Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Twist Kathaigal
Twist Kathaigal
Twist Kathaigal
Ebook241 pages2 hours

Twist Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126704268
Twist Kathaigal

Read more from Ra. Ki. Rangarajan

Related to Twist Kathaigal

Related ebooks

Reviews for Twist Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Twist Kathaigal - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    ட்விஸ்ட் கதைகள்

    Twist Kathaigal

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.கெளரதை

    2. டி.வி.யில் உன்னைக் கண்டது முதல்...

    3. அடிபடுவதற்கு ஒரு குழந்தை

    4. ஓடிப் போன ரகுநாத்

    5. பையனுக்கு இனாம்

    6. பிடி கற்கண்டும் துளி பன்னீரும்

    7. பக்கத்து சீட்டில்

    8. ரங்கம்மாவின் பிள்ளை

    9. செய்தி

    10. என் பிரிய மனைவி

    11. முசுடு

    12. கன்ட்டின்யூட்டி

    13. முடிவு

    14. அம்மா அங்கே! கணேசு இங்கே!

    15. டாக்டர் சொல்லி விட்டார்

    16. பாலா

    17. 65 வருட உறுத்தல்

    18. காத்திருக்க நேரமில்லை

    19. ஆண்களே அப்படித்தான்!

    20. நிலா நனையுமா?

    21. நான் கல்யாணம் செய்து கொள்ளலாமா?

    1.கெளரதை

    மேம்பாலத்தில் இறங்கி, ஜெயா டி.வி. ஆபீஸுக்கும் கல்கி ஆபீஸுக்கும் நடுவே ஓர் இடத்தில் சவாரியை இறக்கி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். மணி பத்தரைக்கு மேலாகி விட்டது. உதயம் தியேட்டருக்கு அருகே போனால் அடுத்த சவாரி கிடைக்கலாம்.

    ஆனால், இரவு நேரத்தில் இனிமேல் சவாரி ஏற்றக் கூடாது என்று எண்ணியிருந்தேன்.

    ஒரு விளக்குக் கம்பத்தின் அரை வெளிச்சத்தில் நின்றிருந்த அந்த ஆள் கையைக் கொஞ்சமாக உயர்த்தி - 'ஆட்டோ... ஆட்டோ...' என்று கூப்பிட்டான். கண்கள் செருகின மாதிரி தெரிஞ்சுது. ஃபுல் ஷர்ட். பொத்தான்களைத் தப்பாகப் போட்டு இருந்ததால் சட்டை மேலும் கீழுமாக இருந்தது. நிறுத்தினேன்.

    ஆள் அரை போதையில் இருப்பது நன்றாகவே தெரிந்தது. குடிகாரர்களை வண்டியில் ஏற்றினால் வம்புதான். ஆனாலும் இவனைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. பிளேடைக் கண்டு பத்து நாளான முகம். சீப்பைக் கண்டு பல நாளாகிவிட்ட நரை முடி. நாற்பது வயதிருக்கும். வாழ்ந்து கெட்டவன்.

    எங்கே போகணும்? என்றேன்.

    அண்ணா நகர் இல்லே, அண்ணா நகர்? அதான் அண்ணா நகர் குடிகாரர்களின் வழக்கப்படி எதையும் இரண்டு தரம் சொன்னான்.

    அண்ணா நகரிலே எங்கே? என்றேன்.

    அட்ரஸா?... ஞாபகம் இல்லே.... அதிகமாய்க் குடிச்சிட்டேன், பாரு...

    இதற்குள் ஒரு போலீஸ்காரர் நெருங்கி வந்து, ஊம், ஊம்..... வண்டியை எடு என்று கைத்தடியால் ஆட்டோவைத் தட்டினார்.

    ஏறிக்க என்று அந்த ஆளை ஏற்றிக் கொண்டேன்.

