Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Junior Tej Page – 1
Junior Tej Page – 1
Junior Tej Page – 1
Ebook144 pages48 minutes

Junior Tej Page – 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த முதல் தொகுப்பில் இருக்கும் 15 கதைகளில் பெரும்பாலும் போட்டிகளில் வெற்றி பெற்றக் சிறுகதைகளே.

இந்த நூலில் உள்ள அணிந்துரையிலும், வாழ்த்துரையிலும் சொல்லப்பட்டதைப் போல ஒவ்வொரு சிறுகதையும் ஒரு வாழ்க்கைச் சித்திரமாய் மிளிர்கிறது. வாசிப்பை சுவாசிப்பாய் நேசிக்கும் வாசகர்களாகிய நாம் தனித்துவமான நடையுடன் எழுதப்பட்ட ஜூனியர் தேஜ் அவர்களின் சிறுகதைகளை வாசித்து மகிழ்வோமே!

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580172710677
Junior Tej Page – 1

Read more from Junior Tej

Related to Junior Tej Page – 1

Related ebooks

Reviews for Junior Tej Page – 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Junior Tej Page – 1 - Junior Tej

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜூனியர் தேஜ் பேஜ் – 1

    (சிறுகதைகள்)

    Junior Tej Page – 1

    (Sirukadhaigal)

    Author:

    ஜூனியர் தேஜ்

    Junior Tej

    For more books

    https://www.pustaka.co.in/home/author/junior-tej

    பொருளடக்கம்

    அறிமுகவுரை

    அணிந்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    1. சிற்றன்னை

    2. கல்விக் கண்

    3. வெட்டு ஒண்ணு

    4. முன்னதாகவே வந்திருந்து...

    5. பூமி இழந்திடேல்

    6. கற்றது ஒழுகு

    7. ஜாதின்னா என்ன?

    8. தன்மை இழவேல்

    9. வியாபார வெற்றி ரகசியம்

    10. க்ளையண்ட்

    11. புத்தாண்டுப் பரிசு

    12. அரைகுறை ஆன்லைன் அறிவு

    13. அயர்ன்

    14. பயிற்சிப் பட்டறை

    15. பேரிடர் நிதி

    பெற்றோர்க்குச் சமர்ப்பணம்

    A ஜானகி - V அருணாசலம் (தேஜ்)

    குரு வணக்கம்

    அறிமுகவுரை

    அருண் வைத்யநாதன் அவர்கள், இந்திய அமெரிக்க திரைப்பட இயக்குநர்.

    ஜூனியர் தேஜ் என்று எனக்கும், ‘வரதராஜன் சார்’, ‘கைத்தொழில் ஆசிரியர்’ - என்று என்னோடு படித்தவர்களுக்கும், ‘உதவித் தலைமை ஆசிரியர்’, என்று எனக்குப் பிறகு படித்தவர்களுக்கும், அறிமுகமான ஒரு அட்டகாசமான ரசனைக்காரர் ஜூ.தேஜ்.

    கட்டுக் கட்டாய் தபால் அட்டைகளில், அழகான கையெழுத்தில் துணுக்குகள் எழுதி, ஜூனியர் தேஜ் என்று ரப்பர் ஸ்டாம்பில் முத்திரை குத்தி அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்புவார். அது ஜூனியர் தேஜ், சீர்காழி, என்று பிரசுரமாகும் போது அதை வாஞ்சையாய் பார்த்து, எனக்கும் காண்பிப்பார்.

    ஒரு மந்திரக்கோலை ஆட்டியவுடன், பின்னால் இருக்கும் தாஜ்மஹால் மறைவதைப் பார்த்ததில்லை நான் - ஒரு கிராமத்துக்கும், டவுனுக்கும் நடந்த கலப்புத் திருமணத்தில் பிறந்த சிங்காரச் சீர்காழியிலிருந்து, தமிழகமெங்கும் அதன் பெயரைக் கொடியாய்த் தூக்கிப் பிடித்த எழுத்தாளர் ஜூனியர் தேஜ், எனக்குப் பரிச்சயமானவர் என்பதில், அலாதியான ஆனந்தம் எப்போதும் பொங்கும் எனக்குள்.

