Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannil Therigindra Vaanam
Kannil Therigindra Vaanam
Kannil Therigindra Vaanam
Ebook128 pages45 minutes

Kannil Therigindra Vaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Manimala, an exceptional Tamil novelist, written over 150+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466602
Kannil Therigindra Vaanam

Read more from R.Manimala

Related to Kannil Therigindra Vaanam

Related ebooks

Reviews for Kannil Therigindra Vaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannil Therigindra Vaanam - R.Manimala

    13

    1

    தன் பணிகளை முடித்துக்கொண்டு, கணக்கு வழக்குகளை விடியலிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றிருந்தது இருள்.

    அந்த சந்தோஷத்தில் சிறகுகளைப் படபடவெனச் சோம்பல் முறித்து குட்மார்னிங் சொல்லப் புறப்பட்டன பறவைகள்.

    புத்தம் புதிய அந்த நாளைய துவக்கத்தின் காலையில் சீறிப்பாய்ந்த வண்டிகள் டீசல் புகையைக் கலக்க ஆரம்பித்தன.

    தொப்பையைக் குறைக்க, வியர்க்க, விறுவிறுக்க ஓடியவர்கள் நல்ல காற்றைச் சுவாசித்த மகிழ்ச்சியோடு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அந்த அழகான பங்களாவின் முன்புறம் அழகான புல்வெளியும், சுற்றிலும் கண்ணைப் பறிக்கும் வண்ண வண்ணமாய்ப் பூத்திருந்த பூக்களின் நடுவே அந்தப் பூவும் மலர்ந்திருந்தது. ஆனால் என்ன ஒரு அதிசயம்! அந்த உயிருள்ள பூவின் கையில் ஹோஸ் பைப் இருந்தது. அதிலிருந்து பீய்ச்சியடித்த தண்ணீர் மழைத் தூறலாய்ச் செடிகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

    நைட்டியில் இருந்த ஜீவிதா துள்ளும் இளமையின் துவக்கத்தில் இருக்கும் கல்லூரி மாணவி. அழகிய பெரிய இரு கருவிழிகளே போதும். வேறெதையும் வர்ணிக்க அவசியமில்லாத அழகி. கவர்ச்சியான மாநிறம். வசீகரிக்கும் இன்முகம். ஆனால், இப்போது அந்த முகத்தில் ஒருவிதப் பதற்றம் குடி கொண்டிருந்தது.

    ‘நேரமாகிக் கொண்டிருக்கிறதே!’

    கேட்டில் அன்றைய தமிழ் ஆங்கிலத் தினசரிகளையும் சில வார, மாத இதழ்களையும் செருகி வைத்து விட்டு மணியடித்துக் கொண்டே சென்றான் பேப்பர்க்காரன்.

    ஜீவிதா பேப்பர்களை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

    விசாலமான பங்களா! தரையில் முகம் பார்க்கலாம் போன்ற, பளிங்குத் தரை. சினிமாவில் வரும் பணக்காரப் பங்களா போன்றிருந்தது.

    குஷன் வைத்த ஊஞ்சலில் ஒய்யாரமாய் அமர்ந்தபடி கண்களில் கர்வம் மிளிர ஆடிக் கொண்டிருந்தாள் ராகினி. அந்த அலட்சியமும், கம்பீரமும் நிஜமாகவே அரசாளும் ராணியைப் போலவே இருந்தது.

    இப்போதுதான் படுக்கையை விட்டே எழுந்து வந்திருக்கிறாள் போலும்.

    ‘இவள் எப்போது பேப்பர் படித்து, பிறகு குளித்து, அதன் பிறகு நான் குளித்துக் கிளம்புவது?’ அலங்கலாய்த்தாள் ஜீவிதா.

    என்ன பார்த்துக்கிட்டே நிக்கிறே? ராகினியின் குரலும் கம்பீரமாய் ஒலித்தது.

    ஜீவிதா திடுக்கிட்டுப் பேப்பரை அவளிடம் கொடுத்தாள்.

    இன்னும் காபி வரலே பார்! போய்க் கொண்டுவா! பேப்பரில் கண்களை ஓடவிட்டபடி கட்டளையிட்டாள்.

