Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pesum Oviyam
Pesum Oviyam
Pesum Oviyam
Ebook162 pages57 minutes

Pesum Oviyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைகளுக்குக் கதை எழுதுவதென்பது மிகவும் கடினமானது. கவனமாகச் செய்யவேண்டியதும்கூட. கொஞ்சம் பிசகினாலும், பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். யதார்த்தம் என்ற பெயரில் சிறுகதைகளில் எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால் குழந்தை இலக்கியத்தில் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி நல்லதை மட்டுமே எழுத வேண்டும்.

மற்ற எந்த இலக்கியத்தையும் விட, குழந்தை இலக்கியத்தில் எழுத்தாளனுக்குக் கூடுதல் சமூகப் பொறுப்புணர்வும், கடமையும் இருக்கிறதென்று நான் கருதுகிறேன். குழந்தைகளுக்காக எழுதும் எழுத்து, வருங்காலச் சமுதாயத்துக்கு, புதிய தலைமுறைக்கு வளம் சேர்க்கும் எழுத்தாக இருக்கவேண்டும். அந்த எழுத்து, அவர்களின் மனநிலையை ஒருபடி மேலே உயர்த்துவதாக அமைய வேண்டும்; வாழ்க்கையின் விழுமியங்களையும், நம் கலாச்சாரத்தையும் தூக்கிப் பிடிப்பதாக இருக்கவேண்டும்.

சிறுவர் இலக்கிய முன்னோடிகளான அழ. வள்ளியப்பா, வாண்டுமாமா, பூவண்ணன் போன்ற மாபெரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களெல்லாம் அப்படித்தான் இருந்திருக்கின்றன. அவர்களின் எழுத்துக்களைப் படித்த அந்தக் காலத்துக் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள், புரியும்!

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும், இதைப் படிக்கும் குழந்தைகளின் மனத்தைத் தொடுவதாகவும், அவர்களின் எண்ணத்தை உயர்த்துவதாகவும் இருக்கும் என்பது நிச்சயம். சமூக விழிப்புணர்வுக் கருத்துகளையும், தன்னம்பிக்கை விதைகளையும், வாழ்க்கை மீதான நேசிப்பையும் பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்க முற்பட்டிருக்கிறேன். இந்தக் கதைகளின் மூலம் குழந்தைகளின் இதயத்துக்குள் நுழைய நான் முயற்சித்திருக்கிறேன். இதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

குழந்தை இலக்கியம் என்பது, தொப்புள்கொடி உறவு. தாயின் மூலமாகத்தான், குழந்தைக்குக் கதைகள் பரிச்சயமாகின்றன. ஒரு குழந்தையின் முதல் இலக்கிய வாசிப்பு, அதன் தாயிடமிருந்தே தொடங்குகிறது. சோறூட்டும்போதும், இரவின் மடியில் அன்னையின் அணைப்பில் படுத்துறங்கும்போதும், தாய் சொல்லும் கதைகளைக் கேட்டுத்தான் குழந்தையின் கற்பனை உலகம் விரிகிறது. குழந்தை இலக்கியத்திற்கான விதை, அப்போதுதான் தூவப்படுகிறது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'அல்லியும் மல்லியும்,' 'கொழுக்கட்டைக்குக் கையும் உண்டோ?,' 'அரசமரத்துக் காகம்' போன்ற மூன்று கதைகளும் நான் சிறுமியாக இருந்தபோது என் தாய் எனக்குச் சொல்லியவை. இந்தக் கதைகளை நான் எப்போது கேட்டாலும், மறுக்காமல், சலிக்காமல், சுவாரஸ்யம் குன்றாமல், முதல் முறை சொல்லும்போது இருந்த அதே உற்சாகத்துடன் என் அம்மா எனக்குச் சொல்லுவார். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத கதைகள். இந்தக் கதைகளை பின்னர் நான் என் மகனுக்குச் சொன்னேன். இப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவன் கேட்கும்போதெல்லாம் சொல்கிறேன்.

ஒவ்வொரு தாயும், தன் குழந்தைக்கு மிகச்சிறந்த கதாசிரியையாக இருக்கிறாள். தாய்மொழியைப்போல, குழந்தை இலக்கியமும் மரபுவழி உறவாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் பெரும்பங்கு வகிப்பவர்கள், ஆசிரியர்கள்! குறிப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்! பாடங்களைவிடக் கதைகளையே அதிகம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் இன்று இருக்கிறார்களா? கற்பிக்கும் பணியுடன், காகிதப் பணிகளையும் பார்த்துக் கொள்ளும் இன்றைய ஆசிரியர்களில் எத்தனை பேருக்குக் கதை சொல்ல நேரமிருக்கிறது? நேரமிருந்தாலும் கற்பனை வளத்துடன் கதை சொல்லும் மிகச் சிறந்த கதைசொல்லிகள் அவர்களில் எத்தனை பேர்? விரல்விட்டு எண்ணிவிடலாம்!

