Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pillai Paattu
Pillai Paattu
Pillai Paattu
Ebook116 pages18 minutes

Pillai Paattu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Children's Rhymes Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466572
Pillai Paattu

Related to Pillai Paattu

Related ebooks

Reviews for Pillai Paattu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pillai Paattu - V.Thamilzhagan

    108

    தமிழ் வாழ்த்து

    கன்னித் தமிழ் மொழியே!

    கனியே! காலைக்

    கதிர் ஒளியே! - உன்னை

    எண்ணித் தொழுதிருப்பேன்

    என்றும்; என்னுயிர்

    உள்ள வரை!

    மண்ணில் மரமது போல்

    வந்த என் மனக்

    கவிதைகளை - தமிழ்ப்

    பண்ணெனப் பாடி வைத்தேன்

    அதைப் பாரினில்

    வாழ வைப்பாய்!

    பிள்ளைப் பாட்டு

    பார் பார் புத்தகம் பார்

    ‘பிள்ளைப் பாட்டை’

    படித்துப் பார்!

    கேட்பார் மயங்கிடவே

    கொஞ்சும் இனிய

    பாடலைப் பார்!

    தேர் பார்; சிலையைப் பார்;

    தென்றல் வான

    அழகைப் பார்!

    கோர்த்தார் மணியைப் போல்

    குழந்தையர் அறிவுப்

    பெட்டகம் பார்!

    சார் சார் டீச்சர் சார்

    சரியா வந்து

    சொல்லுங்க சார்!

    ஏற்பார் ஏற்றிடவே

    எங்களைப் போன்றவர்

    படித்திடுவார்!

    நீராடு

    காலை நேரம் நீராடு

    கடவுளை வணங்கி நீபாடு!

    கவலை மறந்த மனதோடு

    கல்வியை கற்கணும் துடிப்போடு!

    கையைக் கழுவி சாப்பாடு;

    சாப்பிடும் வரையில் நோய் ஏது?

    பொய்யை மறந்து உறவாடு

    புரிந்து நடந்தால் பிரிவேது?

    ஏழை நாமென வருந்தாது

    என்றும் உழைத்தால் தாழ்வேது?

    எதற்கும் துணிந்து போராடு

    என்றும் வாழணும் ஊரோடு!

    ரயில் வண்டி

    குபு குபு புகை விடும் ரயில் வண்டி - அது

    கூக்கூ.. என்றே கூவிடு தாம்!

    ஜிகு புகு ஜிகுபுகு ரயில் வண்டி - அது

    ஜங்சனில் வந்து நின்றிடுதாம்!

    தடதட தடதட சத்தமுடன் - அது

    தண்ட வாளத்தில் ஓடிடுதாம்!

    திபு திபு என வரும் மனிதரையே

    தன்னிடம் ஏற்றிச் செல்கிறதாம்!

    சுடச் சுட காஃபி தோசைமசால்

    சோமாஸ் வடையும் கிடைக்கிறதாம்!

    நெடு நெடு நீளம் இருக்கிற தாம் – அது

    நீண்ட தூரமே போகிற தாம்!

    அ முதல்...

    அம்மா அப்பா முதல் தெய்வம்

    ஆசான் சொல்லே நல்வேதம்

    இல்லம் என்பது ஒரு கோவில்

    ஈகை மனமே தெய்வ மதாம்!

    எல்லா மனிதரும் ஒன்றேதான்

    ஏற்றத் தாழ்வுகள் கூடாதாம்!

    ஐயந் தெளிந்திட கற்றிடணும்

    ஒழுக்கம் நமது உயிராகும்;

    ஓயாதிருக்கனும் உழைப்பாலே!

    ஔவைபோல தமிழ்ப்பாட்டு

    அஃதே நமது பண்பாடு!

    மார்க்கு வாங்கணும்

    ஏட்டிக்குப் போட்டியா

    நடக்காம - நீ

    எழுந்திரு தூங்கி

    கிடக்காம!

    கூப்பிட்டு நிறுத்தியும்

    குளிக்காம - நீ

    குறும்பு செய்வதா

    அடங்காம!

    சாப்பிடச் சொன்னா;

    சுவையோட - நீ

    கேட்குற சட்டினி

    வகை யோட!

    மார்க்கு வாங்கணும்

    நிறைவாக - அத

    மறந்து படிக்கிறே

    குறைவாக!

    சேர்க்கை சேர்ந்துதான்

    போகாதே -அது

    சிறந்த பண்பாக

    ஆகாதே!

    ஒன்று முதல் பத்து

    ஒண்ணே ஒண்ணு

    Enjoying the preview?
    Page 1 of 1