Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mugavari Thedum Kaattru
Mugavari Thedum Kaattru
Mugavari Thedum Kaattru
Ebook146 pages46 minutes

Mugavari Thedum Kaattru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் காலில் நின்று சம்பாதிக்கத் துடிக்கும் இளைஞன் தமிழரசு. கோடீஸ்வரர் ஜே.கே.யின் ஒரேபுதல்வன் தந்தையின் நிழல் தனக்கு வேண்டாம் என்று சுயமாக சம்பாதிக்க துடிக்கும் புதல்வன்தான் தமிழரசு. பணக்கார வட்டத்திலும், நாகரீக சிந்தனைமிக்க இளைஞன் தமிழரசு.

வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப தமிழரசு பிஸினஸ் உலகில் உயர்ந்து தனது தந்தை ஜே.கேக்கு பெருமையையும், சிறப்பையும் தேடிதந்துள்ளான். தமிழரசு என்ற காற்றுக்கு முகவரி கிடைத்துவிட்டது. இந்த புதினம் பல இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும்.

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580178311028
Mugavari Thedum Kaattru

Read more from Rajakai Nilavan

Related to Mugavari Thedum Kaattru

Related ebooks

Reviews for Mugavari Thedum Kaattru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mugavari Thedum Kaattru - Rajakai Nilavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முகவரி தேடும் காற்று

    Mugavari Thedum Kaattru

    Author:

    இரஜகை நிலவன்

    Rajakai Nilavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajakai-nilavan

    பொருளடக்கம்

    வாழ்த்துரை!

    அணிந்துரை!

    என் வாசிப்பின் நேசத்திற்கு...

    நூலை எழுதியவரைப்பற்றி…

    அதிகமான லாபம்

    சொந்தக் காலில் நிற்க விரும்பும் அரசு

    நிழல்யுத்தம்

    ஜெயிப்பதில் மிக்க மகிழ்ச்சி

    நான் நல்லவனில்லையா?"

    உதவி செய்ய முடியுமா?"

    யாதவ் இல்லையா?

    யோசனை பலமாக இருக்கிறது?

    தீர்மானித்து விட்டாயா?

    புனித பாத்திமா மாதா தேவாலயம்

    என்ன வியாபாரம்?

    ஜே.கே.யின் நாட் குறிப்பு

    தூக்கம் வரவில்லையா?

    அந்நாளைய டைரி

    கப்போலி ரயில்

    பூனம் தில்லான்

    காஞ்சனா ஆச்சி வீடு

    ஓடுகிற குதிரை

    ஏற்றுமதி இறக்குமதி

    முதன் முறையாக சிங்கப்பூர்

    மொபையில் குயிலாகியது

    கீழே விழுந்தாள் பூனம்.

    பயப் பந்து

    வீண் கோட்டைகள்!?

    அம்மாவின் குரல்

    திரும்பவும் சிங்கப்பூர் பயணம்…

    விருது வழங்கும் விழா

    அம்மாவிற்கு என்னாச்சு?

    பாத காணிக்கை….

    என் முதல் இரசிகையாயிருந்து என்னைத் தட்டிக் கொடுத்து வார்த்தெடுத்து, எங்களை எல்லாம் மாளாத்துயரில் விட்டு விட்டு வான் வீட்டில் வசிக்கும் என் தமக்கை(அன்பின் அக்கா) பி. சுசிலா(சுசிலா திரவியம்),

    அவர்களின் மலரடிகளுக்கு…

    வாழ்த்துரை!

    கவிஞர் இரஜகை நிலவன், தமிழ் மீது தணியாத பற்றுக் கொண்டவர். தமிழை வளர்க்க வேண்டும், தமிழ் வளர்ப்பதற்கு உதவ வேண்டும் என்ற சிந்தனைக் கொண்டவர்.

    மராட்டிய மாநிலத்தில் வாழ்ந்து வந்தாலும் கவிதைதொகுப்பு, சிறுகதை, புதினம், கட்டுரைகள் என பல எழுதியுள்ளார்.

