Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannadi
Kannadi
Kannadi
Ebook110 pages39 minutes

Kannadi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த சமுதாயத்தில் நான் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பு கண்ணாடி. உங்களுக்காக நான் கண்ணாடியை மட்டுமே வழங்க முடியும், பார்வை உங்களுடையது. சமூகத்தின் கரித்துணிகளாக உழலும் மனிதர்கள் குறித்து எழுதியிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateNov 18, 2023
ISBN6580168010277
Kannadi

Read more from Uma Aparna

Related to Kannadi

Related ebooks

Reviews for Kannadi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannadi - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண்ணாடி

    (சிறுகதைகள்)

    Kannadi

    (Sirukadhaigal)

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    வாழ்த்துரைகள்

    இது அம்மாவின் கதை

    வாழ்த்துகள்!

    இதயத்தால் பார்ப்போம்

    அர்த்தநாரீஸ்வரர்

    இருக்கு... ஆனா... இல்லை

    கல்வித் தெய்வம்

    கனியிடை ஏறிய சுவையும்

    கேட்டை தொட்டா பயம்

    கையில் மிதக்கும் கனவா நீ?

    சாலையோர மரத்தடியில்

    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா!

    சென்றது இனி மீளும்

    சேமியா இட்லி

    புதைகுழி

    புஷ்பக விமானம்

    மோதி மிதித்துவிடு பாப்பா

    யாதுமாகி நின்றாள்...

    அஃறிணையின் அரசி

    இந்த சமுதாயத்தில் நான் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பு கண்ணாடி. உங்களுக்காக நான் கண்ணாடியை மட்டுமே வழங்க முடியும், பார்வை உங்களுடையது.

    வாழ்த்துரைகள்

    இதோ... உமா என்னும் நம்பிக்கை நட்சத்திரம்!!

    கண்ணாடி – சரியான தலைப்பு.

    நூல் பற்றிய அறிமுக வரிகளிலேயே இழுத்து உள்ளே போட்டுவிட்டார்.

    இவருக்கு எல்லா ஜானர்களும் எழுத வருகிறது. பேய், நகைச்சுவை, சீரியஸ் சமூக நோக்கு, காதல், சிறுவர் உளவியல், பக்தி... எனச் சகலமும்!!

    உமா அபர்ணா சிறந்த சாப்பாட்டு ரசிகை என்பது அவ்வப்போது வெளிப்படுகிறது. பசியைத் தூண்டும் வரிகள் உண்டு.

    அர்த்தநாரீஸ்வரர் கதையில்,

    //குறுகிய வட்டத்தையும் மீறிய பாலினமே எனது விழைவு//

    வரியை ரசித்தேன். எதிர்பாராத முடிவு தந்திருப்பதைப் பாராட்டலாம்.

    இருக்கு... ஆனா... இல்லை கதையில்,

    //எதையோ யோசித்துக்கொண்டே இருப்பது போன்ற முகம்.//

    கடைத்தெருவைக்கூட நன்றாய் வர்ணித்திருக்கிறார்.

    //சூரியன் தன் பொறுப்பை சந்திரனிடம் தந்து விட்டு//

    சூப்பர் வரி. டக் டக்கென்று திருப்பங்கள். நன்றாய் முடித்திருக்கிறார்.

    கல்விதெய்வம் கதையில்,

    //அவெஞ்சர்ஸ் போட்ட ஸ்கூல் பேக்கை மாட்டியிருந்த சிறுமி// நுணுக்கமான விவரம் இவரது பிளஸ் பாயின்ட்.

    இக்கதையில் காந்திமதி, சண்முகம், முருகன், பொன்னி, செல்வம், வாணி ஆகியோர் கடைசியில் என்ன ஆனார்கள் என்பது மனதை நிறைக்கும் முடிவு.

    கனியிடை ஏறிய சுவையும் என்ற டிபிகல் நகைச்சுவைக் கதையில்,

    //பேரம் பற்றி பேசும் போது என் பாட்டி ஞாபகம் வரும்// ஏன் என்பதற்குச் சுவையான விளக்கம்.

    அது வியாபாரம், இது விருந்தோம்பல்

    பிரமாதம்.

    //ஒரு ஸ்பூன் சாப்பிட்டவர், இதோ வரேன்னு போய் இரண்டு நாளைக்கு வீட்டுப் பக்கம் வரல.//

    ஹா ஹா வரி.

    பப்பாளி கதை... வெரி என்ஜாயபிள்.

    கேட்டைத் தொட்டா பயம் கதை என்பதைவிடச் சிறிய விளக்கம் எனலாம். இப்போது வாசிக்கும்போது சாதாரணக்கதை மாதிரித் தோன்றக்கூடும். கொரோனா காலத்தில் காவியம்.

    கையில் மிதக்கும் கனவா நீ? கதையில்,

    //சுடச்சுடப் பொன்நிறத்தில் தகதகவென நெய்யில் மின்னும் கோதுமை அல்வா//

    நாவில் நீர் ஊற வைக்கிற விளக்கம்.

