Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nalam Nalamariya Aaval
Nalam Nalamariya Aaval
Nalam Nalamariya Aaval
Ebook101 pages35 minutes

Nalam Nalamariya Aaval

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடிதம் என்பது ஒருவர் மற்றவருக்கு தன் உள்ளத்தில் உள்ளதை எழுத்துருவில் தெரிவிக்கும் ஒரு ஊடகம். எழுத்துரு உருவாகும் முன்னரே தங்கள் எண்ணங்களை ஓவியமாக குகைகளில் வரைந்து மற்றவர்களுக்கு தெரிவித்தனர். அதுவும் கடிதத்தின் ஒரு வடிவம் தான்.

புறா தபால்காரராக பணி செய்தது. அதன் காலில் ஓலைச்சுவடிகளை கட்டி தகவல் அனுப்பினர்.

இன்றைய காலகட்டத்தில் ‘இ மெயில், வாட்ஸ் அப்பில்’ தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. டிஜிட்டல் உலகின் வரப்பிரசாதம். ஆனால், அந்த காலத்தில் ‘போஸ்ட் கார்ட்’ இன்லேன்ட் லெட்டரில் எழுதி அனுப்பும் போதும் சரி அதை படிக்கும் போதும் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது. அவை உயிரூட்டம் உள்ள காவியம். சிகப்பு நிற தபால் பெட்டி இன்று காட்சி பொருளாகிவிட்டது.

‘நலம் நலமறிய ஆவல்’ என்ற இந்த புத்தகத்தின் எழுத்தாளர்கள் எண்மர் கடிதத்தின் வடிவமைப்பு, தன்மை மாறாமல் உறவினர்களுக்கு மட்டும் அல்லாமல் தங்கள் வாழ்வில் பிண்ணி பிணைந்த உயிரற்ற பொருட்களுக்கும் கடிதம் எழுதி தங்கள் நன்றியை தெரிவித்து உள்ளனர். அடுத்த தலைமுறையினருக்கு அஞ்சல் பயன்பாட்டை கொண்டு செல்கின்றனர். ஒரு கடிதம் தபால் பெட்டிக்கே எழுதி உள்ளார் ஒரு எழுத்தாளர்.

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580168010676
Nalam Nalamariya Aaval

Read more from Uma Aparna

Related to Nalam Nalamariya Aaval

Related ebooks

Reviews for Nalam Nalamariya Aaval

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nalam Nalamariya Aaval - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நலம் நலமறிய ஆவல்

    Nalam Nalamariya Aaval

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அன்புள்ள வாசகர்களே

    1. அக்‌ஷூவும் பின்னே நூடுஸ்ஸும்

    2. வசந்தியும் ரோவரும்

    3. நலம் நலமறிய ஆவல்

    4. தபால் பெட்டி

    5. நீயே என் முகவரியானாய்...

    6. நானின்றி நீயில்லை

    7. நேர்மை

    8. மனம் ஒரு குரங்கு

    9. அம்மாவின் கடிதம்

    10. மை டியர் மைசெல்ஃப்

    11. அன்பான டிரைவர் அண்ணாவிற்கு

    12. நான் யார் தெரிகிறதா?

    13. எந்தையும் தாயும்

    14. அன்னிய தேசம்

    15. ஆசையில் ஓர் கடிதம்

    16. இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!!

    17. என் அருமை கூந்தலே!

    18. அன்புள்ள மாமரத்திற்கு

    அணிந்துரை

    கடிதம் என்பது ஒருவர் மற்றவருக்கு தன் உள்ளத்தில் உள்ளதை எழுத்துருவில் தெரிவிக்கும் ஒரு ஊடகம்.

    எழுத்துரு உருவாகும் முன்னரே தங்கள் எண்ணங்களை ஓவியமாக குகைகளில் வரைந்து மற்றவர்களுக்கு தெரிவித்தனர். அதுவும் கடிதத்தின் ஒரு வடிவம் தான்.

    புறா தபால்காரராக பணி செய்தது. அதன் காலில் ஓலைச்சுவடிகளை கட்டி தகவல் அனுப்பினர்.

    இன்றைய காலகட்டத்தில் ‘இ மெயில், வாட்ஸ் அப்பில்’ தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. டிஜிட்டல் உலகின் வரப்பிரசாதம்.

    ஆனால், அந்த காலத்தில் ‘போஸ்ட் கார்ட்’ இன்லேன்ட் லெட்டரில் எழுதி அனுப்பும் போதும் சரி அதை படிக்கும் போதும் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது. அவை உயிரூட்டம் உள்ள காவியம். சிகப்பு நிற தபால் பெட்டி இன்று காட்சி பொருளாகிவிட்டது.

    ‘நலம் நலமறிய ஆவல்’ என்ற இந்த புத்தகத்தின் எழுத்தாளர்கள் எண்மர் கடிதத்தின் வடிவமைப்பு, தன்மை மாறாமல் உறவினர்களுக்கு மட்டும் அல்லாமல் தங்கள் வாழ்வில் பிண்ணி பிணைந்த உயிரற்ற பொருட்களுக்கும் கடிதம் எழுதி தங்கள் நன்றியை தெரிவித்து உள்ளனர். அடுத்த தலைமுறையினருக்கு அஞ்சல் பயன்பாட்டை கொண்டு செல்கின்றனர். ஒரு கடிதம் தபால் பெட்டிக்கே எழுதி உள்ளார் ஒரு எழுத்தாளர்.

