Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paadi, Aadu Papa
Paadi, Aadu Papa
Paadi, Aadu Papa
Ebook532 pages1 hour

Paadi, Aadu Papa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாணவர் தேவைக்கு வேண்டியவாறு ஒளியிழைகளாகவும், சிறுவர் பாடல்களாகவும் ஆக்கம் பெற்ற எனது படைப்புகள் அனைத்தையும் 'பாடி ஆடு பாப்பா' என்னும் பெயரில் ஒரு வெளியீடாக இங்கு உங்கள் முன் வைத்துள்ளேன். இதில் தமிழ்மலர் பாடல்கள், பாடியாடு பாப்பா, ஆடலும் பாடலும், தங்கக்கலசம், பாச்செண்டு என்ற பெயர்களுடன் முன்பு வெளிவந்த சிறுவர் பாடல்களையும், வெளிவராத புதிய பாடல்களையும் உள்ளடக்கியதாக இப் ‘பாடி ஆடு பாப்பா' தொடுக்கப்பட்டுள்ளது.
இச்சிறுவர் பாடலின் முதற்பகுதியாக அமைந்த 'பாப்பாப் பா' என்ற பகுதி புதிய பாடல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இங்கே சில உயர் பண்புகளை உணர்த்தும் கதைப்பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140206598
Paadi, Aadu Papa

Related to Paadi, Aadu Papa

Related ebooks

Reviews for Paadi, Aadu Papa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paadi, Aadu Papa - Arul Subramaniam

    http://www.pustaka.co.in

    மாதகலானின்

    பாடி, ஆடு பாப்பா

    Madhakalaanin

    Paadi, Aadu Papa

    Author:

    அருள் சுப்பிரமணியம்

    Arul Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arul-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பாலர் பாடல்கள்

    1. பாலர் வகுப்பில் படிக்கின்றேன்

    2. அப்பா அம்மா...

    3. அணிலே நில்!

    4. உடல் உறுப்புகள்

    5. உறுப்புகளும் பயன்பாடும்

    6. என் பாட்டி

    7. என் செயல்

    8. காய்கறி

    9. குட்டிக் குரங்கே

    10. மூத்தோர் சொல்

    11. நாய்க்குட்டி

    12. அ... ஆ...

    13. ஒன்று இரண்டு

    14. ஊஞ்சல் ஆடுவோம்

    15. பாடு பாடு பாடுநீ

    16. பாம்பே!

    17. பாப்பா

    18. பயிற்சி

    19. தேடும் பூ

    20. பூனையார்

    21. ரோசாப்பூ

    22. சிங்கம்

    23. சின்னக் கோழிக் குஞ்சு

    24. தமிழை என்றும் பேசுவோம்!

    25. தமிழராக வாழ்வோம்!

    26. வா முயலே

    27. வாத்து

    28. எறும்பு தேனீ காகம்

    29. பறவைகள்

    30. வட்ட நிலா

    சிறுவர் பாடல்கள்

    1. அம்மாவை மறப்போமா?

    2. நன்றி அம்மா!

    3. என் அப்பா

    4. சின்னத் தம்பி!

    5. என் பெற்றோர்

    6. அப்பா அம்மா சொற்கேட்போம்!

    7. என் குடும்பம்

    8. அன்புக் குடும்பம்

    9. குடும்பம் என்பது...

    10. சேர்ந்து வாழும் குடும்பம்

    11. வீடு

    12. தமிழிற் பேசம்மா!

    13. காலத்தை வென்று வாழ்வோம்!

    14. தொலைக்காட்சி

    15. ஒற்றுமை

    16. நற்பண்பு

    17. முயற்சி

    18. மன்னிப்போம்!

    19. நேர்மை

    20. பண்பாடு

    21. தன்னலம்

    22. விளையாட்டு

    23. தேர் நகர வேண்டுமெனில்...

    24. கோவிலின் தேர்

    25. திருக்குறள்

    26. திருவள்ளுவர்

    27. உணவும் சத்தும்

    28. தமிழர் உணவு

    29. அறுசுவை

    30. பருவ காலங்கள்

    31. வா இங்கே

    32. நெல்லும் உமியும்

    33. மத்தாப்பு

    34. கனடா

    35. வாழ்ந்திடுவோம்!

