Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Piriyaatha Varam Thaa
Piriyaatha Varam Thaa
Piriyaatha Varam Thaa
Ebook111 pages45 minutes

Piriyaatha Varam Thaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Manimala, an exceptional Tamil novelist, written over 150+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466541
Piriyaatha Varam Thaa

Read more from R.Manimala

Related to Piriyaatha Varam Thaa

Related ebooks

Related categories

Reviews for Piriyaatha Varam Thaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Piriyaatha Varam Thaa - R.Manimala

    13

    1

    மேகம் தழுவிய நிலவு... மாராப்பு விலகிய பெண்ணாய் கவர்ச்சி காட்டியது. இன்னும் விடியவில்லை என்பதற்கு அத்தாட்சியாய் ஜன்னல் வழியே பரவியிருந்த கருவானம் கண்களுக்குத் தெரிந்தது.

    அலறிக் கொண்டிருந்த அலாரத்தை தலையில் தட்டி வாயை மூடிய காயத்ரீக்கு படுக்கையை விட்டு எழ மனசு வரவில்லை. சோம்பலும், அசதியுமாய் உடம்பு முறுக்கேறிக் கொண்டது.

    நேற்று இரவு ஒரு மணி வரைக்கும் டெஸ்ட் பேப்பர்களை திருத்திக் கொண்டிருந்ததால்... கண்கள் இன்னமும் கொஞ்சம் தூக்கத்தை இறைஞ்சியது. காயத்ரி புரண்டு படுத்தாள். பக்கத்தில் படுத்திருந்த கிரணின் முகம் வெகு கிட்டத்தில் தெரிந்தது.

    கள்ளம் கபடமற்ற முகம். தலை நிறைய சுருள் முடிகள். கன்னம் பம்ப்ளிமாஸ் மாதிரி உப்பிக் கொண்டிருப்பதால்... சிரிக்கும்போது குழிவிழும். அவனைப் பார்க்கும் யாருக்குமே கன்னத்தைக் கிள்ளி முத்தமிடத் தோன்றும். காயத்ரி தலை உயர்த்தி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

    ‘என் வாழ்க்கையின் ஒரே ஆதாரம். ஒரே பிடிமானம், ஒரே அர்த்தம் கிரண் மட்டும் தானே? கடவுளே இவனுக்கு எந்த நோய் நொடியும் தாக்காமல் நல்ல எதிர்காலத்தை... நீண்ட ஆயுளை தா!’ மானசீகமாய் வேண்டிக் கொண்டு... அவன் விழித்துவிடாமல், ஜாக்கிரதையாய் கட்டிலை விட்டிறங்கினாள் காயத்ரி.

    கலைந்திருந்த கூந்தலை சரிப்படுத்தி கொண்டை போட்டுக் கொண்டே... பாத்ரூமுக்குள் சென்றாள். சரியாய் பத்து நிமிடம்... கடந்து போயின. காயத்ரி குளித்து முடித்து... மலர்ந்த பூவாய் வெளிப்பட்டாள். சோம்பல் இறந்து... வழக்கமான புத்துணர்ச்சி வந்தமர்ந்திருந்தது.

    ஹால் சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியின் முன் போய் நின்றாள்...

    காயத்ரியின் அழகான உருவத்தை காட்டியதில் கண்ணாடி பெருமைப்பட்டுக் கொண்டது.

    நல்ல நிறம். போதுமான உயரம், உடல்வாகு கிரணைப் போலவே சுருள் கூந்தல் அடர்ந்த இமைகள்... இயற்கையாகவே கண்களுக்கு மை தீட்டியிருந்தது. கரிய... வளைவான புருவங்கள்... கூர்மையான நாசி. ஒற்றை சிவப்புக்கல்லில் கண்ணுக்குத் தெரியாத அளவில் மிகச் சிறிய மூக்குத்தி. சதைப்பிடிப்பான ரோஸ் நிற உதடுகள். காதில் சிறிய வளையம். வெறும் கழுத்து. கண்ணாடி ஓரத்தில் ஓட்டப்பட்டிருந்த சிறிய... கறுப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை எடுத்து புருவங்களுக்கு இடையில் அமர்த்திக் கொண்டாள்.

    கிச்சனுக்குள் சென்றாள். அடக்கமாய்... சுத்தமாய்... இரண்டு பேருக்கு தேவையான பாத்திரங்களுடன் அவள் கைப்பட காத்திருந்தது. ஒற்றை காஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து... குக்கரில் பருப்பு போட்டு வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள்.

    நிலா வெளிச்சம்... இலவச மின்சாரமாய் கிடைக்கையில் எதற்கு வீணாய் விளக்கு போட வேண்டும்? அதுவும் வீட்டின் சொந்தக்காரருக்கு ஆசைக்கு அளவே இல்லாமல் போய்... ஒரு யூனிட்டிற்கு நான்கு ரூபாய் கறந்து விடுகிறார்.

    காயத்ரி வாசல் பெருக்கி... தண்ணீர் தெளிக்கையில்... பக்கத்து வீட்டில் ஒரு டெம்போ வேன் வந்து நின்றது. கூடவே ஒரு ஆட்டோவும்... நிசப்தத்தை மாசுபடுத்தி ஊளையிட்டு அடங்கியது. அதிலிருந்து யார் யாரோ இறங்கினார்கள். இருட்டு முழுக்க விலக... இன்னும் நேரமிருப்பதால்... உருவங்கள் தெளிவின்றி... மசமசப்பாய் தெரிந்தன.

