Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjam Marantha Nilave
Nenjam Marantha Nilave
Nenjam Marantha Nilave
Ebook138 pages2 hours

Nenjam Marantha Nilave

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466565
Nenjam Marantha Nilave

Read more from V.Thamilzhagan

Related to Nenjam Marantha Nilave

Related ebooks

Related categories

Reviews for Nenjam Marantha Nilave

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjam Marantha Nilave - V.Thamilzhagan

    16

    1

    மஞ்சள் ஒளிக்கதிர்கள் அந்த மாலைப் பிரதேசத்தை பொன்மயமாய் மாற்றிக் கொண்டிருந்தன.

    மாலை நேர தென்றலின் இதம். அமைதியின் ஆசுவாசம்.

    உயர்ந்த மலையின் அகன்ற பாறை அருகே அமர்ந்திருந்தனர் விஜியும், எழிலும்.

    மேகம் அவர்களை உரசிக்கொண்டு போயின. பறவைகள் பரபரப்பாய் பறந்தோடின. குயில்களின் குதூகல கூவல்.

    கிளியின் இறகுகளை சேகரித்து வழிநெடுக பரப்பி வைத்த மாதிரி எட்டிய தூரம் வரை பசுமை.

    மரங்கள், செடிகள், கொடிகள், தேயிலைத் தோட்டங்கள் எல்லாமே பசுமையில் குளித்திருக்க, அதோ... அவர்கள் அமர்ந்திருக்கும் பாறைச் சரிவை ஒட்டி, பாய்ந்தோடி சலசலக்கும் நதி...

    கேரளாவின் ‘ஆல்வா’வை அழகுபடுத்தி, செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும் மிகப் பெரிய - ‘பெரியாறு!’

    ஓ... எத்தனை ரம்யமான காட்சி. எழிலான இயற்கை... கவர்ச்சி.

    எழில்... ஓடித்திரிகின்ற மேகங்கள்... பாடித் திரிகின்ற பறவைகள்... ஆடி அசைகின்ற மலர்கள்... ஆசையைத் தூண்டுகின்ற பசுமைகள்... இவைகளெல்லாம் இதயத்தில் சிலிர்ப்புகளை உருவாக்குகிறது, இல்லையா? - என்றாள் விஜி.

    பேச்சின் தொனியில் ஒரு பவ்யமான லயிப்பு தெரிந்தது.

    அந்திக் கதிர் சாயும் அடிவானத்தை வெறித்தபடியிருந்த எழில் ம் என்றான்.

    இலையின் இடுக்கில் உறங்கும் பனிமுத்துகள்... அலையின் சலனத்தையும் மீறி வானவில்லை - பிரதிபலிக்கும் ஆற்றின் வர்ணபிம்பங்கள்... இவைகளையெல்லாம் பார்க்கும்போது அப்படியே அள்ளிப் பருகத் தோன்றுகிறதில்லையா? என்றாள் மீண்டும் அவள்.

    ம் என்றான்.

    மார்புவரை உயர்த்திக் கட்டிய புடவையின் ஜரிகை கரை, இடதுபுற ஓரமாக நேர் கோடாய் சென்றிருக்க... உயர்த்திப் போட்ட வட்டக் கொண்டையைச் சுற்றிலும் மலர்களைப் படரவிட்டிருந்தாள் விஜி.

    அருகிலிருந்து செடிகளை நெருங்கி பலவிதமான மலர்களைப் பறித்து வந்தாள்.

    எழில்... இந்த டிரஸ் எனக்கு எடுப்பான நிறமானதா அமைஞ்சிருக்கா? இந்த டிரஸ்ஸுக்கு எந்த பூவை வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று இரண்டு கைகளையும் எழிலின் முன்னால் நீட்டினாள்.

    அவன் அணிந்திருந்த குளிர் கண்ணாடியை ஊடுருவி இரண்டு சொட்டு கண்ணீர்த் துளிகள் விழுந்து தெறித்தன.

    வெப்பமான நீர்த் திவலைகளை உணர்ந்ததும் வேதனையுடன் விம்மினாள் விஜி.

    ‘என்னையும் மறந்து எப்படி இந்தக் கேள்வியை கேட்க முடிந்தது? எப்படி மனம் வந்தது? இயற்கையின் லயிப்பில் ஆழ்ந்து விட்டதாலா? இதயம் அவர் ஊனத்தை மறந்து விட்டதாலா?’ என யோசித்தவள் கைகளிலிருந்த மலர்கள் சிதற...

