Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bodhimara Kathaigal
Bodhimara Kathaigal
Bodhimara Kathaigal
Ebook214 pages1 hour

Bodhimara Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

போதிமரக் கதைகள் தொகுப்பில் உள்ள கதைகள் பொழுதுபோக்காக படிக்க படைக்கப்படவில்லை. கதைகள் குறுங்காவியங்களாக புதிய கோணத்தில் சமூகத்தின் சிந்தனைகளை தட்டி எழுப்ப வேண்டும் என்ற ஆசிரியரின் இலக்கோடு படைக்கப்பட்டுள்ளன. படிப்பவர்கள் மனத்திரையில் குறும்படங்களைப் போல் ஓடக்கூடியவை.

Languageதமிழ்
Release dateSep 9, 2023
ISBN6580168910138
Bodhimara Kathaigal

Read more from Salem D. Sumathi Rani

Related to Bodhimara Kathaigal

Related ebooks

Reviews for Bodhimara Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bodhimara Kathaigal - Salem D. Sumathi Rani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    போதிமரக் கதைகள்

    (சிறுகதைகள்)

    Bodhimara Kathaigal

    (Sirukathaigal)

    Author:

    சேலம் தெ. சுமதி ராணி

    Salem D. Sumathi Rani

    For more books

    https://www.pustaka.co.in//home/author/salem-d-sumathi-rani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    அணிந்துரை

    என்னுரை

    1. அன்பிற்கு இணை அன்பே

    2. ஒரு தாயின் தவிப்பு

    3. கடவுள் போட்ட கணக்கு

    4. கலையாதே அன்பெனும் கூடு

    5. சஞ்சலங்கள் யாவினையும் வென்றிடு

    6. சாது மிரண்டால்

    7. சாத்திரங் கேளாயோ நன்னெஞ்சே

    8. தனி ஒருத்தி

    9. தாயும் ஆனவள்

    10. துளசி

    11. நம்பிக்கை

    12. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்

    13. பெண்ணுள்ளம் - பூவின் மொழி

    14. மழலை சொன்ன பாடம்

    15. மனதில் உறுதி வேண்டும்

    16. மறுக்கப்பட்ட காதல்

    சமர்ப்பணம்
    1-min

    கருவில் உருவான நாள் முதலாய் கல்லறை போய் சேர்ந்த பின்னும் என் அனைத்திலும் பின்னிப் பிணைந்திருக்கும் என் உயிருள் உறையும், இன்று இந்த புத்தகம் உருவாக உந்துதலாய் இருக்கும், என் பெற்றோரின் பொற்பாதங்களை வணங்குகிறேன்.

    என் கை பிடித்து முதல் எழுத்து பழக்கிய, அன்பும், அறிவும், அறநெறியும், அகிலமும் வாழ்வியலாய்க் கற்றுக் கொடுத்த, இன்றும் என் இரு நாசி துவாரங்களில் உள் மூச்சு, வெளி மூச்சாக இருவரும் பங்கு போட்டு என் சுவாசமாக உயிரூட்டிக் கொண்டிருக்கும் என் தாய், தந்தைக்கு இந்த நூல் சமர்ப்பணம்.

    சேலம் தெ. சுமதி ராணி

    வாழ்த்துரை

    போதிமரக் கதைகள்

    கவிஞர் தெ.சுமதிராணி, சிறந்த எழுத்தாளராகவும் கதாசிரியராகவும் திகழ்வதை இந்தத் தொகுப்பு உணர்த்துகிறது.

    வங்கி அதிகாரியாக இருந்த இவர், இப்போது தனது மதிப்பு மிகுந்த படைப்புகளைத் தமிழன்னையின் இருப்புக் கணக்கில் இனிமையாய் வரவு வைத்து வருவது பாராட்டுக்குரியது.

    அதுபோலவே, வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளையடிக்கத் தன் படைப்புகளால், படையெடுப்பையும் நடத்திவருகிறார். இவருடைய இந்த இருவகை முயற்சியும் பெரும் வெற்றிபெற்று வருகிறது.

