Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Junior Tej Page - 5
Junior Tej Page - 5
Junior Tej Page - 5
Ebook159 pages53 minutes

Junior Tej Page - 5

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

’திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்'. என்ற நம்மாழ்வார் வாக்குப்படி, மனநலம் காக்கும் ஷேத்திரமான, குணசீலத்தைக் குறியீடாக வைத்து எழுதப்பட்டு வரும் கதைகள் இவை.

இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திரு ஹரணி அவர்கள், இத்தொகுப்பின் பதினோறு கதைகளும், மையப்புள்ளி ஒன்றெனினும் எடுத்துரைக்கும் பாங்கில் சிறுகதையை இன்னொரு பரிமாணத்திற்கு அழைத்துச் செல்கின்றன. ஒவ்வொரு கதையும் மனித வாழ்வியலில் மனிதனின் நடத்தையொழுங்கினை, பண்பினை கட்டிக்காப்பதாக அமைகிறது. எல்லாமும் எழுத்தாளரின் கற்றுத் தேர்ந்த உளவியல் பின்னணியில் இயங்குகின்றன. முதன் முறையாக எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்களின் கதைகளை வாசிக்கிற அனுபவம் சுகமாக உள்ளது. உளவியல் சிக்கல்களை மையப்படுத்திக் கதைப் பொருண்மைகளை உருவாக்கி ஜூனியர் தேஜ் எழுதியுள்ள இக்கதைகள் காலத்தின் மனித மனச் சிக்கல்களுக்கு மருந்துபோன்றே நலம் பயப்பவை. இத்தொகுப்பை நீங்களும் ஒருமுறை வாசித்துப் பார்க்கலாம். உங்கள் மனத்தையும் இது சிறிதளவேனும் அசைக்கும் திறன் கொண்ட கதைகள் அடங்கிய தொகுப்பு.’ - என்கிறார் நாமும் வாசித்து, அந்தச் சுகானுபவத்தைப் பெறுவோமே!

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580172710700
Junior Tej Page - 5

Read more from Junior Tej

Related to Junior Tej Page - 5

Related ebooks

Reviews for Junior Tej Page - 5

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Junior Tej Page - 5 - Junior Tej

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜூனியர் தேஜ் பேஜ் – 5

    (குணசீலத்துக் கதைகள்)

    Junior Tej Page – 5

    Author:

    ஜூனியர் தேஜ்

    Junior Tej

    For more books

    https://www.pustaka.co.in/home/author/junior-tej

    பொருளடக்கம்

    அணிந்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    1. தலைமுறைகள்

    2. பெஸண்ட் நகர் க்ரீமடோரியம்

    3. பார்டர் லைன்

    4. மனச்சிதைவு

    5. பார்க்கின்ஸன்

    6. காதல் நோய்

    7. நீ யாரு?

    8. நீரடி

    9. சிதையா நெஞ்சு கொள்

    10. முதல் நிகழ்ச்சி மேடம்

    11. குற்ற உணர்வு

    பெற்றோர்க்குச் சமர்ப்பணம்

    A ஜானகி - V அருணாசலம் (தேஜ்)

    குரு வணக்கம்

    அணிந்துரை

    திரு ஹரணி அவர்கள்

    பண்பொழுங்கு பேசும் அறக்கதைகள்...

    சிறுகதைகளின் வடிவங்கள் காலந்தோறும் பல அற்புத மாற்றங்களுக்கு ஆளாகி புனைகதையுள் மிகச் சிறந்த இலக்கிய வகைமையாகச் சிறுகதை நிலைபெற்று வருவது கண்கூடு. எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்கள் குணசீலத்துக் கதைகள் என்னும் இத்தொகுப்பின் பதினோறு கதைகளும், மையப்புள்ளி ஒன்றெனினும் எடுத்துரைக்கும் பாங்கில் சிறுகதையை இன்னொரு பரிமாணத்திற்கு அழைத்துச் செல்கின்றன. ஒவ்வொரு கதையும் மனித வாழ்வியலில் மனிதனின் நடத்தையொழுங்கினை, பண்பினை கட்டிக்காப்பதாக அமைகிறது. எல்லாமும் எழுத்தாளரின் கற்றுத் தேர்ந்த உளவியல் பின்னணியில் இயங்குகின்றன. முதன் முறையாக எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்களின் கதைகளை வாசிக்கிற அனுபவம் சுகமாக உள்ளது. இன்றைய காலத்தின் தேவையையும் மிகச் சரியாகக் கவனங்கொண்டு தேஜ் இச்சிறுகதைகளை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    உளவியல் போன்ற துறைகளும் சரி மற்ற புதுத்துறைகளும் சரி மனித வாழ்வினை ஒழுங்குப்படுத்த மனிதனால் உருவாக்கப் பட்டவைதான். ஆகவே இத்தகைய துறைகள் வகுக்கும் கொள்கைகள், பின்பற்ற அறிவுறுத்தும் வழிகாட்டல்கள் எல்லாமும் மனித உருவாக்கமே. ஆகவே இவற்றைத் தாண்டிய மனித வாழ்வியலில் இயல்பாகவே அமைந்துருவாகும் பண்புகள் சமயங்களில் இத்தகைய துறைக்கோட்பாடுகளைக் கடந்து அல்லது ஒதுக்கி மேலெழுந்து மனித வாழ்வைச் சமன்படுத்தும் ஆற்றல்கொண்டவை. இத்தகைய தன்மைக்குக் காரணம் நம்முடைய வாழ்வியலில் காலந்தோறும் பின்தொடர்ந்திருக்கும் இனப்பண்பாடும், நடத்தைச் செயற்பாடுகளும் பின்பற்றப்பட்டு வரும் அறவிதிகளுந்தான் காரணமாகும். இதை எழுத்தாளர் நன்றாக உணர்ந்து இக்கதைகளில் அவற்றைக் காட்சிப்படுத்தவும் தெளிவுறுத்தவும் தவறவில்லை என்பது எழுத்தாளரின் படைப்பாளுமையை நிலைப்படுத்துகிறது.

