துக்கு வந்தாள்.

    நான் பின்னால் ஏறிக்கொள்கிறேன், நீங்கள் ஓட்டுங்கள்.

    முடியாது.

    சரி, ஏற்றிக்கொண்டு போகிறேன், உட்காருங்கள்.

    அவன் கலகலவென்று வெற்றிப் பெருமிதத்துடன் சிரித்தபடி உட்கார்ந்தான். முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

    சிரிப்பைப் பார், என்றாள் அவள்.

    மேனகா. சிரிப்பு என்பதே நம் ஊரில் கால் வைத்த பிறகுதான் வருகிறது!

    மற்ற ஊரில் சிரிக்கவே மாட்டீர்களாக்கும்?

    அதெல்லாம் அரைச் சிரிப்பு கால் சிரிப்பு தான். நிஜமாகச் சொல்கிறேன் மேனகா. முழுச்சிரிப்பு இங்கே தான் வருகிறது. காரணமில்லாமல் தானே குபுகுபுவென்று பொங்கி வருகிறது. மஞ்சளாற்றுத் தண்ணீரையும், கரைத்துக் குடிக்கலாம் போலிருக்கிற நம் ஊர் மண்ணையும், கொடிக்காலையும், தென்னந்தோப்பையும் பார்க்கிறபோது...

    அவளையும் அறியாமல் குபீரென்று அந்த வார்த்தைகள் பீரிட்டுக்கொண்டு வந்துவிட்டன.

    சோளக் கொல்லையையும், சந்து பொந்தையும், அழுக்கையும், அநாகரிகத்தையும் மரவள்ளிக் கிழங்கைத் தின்று விட்டு வாழ்கிற வாழ்க்கையையும்...

    அவன் திகைத்தான்.

    என்ன மேனகா சொல்கிறாய்?

    உண்மையைத்தான் சொல்கிறேன். எனக்கு இந்த ஊரைக் கண்டாலே பிடிக்கவில்லை. இதை நான் வெறுக்கிறேன். எப்போது இதைவிட்டுப் போவோம் என்று காத்திருக்கிறேன்

    அவன் வாய் பேசால் உட்கார்ந்தான். சம்மட்டியால் தாக்குண்ட வேதனை அவனுக்குள் உண்டாயிற்று. மெல்ல அவள் முகத்திலிருந்து கண்களை வாங்கிச் சுற்றுச்சூழலின் மீது செலுத்தினான். வெய்யில் காலத்தில்கூட இந்த வட்டாரம் அழகாகத்தான் இருக்கும். ஆற்றில் வெள்ளம் போகும் இந்தப் பருவத்தில், செல்வமும் செழிப்பும் சிரித்துக் குலுங்கும் இந்த நேரத்தில் - என்ன ஒரேயடியாக இப்படிச் சொல்லிவிட்டாள்? தங்கள் ஊரில் குறையே கிடையாது என்று சாதிக்க அவன் தயாரில்லைதான். இருந்தாலும், இத்தனை காட்டத்தோடு அவள் கண்டிக்கும் அளவுக்கு அப்படி என்ன வந்துவிட்டது? அவன் கவலையோடு அவள் முகத்தைப் பார்த்தான்.

    அவள் அவனிடம் விஷயத்தை எப்படியெப்படியோ ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தாள். அதெல்லாம் இப்போது மறந்து போய்விட்டது.

    உங்களை ரொம்ப நாளாக ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எதிர்காலத்தைப் பற்றி உங்கள் திட்டம் என்ன? என்றாள்.

    எதிர்காலத் திட்டம் அவன் பெருமூச்சு விட்டான். ஓர் அக்காவும் இரண்டு தங்கைகளும் கல்யாணத்துக்கு நிற்கிறார்கள். அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தம்பி சரியாகப் படிப்பதில்லை. அவனை ஒழுங்குக்குக் கொண்டு வந்து ஆளாக்க வேண்டும். ஆள் போட்டால் நம்பிக்கையாக இருப்பானா என்பது சந்தேகம். அப்பா நெடுக விற்றுக்கொண்டு வந்ததுபோகக் கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். பாட்டிக்கு உடம்பு மோசமாகிக் கொண்டு வருகிறது. கடைசி காலத்திலாவது அவள் நிம்மதியாக இருக்க வழி வகுக்க வேண்டும். இதையெல்லாம் அவன் விவரித்தான்.