    அவன் ஓரமாக உட்கார்ந்து கொண்டு சாய்ந்தான். நகர்ந்து நடுவிலே உட்கார்ந்துக்க. விழுந்திடப் போறே என்று அதட்டலாகக் கூறிவிட்டு,

    அட்ரஸே ஞாபகம் இல்லேங்கறே. எப்படி வீட்டுக்குப் போவே? என்றேன்.

    கோயில் பக்கமா இறக்கிடு. அப்பாலே வழி தெரிஞ்சிடும்.

    ஐயப்பன் கோயிலா?

    இல்லே, இல்லே.

    மாகாளியம்மன் கோயிலா?

    'இல்லே இல்லே. பெரிசாய், கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ் தாண்டி... புரியலே? என்ன நீ ஆட்டோ ஓட்டறே?"

    ஈஸ்வரன் கோயிலா?

    ஆ! கரெக்ட். சும்மா கேட்டுக்கிட்டே இருக்காதே. எனக்குத் தூக்கம் வருது... தூக்கம். ஆளை விடு.

    இரு, இரு, தூங்காதே என்றேன் உடனே. தூங்கி விட்டால் எழுப்பி இறக்கி விடுவது பெரிய பிரச்னையாகி விடும்.

    தூங்கக் கூடாதுன்னா சொல்றே? தூங்கக் கூடாது. அதானே? பேசிட்டே வர்றேன். நீ ஏதாச்சும் கேளு. நான் பேசிட்டே வரேன். அப்ப தூக்கம் வராது.

    என்ன கேட்கச் சொல்றே?

    அதான் சொன்னேன்ல? எதினாச்சும் கேளு. என் பொண்டாட்டியைப் பத்திக் கேளு. ஆறு வயசிலே பையன் இருக்கான். அவனைப் பத்திக் கேளு. எதினாச்சும் கேளு.

    பெண்டாட்டி பிள்ளையோடதான் இருக்கியா?

    அவன் கோணலாகச் சிரித்தான். எவ என்னோட குடித்தனம் பண்ணுவா? ஒருநாள் போயிட்டாள். போயிட்டாள்னா பிள்ளையையும் அழைச்சிட்டுப் போயிட்டாள். போயே போயிட்டாள். அதான் சொன்னேனே, எவ என்னோட இருப்பா?

    அவன் மெளனமாகி விட்டான். தூங்கி விட்டானோ என்று எனக்குப் பயம் ஏற்பட்டது. சொல்லு, அப்பாலே?

    அப்பாலே என்ன? என்று அவன் சொன்னபோது, மெளனமாக அழுது கொண்டிருந்தான் என்று கரகரத்த குரல் காட்டியது. மூக்கை உறிஞ்சினான்.

    அவளை ரொம்பக் கொடுமைப்படுத்திட்டேன். பாவம், எப்படி என்னோட இருப்பா? போயிட்டாள்.

    தினம் குடிச்சிட்டு வந்து அடிப்பியாக்கும்?

    நீ ஒண்ணு. அடி உதைன்னா தாங்கிப்பா. அண்ணா நகர் வந்திருச்சா? வெளிச்சமா தெரியுதே?

    நூறடி ரோடு... அதான் வெளிச்சம் என்றேன்.

    அடி உதைன்னா தாங்கிப்பாங்கறியே? அப்பாலே என்ன?

    பிள்ளையைப் போட்டு உசிரை எடுத்தேன். இல்லே? நீயே சொல்லு. எந்த அம்மாவாச்சும் அதைத் தாங்கிக்குமா? அம்மான்னா அம்மாதானே?

    ஆமாம், ஆமாம். பிள்ளையை ஏன் அடிக்கணும்?

    கெளரதைன்னு ஒண்ணு இருக்குதில்லே? மனுஷனா பொறந்தா கெளரதையைக் காப்பாத்திக்கணும். கெளரதை ரொம்ப முக்கியம். அதைக் கெடுத்தால் பொறுத்துக்க முடியுமா? என்ன நான் சொல்றது?