    ‘தலைமுறைகள்’ கதையில் தாயின் பண்பிற்கும் எதிர்பார்ப்பிற்கும் எதிராக அறச்சமூகம் வழியுறுத்தும் வாழ்வியலில் தன்னை அர்ப்பணிக்கும் மகளை அறிமுகம் செய்கிறது.

    பிறப்பு என்பதைப் போன்றே இறப்பும் நிச்சயமானது என்பதோடு வாழ்வின் நிலையாமையைக் கற்பனைத் தேரில் உலாவந்து உணர்த்துகிறார் ‘பெஸண்ட் நகர் க்ரீமடோரியம்’ கதையின் வாயிலாக.

    இடுக்கண் களைவதாம் நட்பு என்பதற்குச் சிறந்த சான்றாய் மாறுபட்ட சூழலில் மாறுபட்ட நிலையில் நண்பனைச் சந்திக்கும் தோழி அவன் வாழ்க்கையின் சிக்கலுக்குதவுவது ‘பார்டர் லைன்’ எனும் கதை.

    ‘மனச்சிதைவு’ எனும் கதை பெற்றோர்களால் பாதிக்கப்படும் பிள்ளையின் மனநிலையைச் சித்தரிக்கிறது.

    ‘பார்க்கின்ஸன்’ எனும் கதை வயதானவர்களைப் பராமரிப்பது கடினம் எனும் சொற்றொடரை உடைக்கும் கதையாக மலர்ந்துள்ளது. அவர்களை எப்போதும்போல அவர்களின் இயல்பில் விட்டால் எவ்விதச்சிக்கலும் இல்லை என்பதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது இக்கதை.

    இளம் வயதில் இருபாலருக்கும் ஏற்படும் ஈர்ப்புக் காதல் அல்ல. உண்மையான காதலின் காலமும் பரிமாணமும் வேறு என்பதை உணர்த்தும் கதை ‘காதல்நோய்’.

    விபத்து நிகழும்போது பாதிக்கப்பட்ட மனித மனம் பழைய நினைவுகளைப் புடம்போடும். அப்படியான ஒரு கதை ‘நீ யாரு?’ எனும் சிறுகதை. இதை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார் எழுத்தாளர். ஒரு சின்ன அதிர்வினைத் தந்து பாதிக்கப்பட்டவரை மீட்கும் கதை இது.

    செத்துப் பிழைப்பது என்பார்கள். அல்லது மறுஜென்மம் என்பது உண்டா என்பது தெரியாவிட்டாலும் ஒவ்வொரு பெண்ணும் தான் சுமந்த குழந்தையை ஈன்றெடுக்கும்போது பெறும் வலியென்பது இன்னொரு பிறப்புதான். ‘நீரடி’ எனும் இக்கதையில் இதன் வழியாக மாற்றுறவுகள் வாழ்வை உணர்வது அருமையான முடிவு.

    ஒரு அறிவுரை புகட்டும் ஆசிரியர் பாணியில் அமைந்த கதை ‘சிதையா நெஞ்சுகொள்.’

    ‘முதல் நிகழ்ச்சி மேடம்!’ எனும் கதை ஓர் இதழியலாளப் பெண்ணின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதை. தனக்குக் கல்விக் கற்றுத் தந்த ஆசிரியரின் வழியாக அவள் புதியதொரு அத்தியாத்தைக் கற்கிறாள். மகன் மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் விதிமுறை மீறாத அறப்பண்புடைய மகனையும் அவனின் தந்தையையும் விவரிப்பது இன்றைய வாழ்வின் அவசியத் தேவையை முன்னிறுத்துகிறது.

    ‘குற்ற உணர்வு’ இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்துவிடு என்கிற குறளின் மாண்பைச் சான்றுரைக்கிறது.