    36. இன்கலைகள்

    37. கணினி

    38. கவனம்

    39. முகநூல் நான் (Face Book)

    40. கூடாத கூட்டம்

    41. மலையும் முகிலும்

    42. சரணாலயம்

    43. நவாலியூர் சோமசுந்தரப் புலவர்

    44. எது இது (விடுகதை)

    45. உயிரும் மெய்யும்

    46. ஒலி ஒளி ஒழி

    வலி வளி வழி

    47. விபத்து

    48. நான் யார்?

    49. காலைக் காட்சி

    50. மின்மினிப் பூச்சி

    கதைப் பாடல்கள்

    1. ஒற்றுமை

    2. தீர்ப்பு

    3. தேனும் தவளையும்

    4. குருவிக் குஞ்சுகள்

    5. சொல்லித் தருவதைக் கேட்டிடுவோம்!

    6. பொறுமை

    7. ஆரதியும் பூனையும்

    8. சொந்தப் புத்தி

    9. புறாவும் எறும்பும்

    10. வனக்காட்சி

    11. பகை வெல்வோம்!

    மாணவர் பாடல்கள்

    1. ஆலமரம்

    2. மரங்களை வெட்டாதே!

    3. புதுமரம்

    4. வளரவிடாதே!

    5. வாழ வழிவிடுவோம்

    6. வாழும் உரிமை மறுக்காதே!

    7. சரிதானா?

    8. முதியோர்

    9. நாவை அடக்கு

    10. தன்னலம்

    11. செம்மொழி

    12. நல்ல தமிழ்ப் பெயர்

    13. தொல் வணிகம்

    14. தொழிற் சிறப்பு

    15. உலகத் தமிழர் பொதுத் திருநாள்

    16. அமைதி வாழ்வு!

    17. நல்லவை

    18. நகை சுமையா?

    19. தூரம்

    20. கண்டதைக் கற்போம்!

    21. இருகை வேண்டும் தமிழுக்கு! இருக்கையும் வேண்டும் தமிழுக்கு!

    22. காசே நீ என்ன செய்கிறாய்?

    23. மலரும் மனிதனும்

    24. மனிதன்

    25. ஆற்றல்

    26. அறிவு

    27. இளம் பெற்றோரே...!

    28. இயற்கையும் சீற்றமும்!

    29. விதை

    30. இயந்திர வாழ்வா?

    31. பாரதி

    32. அந்நியர் காலம்

    33. நாவலர்

    34. அன்பு

    35. அன்பும் அணைப்பும்

    36. வணக்கம் கனடா!

    37. சிறிலங்கா (இலங்கை)

    38. பகவானே!

    39. ஐந்து மூலகம் (பஞ்சபூதங்கள்)

    40. கொரோனா: நம்மை நாமே காத்திடுவோம்!

    41. உயிராயுதமா...?

    42. கொரனாவே துள்ளாதே!

    43. நல்லதும் செய்தாய்!

    44. நல்ல பாடம் புகட்டிவிட்டாய்!

    தமிழ் மரபுத் திங்கள் பாடல்கள்

    1. நன்றி கூறிடுவோம்!

    2. வாழும் தமிழ் மொழி

    3. இனிய தமிழிற் பேசிடுவோம்!

    4. ஒன்றாய்ப் பாடிடுவோம்!

    5. தமிழிற் பேசிப் பழகிடுவோம்

    6. கலப்பு மொழிகள் இறந்துவிடும்

    7. தமிழர் பண்பாடு

    கனடா 150

    1. விழுதாய் நாமும் மாறிடுவோம்

    2. வாழ்த்துகிறோம்!

    3. வாழியவே

    4. கூட்டரசாக...

    5. கனடாவே!

    6. எழில்நிறை கனடா...