    ஆறு வயசுப் பிள்ளை எப்படி உன் கெளரதையைக் கெடுக்கும்? அப்பன் குடிகாரன்னு எல்லார் கையிலேயும் போய்ச் சொன்னானா? என்றேன்.

    எந்த இடம் இது? கண்ணே தெரியலை. ரொம்ப ஊத்திக்கிட்டேன் போலிருக்கு என்று சொல்லிவிட்டு, சம்பந்தமில்லாமல் ஏதேதோ முனகினான். பிறகு, பிள்ளை மட்டுமா? பொண்டாட்டியும்தான் சேர்ந்துகிட்டாள். வெவரமா சொன்னா தான் உனக்கு விளங்கும். ஒரு நாள் ஃபாக்டரியிலே வேலை பார்த்திட்டு வீட்டுக்கு வர்றேன். என் பொண்டாட்டி, பையனைப் பக்கத்திலே வச்சுக்கிட்டு, நோட்டுப் பொஸ்தகத்திலே ரப்பராலே அழிச்சிட்டிருக்கா. 'என்னடி அழிக்கிறே?'ன்னு கேட்டா என்ன சொல்றா தெரியுமா? கயிதை, கயிதை! நாயி!

    என்ன சொன்னாள்?

    பையனுக்கு நோட்டுப் பொஸ்தகம் தீர்ந்திருச்சாம். கடையிலே போய்க் கடன் கேட்டாளாம். அவன் கொடுப்பானா? காசு இல்லாமல் எவன் கொடுப்பான்? அதனாலே இவ வீட்டுக்கு வந்து பழைய நோட்டிலே பென்சிலாலே எழுதினதெல்லாம் அழிச்சுட்டு, இதைப் புது நோட்டா வெச்சுக்கடான்னு சொல்லிட்டிருக்கா. பார்த்துக்க... என் கெளரதை என்ன ஆவறது?

    ஏதோ பிள்ளையை நல்லாப் படிக்க வைக்கணும்னு ஆசை... என்றேன்.

    கரெக்ட். ஆனா, என் கெளரதை என்ன ஆவறது? பிள்ளை படிக்கணும்னா, கிரிக்கெட் விளையாடறதுக்கு விடலாமா? அது கெளரதையா? என்று அவன் சிடுசிடுத்தான்.

    பையன் கிரிக்கெட் விளையாடறதுல உன் கெளரதை என்ன குறைஞ்சு போச்சு? என்றேன்.

    சொம்மா விளையாடினா சரி... டி.வி-யில் காட்டறாங்க இல்லே? பக்கத்து வீட்டுக்குப் போய், அதைப் பார்த்துக்கிட்டிருக்கான். அங்கே போனா, காலை உடைச்சிடுவேன்னு சொல்லிட்டேன். அடுத்த வீட்டுக்குப் போய் டி.வி. பார்த்தால், கெளரதை என்ன ஆவறது? என்று பழைய பல்லவியை மறுபடி எடுத்துக் கொண்டான் அவன்.

    அதுக்காகப் பையனை அடிச்சியாக்கும்?

    இல்லேல்லே... புரிஞ்சுக்காமப் பேசாதே... புரியுதா? புரிஞ்சுக்காமப் பேசக் கூடாது... என்றான் கோபமாக. தொடர்ந்து, ஒருநாள் பகல் வீட்டுக்கு வர்றேன். இந்தப் பையன் என்ன செய்யறான் தெரியுமா?

    அடுத்த வீட்டுக்கு கிரிக்கெட் பார்க்கப் போயிட்டானா?

    'இல்லே... ஜன்னல்ல காதை வெச்சு நின்னுக்கிட்டே இருக்கான். 'என்னடா?'னு கேட்டா, அங்கே டி.வி-யில கிரிக்கெட்ல சொல்வாங்க இல்லே.... அதென்னவோ..."

    ரன்னிங் காமெண்ட்ரி! என்று எடுத்துக் கொடுத்தேன்.