    எழுத்தாளர்கள், வசந்தி ஜனார்த்தனன், உஷா மாரியப்பன், சுப ஶ்ரீ ரவிச்சந்திரன், மேல் மங்கலம் சியாமளா, காயத்ரி முரளீதரன், மாதங்கி சுரேஷ், வி. பிரபாவதி, பார்வதி நாகமணி, சரோஜா நாராயணன் ஆகிய எழுத்தாளர்கள் அருமையாக தங்கள் எண்ணங்களை வண்ணமாக்கி அழகிய புத்தக வடிவில் பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தினரால் அச்சிடப்பட்டு வெளிவரவுள்ள இந்த புத்தகம் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.

    ருக்மணி வெங்கட்ராமன்

    எழுத்தாளர்

    அன்புள்ள வாசகர்களே

    நலம். நலமறிய ஆவல்.

    இள வயதில் உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்த ஒரு விஷயம், தொழில்நுட்ப வளர்ச்சி என்கிற கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போய், இப்போது திடீரென உங்கள் கையில் பொக்கிஷமாக மீண்டும் கிடைத்தால், அதைத் திறந்து பார்க்கையில் கிளர்ந்து எழுந்து மேலே வரக்கூடிய உணர்வுகள் எப்படி இருக்கும்? அத்தகைய ஒரு அனுபவத்தை வழங்கும் பொக்கிஷமாக இந்த நூல் வந்திருக்கிறது.

    இருபதுகளில் இருக்கும் இளம் பெண் முதல் எழுபதுகளில் இருக்கும் பேரிளம் பெண் முதலான ஒன்பது சக்திகள் தங்கள் மனக்கிடக்கைகளை கற்பனைத் திறத்துடன் மிக அருமையாக கடிதங்களின் வழியே எழுதி இருக்கிறார்கள். இப்புத்தகத்தில் இருக்கும் கடிதங்களை இரு வகைகளாகப் பார்க்கலாம். தமது சொந்தங்கள், நட்புகள், தெரிந்தவர்கள் முதலானவருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் ஒரு வகை. ஆனால் எதிர்பார்க்காத விதமாக நம்முடனே இருக்கும் பொருட்களுக்கும் அல்லது பொருட்கள் நமக்கு எழுதுவது போலும் எழுதப்பட்டிருக்கும் கடிதங்கள் மற்றொரு வகை. சில கடிதங்கள் அருமையான சிறுகதைகளாக மிளிர்கின்றன.

    திருமதி வசந்தி ஜனார்த்தனன் வெளிநாட்டில் இருக்கும் தனது பேத்திக்கு எழுதியிருக்கும் உணர்ச்சிக் குவியலான கடிதம் அவளுடன் செலவிட்ட நேரத்தின் ஆனந்தத்தை, அவளது திறமைகளின் மேல் உள்ள பெருமிதத்தை எல்லாம் விவரித்துக் கொண்டே வந்து இறுதியில் முடித்திருக்கும் விதம் நம்மை சற்று கலங்கச் செய்து விடுகிறது. இதுதான் ஒரு கடிதத்தின் சிறப்பே. அவரது அடுத்த கடிதம் உங்களை புன்னகையுடன் விண்வெளியில் பறக்க வைத்து விடுகிறது.

    திருமதி உஷா மாரியப்பனின் கடிதம் மனிதநேயத்தைப் பேசுகிறது. சாக்கடைகளில் அடைப்பு எடுக்கும் தொழிலாளிக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதம் பெரும்பாலானோர் சொல்ல மறந்து விடுகிற நன்றியைச் சொல்கிறது. கூடிய சீக்கிரம் மறைந்து விடக்கூடிய அபாயத்தில் இருக்கிற தபால் பெட்டிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எழுதப்பட்டிருக்கிற அவரது அடுத்த கடிதம் கடந்த காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

    திருமதி சுபஸ்ரீ ரவிச்சந்திரன் தான் ஆசிரியையாக பள்ளியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெற்ற நாள் வரை தனக்கும் அந்தப் பள்ளிக்கும் இடையே இருக்கிற பிணைப்பை அந்தப் பள்ளிக்கே ஒரு கடிதமாக எழுதியிருக்கிறார். ஒரு சுயசரிதை போன்று எழுதப்பட்டிருக்கும் இந்த கடிதத்தை அந்த பள்ளிக்கட்டிடம் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அவரின் அடுத்த கடிதம் சமூகப் பொறுப்பைப் பேசுகிறது.

    மேல்மங்கலம் வி சியாமளா அவர்களின் இரண்டு கடிதங்களும் வாழ்க்கைப் பாடமாக, தம் தவறை உணர்ந்து மன்னிப்புடன் பிராயச்சித்தத்தையும்

    Enjoying the preview?
    Page 1 of 1