    இந்தத் தொகுப்பு, காட்சிகளால் நம் மனத்திரையில் கதைகளை குறும்படங்களைப் போல் ஓடவிடுகிறது. அழகிய, எளிய நடையில், புதிய கோணங்களில் எழுதப்பட்ட ஒவ்வொரு சிறுகதையையும், குறுங்காவியம் என்றுதான் சொல்லவேண்டும்.

    திருமணமான பிள்ளைகளின் காதலியலுக்கு இடையூறாகப் பெற்றோர் அடிக்கடி அவர்கள் வீட்டிற்குச் சென்று அன்பு பொழிவதும் சரியல்ல என்று இதிலுள்ள ஒரு கதை, கதை சொல்கிறது.

    இன்னொரு கதையில், கணவன் இல்லாத நிலையில், குழந்தையுடன் தன்னை ஏற்கத் துணிந்தவரோடு வாழத் தொடங்குறார் ஒரு ஏழைப்பெண். எனினும் தன் மகனும் அவருக்குச் சுமையாக இருப்பதை உறுத்தலாக உணர்கிறார். அதனால், அவர் சக மனிதர்களிடம் அடிக்கடிக் கடன் வாங்குகிறார். தொடர்ந்து அவருக்குக் கடன் கொடுப்பதை விட, அந்தப் பெண்ணையும் அவர் கணவரையும் உளவியல் ஆலோசரிடம் அனுப்பி, அவர்களுக்குள் புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நீதி, உன்னதமாக உணர்த்தப்படுகிறது.

    முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட ஒரு பெண்மணியை மாறுபட்டக் கோணத்தில் பேசவைத்து, மற்றொரு கதை, அனைவரையும் மிருதுவாய் அதிரவைக்கிறது.

    இப்படிப்பட்ட புதுவிதமான கதைக் களமாக எடுத்துக்கொண்டு, வேறுபட்ட தீர்வைச் சொல்லும் வகையிலேயே, இதிலுள்ள கதைகள் இயங்குகின்றன. இவை வழக்கத்துக்கு மாறான புதிய தொனியில் இருப்பதால், படிக்கத் தொடங்கும் போதே கதையின் கருவைக் கண்டுபிடிக்கும், புலனாய்வு புத்தி இந்தக் கதைகளிடம் செல்லுபடி ஆகாது. இதுதான் எழுத்தாளரின் அசுர பலம்.

    இவருக்குள் கவிதை அருவி ஓடிக்கொண்டு இருப்பதால், இவரையும் மீறி, அங்கங்கே கவித்தும் பீறிடுகிறது. அதுவும் கதைகளை மருகேற்றவே துணை செய்கிறது. மேலும் கவிதைகளையும் கதைகளில் மேன்மையாய் எடுத்தாண்டிருக்கிறார்.

    பொழுதுபோக்குக்காக எழுதுகோல் பிடிக்காமல், சமூகத்தின் சிந்தனைகளைத் தட்டி எழுப்பவேண்டும் என்ற இலக்கோடு எழுதும் சுமதிராணியை, தமிழ்ச்சமூகம் இனங்கண்டு கொண்டாடவேண்டும்.

    இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் புதிய புதிய போதிமரங்களாக காட்சி தருகின்றன.

    எழுத்தாளரும் கவிஞருமான சுமதிராணி, இலக்கிய உலகில் தனித்தடம் பதிக்கத் தொடங்கி இருக்கிறார். இவர் எழுதும் எழுத்துக்கள், காலவெளியில் இவர் பெயரை அழுத்தமாய் எழுதுகிறது.

    அன்பான வாழ்த்துக்களோடு,

    ஆரூர் தமிழ்நாடன்

    01.07.2022

    அணிந்துரை

    மறக்க முடியாத அனுபவங்கள்

    2-min

    ‘பெண் சிவாஜி’ என்று தமிழ்த்திரை உலகில்பெயர் பெற்று சாதனை படைத்த ஆச்சி மனோரமா அவர்களிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டு நானும் ஒரு சாதனை படைத்தேன்! ஒரு பிரபலமான தமிழ் வாரப் பத்திரிகையில் தொடராக அது வந்தது. அந்த ஆயிரம் கேள்விகளில் ஒரு கேள்வி, பெண் என்பவள் யார்?

