Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indriravu
Indriravu
Indriravu
Ebook177 pages1 hour

Indriravu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

தாயை இழந்த நிம்மிக்கு இன்ஜினீயரான அவள் அண்ணன் சரவணனின் அன்பு மட்டும் கிடைக்காத விஷயம். அண்ணி தன் குழந்தையையே பேணாதவள். ஆனால் நிம்மிக்கு அண்ணன் குழந்தை என்றால் உயிர். அவளுக்கு ஆறுதல் தர வருபவர் காதல் வலை விரித்தால்... நிம்மியின் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன, அதை அவள் எப்படி சமாளிக்கிறாள், அவள் காதல் நிறைவேறியதா என தெரிந்துகொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136705911
Indriravu

Read more from S.A.P

Related to Indriravu

Related ebooks

Reviews for Indriravu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indriravu - S.A.P

    http://www.pustaka.co.in

    இன்றிரவு?

    Indriravu?

    Author:

    எஸ். ஏ. பி.

    S.A.P

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-a-p

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இன்று காலை: நிம்மி

    இன்று காலை: நிம்மி (2)

    இன்று காலை: நிம்மி (3)

    இன்று காலை:நிம்மி (4)

    2. இன்று பிற்பகல் சைதாப்பேட்டை கோவிந்தசாமி

    சைதாப்பேட்டை கோவிந்தசாமி (3)

    இன்று பகல்:சைதாப்பேட்டை கோவிந்தசாமி (4)

    இன்று பகல்:சைதாப்பேட்டை கோவிந்தசாமி (2)

    இன்று மாலை? : டாக்டர் அப்பன்ராஜ்

    இன்று மாலை: டாக்டர் அப்பன்ராஜ் (2)

    இன்றிரவு? (1)

    இன்றிரவு? (2)

    இன்றிரவு? (3)

    இன்றிரவு? (4)

    1. இன்று காலை: நிம்மி

    என்ன காரணமோ தெரியவில்லை, உற்சாகமும் குதூகலமும் பொங்கித் ததும்ப வேண்டிய விடுமுறை நாளன்று, மனம் ஏனோ வெறிச்சிட்டுப் போய், பசையின்றி, எதிலுமே அக்கறை காட்டாமல் இருப்பதை, ஜிம்கானா கிளப் பாதையில் சரக்கென்று வண்டியைத் திருப்பிய பாஸ்கர் உணர்ந்தான். அந்த உணர்வு அவனிடம் குழப்பத்தை உண்டாக்கிற்று.

    இவ்வளவுக்கும், அவன் அக்கா அன்புடன் சுருட்டிக் கொடுத்திருந்த நோட்டுக் கற்றை, என்ஜாய் யுவர் ஸெல்ஃப், என்ற ஆசியுடன் கிடைத்த அந்த வார அலவன்ஸ் - அவனது டைட் பாண்ட்ஸ் பைக்குள் தயாராக இருந்தது. ஆனால் அதை அவிழ்த்துவிட அவன் கைக்கு நமைச்சல் எடுக்கவில்லை.

    கிளப் காம்பவுண்டில் காரை ஒயிலாக நிறுத்தி விட்டு இறங்குமுன், கண்ணாடியில் தன் முத்தைப் பார்த்துக் கொண்டான். அடர்த்தியான தலைமுடி; கழுத்துவரை நீண்டிருக்கும் கிருதா; மழமழவென்று ஷேவ் செய்யப்பட்ட கன்னங்கள்; எல்லாம் எப்போதும்போல் கவர்ச்சியாகவே இருந்தன. ஆனால் உள்ளத்தில் மட்டும் கிளர்ச்சி இல்லை.