    ஆனாலும் அவுட் லைனாய் தெரிந்த உருவங்களிலிருந்து... ஒரு ஆண், ஒரு பெண், ஐந்தாறு வயதில் பையனோ, பெண்ணோ... என்ற அளவுக்கு யூகிக்க முடிந்தது.

    டெம்போ வேனிலிருந்த ஆட்கள்... பாத்திர பண்டங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

    வெகுநாட்களாய் பூட்டியிருந்த வீடு! இவள் வீட்டை ஒட்டியிருந்த வீடு. ஒண்ணரை வருடத்திற்கு முன்பு அந்த வீட்டில் குடியிருந்த இளம் பெண்ணொருத்தி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதால்... அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் காலி பண்ணிக் கொண்டு போன பின்பு... வேறு யாரும் குடிவரப் பயந்து... ரொம்ப நாட்களாக பூட்டியே வைத்திருந்தார்கள்.

    ‘பரவாயில்லை... இவர்கள் ரொம்ப தைரியசாலிகள்தான்!’ சின்ன புன்னகையொன்று இதழோரம் நெளிய... குனிந்து அழகான கோலம் போட ஆரம்பித்தாள் காயத்ரி,

    பருப்பை இறக்கி... தாளித்துக் கொட்டிய போது... சாம்பார் மணம் வீட்டை நிரப்பியது. முன்தினமே வாங்கி ஈரத்துணியில் சுற்றியிருந்த பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து, நறுக்கி, பொரியல் செய்தாள்.

    சட்னி அரைத்துவிட்டு, இட்லியை வேகப் போட்டுவிட்டு... பெட்ரூமிற்கு வந்தாள்.

    மணி ஆறாகிவிட்டிருந்ததால்... வெளிச்சம் தாராளமாய் உட்புகுந்திருந்தது.

    கிரண்... கருவறைக் குழந்தையைப் போல் குறுக்கிப் படுத்திருந்தான்.

    காயத்ரி அவனருகில் அமர்ந்து தலைமுடியில் விரல்களை நுழைத்து சிலுப்பினாள்.

    கண்ணா... எந்திரி...

    ம்...!

    நேரமாய்டுச்சுல்ல... ஸ்கூலுக்குப் போக வேண்டாமா? எந்திரி செல்லம்...!

    தூக்கம் தூக்கமா வருது மம்மி! கண்களைத் திறக்காமலேயே சிணுங்கினான்.

    கண்ணை மூடிக்கிட்டிருந்தா தூக்கம்தான் வரும்... முதல்ல கண்ணை திறந்துட்டு மம்மிக்கு குட்மார்னிங் சொல்வியாம்!

    குட்மார்னிங் மம்மி! கண்கள் படக்கென்று திறந்து... கன்னம் குழி விழச் சிரித்தான்.

    குட்மார்னிங் டியர்! எந்திரி... முதல்ல பிரஷ் பண்ணிட்டு வா... ஹார்லிக்ஸ் தர்றேன்!

    மம்மி... ப்ளீஸ்... முதல்ல ஹார்லிக்ஸ் தாங்க... அப்புறமா பிரஷ் பண்றேன்...

    ம்ஹூம்... பேட் ஹாபிட்! நீ நல்ல பையனாச்சே! அப்படியெல்லாம் பண்றது தப்புன்னு நல்லா தெரிஞ்சிருந்தும்... தப்பு பண்ணலாமா கிரண்? கொஞ்சலும், கண்டிப்புமாய் கேட்டாள் காயத்ரி.

    ஸாரி மம்மி... நான் எப்பவும் தப்பு பண்ணமாட்டேன்! என்றவன் கட்டிலை விட்டிறங்கி பாத்ரூம் நோக்கி ஓடினான்.

    காயத்ரி பெருமிதத்துடன் சிரித்துக் கொண்டே அவனுக்காக ஹார்லிக்ஸ் கலக்க சமையலறைக்குச் சென்றாள்.

    சில நிமிடங்களில் கிரண் வந்து நிற்க... ஹார்லிக்ஸை நீட்டினாள்.

    வாங்கி குடித்து முடித்தவன், தாங்க்ஸ் மம்மி! என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

    மிஸ் கொடுத்த ஹோம் வொர்க் எல்லாம் எழுதி முடிச்சிட்டியா?

    ம்... நேத்தே முடிச்சிட்டேனே...!

    சரி... குளிச்சிட்டு டிரஸ் பண்ணு... டிபன் தர்றேன்...

    மம்மி...

    என்னப்பா?

    இன்னைக்கு என்ன டிபன் மம்மி? வழக்கம் போல இட்லியும், சட்னியும் தானா?

    "வேறென்ன பண்ணட்டும்? உனக்குதான். பொங்கலும் பிடிக்காது. உப்புமாவும் பிடிக்காது. ஆப்பமும் பிடிக்காது. அப்பமும் பிடிக்காது. அப்புறம்

    Enjoying the preview?
    Page 1 of 1