    7. பனியழகு

    8. தாயகம்

    தமிழ் மலர் பாடல்கள்

    1. தமிழ் படிப்போம்

    2. திருவள்ளுவர்

    3. பட்டம் பார்

    4. பாட்டி பாட்டி கதை சொல்வாய்

    5. காலையில் எழுவோம்! - 1

    6. காலையில் எழுவோம்! - 2

    7. மாதங்கள்

    8. மெய் எழுத்து

    9. செல்லப் பிராணி

    10. என் அம்மா

    11. என் அப்பா

    12. வார நாட்கள்

    13. வாண வேடிக்கை

    14. பூமழை பொழியுது

    15. மிருகக்காட்சிச் சாலை – 1

    16. மிருகக்காட்சிச் சாலை – 2

    17. தோத்தரிப்போம்

    18. வெள்ளிப் பனி

    19. பண்பாடு

    20. தமிழ் மொழி

    21. கரடியாரே!

    பாடி ஆடு பாப்பா

    1. தமிழ் படிப்போம்

    2. தாயகம் – தமிழீழம்

    3. குட்டிப் பாப்பா

    4. என் தம்பி

    5. பொம்மை பார்!

    6. வெண்பனி பார்!

    7. வெள்ளிப் பனியே வா வா வா!

    8. பனி மனிதன்

    9. தொப்பியைப் பார்!

    10. காலணி

    11. மீன் குஞ்சு

    12. கோழி

    13. கோழிக் குஞ்சு

    14. குஞ்சே குஞ்சே கொஞ்சம் வா!

    15. அணில்

    16. மகிழுந்து (கார்)

    17. மிதிவண்டி

    18. வாழ்க நீ!

    19. நல்ல பிள்ளை நான்

    20. பாட்டிமார்

    21. வானூர்தி

    22. தைப்பொங்கல்

    23. எம் கனடா

    24. நாளைக் கடத்திப் பழகாதே!

    25. நற்செயல்கள்

    26. ஒழுங்குகள் பேணுவோம்!

    27. நாவை அடக்கிடுவோம்

    28. கடினமாய் உழைத்திடு!

    29. கையைத் தட்டுங்கள்

    30. கையைத் தட்டுவோம் - 1

    31. கையைத் தட்டுவோம் - 2

    32. சிறுவரும் குருவிகளும்

    தங்கக் கலசம்

    1. ஆசையோடு கற்றிடுவாய்!

    2. எம் தாய்

    3. எம் தெய்வம்

    4. நீதி நூல்கள்

    5. நட்பு

    6. அஞ்சி ஒதுங்காதே!

    7. எது ஊனம்?

    8. வாழ வழிவிடுவோம்

    9. காத்திரு நிலவே!

    10. தீட்டிய தடியிற்...

    11. மழையே பெய்!

    12. வீட்டுத் தோட்டம்

    13. நூல் நிலையம்

    14. உணவு

    15. பூந்தோட்டம்

    16. செய்தித்தாள்

    17. இயற்கையை பேணுவோம்!

    18. தொழிற் சிறப்பு

    பாடலும் ஆடலும்

    1. அம்மா

    2. அப்பா

    3. பள்ளியிலே

    4. ஆசான்கள்

    5. எங்கள் வீடு

    6. சின்னப் பொம்மை

    7. பூனையார்

    8. ஆடை

    9. தொலைபேசி

    10. வானொலி

    11. தொலைக்காட்சி

    12. கணினி

    13. பந்து

    14. கண்ணாடி

    15. பூக்கள் பார்

    16. பனி அழகு

    17. எங்கும் எதிலும் பனி

    18. மழை

    19. கடல்

    20. அலைகள் பார்

    21. காற்றே...!

    22. தண்ணீர்

    23. சூரியன்

    24. தமிழர் பண்பாடு

    25. விருந்தினர்

    26. தைப் பொங்கல்

    27. பாடியாடுவோம்

    28. உடல் உறுப்புகள்

    29. சாதனை வீரர்

    30. தாயே!

    பாச்செண்டு

    1. வணக்கம்

    2. வட்டமாக வாருங்கள்

    3. கோழிக் குஞ்சு பார்

    4. பொட்டு

    5. சிற்றுந்து

    6. முயலே வா!