    ஹலோ 1

    ஹாய் 2

    நண்பர்களின் கையாட்டல்களையும், புருவ உயர்ச்சிகளையும், தோள் தட்டல்களையும் லாகவமாகக் கடந்து, மதுபானங்கள் விற்கப்படும் ‘பாரை’ அடையுமுன், செயற்கையாகப் புன்னகை செய்ததன் காரணமாக வாய் வலியெடுத்துவிட்டது அவனுக்குத் தெரிந்தது. காலை நேரமாகையால் பாரில் கூட்டமே இல்லை. அவனும் நேரங் கெட்ட நேரத்தில் ஜாக்கிரதையாக இருப்பதுதான் வழக்கம். குடல் புண்ணுக்கு அழைப்பு அனுப்பத் துடிக்கும் கோஷ்டியைச் சேர்ந்தவனல்ல அவன். இருந்தாலும், இன்றைக்கு விதிவிலக்கு. விருந்தாகக் கருதப்பட்டு வந்ததை மருந்தாகப் பயன்படுத்திப் பரீட்சை செய்து பார்க்க வேண்டிய ஒரு தேவை அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

    அரை மணி கழித்து, உதட்டில் ஒருவித நெடியையும், உடலெங்கும் ஒரு விதமான கதகதப்பையும் சம்பாதித்துக் கொண்டு அவன் எழுந்தபோது - என்ன ஏமாற்றம்! - உள்ளத்தில் ஏற்பட்டிருந்த ஏக்கக் குழி அதனால் தூர்ந்து போய்விடவில்லை என்று தெரிந்தது. போதை ஏறியிருந்தாலும் கிளுகிளுப்பு இல்லை. தொடர்ந்து அங்கே இருக்கப் பிடிக்காதவனாய் அவன் தன் காரை அடைந்தான்.

    கிளப்புக்கு வரும் வழியில் சாலையில் எந்த இடத்தில் மழைத் தண்ணீர் தேங்கியிருந்ததோ தெரியவில்லை. கார்ச் சக்கரமெல்லாம் ஒரே சேறு. அதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், புல்வெட்டிக் கொண்டிருந்த தோட்டக்காரனைக் கூப்பிட்டான். பண்டிகை தவறாமல் பாஸ்கரிடம் அவன் இனாம் வாங்குகிறவன். ஓடி வந்தான். ஆசாமி போதையில் இருக்கிறான் என்று அவனுக்குப் புரிந்தது. இருந்தாலும் பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, ஸெண்ட் வாசனை கமழும் விலை உயர்ந்த கைக்குட்டையை அதில் தோய்த்துக் கார்ச் சக்கரத்தை பாஸ்கரே துடைக்க ஆரம்பிப்பான் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

    பதறிப்போய், துணி இதோ இருக்குங்க. நான் கழுவுகிறேன். நீங்க எழுந்திருங்க என்று துடித்தான்.

    பாஸ்கர் கேட்கவில்லை. பக்கத்தில் நின்றிருந்த கார் டிரைவர்கள் பார்த்தும் பார்க்காதவர்கள் போல் தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதை லட்சியம் செய்யும் நிலையை அவன் கடந்துவிட்டிருந்தான்.

    சிகரெட்டை வாயிலிருந்து எடுக்காமல், நா குழற, இது என் கார். இது என் கைக்குட்டை, என் காரை என் கைக்குட்டையால் க்ளீன் பண்ணுகிறதுதான் அழகு. நாகரிகம், பண்பாடு, நீ போய் வேலையைப் பார். என்றான்.

    நான் துடைக்கிறேன் சார். உங்களுக்கு எதற்கு சார் இதெல்லாம்?

    பாஸ்கர் தன் சிவந்த கண்களால் அவனை முறைத்துப் பார்த்தான்.

    போடா அந்தண்டை! போடா என்றால்!

    மேற்கொண்டு வாதாடினால் விபரீதமாகி விடும் என்று அஞ்சியவனாய்த் தோட்டக்காரன் நழுவி விட்டான்.

