Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malar Vanam
Malar Vanam
Malar Vanam
Ebook108 pages36 minutes

Malar Vanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மலர்வனம்! ஆம் மலர்களின் வனம்தான். பூக்களில் எதை வர்ணிப்பது? எதை விடுவது? ஒவ்வொன்றும் கொள்ளை அழகு. இந்தக் கதை தொகுப்பிலும் 'எண் மலர்கள்' தங்கள் வார்த்தைகளை வரிகளாக தொடுத்து பக்கம் பக்கமாக கதைகளை எழுதி உள்ளனர். திறமைக் வயதேது என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். கதைகள் எழுதியாயிற்று! உங்கள் கையில் கொடுத்தாயிற்று! கனப்பொழுதும் தாமதிக்காமல் கருத்தை சொல்லுங்கள். களிக்கிறோம். தொடர்கிறோம். நன்றி

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580168010887
Malar Vanam

Read more from Uma Aparna

Related to Malar Vanam

Related ebooks

Reviews for Malar Vanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malar Vanam - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மலர் வனம்

    Malar Vanam

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    அணிந்துரை

    ‘சுப்பிரமணியன் ட்ரஸ்ட்’

    வானதி டீச்சர்

    தாயுள்ளம்

    உதிரம் உறவாய்

    உச்சம் தொடு

    சந்தியா வியூகம்

    மலர் வனம்

    கம்ப்யூட்டரா! கரண்டியா!

    நினைவில் நின்றவள்

    ஒரு அக்கிரஹார அத்தியாயம்!

    நிழல் நிஜமாகிறது

    வேடதாரி

    பிரபஞ்சம்

    கரிமுக அழகி

    உறவான கனவு

    வண்ணங்கள்

    அணிந்துரை

    பெண் எழுத்தாளுமைகள் எண்மரின் சிறுகதைகள் மலர்ந்து இம்மலர்வனத்தில் மணம் வீசுகின்றன. ஒவ்வொரு சிறுகதையும் வித்தியாசமான கரு மற்றும் கதைக்களத்துடன் அவரவர் பாணியில் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.

    ஆசிரியர் பிரபாவதியின் சுப்பிரமணியம் டிரஸ்ட் நல்ல நேர்மறை சிந்தனை கொண்ட கதை. இறந்தவரின் சொத்துகளை சொந்தங்களே டிரஸ்ட் அமைத்து தேவைப்படுவோருக்கு கொடுப்பது அருமை. அடுத்தது வானதி டீச்சர் பெண் கல்வியின் அவசியத்தை அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் உணர்த்தி நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

    ஆசிரியர் பிருந்தாவின் தாயுள்ளம் சிறுகதை எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் விதமாக அமைந்திருப்பது அருமை எளிய நடையில் மனதைக் கவர்கிறது. அவரது உதிரம் உறவாய் சிறுகதை, நாமும் உயர்ந்து, பிறரையும் உயர்த்த வேண்டும் என்னும் அருமையான கருத்தை நல்லதொரு உறவின் மூலம் விளக்கியுள்ளார். அருமை.

    எழுத்தாளர் ரமா ஸ்ரீனிவாசன் கதை உச்சம் தொடு அனைவர் உள்ளத்தை தொடுவது நிச்சயம். காலத்திற்கேற்ற கதை. நாயகி ஸ்வேதா தனக்கேற்பட்ட இன்னலிலிருந்து மீண்டு சமுதாயத்திற்கும் உதவுகிறாள். இவரது சந்தியா வியூகம் கதையில் சிறுதொழிலால் வாழ்வில் உயரும் தம்பதி அறக்கட்டளை ஏற்படுத்தி சிறுவர்களுக்கு உதவுகிறார்கள். நல்ல சிந்தனை.

    ஆசிரியர் பத்மினி அருணாச்சலம் அன்பெனும் உரமிட்டு... பாசமெனும் நீர் பாய்ச்சி... உறவுகளைப் பேணினால் வாழ்க்கை மலர்வனம் தான் என்கிறார். மலர்வனம் எனும் தன் சிறுகதையில், இவரது கம்ப்யூட்டரா? கரண்டியா? லேசான நகைச்சுவை இழையோடும் கதை நாயகி தனக்குரியவனை தேர்ந்தெடுக்கும் விதம் மனதை கவர்கிறது.

    ஆசிரியர் நிர்மலா சுவாமிநாதனின் நினைவில் நின்றவள் நம் மனதிலும் நிற்கிறாள்... குடியிருக்கும் வீட்டின் அருகிருக்கும் நட்பு மனதை எவ்வளவு தூரம் உணர்வு பூர்வமாக ஆக்கிரமிக்கிறது என்று கதை கூறுகிறது. வட இந்தியாவில் வாழும் சுப்பு மாமா மாமியின் அக்ரஹார வீட்டில் வாழும் ஆசையும், அவஸ்தையும், படுசுவாரஸ்யமாக ஒரு அக்ரஹார அத்தியாயம் சிறுகதை சொல்வது சிறப்பு.