அலுவலகப் பணியில் பகல்பொழுதெல்லாம் தன்னைத் தொலைத்துவிட்டு, மாலையில் வீடு திரும்பியவுடன் சமையல் கட்டுக்குள் நுழையும் தாயால், தன் குழந்தைகளுக்குக் கதை சொல்ல முடிகிறதா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொலைந்து போகாமல், இருந்த இடத்தில் இருந்தபடியே காலை நீட்டிக்கொண்டு பேரன் பேத்திகளுக்காக இட்டுக்கட்டி கதை சொல்லும் பாட்டிகள் இன்று இருக்கிறார்களா? இந்தக் கேள்வி காதலனாகவோ, இலக்கிய இரசிகனாகவோ, படைப்பாளனாகவோ வலம் வரப்போவது நிச்சயம்.

நம் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை, அவர்களின் வயதுக்கேற்ற புத்தகங்களை அறிமுகப் படுத்த வேண்டியது, நமது கடமை. ஒரு தாயால், ஆசிரியரால், நண்பரால் சொல்ல முடியாத பல நல்ல கருத்துகளை, அறிவுரைகளை ஒரு நல்ல புத்தகம் சொல்லித் தந்துவிடும். குழந்தைகளுக்காக நாம் சேர்த்துவைக்கும் சொத்து, காசு பணமாக மட்டுமல்லாமல், கதைப் புத்தகங்களாகவும் இருக்கட்டும்.

மிக்க அன்புடன்,
- ஜி.மீனாட்சி

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127304406
Pesum Oviyam

Read more from G. Meenakshi

Related to Pesum Oviyam

Related ebooks

Reviews for Pesum Oviyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pesum Oviyam - G. Meenakshi

    http://www.pustaka.co.in

    பேசும் ஓவியம்

    சிறுவர் கதைகள்

    Pesum Oviyam

    Children Stories

    Author:

    ஜி. மீனாட்சி

    G. Meenakshi

    For more books

    http://pustaka.co.in/home/author/g-meenakshi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. காட்டுக்குள்ளே போட்டி

    2. கொடுப்பது சுகமே

    3. மயிலாடும் மனது

    4. கோடையில் ஒரு காரியம்

    5. அல்லியும் மல்லியும்

    6. ஜம்புவின் கோபத்திற்கு ஆளாகலாமா?

    7. மகேந்திரபுரி இளவரசி

    8. கொழுக்கட்டைக்குக் கையும் உண்டோ?

    9. மாறியது நெஞ்சம்

    10. அரச மரத்துக் காகம்!

    11. பேசும் ஓவியம்

    12. பட்டால் புத்தி வரும்

    13. கத்திரிக்காய்க்கு வந்த விழிப்புணர்வு

    14. இதய தெய்வம்!

    15. ஏற்றத்தாழ்வு

    16. பொறியில் அகப்பட்டவன்!

    சமர்ப்பணம்

    கதைகள் பல சொல்லி என் பால்யப் பருவத்தை செப்பனிட்டுச் செழிப்பாக்கிய என் அன்பு அம்மாவுக்கு...

    *****

    என்னுரை

    குழந்தைகளுக்கான சொத்து!

    குழந்தைகளுக்குக் கதை எழுதுவதென்பது மிகவும் கடினமானது. கவனமாகச் செய்யவேண்டியதும்கூட. கொஞ்சம் பிசகினாலும், பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். யதார்த்தம் என்ற பெயரில் சிறுகதைகளில் எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால் குழந்தை இலக்கியத்தில் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி நல்லதை மட்டுமே எழுத வேண்டும்.

    மற்ற எந்த இலக்கியத்தையும் விட, குழந்தை இலக்கியத்தில் எழுத்தாளனுக்குக் கூடுதல் சமூகப் பொறுப்புணர்வும், கடமையும் இருக்கிறதென்று நான் கருதுகிறேன். குழந்தைகளுக்காக எழுதும் எழுத்து, வருங்காலச் சமுதாயத்துக்கு, புதிய தலைமுறைக்கு வளம் சேர்க்கும் எழுத்தாக இருக்கவேண்டும். அந்த எழுத்து, அவர்களின் மனநிலையை ஒருபடி மேலே உயர்த்துவதாக அமைய வேண்டும்; வாழ்க்கையின் விழுமியங்களையும், நம் கலாச்சாரத்தையும் தூக்கிப் பிடிப்பதாக இருக்கவேண்டும்.