    அதற்கு சிறிதும் யோசிக்காமல் மின்னலென வந்தது ஆச்சியிடமிருந்து பதில்.

    சோதனைகளைச் சாதனையாக்குபவள்

    தன்னை ஆரம்ப எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளுகிற இந்த ‘போதிமரக் கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் சுமதி ராணியின் கதைகள் அனைத்திலும் பெண்கள் என்றால் சோதனைகளைச் சாதனைகள் ஆக்குபவர்கள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது! அனேகமாக எல்லா கதைகளுமே பெண்களை மையப்படுத்திதான் ஆரம்பமே! அதுவும் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு பிரச்சனைகள். ஒரு கதையை முடித்து விட்டு அடுத்த கதையைப் படிக்க ஆரம்பிக்கும் போது பாவம் ‘இந்தப் பெண். என்ன பிரச்சனையை சந்திக்கப் போகிறாளோ?’ என்ற உணர்வு வருவது கதாசிருயருக்குக் கிடைத்த வெற்றி.

    அதைப்போல் வாழ்க்கையில் இடர்களைச் சந்திக்கும் பெண்களுக்கு டானிக் தருவதுபோல் பல கதைகள். தன்னைப் போல் பலவித துக்கங்கள் தனிமை, மன இரணங்கள் இவற்றைச் சந்தித்து அவற்றை வெற்றிகரமாக சமாளித்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவரும் தோழி ராதிகா பாரதியின் மனதில்

    நம்பிக்கை விளைக்கை ஏற்றிச் செல்கிறாள். ‘எனக்கு கடவுள்கொடுத்திருக்கிற வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டேன்... அதனால் துக்கமோ தனிமையோ வெறுமையோ அண்டவில்லை’ என்ற வார்த்தைகள் பாரதியின் மனதில் ஆழமாக இறங்குகிறது ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற கதையில்.

    ‘மறுக்கப்பட்ட காதல்’ ரொம்பவே வித்தியாசமானது. உலகத்தில் யாரையும் வெறுக்கக் கூடாது. யார் யார் எப்படி எப்போது உதவுவார்கள் என்று சொல்லமுடியாது’ என்று நினைக்க வைக்கும் கதை. ‘அப்பா நான் செத்துருவேன்’ என்று சொல்லும்மகளிடம் ‘முதலில் அதைச் செய்’ என்று ஈவிரக்கமற்று கூறும் தந்தையிடம் மகள் என்ன செய்ய முடியும்? ஆனாலும் தன்னம்பிக்கை தளராமல் காதலித்தவனை எதிர்ப்பையும் மீறி கைப்பிடித்த போது கணவனாகிவிட்ட காதலன் செய்யும் உதவி மனதை நெகிழ வைக்கிறது. ஒரு குடும்பத்தில் பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து கொடுத்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை சுதந்திரமாக இருக்கிறதா? மகன் பெற்றவர்களை மறந்துவிட்டு பெண்டாட்டி தாசனாக மாறிவிடுவானா? கவனிப்பானா? என்பது போன்ற தேவையற்ற கவலையை வைத்துக் கொண்டு அவஸ்தைப்படும் பெற்றோர்கள் தலையில் குட்டு வைக்கிறார் ஆசிரியர்.

    ‘அன்பிற்கு இணை அன்பே’ என்ற கதையில், வாழத்தானே மணம் செய்து கொடுத்தோம்? இதற்குக் காவல் ஏன் என்று கோமதி பர்வதத்திடம் சொல்லும் இடம் அருமை. மகன், மருமகளுக்கு சுதந்திரம் தந்து தனிக்குடித்தனம் அனுப்பிவிட்டோம் என்று ஜம்பம் அடித்துவிட்டு, அவர்களைக் கண்காணிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நச்சென்று கேட்டிருக்கிறார் ஆசிரியர்.

