Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thottal Tholaindhaai!
Thottal Tholaindhaai!
Thottal Tholaindhaai!
Ebook111 pages52 minutes

Thottal Tholaindhaai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateJul 29, 2016
ISBN6580100601362
Thottal Tholaindhaai!

Read more from Devibala

Related to Thottal Tholaindhaai!

Related ebooks

Reviews for Thottal Tholaindhaai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thottal Tholaindhaai! - Devibala

    http://www.pustaka.co.in

    தொட்டால் தொலைந்தாய்!

    Thottal Tholaindhaai!

    Author :

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    தொட்டால் தொலைந்தாய்!

    1

    அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் கண் சிவந்தது தீபிகாவுக்கு. முகம் கனலை அணிந்து கொண்டது. பிரித்திருந்த கைகள் வியர்வையில் நனைந்து, உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது.

    சாப்பிட வர்றீயா அம்மாடீ?

    சட்டெனத் தன்னிலைக்கு வந்தாள். எதிரே நின்ற அம்மாவைப் பார்த்துச் சின்னதாகச் சிரித்தாள்.

    போன நிமிடம் வரை தங்கியிருந்த உணர்வுகளை அவசரமாகத் தொலைத்துவிட்டு, தோ வர்றேம்மா!

    அம்மா இட்லியை ஆவி பறக்க வைத்தாள்.

    அப்பா எங்கேம்மா?

    உன் வரன் விஷயமா ஒருத்தரைப்பார்க்க சீக்கிரமே போயிட்டார்!

    எனக்குக் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா அப்பா ஏம்மா கேக்கறதில்லை?

    உன் வயதில் எல்லாப் பொண்ணுகளும் சொல்றது இதுதான் பெத்தவங்க ஒத்துக்க முடியுமா? இருபது வயசுப் பொண்ணை இன்னமும் வீட்ல வச்சுக்கலாமா ராஜாத்தி? இட்லி வைக்கட்டுமா?

    போதும்மா!

    தயாராகிவிட்டாள் தீபிகா. அம்மா தந்த டிபன் பாக்ஸை கையில் வாங்கிக்கொண்டாள்.

    ஏம்மா!

    சொல்லுடா!

    தன் கணவனை, தானே தேர்ந்தெடுக்கிற உரிமை நடுத்தர வர்க்கத்துல பெண்களுக்கு உண்டா?

    எதுக்கு இந்தக் கேள்வி?

    பதிலை அப்பாவும் வந்த பின்னால சொல்றேன். வரட்டுமா? புறப்பட்டு விட்டாள்.

    பஸ்ஸுக்கு நடக்கும் நேரத்தில், தீபிகாவைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொண்டு விடுங்களேன்.

    இருபது வயது தீபகா, தன் ப்ளஸ்டு படிப்பையும், ஸ்டெனோ கிராபியையும் பதினெட்டுக்குள் முடித்து விட்டு ஒரு வருஷம் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த பின், இதோ இப்போது தனியார் நிறுவனமொன்றில் எம்.டி-க்கு செகரட்டரி.

    அம்சமான தீபிகாவின் விசேஷச் சிறப்பு அவளது மின்னலடிக்கும் கண்களும், அரிசிப் பற்களும்தான். விழிகளை மெல்ல நகர்த்தியபடி சின்னதாக சிரித்தாலே போதும்..

    கைலாசம் - அன்னபூரணித் தம்பதியரின் ஒரே மகள் தீபிகா.

    தீபிகாவுக்கு பஸ் வந்துவிட்டது.

    அலுவலகத்தில் அவள் கால் பதித்தபோது நேரம் சரியாக பத்து. ஏறத்தாழ எல்லாருமே வந்திருந்ததிலிருந்து எம்.டி வந்துவிட்டார் எனத் தெரிந்து கொண்டாள். தன் இருக்கையைச் சுத்தம் செய்ய ஐந்து நிமிடம் செலவு செய்துவிட்டு நிமிர்வதற்குள், பஸ்ஸர் ஒலித்தது. தொடர்ந்து இண்டர்காம்.

    எடுத்து, குட்மார்னிங் ஸார். தோ வர்றேன்!

    சுருக்கெழுத்துக் குறிப்புப் புத்தகம், பென்சிலுடன் எம்.டி –யின் கேபினை நோக்கி நடந்தாள்.

