Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thengaimoodi Athisayam
Thengaimoodi Athisayam
Thengaimoodi Athisayam
Ebook133 pages1 hour

Thengaimoodi Athisayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமுதாயத்தில் மற்றும் வாழ்க்கையில் நாம் காணும் யதார்த்தமான அல்லது விந்தையான முரண்பாடுகள் நல்ல கதைகளுக்கு கருவாக அமைகின்றன. கம்ப்யூட்டர் என்றால் ‘கிலோ என்ன விலை?’ என்று கேட்கும் மனைவி பிறிதொரு நாளில் தகவல் தொழில்நுட்ப விற்பன்னரான தன் கணவரைப் பற்றி, ‘அவருக்கு இந்த டெகனாலஜிலாம் அவ்வளவா வராது,’ என்று தோழிகளிடம் பீற்றிக் கொள்வதும் இப்படிப்பட்ட முரண்பாடு. இதன் நகைச்சுவை முதலில் நம்மை சிரிக்க வைத்தாலும், அவளது கூற்றில் உள்ள முரண்பாடும், யதார்த்தமும் ஒருங்கே நம்மை சிந்திக்க வைக்கின்றன. இப்படிப்பட்ட கதைகள்தான் வாசகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. “தேங்காய்மூடி அதிசயம்” என்னும் இந்த தொகுப்பு தமிழில் என் முதல் புத்தகம். இதில் உள்ள கதைகள் சிறிய சிறுகதைகள் என்னலாம். இவை யாவுமே வேகமான நடையை கொண்டவை. அனைத்துக் கதைகளுமே முன்னுரை, நடப்பு, முடிவுரை என்ற பாரம்பரிய அமைப்பு இல்லாமல், வாசகர்களை நடப்பினுள் உடனடியாக இழுத்துச் சென்று, திடுமென முடியும் அமைப்பை கொண்டவை. சில கதைகள் ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டவை; சில சிரித்து ரசித்து, சிறிது சிந்திக்க வாய்ப்பளிக்கும் வகை; சில “அடப்பாவமே!” அல்லது “அடப்பாவி!” என்று அதிரவைக்கும் வகை.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580150307773
Thengaimoodi Athisayam

Read more from Dr. R.C. Natarajan

Related to Thengaimoodi Athisayam

Related ebooks

Related categories

Reviews for Thengaimoodi Athisayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thengaimoodi Athisayam - Dr. R.C. Natarajan

    https://www.pustaka.co.in

    தேங்காய்மூடி அதிசயம்

    Thengaimoodi Athisayam

    Author:

    ஆர். சி. நடராஜன்

    Dr. R.C. Natarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-rc-natarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    ராகிங்

    அமிர்தவல்லி

    உரையாடல்

    கோபம்

    தேங்காய்மூடி அதிசயம்

    துணை

    பண்டிதர் 420

    பாவ மன்னிப்பு

    பெற்ற மனம்

    லஞ்சத்துக்கு பஞ்சமா?

    மீசை முறுக்கி

    1930ல் ஒரு விபத்து

    இந்த நூலில் தரப்பட்டுள்ள படங்கள் யாவும் Bitmoji என்னும் Appஐ பயன்படுத்தி, கதாசிரியரால் உருவாக்கப்பட்டவை.

    முன்னுரை

    சமுதாயத்தில் மற்றும் வாழ்க்கையில் நாம் காணும் யதார்த்தமான அல்லது விந்தையான முரண்பாடுகள் நல்ல கதைகளுக்கு கருவாக அமைகின்றன. கம்ப்யூட்டர் என்றால் ‘கிலோ என்ன விலை?’ என்று கேட்கும் மனைவி பிறிதொரு நாளில் தகவல் தொழில்நுட்ப விற்பன்னரான தன் கணவரைப் பற்றி, ‘அவருக்கு இந்த டெகனாலஜிலாம் அவ்வளவா வராது,’ என்று தோழிகளிடம் பீற்றிக் கொள்வதும் இப்படிப்பட்ட முரண்பாடு. இதன் நகைச்சுவை முதலில் நம்மை சிரிக்க வைத்தாலும், அவளது கூற்றில் உள்ள முரண்பாடும், யதார்த்தமும் ஒருங்கே நம்மை சிந்திக்க வைக்கின்றன. இப்படிப்பட்ட கதைகள்தான் வாசகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    தற்கால தொழில்நுட்பத்தால் அடிபட்டது மனிதர்கள் மட்டுமல்ல; பழக்க வழக்கங்களும்தான். எல்லாமே வேகம்; எதிலும் வேகம். இந்த வேகத்தை துவக்கியது கூகுள்தான் என்பதில் ஐயமில்லை. கூகுளில் ஒரு விஷயம் இல்லை என்றால் அப்படி ஒரு நிகழ்வே இல்லை, என்று மக்கள் சத்தியம் செய்யும் மனப்பான்மையும், எதையுமே இந்த நொடியிலேயே எதிர்பார்க்கும் வேகமும் நம்மிடையே வியாபித்துள்ளது. இந்த வேகம் வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் பரவி, இந்த காலக்கட்டத்தையே post Googlist era என்று கூறுமளவிற்கு மாற்றியுள்ளது. எனவேதான் எனது முதல் ஆங்கிலப் படைப்பை "Post Googlism and Other Short Stories," என்ற பெயரில் வெளியிட்டேன்.

