Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoduvaanam
Thoduvaanam
Thoduvaanam
Ebook131 pages48 minutes

Thoduvaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எட்டு பெண்களின் சிறுகதைத் தொகுப்பான தொடுவானம், வாழ்க்கையின் பல பரிணாமங்களைத் தொட்டு, வாசிப்பவரைக் கவர்ந்து சிந்திக்கவும் வைக்கிறது. மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையின் நடப்புகளைப் பிரதிபலிக்கும் பதினாறு சிறுகதைகள் மூலம் வாசகரின் சிந்தனையைத் தூண்டுகிறது தொடுவானம். வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு விதமான சிந்தனைகள், செயல்கள், தீர்வுகள் நம்மை ஆட்கொள்வதை விவரிக்கிறது தொடுவானம்.

Languageதமிழ்
Release dateDec 2, 2023
ISBN6580168010476
Thoduvaanam

Read more from Uma Aparna

Related to Thoduvaanam

Related ebooks

Reviews for Thoduvaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoduvaanam - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தொடுவானம்

    Thoduvaanam

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    அணிந்துரை

    1. மழைக்காதலி

    2. காதலிப்பதில் என்ன தவறு?

    3. அன்பே வா!!

    4. முழு பூசணிக்காய்

    5. இருண்ட உலகம்

    6. விலை மதிப்பு

    7. சாதித்த சம்யுக்தா

    8. வசுமதியும் தீபாவளியும்

    9. நான் நானாக...

    10. காதல் கனவு

    11. சீதா கல்யாணமே வைபோகமே

    12. காசா? பணமா?

    13. நட்பு

    14. தேன் மொழி

    15. நவீன சரஸ்வதி சபதம்

    16. முற்பிறவியின் காதலி

    அணிந்துரை

    பூவையர் எட்டு. அனைவரும் ஒருங்கிணைந்து எட்டா உயரத்தில் இருக்கும் தொடுவானத்தைத் தொடும் முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இது ஒரு பேக்கிடெர்ம் டேல்ஸ் வெளியீடு. அதில் எழுதிய அனைவருமே அறிமுக எழுத்தாளர்கள் என அந்நிறுவனர் உமா சொன்னபோது சரி! அப்படி என்னதான் எழுதியுள்ளனர் எனப் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தால் கொஞ்சமும் நம்ப முடியவில்லையே. அற்புதமான நடை; மொழி ஆளுமை; கற்பனை வளம் என அனைவருமே அசத்தியிருக்கின்றனர்.

    இனிக் கதைகளைப் பார்ப்போம்.

    முதல் கதை மழைக்காதலி. இதனை எழுதியவர் சுபஸ்ரீ ரவிச்சந்திரன்.

    மழை என்றால் பிடிக்காதவரும் உண்டோ? வான் மேகம் பூ பூவாய்த் தூவும் என ரேவதி போல ஆடிப்பாட மனம் துள்ளாதா? அவ்வகையில் இக்கதையின் நாயகி மழையைக் காதலிப்பவள். கூடவே நாமும் மழையைக் காதலிக்கும் வண்ணம் கதை நகர்கிறது. மழை வானத்துத் தேவதைகளுடைய ஆசிர்வாதம் என்ற ஆசிரியையின் கற்பனை நயம் இரசிக்க வைக்கிறது. மழையைப் பிடித்தவனே நாயகி எழிலியின் மனதிற்கும் பிடித்தவனாகிறான்.

    திருமணம் செய்து கொள்ளப்போகும் இருவரின் இரசனைகளும் ஒத்துப் போவதை இக்கதை வலியுறுத்துகிறது. என் பேரு என்னோட அடையாளம். அதையே மாத்துவேனு சொல்றார் என்ற எழிலியின் கேள்வி நியாயமானதே!