    அவரின் முகவரிதேடும் காற்று என்ற புதினத்தின் எழுத்துநடை, கதையின் பாங்கு அருமை. விரசமோ, ஆபாசமோ இல்லாத ஒரு அற்புதமான எழுத்து. ஒவ்வொரு அத்தியாத்தை படிக்கும்போது அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

    "தமிழரசு தனியாக நிற்க விரும்பி பிடிவாதம் பண்ணியபிறகு, இங்கே பச்சைத் தண்ணீர் குடிப்பது கூட தவறுதான் என்றுபுரியவில்லையா? -

    ஜே.கே மகனுக்கு உணர்த்த விரும்பினர்.

    அதுவும் சரிதான், இப்போது என்னை தனியாய் என்காலில் நிற்க அனுமதிக்கிறீர்கள்.அப்படிதானே."

    தன் காலில் நின்று சம்பாதிக்கத் துடிக்கும் இளைஞன் தமிழரசு கோடீஸ்வரர் ஜே.கே.யின் ஒரேபுதல்வன் தந்தையின் நிழல் தனக்கு வேண்டாம் என்று சுயமாக சம்பாதிக்க துடிக்கும் புதல்வன்தான் தமிழரசு. பணக்கார வட்டத்திலும், நாகரீக சிந்தனைமிக்க இளைஞன் தமிழரசு.

    இந்த கணினி யுகத்தில் பல பணக்கார இளைஞர்கள் நமது பண்பாடு, ஒழுக்கம், கலாச்சாரம் என்ன என்பதை மறந்து, மது மாது என்று அலைகின்றவர்கள் மத்தியில் தமிழரசு வியாபார உலகில் ஜெயிக்கவேண்டும் என்று உறுதியோடு செயல்படுகின்றவர். தன் நண்பன் திலக் உதவியுடன் தன் பிஸினஸ் தொடங்குகின்றான்.

    "மெய் வருத்தம் பாரார், பசிநோக்கார்

    கண்துஞ்சார், கருமமேகண்ணாயினர்".

    என்ற நீதி நெறி விளக்கம் பாடலின் கருத்துக்கு ஏற்ப உத்வேகத்தோடும், முழு மூச்சோடும் தன் பிஸினஸில் இறங்கி வெற்றி கொடிநாட்டினான் தமிழரசு.

    தந்தை ஜே.கே தன்மகன் வழிதவறி தப்பான முடிவு எதுவும் எடுத்துவிடக் கூடாது என்று, ஒரு தந்தைக்கே உரியபாசம், பரிதவிப்போடு மகனை கண்காணித்து வந்தார். எத்தனை பெரிய பிஸினஸ் மேனாக இருந்தாலும் ஒரு பொறுப்பான தந்தை ஜே.கே.

    இறுதியில் மகன் பிஸினஸ் உலகில் ஜெயித்துவிட்டான் என்று பத்திரிக்கை அவார்டு நடத்தும் நிகழ்ச்சியில் தமிழ்அரசுவின் பொற்றோரை அவனுக்கு அவார்டு கொடுக்கவைக்கும்,அந்த பாராட்டுவிழாவில் தமிழ்அரசுவின் பெற்றோர் மட்டுமல்ல, வாசிக்கின்ற அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருகின்றது.

    "மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

    என்னோற்றான் கொல்எனும் சொல்"

    வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப தமிழரசு பிஸினஸ் உலகில் உயர்ந்து தனது தந்தை ஜே.கேக்கு பெருமையையும், சிறப்பையும் தேடிதந்துள்ளான்.

    தமிழரசு என்ற காற்றுக்கு முகவரி கிடைத்துவிட்டது.

    இந்தபுதினம் பல இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும்.

    இரஜகை நிலவனின் எழுத்துப் பணி மென்மேலும் வளர இறைவனின் ஆசியோடு அவரை வாழ்த்துகிறேன்.

    இவண்

    திருமதி. ராணி முத்துராஜ்,

    இலக்கிய சொற்பொழிவாளர்,

    பட்டிமன்ற நடுவர்.

    அணிந்துரை!

    அன்பு நண்பர் இரஜகை நிலவன் அவர்களின், முகவரி தேடும் காற்று என்னும் புதினம் அவரை சிறந்த சமூக ஆர்வலர் என்பதையும் உள்ளங்களுள் சென்று ஆராயும் உளவியலார் என்பதையும் தெளிவாக காட்டியுள்ளது.

    என்றும் அன்புடன்…

    ஆசிரியர்,

    அந்தோனி ஜேம்ஸ் பெலார்மின்

    உதவிப்பொருளாளர்.

