Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sooriyan Miga Arugil
Sooriyan Miga Arugil
Sooriyan Miga Arugil
Ebook238 pages56 minutes

Sooriyan Miga Arugil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Stella Bruce, an exceptional Tamil novelist, written over 100 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… He has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465650
Sooriyan Miga Arugil

Read more from Stella Bruce

Related to Sooriyan Miga Arugil

Related ebooks

Reviews for Sooriyan Miga Arugil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sooriyan Miga Arugil - Stella Bruce

    15

    1

    நாள் பூராவும் வியர்வையிலும் உழைப்பிலும் தூக்கத்திலும் ஈரமாகி, நெகிழ்ந்து கசங்கிப் போயிருந்த உடைகளைக் களைந்து பாத்ரூம் சுவரில் எறிந்தாள் நாகலட்சுமி. ஆயாசத்தில் சுவரோடு சுவராக உடலைப் பதித்துக் கொள்ளலாம் போலிருந்தது. அவிழ்த்துத் தளரவிட்ட நீண்ட கூந்தலை தலையைக் குலுக்கிச் சிலிர்த்துக் கொண்டு சொரசொரப்பான சுவரில் தலையை மட்டும் பின்னே சாய்த்து நின்றாள்.

    நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்த வானம், அடர்ந்த நீலத்தில் மேற்கூரை இல்லாத குளியலறையின் சிதைந்த சுவர்களுக்கு மேல் என்றும்போல் தெரிந்தது. நீர் நிரம்பிய இரண்டு பக்கெட்டுகளையும் பார்வையைத் தாழ்த்திப் பார்த்தாள் நாகலட்சுமி. ஆடை மறைப்பற்ற வெகுண்ட உடல் நீரில்; தளும்பத் தயாராகத் தெரிந்தது - விளிம்பில் சற்றே சூரியனின் பிம்பத்தையும் உள்ளடக்கி.

    குனிந்து நீரையெடுத்து உடம்பில் ஊற்றக்கூடத் தோன்றாமல் நாகலட்சுமியின் ஆயாசம் எரிச்சலடைந்திருந்தது. குளியல் என்பது ஒரு வேலையின் நிர்ப்பந்தம் போல் இருக்கக் கூடாது. இலகுவாக அமர்ந்து - ஒரு நீர்ச்சொரிதலின் கீழ் நனைந்து கொண்டே இருக்க வேண்டும். தலைமுடிக்கு எவராவது மென்மையாகச் சீயக்காய் தேய்த்துவிட வேண்டும். சலவையிலிருந்து வந்த கதகதப்பான துணியால், யாராவது உடம்பின் ஈரத்தையெல்லாம் நன்றாகத் துடைத்து விடவேண்டும்...

    நீ இருக்க நினைக்கிற இந்த நினைப்புக்குப் பெரிய சீமான் வீட்டுல பொறந்திருக்கணும்டி - இப்படித் தெருத் தெருவா சேலை விக்கிற மனுஷனுக்குப் பொறந்திட்டு ஏன் என் உசிரை வாங்கறே..?

    உன் உசிரை வாங்காம வேற யாரோட உசிரை வாங்கறதாம்? என்னையும் உன்னை மாதிரி அவலட்சணமா பெத்து வெச்சிருக்கணும் நீ. இப்படிப் போறவனும் வர்றவனும் முழுங்கிடறாப்பல பார்க்கிற மாதிரி ஏன் என்னை இத்தனை லட்சணமான பொண்ணா பெத்தே...?

    ஏன்டியம்மா, பெரிய லட்சணக்காரியா இருந்துட்டா சீமாட்டி மாதிரிதான் வாழணுமோ?

    அப்படி வாழ்ந்தாத்தான் எனக்கு வசதிப்படும்...

    அதுக்காக, வழி தப்பா இருந்தாலும் போயிடுவியா?

    வேற வழியே இல்லேன்னா...?

    நாகலட்சுமியின் தலையில் சீயக்காய் தேய்க்கும் போதெல்லாம் அவளின் அம்மா ‘சொத் சொத்’ என்று இடித்திருக்கிறாள் - இப்படி அவள் பேசுவதற்கு.