    நான் அதைக் கேட்கவில்லை, என்றாள் அவள். உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எண்ணிப் பார்ப்பதே இல்லையா? உங்கள் வாழ்க்கையில் லட்சியம் என்று ஒன்றுமே கிடையாதா?

    அதுதான் சொல்லிவிட்டேனே. என்றான் அவன்.

    தம்பி, தங்கை, அப்பா, அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டி, அவ்வளவு தானா உங்கள் லட்சியம்? கார் வாங்க வேண்டும். பங்களா கட்டிக்கொள்ள வேண்டும். மனைவியோடு ஜப்பான், அமெரிக்கா எல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும். இப்படி ஒன்றுமே கிடையாதா?

    அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

    முறைத்துப் பார்த்தபடி அவனிடம் படபடப்பாக பேசியவளும் மௌனத்தில் ஆழ்ந்துவிட்டாள். ஆனால் உள்ளக் கொந்தளிப்பை, விம்மித் தணியும் மார்பகம் காட்டிக் கொடுத்தது.

    அவன் தணிந்த குரலில், லட்சியம் என்பது பெரிய வார்த்தை. நீ சொல்வது அம்பிஷன், என்றான்.

    வார்த்தையில் என்ன இருக்கிறது? என்றாள் அவள் பட்டென்று நான் சொல்வது உங்களுக்கு புரிந்தால் சரி

    அவளோடு விளையாட்டாகப் பேசுவதையும், ஏன், பக்கத்தில் சும்மா உட்கார்ந்திருப்பதையுமே பெரிய மதிழ்ச்சிகளாகக் கருதி வந்தவன் அவன்.

    இன்று ஏனோ திடீரென்று அவள் எட்டப் போய் விட்ட மாதிரி இருந்தது.

    பேச்சை மாற்றும் நோக்கத்தோடு, எப்போதும் இடது பக்கம் தானே வகிடு எடுப்பாய். இன்றைக்கு வலது பக்கமாக எடுத்திருக்கிறாயே? என்று கேட்டான். கேட்டுக் கொண்டிருக்கும்போதே, பெரியவர்கள் கூடி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சிந்தனையில் மூழ்கியிருக்கும்போது, தற்செயலாக வந்து தொலைந்த குழந்தையொன்று அற்பமான ஒரு விஷயத்தைப் பற்றித் தத்துப் பித்தென்று கேட்பது போன்ற ஒரு வெட்கம் அவனுக்குள் உண்டாயிற்று.

    என்ன கேட்டீர்கள்? என்றாள் அவள்.

    ஒன்றுமில்லை. என்றான் அவன்.

    அவள் உட்கார்ந்திருந்த விதமும், தலையைச் சற்றே சாய்த்தபடி மேலுதட்டை மடித்து இலேசாகக் கடித்தவாறு தரையைப் பார்த்த விதமும், அவன் நெஞ்சைப் படபடக்க வைத்தன. அன்போ, ஆசையோ, காதலோ ஏதோ ஒரு விதமான அடைப்பு தொண்டையில் உண்டாவதை அவன் உணர்ந்தான். எல்லாம் நல்லபடி நடக்கும். எதற்கு அனாவசியமாகக் கவலைப்படுகிறாய்? என்று சொல்லால் அவள் உள்ளத்தையும் செய்கையால் அவள் கன்னங்களையும் வருடிக் கொடுக்க அவன் விழைந்தான்.