    என் வாசிப்பின் நேசத்திற்கு...

    நான் எழுதிய கதையை வாசிப்பதற்காக…

    என் நூலைத் தேடிய அன்பு வாசகருக்கு…

    என் கனவுகளைத் தேடிய நேசத்திற்கு…

    முதலில் மகிழ்ச்சிகளும் வாழ்த்துக்களும்…

    இது தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் ஒரு மிகப்பெரிய சவால் விடும் விழா. மகன் தன் காலில் நிற்பேன் என்று சவால் விட்டு வீட்டை விட்டு வெளியேறி வெற்றி பெற்றானா? என்ற கேள்வியில் எழுந்த புதினம்.

    இதில் ஒரு நிமிடம் நின்று தந்தையை பார்த்த தமிழரசு,இந்த யுத்தம் ஆரம்பித்து ஒரு வருடமாகிவிட்டது அப்பா. நான் கல்லூரி முடித்தவுடன் உங்களிடம் கேட்டேன். அன்று நீங்கள் தனித்துச் செயல் பட அனுமதித்திருந்தால் நான் இன்று ஒரு அஸ்திவாரமாவது அமைத்திருப்பேன். இப்படியே நீங்கள் உங்கள் பிஸினஸ் சாம்ராஜ்யத்திற்குள் இழுத்துப் போட்டுவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள்."

    ஒன்று உங்களுக்குத் தெரியுமா? நான் எங்கே போனாலும் ஜே.கே. அங்கீகாரம் என்னைத் துரத்துகிறது. ஜே.கே.சாரின் மகன் என்பதால் பல சலுகைகள் எதிர் பார்க்காமலே மடியில் வந்து விழுகிறது. எனக்காக என்று விருத்தியடையச் செய்த உங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை நீங்களே கட்டிக் கொண்டு கொண்டாடுங்கள். நான் தமிழரசாக அடையாளப்பட வேண்டும்.அதற்கு எனக்குள்ள அத்தனையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். என்றான் அரசு.

    தனியாகப் போனால் செத்துப் போவாய் அரசு. அப்பாவிடம் சவால் விட்டு வந்தோமே... இனி எந்த முகத்தோடு போவோம் என்று வருந்தியே காணமல் போய்விடுவாய். உனக்காக நான் வளர்த்து வைத்திருக்கின்ற சாம்ராஜ்யத்தை விரிவாக்கு. ஜெயக்குமாரின் பெயரைத் தகர்த்தெரிந்து விட்டு புதிய சாதனைகளை செய்து காட்டு. எந்த நாடுகளிலெல்லாம் இன்றும் உன் தந்தையால் காலடி வைக்க முடிய வில்லையோ அங்கே போய் கொடி நாட்டு. அதை விட்டு விட்டு ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாய் என்றுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சிரித்துக் கொண்டே சொன்னார் ஜே.கே.

    என்று போராட்டம் ஆரம்பிக்கிறது….

    நான் எழுதிய இந்தக்கதையை வாசித்து விட்டு விமரிசனம் கூறுங்கள்...குட்டுங்கள்…திட்டுங்கள்… முதுகில் தட்டுங்கள்… கிரீடம் சூட்டுங்கள்...

    ஆம்... ஆனால் கண்டிப்பாக விமரிசனம் தாருங்கள்.

    இந்த நவீனத்தை மும்பை போஸ்ட் இதழில் வாராவாரம் தொடர்கதையாக வெளியிட்ட அதன் ஆசிரியர். திரு. ராஜா வாய்ஸ் ஆருயிர் நண்பர் திரு. அ. வேலையா, சகோதரி திருமதி. கீதாவேலையா, திரு. கார்த்திக் வேலையா அவர்களுக்கும், பல பல நன்றிகள்.

    மேலும் உங்கள் கைகளில் இப்புத்தகம் இத்துணை அழகாக தவழ, அன்புடன் உதவிய என் மூத்த அடுத்த தலைமுறை (அன்பு மகன்) திரு. பிலிப் வினிங்ஸ்டன் (பொறியாளர்) அவர்களுக்கும் கோடி கோடி நன்றிகள்.

    உங்கள் நாள் நல்ல நாளாக மாறிட…

    வாழ்த்துக்கள்…

    Enjoying the preview?
    Page 1 of 1