    அவரைச் சுற்றி எப்போதும் புத்தகங்கள், தபால் அட்டைகள், குண்டு குண்டாய்ப் பேனாக்கள், பாதி எழுதிய நோட்டுப்புத்தகங்கள்... என்று ஒரு எழுத்தாளனுக்கே உரிய சகல உபகரணங்களோடும் எப்போதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் சூழல் எனது மனக்கண்ணில் இப்போதும் நிழலாடுகிறது.

    ஜூனியர் தேஜ்’ அவர்களின் Consistant ஆன உழைப்பையும், செயல்பாடுகளையும் பார்த்துத்தான் பத்திரிகைகளுக்கு நாமும் தொடர்ந்து எழுதவேண்டும் என்ற ஆசை எனக்குள் துளிர்த்தது.

    வாசகர் பூமராங், டயலாக், துணுக்குகள் என்று எழுதுவேன். எழுதியவற்றை ஓடி ஓடிச் சென்று, அவரிடம் காண்பிப்பேன். அன்போடும், அகமகிழ்வோடும் படித்துவிட்டு உற்சாகப்படுத்துவார். திருத்துவார். சத்தமாய்ச் சிரிப்பார். ‘பலே’ என்றுக் கை தட்டுவார். ஒரு நல்ல படைப்பாளி என்னவெல்லாம் செய்வாரோ அத்தனையையும் அவர் எனக்கும் செய்தார்!

    திடீரென எனது பெயரும் பத்திரிகைகளில் வரத்தொடங்கியதும், ‘எனக்குத் தெரியும்டா கண்ணு...!’ என்று, எந்த ஒரு எதிர்மறை எண்ணமும் இல்லாமல் முழுமனதோடு வாழ்த்தியவர் ஜூ.தேஜ்.

    அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட எவ்வளவோ நல்ல விஷயங்களில், இதுவும் ஒன்று! அவரது சிறுகதைகள், பிரசுரம் ஆகின! பரிசுகளும் வாங்கின! இப்படி அனாயாசமாக அவரது சாதனைகளை சத்தமேயில்லாமல் அவரே முறியடித்தபடி முன்னேறிக்கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    இலக்கியத்தின் மேல் அபிமானம் வருவதற்கும், வாசிப்பது சுவாசிப்பது போல என்ற எண்ணத்திற்கும், இன்று நான் திரைப்படங்களில் எழுதுவதற்கும்... சிறுவயதில் ஜூனியர் தேஜ் அவர்கள் போட்ட அட்சதையும் ஒரு அழுத்தமான ஆசிர்வாதம்.

    அவரது சிறுகதைகள் தொகுப்பாய் வருவதும், அதற்கு நான் அறிமுகவுரை எழுதும் பாக்கியத்தைப் பெற்றிருப்பதும் ஆண்டவனின் அருட்கொடையே.

    அவரது எழுத்துப்பணி எட்டுத்திக்கும் சென்றடைய, எனது பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும்!

    என்றென்றும் அன்புடன்

    - அருணாச்சலம் வைத்யநாதன்,

    நியூ ஜெர்ஸி, அமெரிக்கா

    அணிந்துரை

    திரு மயிலாடுதுறை ராஜசேகர் அவர்கள்

    முதல் புத்தகம் வெளியீடு என்பது, பெண்களின் முதல் பிரசவத்தை ஒத்ததுதான். ஆயிரமாயிரம் கனவுகளோடுக் குழந்தையைக் கருவில் சுமக்கும் அன்னையைப் போல; நான் வெற்றிபெறுவேன்; என்னுடைய புத்தகம் பேசப்படும் என்றெல்லாம் எழுத்தாளர்கள் ஆசைப்படுவது இயற்கைதான்.