    ‘பெண்கள் எல்லா விஷயங்களையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது’ என்ற கருத்தை வலியுறுத்தும் கதைதான், ‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்’. இந்தக் கதை நிச்சயம் பல பெண்களுக்கு ஞானத்தை ஊட்டிவிடும் என்பதில் ஐயமில்லை. நாயகி நிலாவுடன் நல்ல நட்புடன் இருக்கும் மணிபாலனிடம் ஒரு நாள் அவள், அவளுக்கு கணவர் இல்லையென்ற விஷயத்தை எதேச்சையாகச் சொல்ல அன்றிலிருந்து அவன் பேச்சின் திசை மாறிவிடுகிறது. அகால நேரத்தில் போன் செய்வதும், வழிவதும், ‘வாடா போடான்னு பேசு... இன்னும் நெருக்கமான நட்பாக இரு’ என்று ஒருமையில் அழைக்க ஆரம்பிப்பதும் அவளைத் திடுக்கிட வைக்கின்றன. அவன் மீதிருந்த மதிப்பெல்லாம் அதல பாதாளத்தில் விழுகிறது. ஒரு கட்டத்தில் நிலாவின் குளுமை கோபத்தில் வெப்பமாகிறது. நட்பு முறிகிறது. தனிமைப் பெண்களுக்கு எந்த வயதிலும் பேரிடர் வரும் என்று எச்சரிக்கும் அழகான கதை.

    சுமதிராணியின் கதை மாதர்கள்வீரம் மிக்கவர்கள். அவர்கள் பயம், கழிவிரக்கம், கலக்கம் கொள்வதில்லை. அப்படிப்பட்ட பெண்கள் தைரியசாலிகள். ஆகவேதான் பாரதியாரின் கவிதைகள் அவ்வப்போது வீரமாக வந்து விழுகின்றன இவர் கதைகளில்.

    ஒரு வாடகைத்தாயின் உணர்வுகளைச் சித்தரிக்கும் ‘துளசி’, ‘கலகலப்பாக பழகும் பெண்ணை தவறாக சித்தரித்து அவள் மண வாழ்க்கையை மன உளைச்சல் வாழ்க்கையாக மாற்றிவிடும் தோழர்களை மாற்றிவிடும் பெண்ணுள்ளம் பூவின் மொழி சிறுகதை, மற்றொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தும் உங்க தம்பி வீட்டிற்குப் போங்க. ‘அங்கேயும் நீங்கள் நாத்தனார்கள் தானே’ என்று வாய் வார்த்தையில் வாள் வீச்செறிந்து வீழ்த்தும் சாது மிரண்டால் நாயகி அமிர்தா. படிப்பவர்களால் மறக்கமுடியாத அனுபவங்கள்.

    சுமதி ராணி துணிச்சல் மிக்கவர். எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தால் வங்கி மேலாளர் பதவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வந்திருப்பதிலேயே அவர் துணிச்சல் வெளிப்படுகிறது. மங்கையர் மலர், குங்குமம் தோழி, தினமணி. நக்கீரன் குழும இனிய உதயம், அத்திப்பூ என்று இன்னும் பல இதழ்களில் இவர் படைப்புகள் மலர்ந்த வண்ணம் இருக்கின்றன. இவர் கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றும் விரைவில் வெளியாக இருக்கிறது. ‘போதிமரக் கதைகள்’ போன்ற இந்த சிறுகதைத் தொகுப்பு நூல் போன்று மேலும் பல நூல்கள் வெளிவர வாழ்த்துகிறேன்.

    சென்னை-600093

    21.06.22

    ‘கலை நன்மணி’ முனைவர்

    எழுத்தாளர் கே.ஜி.ஜவகர்

    என்னுரை

    3-min

    சேலத்தில் வசித்து வரும் எனது பிறப்பிடம் வேலூர். அங்குள்ள ஆக்ஸிலியம் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பும் அதே கல்லூரியில் ஆங்கில இலக்கியமும் படித்து பட்டம் பெற்றேன்.