    அடுத்த கதையான காதலித்தால் என்ன தவறு? வெற்றி காதலிப்பதில் இல்லே. அதுக்குப் பிறகு நல்லபடியா சந்தோஷமா வாழறதுலே இருக்கு என்ற வரிகள் இன்றைய டீன் ஏஜ்ஜில் உள்ளோருக்குப் பாடமாக உள்ளது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிக்கும் கைப்பேசியோடு காதலனை ஒப்பிட்டுப் பேசும் புத்திசாலி அம்மா வியக்க வைக்கிறார்.

    மேல்மங்கலம் சியாமளா எழுதிய அன்பே வா! கதை இல்வாழ்வில் ஈடுபட்ட ஒரு தம்பதியின் பிரச்சனையைப் பேசுகிறது. அப்பிரச்சனையைப் பாட்டி எப்படித் தீர்க்கிறார் என்பதைச் சொல்கிறது.

    அடுத்த கதை முழு பூசணிக்காய். அதை சோற்றில் மறைக்க முடியுமா? மறைக்க முயன்றனர். மறைத்தே விட்டனர். படு சுவாரஸ்யங்கள், திருப்பங்கள் எனக் கதை ஜோராய் நகர்கிறது. அடுத்து இப்படித்தான் என வாசகர்களை யூகிக்க வைத்து ஆசிரியர் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார்.

    பார்வையற்ற தன் மகளுக்குத் தானே பார்வையாகிப்போன அவள் தாய் தன் மறைவிற்குப் பிறகு அவளது கண்களால் மகளை இவ்வுலகைப் பார்க்கச் செய்கிறாள். இவ்வுலகத்தைத் தன் தாயின் கண் மூலம் பார்க்கும் மகளின் உணர்வுகளை மாதங்கியின் இருண்ட உலகம் கதை உணர்த்துகிறது.

    பிடித்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததைப் பிடிக்கும் மனோபாவத்தைப் பெற வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஆசிரியை பிரபாவதி சாதித்த சம்யுக்தா கதை வழியாக விளக்குகிறார்.

    அடுத்த கதையில் ஒரே நகைச்சுவை வெடிகளை அள்ளித் தந்திருக்கிறார். தீபாவளியா இல்லை தீபாவலியா? தெரியவில்லை.

    காதல் என்றால் என்ன என்பதை அழுத்தமாகச் சொல்லும் கதையாக வசந்திஜனார்த்தனத்தின் காதல் கனவு அழகாக நகர்கிறது.

    சீதாவைப் போலும்,

    ராமுவைப்போலும் பிள்ளைகள் இருந்தால் பெற்றவர்களுக்கு என்றென்றும் நிம்மதி என்பதை சீதாகல்யாணமே வைபோகமே கதையில் மிகவும் யதார்த்த நடையில் பார்வதி நாகமணி கொண்டு செல்கிறார்.

    பாரதியின் வரிகளான நிதி மிகுந்தவர் பாடலில் வரும் அதுவுமற்றவர் வாய்ச்சொல் தாரீர் என்பதப் படம் பிடிக்கும் வகையில் இவரது அடுத்த கதை அமைகிறது. இனிய உளவாக என்று இனிமை சொற்களைப் பேசி அடுத்தவர்களை ஊக்கப்படுத்தும் கல்யாணி நம் மனதைத் தொடுகிறாள்.

    நல் வார்த்தைகளைச் சொல்ல காசா? பணமா?

    சரோஜா நாராயணின் நட்பு நட்பின் வலிமையைப் பறைசாற்றுகிறது.

    நட்பிற்காகத் தனக்குப் பார்த்த மாப்பிள்ளை, தன் தோழியை விரும்புவதை அறிந்து அவர்களை வாழ்வில் இணைக்கும் ராகவி நம் மனதில் உயர்ந்து நிற்கிறாள்.

    இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொலைக்காட்சியே கதி என இருப்பதையும், மெகாசீரியல் என்ற பெயரில் நடக்கும் கூத்தையும் நகைச்சுவையோடு விளக்குகிறது காயத்ரி முரளிதரனின் நவீன சரஸ்வதி சபதம்.