    ஆசிரியர் நந்தினி லாவண்யா மூர்த்தியின் நிழல் நிஜமாகிறது யதார்த்தம். ஒரு அசந்தர்ப்ப சூழ்நிலையில் மாமியாரின் நிஜத்தை புரிந்து கொள்ளும் மருமகள்.

    இவரின் வேடதாரி சிறுகதை... கணவனின் மறுபக்கத்தை அவன் இறந்தவுடன் அறிந்து அதிரும் முதல் மனைவி, தன் வீட்டை கணவரின் இரண்டாம் மனைவியின் குழந்தைகளுக்கு எழுதிக் கொடுப்பது மனிதாபிமானத்தின் உச்சம். சிறப்பானதொரு கதை.

    எழுத்தாளர் சஹானாவின் சிறுகதை பிரபஞ்சம் சாரலாய்...

    நாயகி பிற உயிரினங்களிடம் வைத்திருக்கும் அன்பு மனதை நெகிழ வைக்கிறது. அதேபோல அவரது கரியமுக அழகி கருப்பியை ஹாசினியை போல் நாமும் நேசிக்கத் தொடங்கி விடுகிறோம். பிரபஞ்சம் அழகானது.

    இளம் எழுத்தாளர் மாதங்கியின் உறவான கனவு நீரின் அடியில் ஆராய்ச்சியில் ஈடுபடும் இருவரின் ஆர்வம் மணம் முடிக்கும் வரை செல்வது சுவாரஸ்யம்... நாமும் நீரின் அடியில் இருப்பதாக உணர்கிறோம். இவரது வண்ணங்கள் சிறுகதை கண்களை குளமாக்குகின்றது. ஓவியத்தால் காதலர்கள் இணைவது அருமை.

    இப்புத்தகத்தில் நான் மிகவும் சிறப்பாக கருதுவது இத்தொகுப்பில் உள்ள அத்தனை சிறுகதையும் நேர்மறை சிந்தனை கொண்டவை. இதன் எழுத்தாளர்கள் சமூகத்தின்மேல் வைத்திருக்கும் அக்கறையை பிரதிபலிப்பவை... மொத்தத்தில் மலர்வனம் ஒரு சுகவனம்.

    தி. வள்ளி

    திருநெல்வேலி.

    வி. பிரபாவதி

    இவர் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் இதுவரை எட்டு சிறு கதைகள் எழுதியுள்ளார். நான்கு புத்தகங்களாக வந்துள்ளது. தற்போது இந்த ‘மலர் வனம்’ புத்தகத்திலும் இரண்டு கதைகள் எழுதியுள்ளார். மேலும் இவர் Praba’s ISP என்னும் YOU TUBE சேனலும் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி

    ***

    ‘சுப்பிரமணியன் ட்ரஸ்ட்’

    பார்வதிக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஆம் இதுவரை எதற்கும் பாராட்டாத கணவரும் மாமியாரும் பாராட்டியதுதான் மகிழ்ச்சிக்கு காரணம் ஆயிற்று திருமணமாகி முப்பது வருடங்கள் ஆனது. ஒரு பெண், ஒரு பையன் என அளவான அழகான குடும்பம்.

    கணவர் மாதவனுக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. இவள் திருமணமாகி வந்தபின் ஒவ்வொரு திருமணமும் பார்த்து பார்த்து செய்து வைத்தாள். இதை ஒரு வரியில் சொல்லிவிட முடியுமா? நாலாபக்கமும் விமர்சனங்கள், ஆலோசனைகள், சம்பந்திகள் சமாளிப்பு என எத்தனை எத்தனை?

    பார்வதிக்கும் ஆசைகள் உண்டு. வங்கியில் பணிசெய்வதால், சம்பாத்தியம் குடும்பத்திற்கு உதவியாக இருக்கிறது. இன்னும் ஐந்து வருடங்கள் சர்வீஸ் உள்ளது. சமீபத்தில் காலமான மாமனாரைப் பற்றி நினைத்து பார்த்தாள்.

    அவர் எப்போதுமே நடுநிலையாக பேசுவார். அவர் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது.

    அந்தந்த பிரச்சனைகளை அவ்வப்போது தவறுகளை சுட்டிக்காட்டி உணரச்செய்து குடும்ப ஒற்றுமைக்கு மிகப்பெரிய பங்களிப்பை தந்து கொண்டிருந்தார். அவரது பென்ஷன் பணத்தை நயாபைசா எடுக்காமல்

    Enjoying the preview?
    Page 1 of 1