    7. நாய்க்குட்டி

    8. ரோசாப்பூ

    9. செரிப்பழம்

    10. பனியே வா!

    11. பாட்டும் கதையும் படிப்போமா?

    12. யானை

    13. ஆப்பிள் மரம்

    14. நம் கனடா

    15. வாழ்க நீ!

    அணிந்துரை

    பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன்

    இறையியல் பேராசிரியர்,

    டொரோண்டோ பல்கலைக் கழகம், கனடா

    எனது தந்தையின் முந்நாள் மாணவரும், இந்நாள் எனது நண்பருமான ஆசிரியப் பெருந்தகை சபா. அருள்சுப்பிரமணியம் அவர்களின் இப்பெருநூலுக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன். இவரது ஆசிரிய வாழ்வில் பல வருடங்களாக சிறுவர் இலக்கிய ஆக்கத்தில் அறாத்தொடர்ச்சியாக ஈடுபட்ட கவிஞர் இவர்.

    குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம் போன்றவற்றுக்கு முற்றிலும் வேறுபட்ட மனிதநேயமும், பவித்திரமான படைப்பாற்றலும் தேவை. செவிக்கு இனிமையான பாடல்களில் குழந்தைகளின் இன்பமான ஈடுபாடு மிகவும் இயல்பானது. இயற்கையானது. இதமானது.

    கருப்பையில் குழந்தை இருக்கும்போதே தாயின் இதயத் துடிப்புடன் கூடிய தாளஓசையில் இது தொடங்குகிறது, உருவாகின்றது என்பது அறிஞரின் கருத்து. எழுத்து உருவாகுமுன்பு வழக்கில் இருந்த வாய்மொழிப் பாரம்பரியத்தில் அனைத்துமே கவிதை வடிவிலேயே இடம் பெற்றன. எனவே, குழந்தைகளின் உள்ளார்ந்த, உள்ளுணர்வு பாடலுடனும் தாளத்துடனும் ஆதிதொட்டே இருந்து வந்ததென்பதே பல ஆய்வாளரின் நம்பிக்கை.

    கவிதை என்பது மொழியின் காத்திரமான வடிவம் என்பது உலகளாவிய ஓர் உண்மை . கவிதை எமது அனுபவங்களை விரிவுபடுத்துகின்றது, எம்மையும் எமது வாழ்வின் தூலங்களையும் நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. மனதிற்கு மகிழ்ச்சியையும் இதமான உணர்வையும் அளிக்கிறது. எமது மனிதயிருப்பை மென்மேலும் சீர்செய்கின்றது. மனித உணர்வுகளைச் சுரண்டி எமது உலக அறிவுக்கு ஓர் புதுமையான ஒழுங்கை அளிக்கிறது.

    ஆகவே, கவிதை இல்லாத மொழி இந்த மனித உலகில் வாழமுடியாத ஒன்றாக ஆகிவிடுகின்றது. எனவேதான் 'எதற்காக கவிதை?' என்ற ஒரு ஆங்கிலக் கட்டுரையில் கேட் கெல்லாவே என்பார் கூறுவார். "அதி உன்னதமான கவிதை நின்று நிலைக்கின்றது. இது மணலில் பதித்த தடம் போன்றதல்ல, மாறாக மனிதத்தின் முழுமையை பூமியில் ஆழமாகப் பதித்துவிடுகின்றது.''

    இந்த நூற்றாண்டில் இயற்கையை பற்றியும், எமது பூமியின் சூழல் பாதுகாப்புப் பற்றியும் அதிகம் பேசுகிறோம், எழுதுகிறோம். இன்று பெரும்பாலான கவிஞர்கள் இந்தத் தலைப்புகள் பற்றி நிறையவே எழுதுவதுண்டு. ஆயினும், சிறுவர் இலக்கியத்தில் இதனைக் காண்பது அரிது. இக்குறையை இந்த நூலின் ஊடாக இவர் நிறைவு செய்கின்றார்.