    ஆனால் அதே சமயம், அவள் கண்களில் தெரிந்த பார்வை, எதிர்காலத்தில் மூழ்கிய சிந்தனை, ஒரு கடினமான சுவர் போல் தங்கள் நடுவே எழும்பியிருப்பதை அவனால் உணர முடிந்தது.

    தன்னுடைய எண்ணங்கள் ஒரு திசையிலும் அவள் எண்ணங்கள் வேறு திசையிலும் சென்று கொண்டிருப்பதை ஊகிக்கும் போது அவனுக்கு நெஞ்சம் வறண்டது. அவளுடைய எண்ண ஓட்டத்தைக் குதூகலமும் ஒளியும் நிறைந்த பாதையில், பூக்களும் வானவில்களும் தேன் கூடுகளும் செறிந்த சாலையில் திருப்ப அவன் ஆசைப்பட்டான். எப்படித் திருப்புவது என்றுதான் அவனுக்குப் புரியவில்லை.

    திருப்ப முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை. அவள் முற்றிலும் புதிய மேனகாவாகக் காட்சியளித்தாள். அவளுக்கும் தனக்கும் உள்ள வித்தியாசத்தை அவன் முதன் முறையாக உணர்ந்தான்.

    அங்கே மாணிக்கம் தடுமாறிக் கொண்டிருப்பான். அவள் எழுந்து கொண்டாள்.

    அவள் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வர, அவன் பக்கத்தில் நடந்தான்.

    அடர்த்தியான தென்னந்தோப்புக்களும் தூரத்தில் கொடைக்கானல் மலையும் தெரிந்தன. மலையில் முன்போலவே அருவிகள் தூய்மையாகக் காட்சியளித்தன. ஆனால் அவை இப்போது அவன் மனத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.

    அவள் கேட்டாள்.

    எப்படித் திரும்பிப் போகப் போகிறீர்கள்?

    நடந்து தான். ஏன்?

    அவர்களுக்குப் பின்னால், தூரத்தில் ஆரன் ஒலி கேட்டது. கொடைக்கானலிலிருந்து ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

    இதைப் பிடியுங்கள், என்று அவனிடம் சைக்கிளைக் கொடுத்துவிட்டு, சாலையின் குறுக்கே வந்து நின்று முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு கையை ஆட்டினாள் அவள்.

    கார் நின்றது.

    வத்தலகுண்டு வரைக்கும் லிஃப்ட் கொடுக்க முடியுமா?

    தாராளமாக, என்று கதவைத் திறந்து விட்டான், கண்ணாடி அணிந்திருந்த ஜிப்பா இளைஞன்.

    தாங்க்யு, என்றவாறு, தேவனிடமிருந்து சைக்கிளை வாங்கிக் கொண்டு, ஏறிக்கொள்ளுங்கள், என்றாள் அவள்.

    மறுத்துப் பேசும் மனநிலையில் தேவன் இல்லை.

    கார் கிளம்பிற்று. லிஃப்ட் கொடுத்தவனுக்கோ, லிஃப்ட் பெற்றுக் கொண்டவனுக்கோ முகம் முகமாக இல்லை.

    ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு இளைஞன் கார்க் கண்ணாடியைப் பார்த்தான்.

    அவள் சைக்கிளில் ஏறிக்கொண்டு வரும் காட்சி அதில் தெரிந்தது.

    வத்தலகுண்டு வரும் வரை, ஒருவரையொருவர் முன்பின் பார்த்திராத இரு இளைஞர்களும் மௌனமாக இருந்தார்கள். பஸ் ஸ்டாண்டு வந்ததும், இங்கே இறங்கிக் கொள்கிறேன், ரொம்ப நன்றி, என்றான் தேவன்.

    இந்நேரம் சும்மா இருந்தது அநாகரிகம் என்ற உணர்வு ஏற்பட்டதோ என்னவோ, பரவாயில்லை. போகிற வழிதானே? என்றான் கார்க்காரன். 'நீங்கள் வெளியூரா? பஸ் ஸ்டாண்டில் இறங்கிக் கொள்கிறீர்களே?'