    சாலையோர மரத்தடியில் கதையில்,

    //வேற்றுக் கிரகவாசிக்கும், பூமியில் உள்ள ஒரு பெண்மணிக்கும் கதிர்வீச்சின் மூலம் பிறந்தவன். எனது பெயர் ஞோஜு//

    அருமையான, வித்தியாசமான கற்பனை. (எப்படி இந்தப் பெயரை யோசித்தீர்கள் உமா?)

    மன நிறைவளிக்கும் முடிவைக் கதைக்குக் கொடுத்திருக்கிறார் உமா அபர்ணா.

    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! கதையில்,

    //பட்டாம்பூச்சி மாதிரி இளம் பெண்கள், உற்சாகமான இளைஞர்கள், எக்கச்சக்க லக்கேஜுடன் மெஜஸ்டிக் ரயில் நிலையம் போக ஏறும் பயணிகள், நடுத்தர வயது பெண்கள், பார்க்கவே நன்றாக இருக்கும்.//

    சூழல் வர்ணனை அபாரம்.

    //பயணங்கள் தான் நம்மை புதுப்பிக்கும்.//

    - நான் ரசித்த வரி.

    சென்றது இனி மீளும் கதையில் வசனங்கள் பிரமாதம்.

    ஒரு பெண்மணியின் விஸ்வரூப வளர்ச்சியை மிக அருமையாகச் சொல்லிய விதம் எல்லாப் பெண்களுக்குமே தன்னம்பிக்கை அளிக்கும்.

    //கேரளத்து மங்கையான டீனா, சுந்தரத் தெலுங்கு பேசும் துளசி, அச்சா! என அழகாக கண்விரிக்கும் சோனியா, கன்னடத்துப் பைங்கிளி சரோஜா, செந்தமிழ் பேசும் கனிமொழி.//

    அருமையான காம்பினேஷன்.

    //மண்டையில் புகழ் போதை ஏறியது.//

    பாராட்டப்படவேண்டிய வாக்கியம். உமாவின் தன்னடக்கம் வெளிப்படும் வரி இது.

    லேபாக்‌ஷி பற்றிய விவரணை அங்கு போகத்தூண்டுகிறது.

    நலம் நலமறிய ஆவல் கதையில்,

    //கல்லூரியில் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தாலும் அதைப் புரிந்து படித்தோமா என்று தெரியவில்லை.//

    //நமக்கு வரும் ஆசிரியைகளை நாம் திரைப்படக் கதாநாயகிகளாகத்தான் பார்த்தோம்.//

    //நம் வீட்டிலே தற்போது ப்ரைம் வீடியோவும், நெட்ப்ளிக்ஸும் இருந்தாலும், அன்று கடலை வாங்கிக் கொண்டு பெஞ்சில் உட்கார்ந்து பார்த்த பட சுவாரசியமே தனி.//

    ஆசிரியைக்கு சாக்பீஸ் எடுத்துத் தருவதில் போட்டிபோடுவது போன்ற மேற்கண்ட விஷயங்கள் உள்படப் பல வரிகள் நம்மை நம் பள்ளிக்காலத்துக்கு இட்டுச் செல்கின்றன.

    கதையின் முடிவு மனசை நெகிழ்த்துகிறது.

    புதைகுழி கதையில்,

    //நமது உடம்பு மனது இவற்றிற்கு நன்மை தராத எதுவுமே ஆண் பெண் என்ற எந்த பாகுபாடின்றி அனைவருக்கும் தவறு.// சூப்பர் வரி.

    புஷ்பக விமானம் கதையில்,

    //புராணங்களிலும், ரிக் வேதத்திலும், சீவகசிந்தாமணியிலும், பரத்வாஜர் சமஸ்க்ருத மொழியில் எழுதிய ‘வைமானிக சாஸ்திர’த்திலும் விமானத்தின் தொழில்நுட்பம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு, ரைட் பிரதர்ஸ் விமானம் கண்டுபிடிக்கும் முன்பே தமிழர்கள் அதைப்பற்றி எழுதியது பெருமைக்குரிய விஷயமாகும்.// சிறந்த ஆய்வு செய்திருக்கிறீர்கள் உமா.

    மைதிலி... ரகுராமன்... யோசித்துப் பெயர் வைத்திருக்கிறார்.

    //தலைவர்கள் எப்போதும் விமர்சிக்கப்பட்டு கொண்டே இருப்பார்கள்.//

    கதையின் கடைசி வரி சூப்பர் அசத்தல்.

    மோதி மிதித்துவிடு பாப்பா கதையில்,

    பாட்டி தாத்தா ஏன் சட்டப் படிப்பு படிக்கக்கூடாது என்று சத்தியம் வாங்கினார்? என்ற சுவாரஸ்யமான கேள்வியைச் சுற்றிய கதை.

    இடம் தேதியுடன் எழுதப்பட்ட யுக்தியைப் பாராட்டலாம்.

    மிக அருமையான பிளாட். பிரமாதமான சஸ்பென்ஸ். நச்சென்ற சூப்பர் கிளைமாக்ஸ். சமுதாயத்துக்கு அருமையான படிப்பினை.

    யாதுமாகி நின்றாள்... கதையில்,

    //மண்ணுக்கும் மனுஷனுக்கும் இடைவெளியே இருக்கக் கூடாது. நாம மண்ணை அலட்சியப் படுத்திவிடுகிறோம். மண்ணுல

    Enjoying the preview?
    Page 1 of 1