    ஆ! அதான்... அதேதான்.. விட்டேன் பாரு, ஒரு உதை! என் பொண்டாட்டி ஓடியாந்து என்னைப் பிடிச்சுத் தள்ளிட்டா. 'அந்த வீட்டுக்குத்தான் போகக் கூடாதுனு சொன்னே, போகலே... அவன் இங்கே நின்னுட்டுக் கேட்டுக்கிட்டிருக்கான். அப்பாலே ஏன் அடிக்கிறே?'னு சத்தம் போட்டா. 'போடி, சரிதான்'னு அவளையும் உதைச்சுத் தள்ளினேன்... என்றவன், அதென்ன... கலர்கலரா தெரியுது? என்றான்.

    பசங்க புஸ்வாணம் விடறாங்க... தீபாவளி வருதில்லே ? என்று விளக்கினேன்,

    ஆ... தீபாவளி! என்று உறுமினான். ஃபாக்டரியில போனஸ் கொடுத்தாங்க... நான் சொல்றது போன வருசம். கொடுக்க வேண்டியவங்களுக்குக் கொடுத்துட்டு, நானும் ஏதோ எனக்குக் கொஞ்சம் செலவழிச்சுட்டு... அம்பது ரூபாய் கொணாந்து அவ கையிலே கொடுத்து 'புடவை, பையனுக்குச் சட்டை, பலகாரம், பட்டாசு எல்லாம் வாங்கிக்க'ன்னேன்...

    ஐம்பது ரூபாய்க்குப் புடவை, சட்டை, பலகாரம், பட்டாசு...! என்று சிரித்தேன். சந்திரமௌலீஸ்வரர் கோயில் நெருங்கிக் கொண்டிருந்தது. இவனுக்கும் போதை தெளிந்து கொண்டிருந்ததால், இறக்கி விட்டுவிட நினைத்தேன்’’.

    தீபாவளிக்கு முந்தின ராத்திரி பார்க்கிறேன். வாசல்ல பொட்டிப் பொட்டியா மத்தாப்பு, பட்டாசு வெச்சுக்கிட்டுக் கொளுத்திட்டிருக்கான். 'ஏதுடா இத்தனை?'னு கேட்டா, 'ஜெயராம் கொடுத்தான்'- ங்கிறான்!

    'யார் ஜெயராம்?" என்றேன்.

    பணக்காரப் பிள்ளை. இவனோட ஃப்ரெண்டு! எப்படியிருக்கும் எனக்கு? நீயே சொல்லு.... எப்படி இருக்கும்? கெளரதையே போச்சு இல்லே... எல்லாத்தையும் சுருட்டிக் குப்பைத் தொட்டியில எறிஞ்சு, அவனையும் வுட்டேன் நாலு உதை... பொண்டாட்டி தடுக்க வந்தா. அவளையும் போட்டேன். கொஞ்சம் பொறுத்துப் பார்க்கிறேன்... ஒரு பொட்டியைத் தூக்கிட்டு, பையனையும் அழைச்சுட்டு வெளியே போறா. போறப்ப, 'சீ.. நீ மனுஷனா?'னு துப்பிட்டுப் போயிட்டா. போயிட்டாள்னா போயிட்டா. அதான் சொல்றேன் இல்லே, போயே போயிட்டா! - அவன் பழையபடி அழ ஆரம்பிக்கிற மாதிரி தோன்றியது.

    வண்டியை நிறுத்தினேன். அதான் கோயில்... வீடு தெரியுமா? நீயே போய்ப்பியா? என்றேன்.

    'கெளரதை முக்கியம்... என்ன, நான் சொல்றது? என்றபடி இறங்கியவன், சட்டைப் பையையும் பாண்ட் பாக்கெட்டையும் துழாவினான். ஐயோ கடவுளே... துட்டு இல்லையே?" என்றவன், இரண்டு வளையலை என்னிடம் நீட்டினான்.