    வேசிப் பொண்ணுங்க ஏன் மனசைச் சுண்டற மாதிரி கண்ணும் மார்புமா இருக்காளுங்கன்னு இப்பத்தான் தெரியுது. அழகா இருக்கோம்னு வர்றவனுக்கும் போறவனுக்கும் புடவைத் தலைப்பைச் சரிய விடணும்னு நெனைச்சிடாதே. அப்புறம் உடம்பும் மனசும் மட்டுமில்லாம குடும்பமும் நாறிப் போயிடும் நாறி...

    ஆமா, உடனே பயந்து நடுங்கிடு!

    பொட்டைப் பசங்களா பெத்து வெச்சிருக்கேனே வரிசையா...

    நாகலட்சுமியின் உடம்பெல்லாம் வெப்பம் சமுத்திர அலையென எழுந்து தணிந்தது. வேகமாகத் தண்ணீரை எடுத்து உச்சந்தலையில் கொட்டினாள். இந்த நீரெல்லாம் பொற்காசுகளாக மாறித் தெறித்தால்தான் அவளின் உடல் வாகு இளகிக் கரையும். உடல் நிமிர்வும் திமிரும் கொண்டிருப்பதெல்லாம் - தண்ணீராக அள்ளிக் கொட்டத் தேவையான செல்வம் இல்லாமையால்தான்.

    இந்தத் தாபத்தை மேலும் கிளறி விட்டுக் கொள்கிற வன்மத்துடன் வேக வேகமாக நீரை உடம்பில் ஊற்றியபோது, வீட்டின் வெளிப்புற வாசலில் அவளின் பெயரைச் சொல்லி ஒரு பெண்குரல், மணிமாறனிடம் ஏதோ விசாரிப்பது கேட்டது. நாகலட்சுமி தண்ணீர் ஊற்றுவதை நிறுத்திவிட்டுக் கவனித்தாள். மணிமாறன் நடந்துவரும் அரவம் கேட்டது. சில கணங்கள் மணிமாறன் தயங்கினான். குளியலறையின் கதவை மனத்துக்குள் ஓங்கி ஓர் உதை விட்டான்! பின், சிறுசிறு துவாரங்கள் பரவிய குளியலறையின் தகரக் கதவுக்குச் சற்றுத் தள்ளி நின்றபடி எச்சரிக்கையுடன் கூப்பிட்டான்:

    சித்தி...

    என்ன?

    சுகன்யானு ஒரு லேடி வந்திருக்காங்க சித்தி. ஸ்கூல்ல உங்ககூட ஒண்ணா படிச்சவங்களாம்...

    சுகன்யா...?

    -நாகலட்சுமியின் எண்ண அடுக்குகளில் எங்கோ செருகி மறைந்து போயிருந்த நினைவுப் படிமம் பட்டென விண்டு மன விளிம்புக்கு எழும்பியது.

    உள்ளே கூப்பிட்டு உட்காரச் சொன்னியா? - பரபரப்புடன் கேட்டாள்.

    உள்ளே வந்துதான் உட்கார்ந்திருக்காங்க சித்தி.

    அஞ்சு நிமிஷத்துல நான் வந்திடறேன்னு சொல்லிட்டு நீ போய் வாசல்ல இரு. - நாகலட்சுமியின் சோம்பலும் ஆயாசமும் கலைந்தன. ஒரு பக்கெட் நீரைமட்டும் அவசரமாக ஊற்றிக் குளித்துவிட்டுப் பரபரவென்று உடம்பைத் துடைத்தாள். கொண்டு வந்திருந்த மாற்றுப் பாவாடையை எடுத்து நெஞ்சை மறைக்கும்படி உயர்த்திக் கட்டி, ஈரக் கூந்தலைத் துடைத்துக் கொண்டே வேகமாகக் கதவைத் திறந்து நாகலட்சுமி வெளியில் வந்தாள்.

    சுகன்யா! - ஆசை தாளாமல் நாகலட்சுமி ஓடிப் போய்க் களிப்புடன் அவளைக் கட்டித் தழுவிக் கொண்டாள் நாகலட்சுமி. வாசலில் நின்றபடியே மணிமாறன் இந்தக் காட்சியை ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டான்.