    உலகத்தில் தான் செய்யக் கூடிய பெரிய தொண்டு அதைவிட வேறு இருக்க முடியாது என்ற பாவனையுடன் உன்னிப்போடு சக்கரத்தை பாஸ்கர் கழுவிக்கொண்டு இருக்கையில் டிரைவர்கள் கிசுகிசுக்கலாயினர்.

    காலங் கார்த்தாலே கூட இவன்களுக்கு இது வேண்டியிருக்கு, பார்த்தாயா ஐயா?

    ஆனால் கண்ட்ரோலோடு இருக்கிறானே, அதைச் சொல்லு.

    சரவணன் இருக்கிறாரல்லவா, எஞ்சினியர்? அவர் மச்சான் தான் இவன்!

    அடடே, அந்த மனுஷனா? கேள்விப்பட்டிருக்கிறேன். மனுஷனுக்கு மண்டை நிறைய மசாலாவாம். ஆனால் காசு பண்ணுகிறதற்கோ, அதை வச்சுக் காப்பாற்றுவதற்கோ தெரியாதாம்.

    கரெக்ட். அவரேதான். இவங்க அக்கா எப்படியோ ஆளைக் கவர் பண்ணிவிட்டாள். இப்போ அவள் வச்சதுதான் சட்டமாம். எஞ்சினியர் சம்பாதிக்க வேண்டியது, அக்காவும் தம்பியும் அனுபவிக்க வேண்டியது.

    குடுத்து வச்ச மகராஜன். நமக்கென்ன? விடு.

    அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பாஸ்கருக்குத் தெரியாது. அவன். கைக்குட்டையைத் தண்ணீரில் நனைப்பதும், சக்கரத்தைத் துடைப்பதுமாக இருந்தான்.

    சார் என்று ஒரு சீட்டைக் கொண்டு வந்து நீட்டினான் பணியாள் ஒருவன்.

    மது அருந்தியவர்களுக்கே உரித்தான தோரணையுடன் பாஸ்கர் கேட்டான். நான் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறேன், தெரிகிறதல்லவா? இந்த மாதிரி எத்தனையோ கேள்விகளைப் பார்த்தவன் அந்தப் பணியாள். சிரிப்பை அடக்கிக்கொண்டு, தெரிகிறது சார், என்றான்.

    என்ன செய்துகொண்டிருக்கிறேன், சொல் பார்க்கலாம்.

    கார் சக்கரத்தைக் கழுவிக் கொண்டிருக்கிறீர்கள்.

    அதுதான் இல்லை. பாஸ்கர் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான், அது தான் இல்லை என்கிறேன். இதிலே பெரிய தத்துவம் அடங்கியிருக்கிறது. மதுத் திரையினூடே ஒரு கதை மசமசவென்று ஞாபகத்துக்கு வர அதை விவரிக்கலானான். ஆயிரக்கணக்கான பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்த ஒருவர், ‘ஒரு கல் தச்சனிடம், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார், ‘நானா? கூலிவேலை செய்து கொண்டிருக்கிறேன்.’ என்றான் அவன். இன்னொருவனிடம் சென்று அதே கேள்வியைப் போட்டார். அவன், ‘தூணில் உருவம் செதுக்கிக் கொண்டிருக்கிறேன்.’ என்றான். கடைசியாக, மற்றொருவனிடம் போனார். அவன் என்ன சொன்னான் தெரியுமா? வந்து... வந்து... பாஸ்கர் மூளையைக் கசக்கிக் கொண்டு தீவிர முயற்சி பண்ணிப் பார்த்தான். ‘ஆண்டவனுக்கு அழகான ஆலயம் எழுப்ப உதவி செய்து கொண்டிருக்கிறேன்.’ என்று மூன்றாமவன் தந்த பதில் அவன் நினைவுக்கு வர அறவே மறுத்துவிட்டது. மூன்றாவது ஆள் என்ன பதில் சொன்னான்?" என்று பணியாளையே விசாரித்தான்.