    குழந்தைகள், சிறுவர்கள் முதன்முறையாக இந்த உலகைப் பார்த்து ஸ்பரிசிக்கும்போது மக்களும், மரங்களும், பறவைகளும், விலங்குகளும், பூக்களும், பூச்சிகளும் தங்களின் சொந்த உறவுகளாகவே உள்ளார்ந்த தன்மையில் தொடர்பாடல் செய்கின்றன. இதனை நன்கு உணர்ந்த நிலையில் இந்த நூலாசிரியர் இந்நூலில் இணைத்துள்ள புதிய பாக்களில், அம்மா, குடும்பம், சபாரி, புலி, எறும்பு, பறவைகள், நெல்லும் உமியும், வீடு, சின்னத்தம்பி போன்ற தலைப்புகளில் வரும் பாடல்களில் நாம் மேற்குறிப்பிட்ட சிந்தனைக் கூறுகள் இனிமையாய் இழையோடுவதைக் காணலாம்.

    துரிதமான சமூக ஊடக வளர்ச்சிகளின் ஆர்வமுடுகலினால் உந்தப்படும் இன்றைய உலகின் தொடர்பாடல் செந்நெறிகளை நன்கு உள்வாங்கி நெய்யப்பட்ட இவரது பாடல்கள் நீண்டகாலத்திற்கு நின்று நிலைக்கும் சக்தி படைத்தவை. செந்தமிழ்ப் புலவர் எனப் புகழப்பெற்ற எனது தந்தையாரிடம் இவர் பண்டித வகுப்பில் தமிழ் கற்றுத் தெளிந்தவர் என்பதில் யானும் பெருமை கொள்கின்றேன். இவரது கவிதாசக்தி வளர்பிறைபோல் என்றும் வளர்ந்து எமது இளம் சிறாரின் மனதில் தமிழ் ஒளி தரவேண்டும் என்பதே எமது அவா.

    - பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன்

    என்னுரை

    எனது அறுபது ஆண்டு கால ஆசிரியப் பணியில் மாணவர்களுடன் என் செயற்பாடுகள் சேர்ந்து செல்வதற்குப் பெரிதும் துணைபுரிந்தவை பாடல், நாடகம், பேச்சு, வில்லுப்பாட்டு, கவிதைநாடகம் என்றால் மிகையாகாது. அதனால் அவ்வப்போது சூழலுக்கேற்றபடி பல ஆக்கங்களைச் செய்யவேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. அப்படி உருவானவைதான் சிறுவருக்கான எனது படைப்புகளுக்கான கால்கோளாகவும் அமைந்தன.

    இத்திறன்களை என்னிடம் வளர்த்துவிட்ட பண்டித வகுப்பு ஆசிரியர்களாக இருந்த செவாலியர் அமுது அடைக்கலமுத்து அவர்களும், வித்துவான் பொன். கந்தசாமி அவர்களும், பண்டிதர் இராமலிங்கம் அவர்களும் என் நினைவில் நிற்பவர்கள்.

    மாணவர் தேவைக்கு வேண்டியவாறு ஒளியிழைகளாகவும், சிறுவர் பாடல்களாகவும் ஆக்கம் பெற்ற எனது படைப்புகள் அனைத்தையும் 'பாடி ஆடு பாப்பா' என்னும் பெயரில் ஒரு வெளியீடாக இங்கு உங்கள் முன் வைத்துள்ளேன். இதில் தமிழ்மலர் பாடல்கள், பாடியாடு பாப்பா, ஆடலும் பாடலும், தங்கக்கலசம், பாச்செண்டு என்ற பெயர்களுடன் முன்பு வெளிவந்த சிறுவர் பாடல்களையும், வெளிவராத புதிய பாடல்களையும் உள்ளடக்கியதாக இப் ‘பாடி ஆடு பாப்பா' தொடுக்கப்பட்டுள்ளது.

    இச்சிறுவர் பாடலின் முதற்பகுதியாக அமைந்த 'பாப்பாப் பா' என்ற பகுதி புதிய பாடல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இங்கே

    Enjoying the preview?
    Page 1 of 1