    ஜீவிதா அவசர அவசரமாய் அம்மாவைத் தேடி கிச்சனை நோக்கி ஓடினாள். வேணி அப்போதுதான் சர்க்கரையைக் கலந்து கொண்டிருந்தாள்.

    வாடி...!

    நான் வர்றது இருக்கட்டும். நீ இன்னுமா அந்த மகாராணிக்குக் காபி தராம இருக்கே? சீக்கிரம் கொடுக்கறதுக்கென்ன? என்றாள் கோபமாக ஜீவிதா.

    அவ இப்பதானேடி எந்திரிச்சே வந்தா!

    எழுப்பித் தர்றதுக்கென்ன?

    யார்... நானா? தெரிஞ்சி பேசறாயா, தெரியாம பேசறயா? விளையாடாதே!

    ஆமா... விளையாடறது ஒண்ணுதான் குறைச்சலா இருக்கு. அந்தம்மா எப்ப குளிக்கப் போய்... நான் எப்ப...

    புலம்பி ஆகப்போறதிலே ஒண்ணுமேயில்லை! இது தினசரி நடக்கறதுதானே! இன்னைக்கென்ன புதுசா புலம்பிக்கிட்டு...

    தினசரி... புரபசர்கிட்டே லேட்டா போய்த் திட்டுவாங்கறது நீயோ அந்த மகாராணியோ இல்லே. நான்தான்!

    அவள் காதிலே விழுந்து தொலைக்கப் போவுது. பேசறதைக் கொஞ்சம் குறைச்சுக்க ஜீவிதா! இந்தா காபி| இதைக் குடிச்சிட்டிரு... நான் ராகினிக்குக் கொடுத்திட்டு வர்றேன்!

    ஜீவிதா முகத்தை உம்மென்று வைத்தபடி காபியை வாங்கிக்கொண்டு சமையல் மேடை மேல் அமர்ந்து கொண்டாள்.

    முகத்தைத் தூக்கி வச்சிட்டிருக்காதே! சிரிடி... நம்மகிட்ட உள்ள ஒரே சொத்து அதுதானே!

    ஈ... ஈ... போதுமா? பல்லை இளித்துக் காட்டினாள்.

    பரவாயில்லே... பழையபடியே முகத்தைத் தூக்கி வச்சிக்க... வேணி கிண்டலாய்ச் சொல்லிவிட்டுப் புறப்பட...

    ஜீவிதா மனம் விட்டுச் சிரித்தாள்.

    காபி கேட்டு அரைமணி நேரமாச்சு. உங்களுக்கெல்லாம் இப்பதான் விடிஞ்சதா? காபியை வாங்கிக்கொண்டே சொல்லம்புகளை ஏவத் தொடங்கினாள் ராகினி.

    இல்லேம்மா... உனக்காகப் புது டிகாக்ஷன் போட்டு...

    ஆமா... உன் பொண்ணு எங்கே? அவளைத்தானே காபி கொண்டு வரச் சொன்னேன்.

    அவ... அவ... உள்ளே காய்கறி நறுக்கிட்டிருக்கா!

    இன்னிக்கு என்ன டிபன்?

    இடியாப்பம், பொங்கல்...

    அவ்வளவுதானா? என்ன சமைக்கறதுக்குச் சோம்பலா இருக்கா?

    அப்படியெல்லாம் இல்லேம்மா! உனக்கு என்ன வேணும்னு சொல்லு... நிமிஷத்துல தயார் பண்ணிடறேன்!

    ரவா இட்லியும், புதினா சட்னியும் சேர்த்துப் பண்ணிடு. அப்புறம், மதியத்துக்கு மட்டன் பிரியாணி பண்ணி அனுப்பிடு!

    வந்து... ராகினி... வேணி தடுமாறினாள்,

    என்ன...?

    இன்னைக்கு வெள்ளிக்கிழமை... மட்டனெல்லாம்...