    அந்த ஆள் ஒரு வினாடி அயர்ந்து போனான். பிறகு சமாளித்துக்கொண்டு, தான் கொண்டுவந்த சீட்டைச் சுட்டிக் காட்டி, ஏதாவது பதில் இருந்தால் சொல்லுங்கள் சார். நான் போகவேண்டும். என்றான்.

    மூன்றாவது கல்தச்சன் கூறிய பதில் ஞாபகத்துக்கு வர வாய்ப்பில்லை என்பது உறுதியானதும், பாஸ்கர் சிப்பந்தி நீட்டிய சீட்டை நிதானமாக வாங்கிப் பார்த்தான். அதில் ஒன்றுமே எழுதப்பட்டிருக்கவில்லை. மறுபக்கம் திருப்பிப் பார்த்தான். அவன் பெயர் மட்டுமே இருந்தது.

    சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு அவன் கிளப் கட்டிடத்தின் பக்கம் பார்வையைச் செலுத்தினான். யாருடனோ அளவளாவியபடி ஒரு பெண் கையை ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தாள். நடுவே, மின்னல் ஓடும் நேரத்துக்கு, அவள் கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. பிறகு அவள் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டாள்.

    இதை அனுப்பினது யார்? அவர்களா? கையைக் காட்டாமலே பாஸ்கர் வினவினான்.

    அவர்கள் தான். என்றான் பணியாள்.

    முந்தின வாரம், ஓர் இங்கிலீஷ் தியேட்டரில் பின் வரிசையில் உட்கார்ந்திருந்த பெண் அவள். அவளைச் சுட்டிக்காட்டிய நண்பன் ஒருவன், உன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னாள். பெரிய இடத்துப் பெண்தான். வா. என்றான்.

    அறிமுகம் நடந்தது. அப்புறம் பொது இடங்களில் இரண்டு மூன்று சந்திப்புக்கள். பழைய பாஸ்கராக இருந்திருந்தால், அறிமுகத்தைத் தொடர்ந்து நட்பு நெருக்கமாகியிருக்கும். ஏனோ தெரியவில்லை, அவன் அத்தோடு விட்டுவிட்டான்.

    வெறும் காகிதத்தை அனுப்பி அவள் ஞாபகப்படுத்துகிறாளா? அல்லது வெற்றுவேட்டு என்று அவனைக் கிண்டல் செய்கிறாளா?

    அவன் சற்று யோசித்தான்.

    என்னங்க சொல்லட்டும்? என்றான் பணியாள். பதில் சொல்லவேண்டிய அவசியம் இருப்பதாக பாஸ்கருக்குத் தோன்றவில்லை.

    பக்கெட்டைக் காலால் எட்டி உதைத்துவிட்டு, காரில் ஏறிப் படீரென்று கதவைச் சாத்திக் கொண்டு ஸ்டார்ட்டர் குமிழை இழுத்தான்.

    காலை வெய்யிலில் பச்சைக் கடல் மின்னிக் கொண்டிருக்க, மெரீனா சாலையில் நத்தை ஊர்கிறாற் போல் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்த பாஸ்கருக்கு, தனக்கு என்ன வந்துவிட்டது என்றே தெரியவில்லை. ஒவ்வொன்றும் அவனுக்குப் பழையதாக, புளித்துப் போனதாக, சுவையில்லாததாகக் காட்சி அளித்தது.

    புதுமைக்காக அவன் ஏங்கினான். புதுமை! புதுமை!

    ***

    நிம்மி உறக்கம் தெளிந்து எழுந்தபோது அவள் மனத்தில் உதித்த முதல் எண்ணம், ‘அண்ணாவின் குழந்தை கண்ணனுக்கு உடம்பு எப்படி இருக்கிறதோ?’ என்பதுதான்.

    இரவு ஒன்று அல்லது ஒன்றரை மணிக்குக் குழந்தையின் அறைப்பக்கம் அவள் போய்ப் பார்த்தபோது, அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1