    இறங்கிக்கொண்டு கதவைச் சாத்தியவாறு, பஸ் ஸ்டாண்டில் அப்பா கடை வைத்திருக்கிறார்... லீவில் வரும்போது கூடமாட ஒத்தாசை செய்வேன். நான் வரட்டுமா? என்றான் தேவன்.

    இளைஞன் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்து விட்டு, நீங்கள் தான் மதுரையில் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறீர்களா? என்றான்.

    ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?

    தேவராஜ்தானே உங்கள் பெயர்? என்று கேட்ட இளைஞன், திகைப்புடன் ஆமோதித்த தேவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஐ ஸீ... ஐ ஸீ... என்று சொல்லிக்கொண்டே காரைக் கிளப்பிக்கொண்டு சென்றான்.

    2. இருளில் நடந்த சந்திப்பு

    மதுரை செல்லவிருந்த பஸ்ஸில் பச்சைப் புடவை அணிந்திருந்த அந்தப் பெண் ஏறிக் கொண்டிருந்தாள். தற்செயலாகத்தான் பார்த்தான் தேவன். அவள் முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் அது மேனகா தான் என்று அவன் உள்ளுணர்வு கூறிற்று. 'மேனகா' என்ற சொல்லை மனம் உச்சரித்த மாத்திரத்தில் இதயம் ஏன் இவ்வளவு வேகமாக அடித்துக்கொள்ள வேண்டும்? சிகரெட் கேட்டவருக்கு ஒரு பாக்கெட் எடுத்துக் கொடுத்து விட்டு யந்திரம்போல், நெருப்புப் பெட்டி வேண்டுமா? என்று அவன் உதடு வினவிக்கொண்டிருக்கும்போது; 'மேனகா ஏன் வேலைக்குப் போகவில்லை? மதுரைக்கு எதற்காகப் போகிறாள்?' என்று கேள்விகளை எழுப்பிற்று உள்ளம்.

    சற்றே குறுக்கு வசத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸுக்குப் பின்னால் தான் அவர்கள் கடை. ஏதோ அலுவல் என்று சொல்லி அவன் அப்பா பழைய வத்தல குண்டுக்குப் போயிருந்ததால், அவன் மட்டும் தான் கடையில் இருந்தான். அவனோடு இரண்டு வார்த்தை பேசாமல், திரும்பிக் கூடப் பார்க்காமல் பஸ்ஸில் ஏறிக் கொண்டு விட்டாளே! நினைக்கும்போது அவனுக்குத் தொண்டை உலர்ந்தது. ஒருகால் அது வேறு யாரேனுமாக இருக்கலாமோ? அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றான். பஸ்ஸில் ஓர் இருக்கையின் கோடியில் உட்கார்ந்திருந்த அவள், தன் தலை மயிரைக் கோதிவிட்டுக் கொண்டபின், முழங்கையை ஜன்னல் கட்டையில் ஊன்றிக் கொண்டிருப்பாள் போலும். மணிக்கட்டிலிருந்த அந்தக் கண்ணாடி வளையல்கள் இலேசான ஓசையுடன் கையின் சதைப் பிடிப்பான பகுதிக்குச் சரியும்போது, சூரிய வெளிச்சத்தின் ஸ்பரிசத்தால் பளிச்சென்று ஒரு வினாடி மின்னுவதை அவன் கண்டான். அவள் மேனகா தான் என்பது அவனுக்கு உறுதியாகிவிட்டது. அவன் வாங்கி அணிவித்த வளையல்கள் அல்லவா அவை? வளையல்களைப் போடும் பொருட்டு அன்றொரு நாள் அந்த அழகிய கரத்தை அவன் மெல்லப் பிடித்தானே. அப்போது ஏற்பட்ட இன்பக் கிளர்ச்சியை அவன் எப்படி மறக்க முடியும்?