    என்ன சமைச்சா என்ன? எந்தக் கடவுளும் இந்தக் கிழமைகள்லதான் நான்வெஜ் சமைக்கணும், இந்தக் கிழமைகள்தான் வெஜிடேரியன் சமைக்கணும்னு சொல்லலோ உழைக்கறது எதுக்காக தெரியுமா? திருப்தியாகச் சாப்பிடறதுக்குத்தான். அது எப்ப சாப்பிட்டா என்ன? உன்னால் முடியாதுன்னா சொல்லிடு... நான் ஓட்டல்லேர்ந்து வரவழைச்சுக்கறேன்!

    ஐயோ... ஏன்டா கண்ணு! ஓட்டல்லேர்ந்து வரவழைச்செல்லாம் சாப்பிடாதே! உடம்பு கெட்டுப் போகும். நான்... நானே சமைக்கிறேன்!

    ரொம்பத்தான் அக்கறை! கிண்டலாய்ச் சொல்லிவிட்டுக் குளிப்பதற்காக எழுந்து சென்றாள்.

    அந்தக் கிண்டலான பேச்சு வேணியின் இதயத்தைத் தாக்க... கண்கள் ஈரமாகியது.

    உண்மையான அக்கறையோடு, அன்போடு சொன்னால்கூட நடிப்பென்கிறாளே!

    என்ன... காலங்கார்த்தால வாங்கிக் கட்டிக்கிட்டியா? உனக்கேன் வம்பு? அவள் என்ன கேட்டாலும் சமைச்சுக் கொடுக்க வேண்டியதுதானே? ஆடா இருந்தா என்ன? மாடா இருந்தா என்ன? மிருகம் மிருகத்தைத்தான் சுவை பார்க்கும்! அங்கு வந்த ஜீவிதா சொன்னாள்.

    ஜீவிதா... என்ன பேச்சுப் பேசறே, மரியாதை இல்லாம? அவள் உன் அக்கா... அதை மறந்திடாதே...

    ஞாபகமிருக்கும்மா! என்றாள் கசப்பாய்.

    வேணி சேலைத் தலைப்பால் முகத்து வியர்வையை ஒற்றியபடி சட்னிக்காகப் புதினா இலைகளை வதக்கத் தொடங்கினாள்.

    ஜீவிதா தோளில் டவலோடு இப்படியும் அப்படியுமாய் நடப்பதும் கடிகாரத்தில் நேரம் பார்ப்பதுமாய் நகம் கடித்தாள்.

    ஜீவி... கொஞ்சம் மிக்சியில் போட்டு இதை அரைச்சிக் கொடுத்திடறியா?

    நீ வேற கோபத்தைக் கிளறாதேம்மா!

    இந்த வயசுல உனக்கு இவ்வளவு கோபம் வரக் கூடாதுடி!

    இந்த வயசுல அவளுக்கு மட்டும் அவ்வளவு திமிர் இருக்கலாமா?

    நீ இப்படியெல்லாம் பேசறது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கலே ஜீவிதா!

    எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கலே

    வேற எங்கே போகலாம் சொல்லு கைகள் அதுபாட்டிற்கு வேலை செய்து கொண்டிருக்க, அமைதியாய்க் கேட்டாள்.

    .....

    இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியலே இல்லே! நிஜத்தைச் சொல்லப்போனா... இதுக்குப் பதிலே இல்லே! நமக்கெல்லாம் எதுக்கு ஜீவிதா வீராப்பும், பொல்லாப்பும்

    ராகினியோட அராஜகம் தாங்க முடியலேம்மா!

    இந்த உலகத்திலே குற்றமில்லாத மனுஷன் ஒரே ஒருத்தன்தான் உண்டு. அவன் இன்னும் பிறக்கலே! புரியுதா? ராகினியோட நிழல்ல வாழ்ந்துக்கிட்டிருக்கோம். சில சமயங்கள்ல அவளைப் பத்தியே குறை சொல்கிறோம். நாம மட்டும் நல்லவங்களா ஜீவீதா

    "உன்கிட்டே பேசி முன்னுக்கு வர முடியாதும்மா! இதையெல்லாம் பேச

    Enjoying the preview?
    Page 1 of 1