    எட்டாத் தொடுவானத்தை அந்த எட்டுப் பெண்மணிகளும் தொட்டுவிட்டனர். பேக்கிடேர்ம் டேல்ஸ் இதுபோல் இன்னும் பல அறிமுக எழுத்தாளர்களை இனம் கண்டு ஊக்குவிக்க வேண்டுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    ஊரப்பாக்கம்

    சென்னை 603210

    சுபஸ்ரீ ரவிச்சந்திரன்

    ஆசிரியர் குறிப்பு:

    சுபஸ்ரீ ரவிச்சந்திரன், வேதியியல் ஆசிரியை மட்டுமல்லாது பள்ளி முதல்வராகவும் இருந்து பல்வகை மனிதர்களை கையாண்ட பட்டறிவும் கொண்டதால் அறிவும் உணர்வும் உறவாடும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர்!

    இவருடைய எழுத்துநடை தனித்தன்மை வாய்ந்தது. மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அகல் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் பார்வையற்றோருக்கு உதவி வருகிறார். படிப்பதிலும் தோட்டக் கலையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இது இவரது நான்காவது சிறுகதைத் தொகுப்பு. சென்னையைச் சேர்ந்த இவர் தற்சமயம் வசிப்பது கனடாவின் டொராண்டோ நகரத்தில்.

    1. மழைக்காதலி

    நிமிர்ந்து வானத்தைப் பார்த்தாள் எழிலி. அவள் பெயரைப் போலவே கருகருவென்று இருந்தது வானம். பஞ்சு போன்ற வெண்மேகம் ஒரு வித அழகென்றால், சூல் கொண்ட மேகம் வேறு விதமான அழகு. பூமி சட்டென சில்லென்று மாற, எங்கிருந்தோ பறந்து வந்த தும்பிகள் தூறலை வரவேற்கத் தயாராகப் பறந்தபடி இருக்க, காற்று வில்லனாய் மாறி மேகத்தைக் கலைத்துப் போட முயற்சிக்க, நீ உன்னால் ஆனதை செய்து பார், நான் இன்று என் பூமிக்காதலியை ஸ்பரிசித்தே தீருவேன் என்ற உத்வேகத்துடன் கருமுகில் சடசடவென பன்னீர்த்துளிகளாய் தூறல் போட... இதோ வான் மழை வந்தே விட்டது.

    முகமெல்லாம் பூரிப்பாய், அகமெல்லாம் சந்தோஷமாய் தூறலில் நனைய வெளியே ஓடி வந்தாள் எழிலி. குப்பென்று கிளம்பிய மண்வாசனையை இழுத்துத் தன் நுரையீரல்களில் நிரப்பிக் கொண்டாள். வானத்துப் பன்னீர்த் துளிகளைக் கைகளில் ஏந்தி, முகத்தில் தெளித்து, கைகளை விரித்தபடி தட்டாமாலை சுற்றினாள்.

    எழிலி, எழலிம்மா!! ஓ, மழைக் காலம் வந்திடுச்சு இல்ல, இனிமே உன்னைத் தோட்டத்துலேயோ மொட்டை மாடிலேயோ தானே பாக்க முடியும்? நீ எப்படியும் மழைல நனைஞ்சு தான் தீருவே. இன்னிக்கே மொத்தமா நனைய வேண்டியதில்லை. இன்னும் ரெண்டு மாசம் முழுக்க மழைக்காலம்தான். அப்பப்போ நனையலாம். வானத்தைப் பாத்தா மழை நல்லா வலுக்கும் போலத் தெரியுது, நனைஞ்சது போதும், சட்டுன்னு உள்ள வந்து தலைமுடியை நல்லாத் துவட்டும்மா. ஜலதோஷம் பிடிக்கப் போகுது

    Enjoying the preview?
    Page 1 of 1