Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vakkiniley Inimai Vendum
Vakkiniley Inimai Vendum
Vakkiniley Inimai Vendum
Ebook123 pages42 minutes

Vakkiniley Inimai Vendum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாக்கினிலே இனிமை வேண்டும். வரமாகக் கேட்கிறான் பாரதி.

வாக்கில் ஏன் இனிமை வேண்டும்? அந்த இனிமை நெஞ்சில் இறங்கும். இனிய நினைவுகளாய், இனிய குணங்களாய் நிறைந்துபோகும். மேலும் வாக்காய், செயல்களாய் இனிமை பரப்பிக்கொண்டே இருக்கும். முதலிரு கதைகள் நட்பினால் எதையும் சாதிக்கலாம் என்று காட்டுகின்றன. பேசாத குழந்தையும் பயந்த சிறுவனும் கவலை தருபவர்களாகத் தொடங்கிக் கதாநாயகர்களாக உயருகிறார்கள்.

குரு பக்தி, வழிகாட்டி என்ற அடுத்த இரண்டு கதைகளை எழுதிய எழுத்தாளர், குருவின் ஆசிகளுடன், ஆர்வமும், உழைப்பும் தோல்வியை வெற்றியாக எப்படி மாற்றும் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இக்கதைகள் பேசுவது ஏதோ மாய உலகைப் பற்றியல்ல. இங்கே நாம் வாழும் சூழலையே படம்பிடித்து, இதனை மேம்படுத்த வழிகாட்டுகின்றன. அதனை மிக இனிமையாகச் செய்கின்றன.

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580168010372
Vakkiniley Inimai Vendum

Read more from Uma Aparna

Related to Vakkiniley Inimai Vendum

Related ebooks

Reviews for Vakkiniley Inimai Vendum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vakkiniley Inimai Vendum - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வாக்கினிலே இனிமை வேண்டும்

    Vakkiniley Inimai Vendum

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    அணிந்துரை

    1. பார்கவ் பேசிட்டான்

    2. பாதகம் செய்பவரைக் கண்டால்

    3. குரு பக்தி

    4. வழிகாட்டி

    5. மானம் காத்தவள்

    6. வேக்கப் செட்

    7. சிகரம் தொட்ட ஐவர்

    8. சீதா பாட்டி

    9. எல்லோருக்கும் கல்வி

    10. தோழமையும் வெற்றியும்

    11. ஒரு மரத்தின் ஆதங்கம்

    12. ஒற்றுமையாக இருந்தால்

    13. தூண்டுகோல்

    14. மனந்திருந்திய மருமகள்

    அணிந்துரை

    வாக்கினிலே இனிமை வேண்டும்.

    வரமாகக் கேட்கிறான் பாரதி.

    இச்சிறுகதைத் தொகுப்பின் எழுத்தாளர்களுக்கோ, அதைக் கேட்க வேண்டிய அவசியம் இன்றி இயல்பாகவே இனிமை எழுத்தில் அமைந்திருக்கிறது.

    வாக்கில் ஏன் இனிமை வேண்டும்? அந்த இனிமை நெஞ்சில் இறங்கும். இனிய நினைவுகளாய், இனிய குணங்களாய் நிறைந்துபோகும். மேலும் வாக்காய், செயல்களாய் இனிமை பரப்பிக்கொண்டே இருக்கும். This feel-good is a virtuous circle, and thus we enter into a progressive and continuous Goodness loop!

    முதலிரு கதைகள் நட்பினால் எதையும் சாதிக்கலாம் என்று காட்டுகின்றன. பேசாத குழந்தையும் பயந்த சிறுவனும் கவலை தருபவர்களாகத் தொடங்கிக் கதாநாயகர்களாக உயருகிறார்கள்.