    எழில்... என்னையும் மறந்து நானிப்படி கேட்டுவிட்டேன். எ... என்னை... மன்னிச்சிருங்க! என்றாள் தவிப்புடன்.

    "உன்னை எதுக்கு மன்னிக்கணும் விஜி? ‘புடவை நல்லாருக்கா? எடுப்பா இருக்கா’ன்னுதானே கேட்டாய்? நீ கொண்டு வந்ததிலே ‘எந்த மலரை சூடிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்’ என்றுதானே கேட்டாய்? இதில் தவறில்லையே!

    நீ எந்த உடையை உடுத்திக் கொண்டாலும் அழகாகவேதான் இருக்கும். ஒவ்வொரு மலரையும் எடுத்துக்காட்டு. அதன் வாசனையை வைத்துக் கண்டுபிடித்து பிறகு சொல்கிறேன்...

    மலரின் இனத்தை சுவாசத்தை வைத்துச் சொல்கிற என்னால் உடையின் நிறத்தை சொல்ல முடியாது. ஏன்னா... நான் பார்வையற்றவன் விஜி" என்றான் எழில்.

    "மற்றவர்களை இருட்டாக்கிவிட்டு தான் வெளிச்சத்தை அடைகிறவர்கள் தான் நடைமுறை இயல்பு. உலகின் நியதி. ஆனால்... தன்னையே இருளாக்கிக் கொண்டு என்னை வெளிச்சமடைய வைத்திருக்கும் தெய்வம் நீங்கள்! உங்களைப் புண்படுத்திவிட்டேனே! கலங்க வைத்து விட்டேனே!

    எழில்... எப்படிப்பட்ட தண்டனை இது! எனது விழிகளால் உங்களைப் பார்க்க நினைத்திருந்த காலம் ஒன்று. ஆனால் இப்பொழுதோ... உங்கள் விழிகளைப் பார்த்து... கண்ணீர் வடித்து...

    எத்தனை முறை இந்த இடத்திற்கு என்னை அழைத்துவரக் கூறினீர்கள்! அப்பொழுதெல்லாம் அமைதி காட்டிவிட்டேனே! பார்வை இருக்கும் பொது அழைத்து வரவில்லை, அழைத்து வரும்போது பார்வையே இல்லாமல்...

    தியாகம் என்ற பெயரில் ஏன் இவ்வளவு பெரிய தண்டனையை எனக்கு கொடுத்தீர்கள் எழில்? நான் குருடாகவே இருந்திருக்கலாம். கண்களை வைத்துக் கொண்டு எதைச் சாதிக்கப் போகிறேன்? ஆனால் நீங்கள்?

    அழகை ரசிக்க வேண்டியவராயிற்றே! அறிவின் ஒளியை அழகிய விழிகளால் காவியமாய் எழுதவேண்டியவராயிற்றே!

    என் மீதுள்ள அன்பின் தீவிரத்தை வேறு வழியில் காட்டியிருக்கலாமே எழில்...? அவசரப்பட்டு விட்டீர்களே எழில்...? ஆத்மத்தின் அழுகையை என்னால் அடக்க முடியவில்லையே எழில்...?"

    விஜி! ஏம்மா... அழறே? ப்ளீஸ்... கண்ணைத் துடைச்சிக்கோ. உன்னுடைய வருத்தம் எனக்குப் புரிகிறது. எனக்குக் கண் இல்லைங்கறதுக்காகவா நான் அழுதேன்? இல்லை... உன்னுடைய சின்னச் சின்ன ஆசைகள்... ரசிப்புகள்... இவைகளைக் கூட என்னால் இயல்பாய் நிறைவேற்ற முடியலையேன்னுதான் கலங்கினேன்.

    எ... எழில்...

    என்னுடைய கண்களா நீ இருக்கும்போது எனக்குன்னு கண்கள் தேவையா? எங்கே, நீ பறித்துக்கொண்டு வந்த பூக்களையெல்லாம் இப்படி நீட்டு என்றான்.

    சிதறிக் கிடந்த பூக்களைக் குனிந்து எடுத்து மீண்டும் அவன் முன்னே நீட்டினாள் விஜி.