    அந்த வகையில் ஆசிரியர் திரு ஜூனியர்தேஜ் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு, சிறப்பானதொரு வெற்றியைப் பெற்றிட என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் மேலும் பல நூல்களை வெளியிட்டு எழுத்துலகில் துருவ நட்சத்திரமாய்ப் பிரகாசிக்க அவர் வணங்கும் தில்லைக் காளி அருள் புரியட்டும்.

    குடந்தையைச் சேர்ந்தவரான, பள்ளி ஆசிரியர் கரிச்சான் குஞ்சு அவர்கள் ஒரே ஒரு நாவல்தான் எழுதினார். நாவலின் பெயர் பசித்த மானுடம். இன்றளவும் பேசப்படுகின்ற ஒப்பற்ற நாவல் அது. முன்னணி எழுத்தாளர்கள் அனைவரும் பசித்த மானுடம் படியுங்கள் என்று இளையோருக்கு பரிந்துரை செய்கிறார்கள்.

    அதே போன்று, சீர்காழிப் பள்ளி ஆசிரியரான அ.வரதராஜன் என்ற இயற்பெயர் கொண்ட திரு ஜூனியர் தேஜ் அவர்கள் எழுத்துலகில் சாதிக்கவேண்டும், பேசப்படவேண்டும் என்பது என் அவா.

    ஒருமுறை, அவரிடம் வாட்ஸப் செய்திப் பரிமாற்றம் செய்தபோது, அறுபது வயதை நெருங்கி விட்டீர்கள். உங்களுக்கு ஏன் ஜூனியர்தேஜ் என்று பெயர். நீங்கள் சீனியர் தேஜ் அல்லவா என்றேன்.

    சீனியர் தேஜ் அவருடைய தந்தை திரு அருணாச்சலம் என்பதை அறிந்தபோது, மேலும் அவரும் ஒரு சிறுகதை எழுத்தாளர் என்பதை அறிந்தபோது, ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?’ என்றப் பழமொழிதான் ஞாபகத்திற்கு வந்தது.

    திரு ஜூனியர் தேஜ் அவர்கள் சமூக அக்கறை மிக்க ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது சமுக அக்கறை அவருடைய எழுத்துகளில் பளிச்சிடுகிறது. இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பதினைந்து சிறுகதைகளில் பாதியளவு, பள்ளிச்சூழல், மாணவர்கள் இப்படிப் பின்னப்பட்டுள்ளன.

    முன்னதாகவே வந்திருந்து சிறுகதையில், "மனுசன் தடுமாறுவது சகஜம் தான். தடுமாறி விழுந்தவன் கம்பீரமாக எழுந்து நிக்கிறதுதான் வீரம். தடுமாறிடுவோமோன்னு பயந்து பயந்து வீட்லயே முடங்கிக் கிடக்கிறதுதான் கோழைத்தனம்.’ என்பது ஓர் அருமையான நம்பிக்கை வாசகம்.

    பூமி இழந்திடேல். 1999 ல் கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற, அருமையான விழிப்புணர்வுச் சிறுகதை. முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக, மனிதன் தன் வாழ்வாதாரத்தை நாசம் செய்துகொள்ள முடியாதல்லாவா? இக்கதையில் அமாவாசைக்கிழவன் என்ற கதாபாத்திரத்தின் மூலமாக, சாய ஆலைகளால், நீரும், காற்றும் மாசு படாமல் இருக்க, சிறப்பானத் தீர்வு சொன்னவிதம் மிகவும் அருமை.

    பயிற்சிப் பட்டறை என்ற சிறுகதையில் நம்முடைய சமுதாயம் எப்படி இருக்கிறது என்பதை இப்படிச்

    Enjoying the preview?
    Page 1 of 1