Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Cycle Bhagavathar
Cycle Bhagavathar
Cycle Bhagavathar
Ebook128 pages1 hour

Cycle Bhagavathar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுகதை என்பது பொதுவாக ஒரு முரணை (Irony) வெளிப்படுத்தும்போது சிறுகதை சுவாரசியமாக அமைகிறது. கதை முடிவில் படிப்பவர்கள் மனதில் ஒரு சிறிய அதிர்வு ஏற்பட்டு மனச்சலனத்தை ஏற்படுத்துகிறது.

என் கதைகளில் என்னால் இயன்றவரை இவற்றை தரமுயன்றுள்ளேன். இந்த கதைகள் எந்தவித நீதி நியதிகளையும் போதிப்பதற்காக எழுதப்பட்டவை அல்ல. முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டவை. படிப்பவர் மனதில் ஒரு சிறிய தாக்கம் ஏற்படுத்த முயன்றிருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580150307883
Cycle Bhagavathar

Read more from Dr. R.C. Natarajan

Related to Cycle Bhagavathar

Related ebooks

Reviews for Cycle Bhagavathar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Cycle Bhagavathar - Dr. R.C. Natarajan

    https://www.pustaka.co.in

    சைக்கிள் பாகவதர்

    Cycle Bhagavathar

    Author:

    ஆர். சி. நடராஜன்

    Dr. R.C. Natarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-rc-natarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னே நீதி!

    ஓய்வு

    கல்நெஞ்சு கலியன்

    சாசுவதம்

    சுதந்திரதினப் பரிசு

    செக் மேட்

    செத்த எலி

    சைக்கிள் பாகவதர்

    தொற்று

    நம்மில் ஒருவன்

    நிச்சயதார்த்தம்

    நெஞ்சில் கைவைத்து

    வெஜிட்டேரியன்

    வயிற்றுக்கு உணவில்லாத போழ்து...

    இந்த நூலில் தரப்பட்டுள்ள படங்கள் யாவும் Bitmoji என்னும் Appஐ பயன்படுத்தி, கதாசிரியரால் உருவாக்கப்பட்டவை.

    முன்னுரை

    இந்த கதைத் தொகுப்பில் பலவித உணர்ச்சிகளைத் தரும் கதைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். பொதுவாக, ஒரு எழுத்தாளன் அல்லது கதாசிரியன் தான் வாழ்க்கையில் பார்த்த, கேட்ட, அனுபவித்த நிகழ்ச்சிகளையும், அதனுடன் சிறிது அல்லது அதிகமாகவே கற்பனைகளையும் கலந்து ஒரு கதையாகக் படைக்கிறான். அறிவியல் கதைகளுக்கும் மட்டும் இந்த விளக்கம் பொருந்தாது. சமுதாயக் கதைகளுக்கும் இது மிகவுமே பொருந்தும்.

    கதைகளில் வரும் பாத்திரங்களும் அப்படித்தான் உருவாகின்றன. முழுக்க முழுக்க கற்பனை பாத்திரம் என்பது மிகவும் அரிது. வடிக்கப்படும் பாத்திரங்கள் நான் எப்போதோ எங்கேயோ சந்தித்த அல்லது பார்த்த மனிதரளின் குணாதிசயங்களை ஒருமாதிரியாக கலந்து உருவாக்கியவைதான். பாத்திரங்கள் கற்பனைதான்; ஆனால் அவர்களின் குணங்கள் நம்மில் பலரிடம் இங்கும் அங்கும் காணப்படும் குணங்களின் கலவை பரிணாமங்களே.

    உதாரணமாக் சைக்கிள் பாகவதர் எடுத்துக்கொண்டால், என் பள்ளி ஆசிரியர் ஒருவரின் நற்குணங்கள் அனைத்தும் ஒன்று கூடிய ஓர் உபன்யாசகர். கல்நெஞ்சு கலியனை என் வேலை அனுபவத்தில் நான் கண்ட சில மிராசுதார்களின் கலவையால் உரிவாக்கியிருக்கிறேன். எனவே, ‘இப்படியும், ஒருவன் இருக்க முடியுமா?’ என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றினால் இந்த விளக்கம் அதற்கு பதிலைத் தரும்.

    சைக்கிள் பாகவதர் கதையை என் தகப்பனார் திரு ம.ந.ராமசாமி (தமிழில் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளவர்) வேறு மாதிரியாக என்னிடம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் விவரித்ததை அடிப்படையாக வைத்து எழுதினேன். ஆனால் அதில் வரும், நிகழ்ச்சிகள் என்னவோ என் கற்பனையே

    தொற்று ஒரு உண்மை நிகழ்வு. அது கதையாக படைப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. வெஜிட்டேரியன் கதையும் அப்படியே. சிறிது மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை.