    எத்தனை வருஷமாச்சு - நாம ஒருத்தரை யொருத்தர் பார்த்து... நல்லா இருக்கியா சுகன்யா? கட்டியிருக்கிற சேலையைப் பார்த்தா ரொம்பவும் விலை உசந்ததா தெரியுது. சென்னைலதான் இருக்கியா நீ?

    ஆமாம்... சென்னைல தான் இருக்கேன்.

    இருந்துமா கண்லயே படாம இருந்தே?

    நீ இங்கே ஆலந்தூர்ல இருக்கிறது எனக்குத் தெரியாதே... யம்மா, இந்தத் தெருவைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே எனக்குப் போதும் போதும்னு ஆயிடுச்சு...

    அதுசரி, இப்போ யார் சொன்னா உனக்கு - நான் ஆலந்தூர்ல இருக்கேன்னு..?

    உங்க அம்மாதான் சொன்னாங்க!

    அவங்களை எங்கே பார்த்தே நீ?

    எங்க உறவுக்காரர் ஒருத்தர் இறந்துட்டார்னு நேத்து அயனாவரம் போயிருந்தேன். அப்போதான் தற்செயலா வழியில் உங்க அம்மாவைப் பார்த்தேன். அவங்கதான் உன் வீட்டு அட்ரஸ் தந்தாங்க. உடனே கிளம்பி வந்துட்டேன். நான் இங்கே பழவந்தாங்கல்லே தானே இருக்கேன்...

    நல்ல வேளையாப் போச்சு. இனிமே நாம ரெண்டு பேரும் அடிக்கடி பார்த்துக்கலாம்.

    அது சரி... யார் அந்தப் பையன் நாகலட்சுமி?

    எங்க வீட்டுக்காரரோட முதல் சம்சாரத்து மகன்... ஏன்?

    பார்க்கிறதுக்கு ரொம்ப நல்ல பையனாத் தெரியறான்.

    பாம்புகூடத்தான் பார்க்கிறதுக்கு ரொம்ப அழகாத் தெரியும்.

    சந்தர்ப்பம் கிடைத்தால் போதும், மணிமாறன் நெஞ்சைக் கீறிப் பார்க்கும் காத்திருப்பு இது. அவ்வப்போது நெருப்பை உமிழும் எரிமலை இது. எரிமலையின் உறுமலில் சுகன்யா அதிர்ந்து போனாள். பன்னிரண்டு வருடங்கள் கழித்தும் நாகலட்சுமி அக்னியை உள்ளடக்கிய அதே எரிமலையாகத்தான் இருக்கிறாள்...

    பாவம்! காதில் விழுந்துடப் போகுதும்மா... - சுகன்யா சங்கடத்துடன் குரலைத் தாழ்த்திச் சொன்னாள்.

    நல்லா விழட்டுமே.. விழுந்தா என்னை என்ன கடிச்சா தின்னுடுவான்? சரி, ஒரு நிமிஷம் இரு... அவனைக் கொஞ்சம் மளிகைக் கடைக்கு அனுப்பி விட்டு வரேன். இல்லேன்னா நாம என்ன பேசறோம், ஏது பேசறோம்னு ஒட்டுக் கேட்டுட்டு நிப்பான். மணிமாறா... இங்கே வா!

    வாசலில் நின்ற மணிமாறனை, வேண்டு மென்றே குரலை உயர்த்திக் கூப்பிட்டாள் நாகலட்சுமி. உடனே மணிமாறன் வேகமாக உள்ளே வந்தான்.

    லிஸ்ட் ஒண்ணு குடுத்தேனே - அதை மளிகைக் கடையில் போய் வாங்கிட்டு வந்துடு...

    பணம் சித்தி... மணிமாறன் தயங்கியபடியே கேட்டான்.

    பணத்தை நான் என்ன மடியிலே முடிஞ்சா வெச்சிருக்கேன்? அவசரமா நான் கேட்டேன்னு கடைக்காரர்கிட்டே சொல்லு, குடுப்பார்...

    போன தடவையே திட்டினார் சித்தி.

    நான் போய் ரெண்டே நிமிஷத்துல வாங்கியாந்து காட்டட்டுமா?