    மதுரை பஸ் புறப்படப் போகிறதென்று கண்டக்டர் உரத்த குரலில் கூவலானார். அவனுக்கு நிலை கொள்ளவில்லை. ஓடிப்போய் மேனகாவுடன் இரண்டு வார்த்தை பேசிவிட்டு வந்து விடலாமா? தேவனை ஆவல் உந்திற்று. உள்ளங்கை வியர்த்தது. ஆனால் சமபலமுள்ள வேறு ஏதோ ஒரு தயக்கம் அவளுடைய கண்களைக் கைப்பற்றியிருந்த புதிய பார்வையையும், அவளது பேச்சில் புகுந்திருந்த புதிய தீவிரத்தையும் பற்றிய நினைப்பால் எழுந்த சலனம் - தன்னைப் பின்னுக்கு இழுப்பதை அவன் உணர்ந்தான். அந்தத் தயக்கம் தானே இரவல் சைக்கிள் கிடைத்தும், கடந்த இரண்டு நாட்களாகக் காட்ரோடு பக்கம் அவனைச் செல்ல விடாமல் தடுத்துவிட்டது?

    அவன் ஒரு முடிவுக்கு வருவதற்குள் - என்ன ஏமாற்றம் - பஸ் கிளம்பி விட்டது. அது திரும்பும்போது நன்றாகப் பார்த்தான். அது மேனகாவேதான். கங்குவார்பட்டி பயணிகள் விடுதியில் அடுத்தடுத்து நெருக்கமாக உட்கார்ந்து கலகலவென்று பேசிச் சிரித்தாளே அப்போது அவளது முகத்தில் காணப்பட்ட அழகுக்கும், முன்பின் தெரியாதவள் போல் அவள் பலர் மத்தியில் பஸ்ஸில் உட்கார்ந்து செல்கையில் அவளிடம் புலப்படும் வனப்புக்கும் வித்தியாசம் இருந்தது. என்றாலும் - நினைக்கும் போதே அவன் நெஞ்சு படபடத்தது -கவர்ச்சியைப் பொறுத்தவரையில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதை உணர்ந்தான் தேவன். அவன் எண்ணமெல்லாம் அவன் எவ்வளவுதான் தவிர்க்க முயன்றும் - அன்று முழுக்க மேனகாவைச் சுற்றியே வட்டமிடலாயிற்று.

    சாயங்காலம் அவன் வீடு திரும்பும்போது, வாசல் திண்ணையில் வீற்றிருந்தாள் அவன் பாட்டி. மழைக்காலம் தவிர மற்ற நாளெல்லாம் அந்தத் திண்ணை தான் அவளுக்கு அலுவலகம், பட்டி மன்றம், படுக்கை அறை எல்லாம். வாடாப்பா! என்று வரவேற்றாள் அவள். 'தம்பி இன்னும் வரவில்லையா, தம்பி இன்னும் வரவில்லையா என்று அப்போது முதல் வள்ளி துளைத்துக் கொண்டிருக்கிறாள்!'

    தேவன் முகத்தில் புன்னகை படர்ந்தது. அவனுடைய இரண்டு தமக்கையருள் வள்ளி மூத்தவள். உசிலம்பட்டியில் கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்கள்

    "என்ன அக்கா, இப்போது தான் வழி தெரிந்ததா?’ என்று கேட்டுக் கொண்டே அவன் நுழைந்தான்.

    அவர்களுக்கு எப்போதுமே வழி தெரியும், அண்ணா. குறுக்கே படுத்திருந்ததே நந்தியத்தான், அது இன்றைக்குத்தான் வழிவிட்டதாம்! என்றான் அவன் தம்பி தாஸ், குத்தலாக.

    சும்மா இருடா, வாயாடி, என்று சிரித்த வள்ளி, மடியிலிருந்த தன் குழந்தையிடம், கிரி பாப்பா! மாமாவுக்கு வணக்கம் சொல்லு, என்று அதன் கைகளைப் பிடித்துச் சேர்த்து வைத்தாள்.