    குரு பக்தி, வழிகாட்டி என்ற அடுத்த இரண்டு கதைகளை எழுதிய எழுத்தாளர், குருவின் ஆசிகளுடன், ஆர்வமும், உழைப்பும் தோல்வியை வெற்றியாக எப்படி மாற்றும் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    அடுத்த எழுத்தாளர், அன்னையின் வழிகாட்டுதலால் உயர்ந்த மகள், அரும்புப் பருவத்திலேயே மலர்ந்த நட்பினைக் கொண்ட மகள் என்று இரு மகள்களை நமக்கு அறிமுகம் செய்கிறார்.

    ஏழாம், எட்டாம் கதைகளோ, ஆறறிவுக்கும் மேலான ஏழாம் அறிவைத் தொட்டு, விஞ்ஞானம் பேசாத வியனறிவைப் பேசுகின்றன. அறிவும் பணமும் தராத வாழ்க்கை முன்னேற்றம் உண்டு, அதை நாம் மறந்துவிட்டோம் என்று சுட்டுகின்றன. இவைகளில் ஒன்று எதிர்காலத்தில் அமைந்திருப்பது வருமுன் காக்க நம்மை எச்சரிக்கின்றது.

    எல்லோருக்கும் கல்வி, தோழமையும் வெற்றியும் ஆகிய கதைகளின் கருத்து, தலைப்பிலேயே தெரிகிறது. அருமையான சம்பவங்களை அறிய, கதையை நிச்சயம் படிக்க வேண்டும்.

    பதினொன்று, பனிரெண்டாம் கதைகள் இயற்கையைப் பாதுகாத்தல் என்ற மிகமுக்கியமான கருத்தைப் பேசுகின்றன.

    கடைசி இரு கதைகள் குடும்ப ஒற்றுமையை, மிகமுக்கியமாக, வீட்டுக்கு வந்த மருமகள் குடும்பத்தோடு ஒத்துப்போக வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

    இக்கதைகள் பேசுவது ஏதோ மாய உலகைப் பற்றியல்ல. இங்கே நாம் வாழும் சூழலையே படம்பிடித்து, இதனை மேம்படுத்த வழிகாட்டுகின்றன. அதனை மிக இனிமையாகச் செய்கின்றன.

    இனிமைக்கும் உங்களுக்கும் இடையில் நான் பாலமேயன்றி, வேலியாக நிற்கக்கூடாது! எழுத்தாளர்களுக்கு என்னுடன் சேர்ந்து நீங்களும் வாழ்த்துத் தெரிவித்து, கதைகளுக்குள் உங்கள் இனிய பயணத்தைத் தொடருங்கள்.

    சாய்ரேணு சங்கர்

    எழுத்தாளர்

    (9840228084 sairenu@dharmapriya.org)

    வாக்கினிலே இனிமை வேண்டும் என்கிற இந்தச் சிறார் சிறுகதைத் தொகுப்பானது, ஏழு பெண் எழுத்தாளர்களின் சிறந்த முயற்சியால் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் எழுத்தாளரும் இரண்டு கதைகளைப் படைத்துள்ளனர். சிறார்களுக்குச் சொல்லப்படும் அறநெறிக் கதைகள் அவர்களைப் பண்படுத்தி உயர்வடையச் செய்யும். இந்த எழுத்தாளர்கள் எழுவரும் மிகச்சிறப்பான கதைகளைத் தந்துள்ளனர். இவற்றில் கற்பனை வளத்தையும் காணலாம், அறிவியல் செய்திகளையும் அறியலாம், தற்காலக் குடும்ப நிலைகளையும் உணரலாம். இந்த நூலினைப் பார்க்கும்போது, கதை ஆசிரியர்கள் அனைவருமே குழந்தைகளுக்கு அறநெறியைக் கற்பித்து உயர்வடையச் செய்ய வேண்டும் என்னும் தங்கள் நோக்கத்தில் வெற்றிபெற்றுள்ளதை அறியமுடிகிறது. இந்தச் சிறப்பான கதைகளைத் தமிழகத்தின் இளைய தலைமுறை மாணவர்கள் அனைவரும் கற்று, அவற்றில் சொல்லப்பட்டுள்ள அறநெறிகளை உணர்ந்து கடைப்பிடித்து வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதும் இந்தக் கதைகள் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட வேண்டும் என்பதும் எனது பேரவா. இன்றைய இளைய தலைமுறை, பள்ளிப்பாடங்களுக்கு அப்பாற்பட்ட எவற்றையும் கற்காத சூழ்நிலை நிலவுகின்றது. இப்படிப்பட்ட நேரத்திலும் தன்னம்பிக்கையோடு இந்த எழுத்தாளர்கள் அருமையான படைப்புகளைத் தந்துள்ளனர். தமிழ் கூறும் நல்லுலகத்துப் பெற்றோர்கள் அனைவரும் இந்த நூல் படிகளை வாங்கித் தங்கள் குழந்தைகளைக் கற்கச் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட நல்ல நூல்களைக் கற்பதன் வாயிலாக எதிர்காலத் தமிழகம் உயர்ந்த நிலையை அடையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சிறந்த படைப்புகளைத் தந்த எழுத்தாளர்கள் அனைவரையும் பாராட்டுவதுடன் அவர்கள் இப்படிப்பட்ட படைப்புகளைத் தொடர்ந்து வருங்காலத்தில் தந்து தமிழில் இலக்கிய வளத்தைப் பெருக்கிட வேண்டுகிறேன்.