    படித்தது ஆங்கில இலக்கியமானாலும், பிடித்தது தமிழ் என பள்ளி, கல்லூரி நாட்களிலேயே தமிழ் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என கலந்துக் கொண்டு எனது தமிழ் ஆர்வத்திற்கு முயற்சி படிக்கட்டுகளாக அமைத்துக் கொண்டேன்.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுப் பெற்றுள்ளேன். எழுத்துலகில் ஒன்றரை வயதுக் குழந்தை. இந்த ஒன்றரை வருடங்களில் எனது 8 கவிதைகள், 9 கட்டுரைகள் மற்றும் 3 சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

    1980 களில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் பருவத்தில், பேருந்தில் பயணிக்கையில் கவனித்துள்ளேன். படித்துவிட்டு, நல்ல பணிகளுக்கு செல்லும் பெண்களை பேருந்து நடத்துனர் ‘போம்மா, போம்மா உள்ளே’ என்று விரட்டுவதும், சமயங்களில் பிடித்து உள்ளே தள்ளுவதும் என என்ன செய்கிறோம் என்கிற சுய பிரஞ்ஞை இல்லாமலே அவர்களின் கடமையை செய்யும் முறையை.

    அந்த வயதிலேயே என் மனதில் பதிந்தது, பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தால் மதிக்கப்படுவதில்லை. வீட்டிற்குள் மகளாக, தமக்கையாக, தங்கையாக, அத்தையாக, சித்தியாக மதிக்கப்படும் பெண் வெளியில் வேலைக்கோ, புகுந்த வீட்டிற்கோ செல்கையில் எதிர் கொள்ளும் இன்னல்கள், பந்தயங்கள், அவமானங்கள் பல விதங்கள். நான் வளரும் பருவத்தில் ஒவ்வொரு நிலையிலும் என் அக்கம் பக்கம் வீடுகள், உடன் படித்தவர், பணிபுரிந்த ஆண்கள், பெண்கள் குடும்பங்களில் என பல சூழ்நிலைகளில் பலவித போராட்டங்களில் வாழ்ந்து மீண்ட, வாழ முடியாமல் மாண்ட, இன்னலோடே வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களின் மத்தியில் பார்வையாளராக இருந்திருக்கிறேன், இருக்கிறேன்.

    என்னால் முடிந்த ஆயுதமாக எழுத்தில் அவற்றை வெளிப்படுத்த முனைந்தேன். எழுதுகோல் ஒரு கூர்மையான ஆயுதம் என படித்திருக்கிறேன்.

    படிப்பவர்களின் மனதில் ஓரளவு தாக்கம், தவறுகளை தவிர்க்கும், தடுக்கும் முயற்சி ஏற்படுத்தலாமோ என்ற பெரிய ஆசை என்னுள். வாழ்த்துரை வழங்கியுள்ள கலை நன்மணி’ முனைவர் கே. ஜி. ஜவஹர் அவர்களும் அவரின் வாழ்த்துரையில் பெண்களை மையப்படுத்தியுள்ள சிறுகதைகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    எவ்வளவு முன்னேற்றங்கள் பெண்களில் இன்று இருந்தாலும், பெண்ணுரிமை தலையெடுத்து விட்டது, ஆணுரிமை கேட்கும் சூழல் தான் இன்றுள்ளது என பரவலாக பேசப்பட்டாலும், பெண் ஒவ்வொருவரும் முன்னுக்கு வர எத்தகைய கடின மலையைப் பிளந்துக் கொண்டு வருகிறார்கள் என்பது மறுக்கப்படக்கூடாத உண்மை. அத்தகைய பலம் மிக்கவள் பெண் என்றுணர்ந்து அவர்களை மதிக்கும், வழிவிடும் ஆண்களை தலை வணங்குகிறேன்.

    பெண்ணுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1