    ஆர். சி. நடராஜன்

    F:\Dr RCN Data on 01 March 2012\C drive\Mydocuments Data\POST RETIREMENT\SHORT STORIES\TAMIL\FOR PUSTAKA\BOOK 04\pictures\WhatsApp Image 2021-11-14 at 10.23.06 AM.jpeg

    என்னே நீதி!

    நம்பர் 1437/2021… மாநில அரசுக்கும் … திருமதி பத்மாவதி ராமனாதனுக்கும் இடையே

    ஒரு பெண் போலீஸ் அதிகாரி பத்மாவதியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார்.

    சொல்லுங்க சண்முகம், ஜட்ஜ் முத்துரத்தினம் வினவினார்.

    அரசு வக்கீல் எழுந்து, கணவரை நல்லா தாக்கியிருக்காங்க இவங்க, யுவர் ஆனர்.

    கணவர் எப்படியிருக்கார்?

    அதோ, அங்கே இருக்காரு, யுவர் ஆனர்.

    ராமனாதன் தலையில் பெரிய பாண்டேஜும், ஒரு கை தூளியிலும், ஒரு கால் பாண்டேஜிலும் காணப் பட்டார்.

    என்னம்மா? நீ இப்படி செஞ்சது உண்மையா?

    பத்மாவதி தலை கவிழ்ந்தாள். அவள் அழுவதற்கு ஒரு நிமிடம் நேரம் தந்துவிட்டு முத்துரத்தினம், ஏம்மா இப்படி பண்ணே?

    இருபத்தெட்டு வருட நரகவேதனை ஐயா.

    மேல சொல்லு. அப்படி என்ன ஆச்சு?

    தரைல உக்காந்துக்கிட்டு முதுகு ஒடிய பாவக்காயை நறுக்கி பொரியல் செஞ்சா, அதை தொட்டுக் கூட பார்க்காம, தயிர்சோறும் ஊறுகாயும் சாப்பிட்டுட்டு வேலைக்கு போறாரு.

    அஹ்? முத்துரத்தினத்திற்கு சிறிது தூக்கிவாரிப் போட்டது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை.

    சரி, வித்தியாசமா இருக்கட்டுமேன்னு கையொடிய கோதுமை மாவை பிசைஞ்சு, ராத்திரிக்கு சப்பாத்தி செஞ்சு போட்டா, சோறு போறும்னு சப்பாத்தியை தொடர்து கூட இல்லை.

    ஓ?

    புடலங்காய் பொரியல் செஞ்சா, உருளைக் கிழங்கு சிப்ஸை தொட்டுக்கிட்டு சாப்பிடறாரு.

    அப்படியா? பேனாவை கீழே வைத்துவிட்டு கவனிக்கத் துவங்கினார்.

    ரவையை கிண்டி, காரட், தக்காளி, பட்டாணி, காலிஃப்ளவர், வெங்காயம் இதெல்லாம் போட்டு உப்புமா செஞ்சா கார்ன்ஃப்ளேக்ஸ்ல பாலை ஊத்தி சாப்பிட்டுட்டு ஆஃபீஸ் போயிடறாரு.

    ஐ ஸீ.

    வெண் பொங்கல் செஞ்சு போட்டா திரும்பிக் கூட பார்க்கலை.

    அடேடே!

    டீ போட்டுக் குடுத்தா குடுகுடூன்னு போய் மோர்ல உப்பு, பெருங்காயம் போட்டு குடிச்சுட்டு வராரு. டீயை தொடர்தே இல்லை.

    ஓஹோ!

    நேத்திக்கு இட்லி செஞ்சேன். கரெண்ட் இல்லை. அதுனால சட்னி செய்ய முடியலை. மிளகாப்பொடி போட்டுக்கிட்டு சாப்பிடுங்கன்னேன். அப்படியே வெச்சுட்டு, கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிடறேன்னாரு. நீங்களே சொல்லுங்க, கோபம் வருமா வராதா? இது சித்திரவதைதானே?

    ராமனாதன், இந்த கூண்டுல வந்து நில்லுங்க.

    ராமனாதன் கொஞ்சம் அதிகமான தள்ளாட்டத்துடன் கூண்டில் ஏறினார்.

    நீங்க அவங்க கணவர்தானே?

    ஆமாம், யுவர் ஆனர்.

    அவங்க சொன்னதெல்லாம் சரியா?

    சரியே, யுவர் ஆனர்.

    ஏங்க அப்படி செய்யறீங்க?

    "வாய்ல வைக்க முடியலை,

    Enjoying the preview?
    Page 1 of 1