    அன்புடன்

    இரா. வேணுகோபாலகிருஷ்ணன்,

    மேனாள் உதவி ஆசிரியர்,

    கோவை.

    ஆசிரியர் குறிப்பு

    சுபஶ்ரீ ரவிச்சந்திரன்

    சுபஶ்ரீ ரவிச்சந்திரன், முப்பது வருடங்களுக்குமேல் பள்ளி ஆசிரியையாகவும் பத்து வருடங்கள் முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றபின் தமிழில் எழுத ஆரம்பித்தவர். இவருடைய எழுத்து நடை தனித்தன்மை வாய்ந்தது. மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஈடுபாடுஉடையவர். அகல் என்ற அமைப்பின் மூலம் பார்வையற்றோருக்கு உதவி வருகிறார். படிப்பதிலும் தோட்டக்கலையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். சென்னையைச் சேர்ந்த இவர் தற்சமயம் வசிப்பது கனடாவின் டொராண்டோ நகரத்தில்.

    1. பார்கவ் பேசிட்டான்

    ஐந்து வருடங்கள் தவமிருந்து பெற்ற குழந்தை பார்கவ். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லாரும் தாங்குதாங்கென்று தாங்கி, அவன் ஒரு தும்மல் தும்மினால்கூடப் பொறுக்கமாட்டார்கள். மாதக் கணக்காக தரையில் கால்பட விடாமல் தூக்கிக்கொண்டே இருந்து, குழந்தை அதற்கு மேல் தூக்கினாலே திமிறிக்கொண்டு அழ ஆரம்பித்ததும்தான் கீழே இறக்கிவிட்டார்கள். கண்ணின் மணியாய் வளர்ப்பதாக, எந்தக் குழந்தையிடம் இருந்தும் வேண்டாத எதையும் கற்றுக்கொள்ளக் கூடாது என்று எந்தக் குழந்தையுடனும் பழகவிடவில்லை.

    அவனுடைய சின்னச் சின்ன அசைவுகளை, மைல்கற்களைப் பார்த்து ரசித்தவர்கள், அவன் ஒரு வயதாகியும் பேச சிறிதும் முயற்சி செய்யாதபோது கொஞ்சம் கவலை எட்டிப் பார்த்தது. அதுவும் அதே வயதுள்ள பக்கத்துவீட்டு நவீன் குட்டி தேங்காய் உடைத்தது மாதிரி பளிச் பளிச்சென்று பேச, பார்கவ் அம்மா அப்பா என்று கூட சொல்ல முயலவில்லை என்ற போதுதான் பயம் தலை

    Enjoying the preview?
    Page 1 of 1