    படிக்கும் பழக்கம் நம்மிடையே குறைந்து வருகிறது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது உண்மைதானா என்று எந்த ஆராய்ச்சியும் நிரூபித்ததாகத் தெரியவில்லை. முன்பு இருந்ததைவிட இப்போது அதிக புத்தகங்கள் சந்தையில் விற்பனை ஆவதைக் காண்கிறேன். எப்போதுமில்லாத அளவு, கட்டுரைகள் இப்போது பரவலாக வலம் வருகின்றன. ஏகப்பட்ட வலைப்பதிவுகள் (blogs) வலைதளத்தில் காணப்படுகின்றன. எனவே, படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்னும் கருத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

    ஆனால், படிக்கும் பழக்கத்தின் தரம் வேறுபட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. கட்டுரைகளின் நீளம், கதைகளின் கனம் மற்றும் நீளம் இவை யாவுமே முன்பிருந்ததைவிட லேசாகவும் குறுகியதாகவும் மாறிவிட்டன. டால்ஸ்டாய், ஆஸ்கார் வொய்ல்டு, தோஸ்தோவெஸ்கி, மாக்ஸிம் கார்க்கி, சோமர்செட் மாம் போன்றவர்களின் கனமானமான எழுத்துக்கள் இப்போது தென்படுவதில்லை. தமிழிலும் தி.ஜானகிராமன், லாச.ராமாமிர்தம், ஜெயகாந்தன், சிவசங்கரி, சாவி, கி. ராஜநாராயணன் போன்றவர்களின் ஆழமான கதைகள் போல தற்காலத்தில் காண்பது வெகுவாக குறைந்துவிட்டது.

    படிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாகிவிட்டனர். ஆனால், வாழ்க்கைத்தரம் வேறுபட்ட இந்த காலக்கட்டத்தில், வாசகர்களின் நேரம் இப்போது குறுகிவிட்டது. இன்னமும் வாசகர்கள் கனமான, ஆழமான கதைகளை விரும்புகிறார்கள். உண்மைதான். ஆனால், அத்தகைய கதைகளும்கூட வேகமாக நகர வேண்டும் என்ற தேவையும் அதிகரித்துள்ளது. கனமான கருத்துள்ள கதைகளை வேகமான நடையில் தரமுடியாது என்று கட்டாயமில்லையே. கேட்பதற்கு முரண்பாடு போல தோன்றினாலும், உண்மையில் இரண்டையும் கலப்பது சாத்தியமே. இதுதான் என் கதாசிரிய முயற்சியின் ஆரம்பம்.

    "தேங்காய்மூடி அதிசயம் என்னும் இந்த தொகுப்பு தமிழில் என் முதல் புத்தகம். இதில் உள்ள கதைகள் சிறிய சிறுகதைகள் என்னலாம். இவையாவுமே வேகமான நடையை கொண்டவை. அனைத்துக் கதைகளுமே முன்னுரை, நடப்பு, முடிவுரை என்ற பாரம்பரிய அமைப்பு இல்லாமல், வாசகர்களை நடப்பினுள் உடனடியாக இழுத்துச் சென்று, திடுமென முடியும் அமைப்பை கொண்டவை. சில கதைகள் ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டவை; சில சிரித்து ரசித்து, சிறிது சிந்திக்க வாய்ப்பளிக்கும் வகை; சில அடப்பாவமே! அல்லது அடப்பாவி!" என்று அதிரவைக்கும் வகை.

    எழுத்தில் எனது மானசீக ஆசான் சுஜாதா என்றழைக்கப்படும் காலம்சென்ற திரு. ஸ்ரீரங்கம் ரங்கராஜன் அவர்கள்தான். அவரிடமிருந்து சிறுகதை எழுதுவதைப்பற்றி நான் கற்ற முக்கியமான அம்சம் என்ன என்றால் வாசகர்கள் புத்திசாலிகள்; கதாசிரியனின் விவரணை அவர்களுக்கு அவசியம் இல்லை; அவர்களால் கதையின் சூழலை அதில் வரும் நிகழ்ச்சிகள், மற்றும் உரையாடல்கள் மூலம் புரிந்துக்கொள்ள முடியும். எனவே, என் கதைகளில் விவரணை அதிகம் இருக்காது. உரைநடை மிகுந்து காணப்படும். இது வாசகர்களுக்கு வேகமாக படிப்பதை எளிதாக்கும் என்று நான் தீவிரமாக கருதுகிறேன்.

    ஒரு எழுத்தாளனின் முதல் கதை உருவாவதற்கு ஏதேனும் ஒரு நிகழ்ச்சி அல்லது நிகழ்வு உந்துதலாக இருக்கும். ஆனால், அவன் கதாசிரியனாக வடிவம் பெற ஒரு நேர்மையான விமர்சகர் அவசியம். திரு. அருள்மணி என்ற அப்படிப்பட்ட ஒரு தோழர் நாற்பது ஆண்டுகளாக என் வாழ்க்கையில் கிடைத்திருப்பது என் பாக்கியம். என் கதைகளை பொறுமையாக படித்து, ஊக்குவித்து, விமர்சித்து சமுதாயத்துடன் பகிரும் தைரியத்தை கொடுத்த அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

    இதேபோல, சில கதைகளை படித்து, அறிவுப்பூர்வமாக அவற்றில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி திருத்த வைத்து மெருகேற்றிய நான் சந்தித்திராத நண்பர் சிதம்பரம் ராமகிருஷ்ணா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

    தமிழில் முன்னூறுக்கும் மேற்பட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1