    கைகளில் ஏந்தியிருந்த பூக்களை ஒவ்வொன்றாக முகர்ந்து பார்த்து சுகந்தமாய் மணம் வீசிய மருதாணிப் பூக்களை எடுத்து,

    நீ கேட்டபடி, இந்த மருதாணிப் பூவையே சூடிக்கொள் விஜி! என நீட்டினான்.

    அவள் கலங்கும் விழிகளோடும், நடுங்கும் கரங்களோடும் அந்த மலரை சூடிக் கொண்டாள். இதமான தென்றலின் குளிர் கூடிப் போயிருக்கவே, அதை உணர்ந்த எழில்,

    விஜி! இருட்டு வருகிறது போலிருக்கு. புறப்படலாமா?

    ம் அவனது கரத்தைப் பற்றி அழைத்துப் போனாள் விஜி...

    அந்தப் பாதையில்... கடந்த காலத்தின் காலடி சுவடுகள்... வடுக்களாய் மாறிப் போய்விட்ட வாழ்க்கைச் சம்பவங்கள், இருட்டை ஊடுருவிக்கொண்டு வரும் வெளிச்சங்களாய் விழத் துவங்கின...

    2

    பணம் சம்பாதிக்க பதவி என்கிற கருவியை மனிதன் கண்டுபிடித்திருக்கிறான். அறிவின் ஆற்றலை விட, உடலில் ரௌத்ரமான பலம் கொண்டவனே இந்தக் கருவியை முழுவதுமாய் பயன்படுத்துகிறான். மனிதன் விலங்காக மாறுவதும், மனிதரை விலங்காக மாற்றுவதும் இந்தப் பதவியே!

    அலுவலகம் முழுக்க களைகட்டியிருந்தது. காரணம், இன்று ஒரு பெண் வேலையில் சேருகிறாள். மணமாகாதவள்.

    மானேஜர் தன் உபதேசங்களை இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தார்.

    என் வாழ்த்துக்கள். நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தில்தான் பணி நிரந்தரமாவது உள்ளது. எனவே... என்று சொல்லிக்கொண்டே இண்ட்டர்காம் எடுத்து ஏ.ஓ. விசுவநாதனை அழைத்தார்...

    நரைத்த தலையும், பவர் கிளாஸ் அணிந்த முகமுமாய் ஃபைல் எடுத்துக் கொண்டு வந்தார் ஏ.ஓ.

    எல்லா ஸ்டாஃப்ங்ககிட்டேயும் அறிமுகப்படுத்திட்டு செக்ஷனைக் காட்டிட்டு வேலையைச் சொல்லிக் கொடுங்க! என்றார் மேனேஜர்.

    கண்ணாடிக் கதவு திறந்து அழைத்து வந்தார் ஏ.ஓ. அமரச் சொல்லி வருகைப் பதிவேடு புரட்டி, பெயரைச் சேர்த்து கையெழுத்து வாங்கிக்கொண்டு அழைத்துப் போனார்.

    முதலில் சீனியர் நிலையிலிருந்த சிவப்பிரகாசத்திடம் சென்றார் விசு. இவுங்க மிஸ் விஜி. நம்ம பிராஞ்ச்சுக்கு புதுசா அப்பாய்ன்மெண்ட் ஆகியிருக்காங்க! என்றார்.

    இருவரும் புன்னகைத்து வணக்கம் சொல்லிக் கொள்ள, வரிசையாக, இருபது பேரையும் அறிமுகப்படுத்தினார். பெண் ஊழியர் நீலவேணிக்கு அடுத்து அந்த இளைஞனிடம் அழைத்து வந்தார்.

    மிஸ் விஜி! இவர்தான் மிஸ்டர். எழில். அநேகமாக எல்லா பத்திரிக்கைகளிலும் இவருடைய கதைகளை பார்க்கலாம். ஒரு நல்ல எழுத்தாளர் என்றார்.

    விஜியையும் அறிமுகப்படுத்தினார்.

    நீங்கதான் எழுத்தாளர் எழிலா? ஓ. வாட் எ சர்ப்பரைஸ். அவசியம் உங்களை ஒரு நாள் பார்க்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். நான் உங்க வாசகி, உங்களுடைய எல்லா கதைகளையும் ஒண்ணுவிடாம படிச்சிருக்கேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1