Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbulla
Anbulla
Anbulla
Ebook106 pages36 minutes

Anbulla

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகதபால்தினம்

பண்டையக் காலங்களில் இருந்தே மக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு முயற்சியே கடிதமாகும். தொலைபேசி இ-மெயில் போன்றவை நவீன காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டாலும் தகவல் பரிமாற்ற வீச்சை அதிகரிப்பது கடிதம் என்றே கூறலாம்.

நட்புகளுடன் வட்டார வழக்குப் பேச்சில் எழுதப்படும் கடிதங்கள் உயிர் பெற்றவைகளே. உறவுகளுக்கு நலம் விசாரிப்புகளுடன் விரியும் கடிதங்கள் அன்பினைக் காலதேசங்கள் தாண்டிக் கொண்டு சென்றவையே. கடிதக் காகிதத்தில் எந்த இடத்தையும் வீணாக்காமல் அவர்கள் கொடுத்த வரைமுறையை மீறாமல் கோடு போடாமலேயே எழுத்துக்கள் நேராகக் கோடு போல் அமைவது என்பதெல்லாம் ஒரு கலையே.

கருவிகள் அழியலாம். கலையும் உணர்வும் அழியலாமா? அன்பும் அறிவும் எப்போதும் பரிமாறப்பட வேண்டியவை அன்றோ? எனவேதான் இச்சிறு முயற்சி. எழுத்தாளர்களின் அன்பும், கருத்துகளும், அறச்சீற்றங்களும் கடிதங்களாக இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. சக்தி உருவாவதுமில்லை, அழிவதுமில்லை. உருவம் மாறுகிறது, அவ்வளவே.

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580168010670
Anbulla

Read more from Uma Aparna

Related to Anbulla

Related ebooks

Reviews for Anbulla

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbulla - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அன்புள்ள

    Anbulla

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    1. பாஞ்சாலிக்கு ஒரு கடிதம்

    2. அம்மாவிற்கு மகளின் கடிதம்

    3. ஒரு சிறைப் பறவையின் கடிதம்

    4. பெற்றோருக்கு ஒரு கடிதம்

    5. நட்புக்கு ஒரு கடிதம்

    6. கண்ணனுக்கு ஒரு கடிதம்

    7. நட்புடன் ஒரு கடிதம்

    8. பேரனுக்கு ஒரு கடிதம்

    9. தோழிக்கு ஒரு கடிதம் - 1

    10. தோழிக்கு ஒரு கடிதம் - 2

    11. ஆசிரியருக்கு ஒரு கடிதம்

    12. கேரம்போர்டுக்கு ஒரு கடிதம்

    13. அம்மாவுக்கு ஒரு கடிதம்

    14. ராமருக்கு ஒரு கடிதம்

    15. தோழிக்கு ஒரு கடிதம் - 3

    16. பாட்டிக்கு ஒரு கடிதம்

    17. டீச்சருக்கு ஒரு கடிதம்

    ஜெயந்தி நாகராஜன்
    ஆசிரியர் குறிப்பு:

    எழுத்தாளர் ஜெயந்தி நாகராஜன் எழுபதிற்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், கதைகள், நாடகங்கள், வாழ்க்கை வரலாறுகள் எழுதியுள்ளார்.

    இவரது பாடலான அம்மா தந்த பொம்மை முதல் வகுப்பில் இடம் பெற்றுள்ளது. பிரபல பத்திரிகைகளில் தனது சிறந்த பங்களிப்பைத் தந்துள்ளார். எழுத்திற்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். முத்துச்சரம் மூலம் சிறுவர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இலக்கிய மாணவர்கள் இவரது நூல்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவர் இந்நூலில் தனது இரண்டு கடிதக் கதைகளை அளித்துள்ளார். சிறந்த எழுத்தாளுமை மிக்கவர்.

    1. பாஞ்சாலிக்கு ஒரு கடிதம்

    அன்பு பாஞ்சாலி அம்மாவிற்கு,

    உன் அன்பு மகள் ஜெயா எழுதுவது.

    என்னிடம் இருந்து இப்படி ஒரு கடிதத்தை நீ எதிர்பார்த்திருக்க மாட்டாய். முன்பின் பார்த்திராத என்னிடம் இருந்து உனக்குக் கடிதமா?

    ஆச்சர்யம் உனக்கு மட்டுமில்லை தாயே! எனக்கும்தான். என்னவோ இன்று உனக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என என் உள்மனம் சொன்னது.

    எத்தனையோ யுகங்களுக்கு முன்பு நீ தோன்றினாலும் இன்றும் மக்கள் மனதில் வீற்றிருக்கும் அரசியே! என் மனம் தொட்ட மாதரசியே! உனக்கு என் வந்தனம்.

    அன்று வானைத் தொட்டது வேள்வித் தீ!