    கனமான கண்ணாடிகளை அணிந்த கர்ட்டன்களை உடுத்தியிருந்த கதவைத்தள்ளித் திறக்க, மின் குளிர் ‘வா’ என்றது.

    குட்மார்னிங் தீபிகா!

    குரலுக்குச் சொந்தமானவன் மிதுன்.

    நிமிர்ந்து பார்த்து புன்னகையால் அவனை வணங்கினாள் தீபிகா.

    டேக் யுவர் ஸீட்

    தேங் யு ஸர்!

    கடிதங்களை டிக்டேட் செய்யத் தொடங்கினான் மதுன்.

    இந்த நேரத்தில் மிதுனைப் பற்றியும் சுருக்கமாகத் தெரிந்துகொண்டு விடுங்கள். பின்னால் சொல்ல நேரம் கிடைக்குமோ கிடைக்காதோ!"

    சக்ரவர்த்தி அசோசியேட்ஸ் என்ற அந்தத் தனியார் நிறுவனம், தன் ஏராளாமான விழுதுகளை இந்தியா முழுவதும் பரப்பிக்கொண்டு, தாய் மரத்தை தமிழகத்தின் தலைநகரில் வைத்திருக்கிறது.

    சகல விதமான வியாபாரங்களும் கொண்ட ஒரு வினோத நிறுவனம் அது.

    தலைவர், சேர்மன் என்ற எல்லாத் தகுதிகளும் கொண்டவர் துவாரகநாத் அவரது இரு பிள்ளைகளில், மூத்தவன்தான் இப்போது நீங்கள் சந்திக்கும் மிதுன். கணிசமான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு கம்பெனி இதயமாக நிற்பவன்.

    அயல்நாடு சென்று பிஸினஸ் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு வந்தவன். இளையவன் மயூர். இன்னும் முழுமையாகப் பொறுப்புகளை உணராத விளையாட்டுப்பிள்ளை.

    நான்கு கடிதங்களையும் திருத்தமாக எடுத்துக் கொண்ட தீபிகா விரல்களைச் சொடக்கெடுத்தாள்.

    எழுந்தாள்.

    தீபிகா ஒரு நிமிஷம்!

    என்ன சார்?

    உன் கூட நான் கொஞ்சம் பர்ஸனலாப் பேசனும். எனக்காக உன் நேரம் உன்னை அனுமதிக்குமா?

    எப்ப சார்?

    மூணு மணிக்கு நான் வெளியில போறன். நீ விரும்பினா, என்னோட வரலாம்!

    வர்றேன் சார்!

    சரியாக 2.55 – க்கு மறுபடியும் அழைத்தான்.

    நான் ரெடி சார்!

    தட்ஸ் குட். புறப்படு!

    இருவருமாக இணைந்து வெளியே செல்வதை அந்த அலுவலகம் ஒரு போர்க்கால அவசரத்துடன் கவனிக்கத் தொடங்கியது.

    அந்த நட்சத்திர ஓட்டல் வாசலில் காரை பார்க் செய்துவிட்டு மதுன் உள்நோக்கி நடக்க, தீபிகா மௌனமாகத் தொடர்ந்தாள் அவனை.

    மேஜையை ஏற்கனவே பதிவு செய்திருந்தான்.

    ரெஸ்ட்டாரென்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலைகள்.

    மெனுப்புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டு ஆர்டர் செய்தான் பேரரிடம். அவன் விலகியதும்,

    தீபிகாவைப் பார்த்தான். ஒரு நிமிடம் மௌனத்தில் கரைந்தது.

    தீபிகா, எனக்கு சுத்தி வளைக்கத் தெரியாது. டாடி என் கல்யாணம் பற்றி யோசிக்கத் தொடங்கியாச்சு. மல்டி மிலியனர்களோட மகளெல்லாம் அவரோட ஆல்பத்துக்கு வந்து அஸ்ட்ராலஜர் வீட்டுக்குப் போகத் தொடங்கிட்டாங்க. ஆனா எனக்கு பிடிக்கலை. என் முதல் சாய்ஸ்... சற்று நிறுத்தி, நீ! என்று விரலை அவள் பக்கமாக நீட்டினான்.

    தீபிகா லேசாக அதிர்ந்து போய் நிமிர்ந்தாள்.

    சார்...!

    "யெஸ். ஐ லவ் யூ! உன்னை ஆரம்பம் முதலே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. என் செக்ரட்டரி வேலைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1