    சிறுவர் இலக்கிய முன்னோடிகளான அழ. வள்ளியப்பா, வாண்டுமாமா, பூவண்ணன் போன்ற மாபெரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களெல்லாம் அப்படித்தான் இருந்திருக்கின்றன. அவர்களின் எழுத்துக்களைப் படித்த அந்தக் காலத்துக் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள், புரியும்!

    இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும், இதைப் படிக்கும் குழந்தைகளின் மனத்தைத் தொடுவதாகவும், அவர்களின் எண்ணத்தை உயர்த்துவதாகவும் இருக்கும் என்பது நிச்சயம். சமூக விழிப்புணர்வுக் கருத்துகளையும், தன்னம்பிக்கை விதைகளையும், வாழ்க்கை மீதான நேசிப்பையும் பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்க முற்பட்டிருக்கிறேன். இந்தக் கதைகளின் மூலம் குழந்தைகளின் இதயத்துக்குள் நுழைய நான் முயற்சித்திருக்கிறேன். இதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    குழந்தை இலக்கியம் என்பது, தொப்புள்கொடி உறவு. தாயின் மூலமாகத்தான், குழந்தைக்குக் கதைகள் பரிச்சயமாகின்றன. ஒரு குழந்தையின் முதல் இலக்கிய வாசிப்பு, அதன் தாயிடமிருந்தே தொடங்குகிறது. சோறூட்டும்போதும், இரவின் மடியில் அன்னையின் அணைப்பில் படுத்துறங்கும்போதும், தாய் சொல்லும் கதைகளைக் கேட்டுத்தான் குழந்தையின் கற்பனை உலகம் விரிகிறது. குழந்தை இலக்கியத்திற்கான விதை, அப்போதுதான் தூவப்படுகிறது.

    இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'அல்லியும் மல்லியும்,' 'கொழுக்கட்டைக்குக் கையும் உண்டோ?,' 'அரசமரத்துக் காகம்' போன்ற மூன்று கதைகளும் நான் சிறுமியாக இருந்தபோது என் தாய் எனக்குச் சொல்லியவை. இந்தக் கதைகளை நான் எப்போது கேட்டாலும், மறுக்காமல், சலிக்காமல், சுவாரஸ்யம் குன்றாமல், முதல் முறை சொல்லும்போது இருந்த அதே உற்சாகத்துடன் என் அம்மா எனக்குச் சொல்லுவார். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத கதைகள். இந்தக் கதைகளை பின்னர் நான் என் மகனுக்குச் சொன்னேன். இப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவன் கேட்கும்போதெல்லாம் சொல்கிறேன்.

    ஒவ்வொரு தாயும், தன் குழந்தைக்கு மிகச்சிறந்த கதாசிரியையாக இருக்கிறாள். தாய்மொழியைப்போல, குழந்தை இலக்கியமும் மரபுவழி உறவாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் பெரும்பங்கு வகிப்பவர்கள், ஆசிரியர்கள்! குறிப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்! பாடங்களைவிடக் கதைகளையே அதிகம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் இன்று இருக்கிறார்களா? கற்பிக்கும் பணியுடன், காகிதப் பணிகளையும் பார்த்துக் கொள்ளும் இன்றைய ஆசிரியர்களில் எத்தனை பேருக்குக் கதை சொல்ல நேரமிருக்கிறது? நேரமிருந்தாலும் கற்பனை வளத்துடன் கதை சொல்லும் மிகச் சிறந்த கதைசொல்லிகள் அவர்களில் எத்தனை பேர்? விரல்விட்டு எண்ணிவிடலாம்!

    அலுவலகப் பணியில் பகல்பொழுதெல்லாம் தன்னைத் தொலைத்துவிட்டு, மாலையில் வீடு திரும்பியவுடன் சமையல் கட்டுக்குள் நுழையும் தாயால், தன் குழந்தைகளுக்குக் கதை சொல்ல முடிகிறதா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொலைந்து போகாமல், இருந்த இடத்தில் இருந்தபடியே காலை நீட்டிக்கொண்டு பேரன் பேத்திகளுக்காக இட்டுக்கட்டி கதை சொல்லும் பாட்டிகள் இன்று இருக்கிறார்களா? இந்தக் கேள்வி காதலனாகவோ, இலக்கிய இரசிகனாகவோ, படைப்பாளனாகவோ வலம் வரப்போவது நிச்சயம்.

    நம் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை, அவர்களின் வயதுக்கேற்ற புத்தகங்களை அறிமுகப் படுத்த வேண்டியது, நமது கடமை. ஒரு தாயால், ஆசிரியரால், நண்பரால் சொல்ல முடியாத பல நல்ல கருத்துகளை, அறிவுரைகளை ஒரு நல்ல புத்தகம் சொல்லித் தந்துவிடும். குழந்தைகளுக்காக நாம் சேர்த்துவைக்கும் சொத்து, காசு பணமாக மட்டுமல்லாமல், கதைப் புத்தகங்களாகவும் இருக்கட்டும்.