    அத்தீயில் உதித்தாள் பெண்ணொருத்தி!

    அவளது பெயர் யாக்ஞசேனி!

    யாகத்தில் உதித்ததால் அப்பெயரோ!

    வேள்வித் தீயில் தோன்றியதாலோ என்னவோ

    உன் வாழ்வே ஒரு கேள்விக் குறியானதோ!

    உனக்குத் தான் எத்தனை பெயர்கள் தாயே!

    துருபதன் மகள் நீ அதனால் த்ரெளபதி.

    பாஞ்சால நாட்டு இளவரசி. எனவே பாஞ்சாலி.

    கரிய நிறத்தவள் அதனால் க்ருஷ்ணை.

    ஆனால் நீ பட்ட பாடு... அம்மம்மா! அதைச் சொல்லில் வடிக்க என்னால் ஆகாதம்மா!

    நீ பிறந்த போது உன் தந்தையே உன்னை ஆதரிக்கவில்லையாமே!

    அன்று நீ என்ன துடித்திருப்பாய் தாயே! உனக்கு அவர் சாபம் கூடத் தந்தாராமே!

    பின்னர் அவர் மனம் மாறியது. உனக்கு சுயம்வரம் வைக்க ஏற்பாடுகள் நடந்தன.

    உன் மனதில் அர்ச்சுனன். ஆனால் போட்டியில் அவன் வெல்வானா என்பதை எண்ணி உன் மனம் கலங்கியது.

    அந்த நிகழ்வில்தான் உனக்கு எத்தனை எத்தனை இடர்கள்?

    ஆனால் தாயே! உன் வாழ்வு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது.

    கண்ணனனோ பாரதப் போரில் ஆயுதம் எடுத்துப் போரிட மாட்டேன் என உறுதி எடுத்தபோதிலும் அவனும் ஓர் ஆயுதத்தைக் கையிலேந்தினான்.

    இது என்ன புதுக்கதை? கண்ணன் எடுத்துக்கொண்ட ஒரே ஆயுதமே நீதானே!

    அதன்படியே ஆட்டத்தில் காய்கள் நகர்ந்தன. விழுந்தன. வெட்டப்பட்டன.

    இதற்கு என்ன சான்று? சுயம்வரத்தில் கர்ணன் வில்லை வளைக்க எழுந்தபோது துணிவுடன் அவனை எதிர்த்து இப்போட்டியில் பங்கேற்பதைத் தடை செய்தாய்.

    அன்றே பாரதப் போருக்குப் பிள்ளையார் சுழியை உன் மூலம் கண்ணன் போட்டுவிட்டான்.

    அந்தணர் வேடம் தாங்கி வந்த அர்ச்சுனன் உனக்கு மாலையிட்டான். அதைப் பின்னரே நீ அறிந்தாய். காதலித்தவனே கணவன் ஆனான் என அகமகிழ்ந்தாய். ஆனால் அம்மகிழ்ச்சிக்கு ஆயுள் அதிகம் இல்லை என்பதை நீ அறியவில்லையே தாயே!

    கணவரின் கரம் பற்றி உன் புக்ககம் நுழைந்தாய். வாசலில் கோலம் உன்னை வரவேற்கவில்லை தாயே!

    உன் மாமி குந்தியின் வாய்ச் சொல் வழி விதி உன்னை சிரித்தபடி வரவேற்கக் காத்திருந்தது. அது காலமெல்லாம் நீ கண்ணீர் வடிக்கக் காரணமானது.

    அந்த ஒற்றைச் சொல் உன் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டதே! அது கேட்டு நீ எவ்வளவு துடித்திருப்பாய் தாயே!

    என் அருகில் வாயேன்! உன் கண்ணீரைத் துடைக்கிறேன்.

    தாய் சொல்லே வேதம் என ஏற்ற பாண்டவர்கள் ஐவருக்கும் நீ தாரமானாய். அந்தோ! தரங்கெட்டவள் என்ற பெயரை நீ பெற அந்நிகழ்வே காரணமானதே!

    நீ ஐவரின் மனைவியானதற்கு காரணங்கள் பல சொன்னாலும் அதனால் நீ பட்ட ரணங்கள்... அப்பப்பா! காது கொண்டு கேட்க முடியாதவை.

    ஓர் ஆண் பல தாரங்களை மணம் செய்வதை ஆதரித்த சமூகம் ‘ஒரு பெண்ணுக்கு ஐந்து கணவர்களா?’ என ஏசியது. உனக்கு வேசிப் பட்டமும் சூட்டியது.

    ஆனால் தாயே! உன் நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது.

    தாயே! இன்றைய காலத்தில் இந்த நிகழ்வு நடந்திருந்தால் அப்பெண்ணுக்கு இத்தனை மன உளைச்சல் இருந்திருக்காது. நீதி மன்றமும்

    Enjoying the preview?
    Page 1 of 1