    ஒரு அழகிய சோலைக்குள் புகுந்து பல வண்ண மலர்களைக் கண்கள் சுவைப்பதுபோல பதினோரு கதைகளும் அமைந்துள்ளன. உளவியல் எனும் ஒற்றைச் சரடில் கோர்க்கப்பட்ட பதினோரு பூக்களைக் கொண்ட இந்த பூமாலை படைப்புலகின் தனித்தன்மையாக மணத்தைப் பரப்பும் பண்புடையதாக இருக்கிறது. சமூக அளவில் எல்லாவற்றையும் கடந்து ஒரு மனிதனின் வாழ்வில் என்றும் மாறாமலும் நெறி பிறழாமலும் இருக்கவேண்டியது ஒழுக்கத்தில்தான் என்பதை இக்கதைகள் வெவ்வேறு பரிமாணங்களில் எடுத்துரைக்கின்றன.

    இக்கதைகளைப் பொருத்தளவில் எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்களின் படைப்பாளுமை குறித்து சிலவற்றைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

    எளிமையான சொற்கள். எளிமையான விவரிப்பு. தங்குத் தடையில்லாத ஓட்டம். வாசிக்கும் எவருக்கும் சிக்கலில்லாத புரிதல் தன்மையைக் கொடுக்கக்கூடிய கதைகள். உரையாடல்கள் அன்றாட வாழ்வின் சொற்களையே புதுப்பிக்கின்றன. கதை சொல்லும் உத்தியும் வெளிப்பாடும் உணர்வுகளை அசைக்கின்றன. ஒவ்வொரு கதையிலும் சொற்களில் காட்சிப்படுத்தல் அருமையாக உள்ளது. இது கதையின் பொருண்மையை அருகிருந்து பேசுவதுபோலப் பேசிப்போகிறது.

    தமிழின் பல்வேறு புதுத்துறைகள் புத்தாக்கம் பெற்று உருவாக்கப்பட்டு வளர்ந்துவரும் சூழலில் உளவியல் சார்ந்து அதனை மையப்படுத்திக் கதைப் பொருண்மைகளை உருவாக்கி எழுத்தாளர் எழுதியுள்ள இக்கதைகள் காலத்தின் மனித மனச் சிக்கல்களுக்கு மருந்துபோன்றே நலம் பயப்பவை என்ற வகையில் எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்களை அகங்கனிந்து வாழ்த்துகிறேன். இத்தொகுப்பை நீங்களும் ஒருமுறை வாசித்துப் பார்க்கலாம். உங்கள் மனத்தையும் இது சிறிதளவேனும் அசைக்கும் திறன் கொண்ட கதைகள் அடங்கிய தொகுப்பு.

    பேரன்புடன்

    ஹரணி, தஞ்சை

    வாழ்த்துரை

    திரு அஜித்லால்.G.B அவர்கள் சென்னை.

    புறக்காயங்களின் காரணமாக மனிதர்களின் அவயவங்களில் சில குறைபாடுகளும் வடிவ மாற்றங்களும் ஏற்படுவதைப் போலவே மனக்காயங்களாலும் குணாதிசயங்கள், நடத்தை மற்றும் பண்புகளில் பெரும் மாற்றங்கள் நிகழலாம். நில அதிர்வின்போது மண்ணில் திடம்கொண்டு நிற்கும் வீடுகளின் அஸ்திவாரத்தில் கண்ணுக்குத் தெரியாமல் ஏற்படும் விரிசல்கள், பிறகு அக்கட்டடத்தையே உலுக்கி தரைசாய்ப்பதுபோல் வாழ்வில் அனுதினமும் எதிர்கொள்ள நேரிடும் சில சம்பவங்களும், தொடர் அனுபவங்களும் உளவியல் ரீதியான பல சிக்கல்களை உருவாக்கி மனிதர்களின் மனங்களை வலுவிழக்கச் செய்து சாய்த்துவிடக்கூடியவை.

    மனோதத்துவ நிபுணரான ஜூனியர் தேஜ் அவர்கள் எழுதி, பல்வேறு இதழ்களிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமான உளவியல் ரீதியான அணுகுமுறைகொண்ட, ‘குணசீலத்துக் கதைகள்’ என்ற ஐந்தாம் பாகமான இத்தொகுப்பில் பதினோரு கதைகள் உள்ளன. நுண்ணிய உணர்வுகள் உள்ளடங்கிய பெரும் விஷயங்களை கட்டுரையாகச் சொல்லும்போது ஏற்படும் புரிதலை விடவும் கதையாக விளம்பப்படும்போது நமக்குள் ஆழப் பதிந்துவிடுவதை இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் பறைச் சாற்றுகிறது.

    இக்கதைகளில் வரும் அன்பரசி, சேகர், ராஜ்குமார், ஏ.வி.ஆர், மயூரி, வாணி, அகிலா, முருகேசன், ஐஸ்வர்யா, கணேசன் போன்றோரெல்லாம் வாழ்வின் வழித்தடங்களில்

    Enjoying the preview?
    Page 1 of 1