    'பேசும் ஓவியம்' என்ற இந்தச் சிறுவர் கதைத் தொகுப்புக்கு, குழந்தைக் கவிஞர் திரு. செல்லகணபதியைத் தவிர வேறு யார் பொருத்தமான அணிந்துரையை எழுதித் தர முடியும்? குழந்தைக் கவிஞருக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

    மிக்க அன்புடன்,

    ஜி.மீனாட்சி

    *****

    1. காட்டுக்குள்ளே போட்டி

    அது ஓர் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்கு சிங்கம் தான் ராஜா. கரடி, யானை, புலி, காண்டாமிருகம், ஒட்டகம், மயில், குயில், மான், ஆமை, தவளை, குரங்கு, முயல், எருமை, ஓநாய் என்று ஏராளமான விலங்குகள் அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தன.

    இந்த விலங்குகளுக்குத் தேவையான உணவு காட்டிற்குள்ளேயே கிடைத்து வந்ததால், எந்த விலங்கும் யாரையும் தொந்தரவு செய்யாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தன.

    ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அந்தக் காட்டில் ஆண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம். சிங்கராஜாதான் விழாவுக்குத் தலைமை தாங்குவார். விழாவில் ஒவ்வொரு விலங்கும் தத்தம் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாட்டுப் பாடியும், நடனமாடியும் சிங்க ராஜாவை மகிழ்ச்சிப்படுத்தும். விலங்குகளின் திறமையைச் சோதிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் விலங்குகளுக்கு சிங்கராஜா தன் கைகளாலேயே பரிசுகள் வழங்கிச் சிறப்பிப்பார். அத்துடன், சிறப்புப் பட்டங்களையும் வழங்குவார்.

    இந்த ஆண்டும் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை, புலியும், யானையும் இணைந்து செய்து கொண்டிருந்தன. விழாவைச் சிறப்பிக்கப் பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டன. வரவேற்புக் குழுவில் மான்களும், மயில்களும் இடம்பெற்றிருந்தன. போட்டிகளுக்கான நடுவர் குழுவில் ஒட்டகமும், காண்டா மிருகமும் இடம் பெற்றிருந்தன. விழாவையொட்டி மாபெரும் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. விருந்துக் குழுவுக்குக் கரடி தலைமை வகித்தது.

    ஆண்டு விழா போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு விலங்கும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தன. ஓட்டப்பந்தயம் மற்றும் தடகளப் போட்டிகளில் மானும், ஓநாயும் மோத இருந்தன. குயிலுக்கும் தவளைக்குமிடையே பாட்டுப் போட்டி அரங்கேற இருந்தது. குரங்குக்கும் நாய்க்கும் இடையே சாப்பாட்டுப் போட்டி நடைபெற இருந்தது.

    போட்டியில் பங்கேற்கவிருந்த விலங்குகள் அனைத்தும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. தனக்கென இலக்கை நிர்ணயித்துக் கொண்டு மான் ஓடி ஓடிப் பயிற்சி செய்தது; குச்சியால் தடை ஏற்படுத்திக் கொண்டு தாவித் தாவிக் குதித்துக் கொண்டிருந்தது. தவளை குளக்கரையில் உட்கார்ந்து கர்ண கடூரமான தன் குரலை ஏற்றியும் இறக்கியும் பாடிப் பாடிப் பழகிக் கொண்டிருந்தது. குரங்கு வனத்திலிருந்த பழங்களையெல்லாம் பறித்து வந்து, அவற்றை எப்படிச் சீக்கிரமாகச் சாப்பிட்டு முடிப்பது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. விழாவையொட்டி மாபெரும் சமபந்தி போஜனமும் நடைபெற இருந்ததால், சைவம் மற்றும் அசைவ வகைகளில் விதவிதமான பதார்த்தங்களைத் தயாரிப்பதற்கான பணிகளில் கரடிகள் ஈடுபட்டிருந்தன. விருந்துக்கான மளிகை சாமான்களை வாங்கி வருவதற்காக ஒட்டகங்களும், குதிரைகளும் அலைந்து திரிந்து கொண்டிருந்தன. விருந்து சமைப்பதற்கான தண்ணீரை யானைகள் கிணற்றிலிருந்து இறைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தன.

    வனத்தைச் சுற்றிப் பல வண்ண மலர்த் தோரணங்களைக் கட்டிக் கொண்டிருந்தன

    Enjoying the preview?
    Page 1 of 1