    மருமகப் பிள்ளையோடு நான் ரொம்பப் பேச வேண்டியிருக்கிறது. கால் கழுவிவிட்டு வருகிறேன், என்று கிணற்றடிக்குச் சென்ற தேவனுக்கு, அக்காவின் முகத்தில் ஏதோ ஒருவிதமான சோகம் படர்ந்திருப்பது போல் தோன்றிற்று. கணவன் மனைவிக்குள் ஏதேனும் சண்டை நடந்திருக்குமோ?

    அக்கா, கிரிக் கண்ணை என்கிட்டே கொடேன்! என்று வாங்கிக்கொண்டாள் கடைக்குட்டி லல்லி. தாஸ்! இதன் சிட்டுக் காலைப் பார்!! சிங்கார விரலைப் பார்!

    லல்லி! உன்னை ஒன்று கேட்டுக் கொள்கிறேன், என்று தாஸ் அவள் மோவாயைப் பிடித்துக்கொண்டான். நீ எவ்வளவு வேண்டுமானாலும் சிரி. ஆனால் சிரிக்கிறதற்கு முன்னாடி தயவு செய்து வாயை மூடிக்கொண்டு விடு. ‘உன் தெற்றுப் பல்லைப் பார்த்துவிட்டால் குழந்தைக்கு ராத்திரி தூக்கத்திலெல்லாம் தூக்கித் தூக்கிப் போடும்!"

    பென்சில் சீவிக்கொண்டிருந்தாள் இந்திரா. அவளுக்கு, தாஸ் எல்லோரையும் கிண்டல் செய்வது எரிச்சல் மூட்டிற்று. பேச்சுக்கொன்றும் குறைச்சலில்லை, என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள். படிப்பிலே தான் சைபர்.

    இந்தக் கும்மாளத்தில் தேவானை-வள்ளிக்கு நேர் இளையவள் கலந்து கொள்ளவே இல்லை. அம்மியில் ஏதோ அரைத்துக் கொண்டிருந்தவள், அடுப்பின் முன் உட்கார்ந்திருந்த தாயிடம், ஏனம்மா ஒரு மாதிரியாக இருக்கிறாய்? அக்கா வந்து என்ன சொன்னாள்? என்று குடைந்தாள்.

    ஒன்றுமில்லையே. என்றாள் பார்வதி, ஙொண ஙொணவென்ற குரலில். வெங்காயம் உரித்த கையோடு கண்ணைத் தேய்த்துக் கொண்டுவிட்டேன். எரிகிறது அரைத்தது போதும், வழித்து எடு.

    தேவன், நீர் மொண்டு கால் முகம் கழுவிக் கொண்டான். முகத்தைத் துடைத்துக் கொண்டிருக்கும் போது, வள்ளி பக்கத்தில் வந்து நிற்பது தெரிந்தது.

    தாழ்ந்த குரலில் ஏன் தம்பி, நான் கேள்விப்படுவது உண்மைதானா? என்றாள் அவள், கண்கள் கலங்க.

    என்ன கேள்விப்பட்டீர்கள்? என்றான் அவன். அவள் கண்ணீர், அவன் மனத்தைச் சங்கடத்துக்கு உள்ளாக்கியது.

    புதுக்கோட்டைப் பக்கம் போய்விட்டு நேற்றுத்தான் வந்தார் அவர். கல்யாண வீட்டில் பேசிக் கொண்டார்களாம். நினைக்கும்போது ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் வருத்தமாக இருக்கிறது.

    வள்ளி என்ன சொல்கிறாள்? அவனுக்கு விளங்கவில்லை.

    எதைப்பற்றி? என்றான்.

    அவள் சற்றே நெற்றியைச் சுளித்துக் கொண்டாள்.

    அப்பா உன்கிட்டே ஒன்றும் சொல்லவில்லையா?

    இல்லையே!

    "இவர் தான் தப்பாய்ப் புரிந்து கொண்டுவிட்டார்

    Enjoying the preview?
    Page 1 of 1