    மணிமாறன் மௌனமாக, சுகன்யாவின் எதிரில் ஓர் அவமான உணர்வுடன் நின்றான்.

    போ, ‘எங்க சித்தி நாளைக்கு வந்து பணம் தந்திடும்’னு சொல்லு, கண்டிப்பா குடுப்பார்.

    ‘கொடுப்பார் கொடுப்பார்’ என மனதுக்குள் முனகிய மணிமாறன், பையை எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்தான். மளிகைக் கடைக்காரர் திட்டத் தான் செய்வார். ஆனால், அந்தத் திட்டுகள் மணிமாறனுக்குத்தான். நாகலட்சுமி பட்டியல் போட்டுக் கொடுத்த மளிகைப் பொருட்கள் நிச்சயமாக வந்து சேர்ந்து விடும்.

    ஏனெனில், அவை நாகலட்சுமிக்கு... அவளின் வெகுண்ட உடல் வனப்புக்கு. கடைக்காரர் மணிமாறனை விரட்டுவதெல்லாம், அவனுக்குப் பதிலாக நாகலட்சுமியே வரட்டுமே என்ற ரகசியமான அர்த்தத்தில்தான். அது நாகலட்சுமிக்கும் தெரியும்.

    ஆனால் அதற்காக அவள் சும்மாசும்மாபோய் மளிகைக் கடை வாசலில் ஏறிவிடமாட்டாள். அடிக்கடி போய் நின்றால் கடைக்காரருக்கும் அலுத்துப் போய்விடும். அதனால், நாகலட்சுமி அத்தி பூத்தது போல் போய் நிற்பாள். உடனே கடைக்காரர் ஐஸ்போல் உருகி வழிந்து போவார். இரட்டை அர்த்தமாகவே பேசுவார். நாகலட்சுமியும் இரட்டைப் பொருளாகவே பதில் சொல்லுவாள். கடைக்காரருக்கு அவளின் இந்த இரட்டை அர்த்தப் பேச்சின் சுகமே போதும்! அதற்கு மேல் அவரால் கீழே இறங்கி வர முடியாது. அப்படியெல்லாம் இறங்க ஆரம்பித்தால் கடையே இறங்கிப் போய்விடும் என்பது அவருக்குத் தெரியும். அவருக்கு முக்கியம் - கடைதான்.

    இப்படி உட்கார் சுகன்யா - நான் சேலையை எடுத்துக் கட்டிக்கிட்டு வந்திடறேன்.

    அந்த வீட்டின் ஒரே இருண்ட அறைக்குள் சென்ற நாகலட்சுமியை, சுகன்யா பின்தொடர்ந்தாள். நெஞ்சில் கட்டியிருந்த பாவாடையை நெகிழ்த்து இடையில் கட்டி, மடித்து வைக்கப்பட்டிருந்த துணிகளில் ப்ராவைத் தேடியெடுத்து நாகலட்சுமி அணிந்து கொண்டாள்.

    உன்னைப் பார்த்தா ரெண்டு பெண்ணைப் பெற்றவள்னு சொல்லவே முடியாது நாகலட்சுமி. அப்படியே இருக்கே.

    அப்படியே இருந்து என்ன செய்ய? கையில் பைசா இல்லையே சுகன்யா.

    நாகலட்சுமி புடவையைக் கட்டிக் கொண்டதும் இருவரும் கூடத்துக்கு வந்து தரையிலேயே அமர்ந்து கொண்டார்கள்.

    நான் கேக்கறேன்னு தப்பா நினைக்காதே... அவ்வளவு பெரிய பையன் எதிர்ல அப்படிப் பாவாடையை மட்டும் உசத்திக் கட்டிக்கிட்டு இவ்வளவு நேரம் நின்னியே... தப்பில்லையா அது?

    அவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்பவுமே குளிச்சிட்டு இப்படித்தான் வருவேன். அதுவுமில்லாம மணிமாறன் எனக்குப் பிள்ளை முறைதானே...?

    "பிள்ளை முறையோ, பிள்ளை இல்லாத முறையோ -

    Enjoying the preview?
    Page 1 of 1