    இதை வெச்சுக்க... சேட்டுகிட்டே கொஞ்சம் பணம் வாங்கலாம்னுதான் போனேன். கொடுக்க மாட்டேன்னுட்டான்... என்றான்.

    பார்த்த மாத்திரத்திலேயே தெரிஞ்சுது சேட் ஏன் பணம் கொடுக்கவில்லை என்று. அது பித்தளை வளையல்.

    காலையில வந்து துட்டு வாங்கிக்கிறேன். நீ போ... என்றேன்.

    அவன் தள்ளாடிக் கொண்டே போவதைச் சில நிமிடம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, வண்டியைத் திருப்பினேன். நாலு தெரு தள்ளி ஆட்டோ ஸ்டாண்ட் வந்தது. விளக்கு வெளிச்சம் இருந்தது. வண்டியை நிறுத்தி, சீட்டுக்கு அடியில் இருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.

    என்னைத் தவிர, ஒரே ஒரு ஆட்டோதான் ஸ்டாண்டில் இருந்தது. சோமு அண்ணன் பிடித்துக் கொண்டிருந்த பீடியை எறிந்து விட்டு இறங்கி வந்தார். சொந்த அண்ணன் மாதிரி என்னிடம் பிரியம் உள்ளவர். அப்பப்ப புத்தி சொல்வார்.

    இந்நேரத்துல வண்டி ஓட்டாதேனு எத்தினி வாட்டி சொல்லியிருக்கேன்? என்று அன்புடன் கடிந்து கொண்டார். நீ போறப்பவே கவனிச்சேன்... யாரோ குடிகாரன் மாதிரி தெரிஞ்சுது... அந்த மாதிரி ஆளுக்கெல்லாம் நீ சவாரி கொடுக்கலாமா?

    "ஏதோ பரிதாபமாயிருந்தது அண்ணே...' என்றேன்.

    தெரிஞ்ச ஆளா?

    ஆமாம்... உறவு!

    உறவா? என்ன உறவு?

    புருஷன் - முன்னாள் புருஷன்! என்றேன்.

    2. டி.வி.யில் உன்னைக் கண்டது முதல்...

    மணி எட்டு அடித்தது. சில நொடிகளில் தமிழில் செய்திகள் ஆரம்பமாகும்' என்ற அறிவிப்பு டெலிவிஷன் திரையில் தோன்றியது. அந்தப் பெண் செய்திகளை வாசிக்கத் தொடங்கினாள். அவள் குரல் கணீரென்று இருக்கவில்லை. கண்கள் ஈரத்தி வால் பளபளத்தன. அடிக்கடி செருமிக் கொண்டாள். 'மன்னிக்கவும்" என்று கேட்டுக் கொண்டாள்.

    ***

    குமாரி பானு அவர்களுக்கு,

    இந்தக் கடிதம் உங்கள் கையில் படபடவென்று துடித்தால் பயப்படாதீர்கள். என் இதயத் துடிப்பை அது ஏற்று வருகிறது.

    நேற்று இரவு எட்டு மணிக்குத் தங்கள் வலது கண் ஏன் சிவந்திருந்தது? உதடுகள் ஏன் துடித்துக் கொண்டிருந்தன? தொண்டை ஏன் கட்டிக் கொண்டிருந்தது? ஏன் அடிக்கடி இருமி, அடிக்கடி மன்னிக்கவும் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள்? ஏன் தங்களுடைய மனோகரமான புன்னகை எப்போதும் போல் இயற்கையாக வராமல் வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட மாதிரி இருந்தது?

    சென்ற எட்டுமாத காலமாக, நான் குடியுள்ள வீட்டின் மாடிக்குப் போய், வாரத்தில் மூன்று நாள் இரவு எட்டு மணி முதல் எட்டே கால் மணி வரை தங்கள் இனிய முகத்தை டி.வி.யில் பார்த்து வருகிறேன். மாடி வீட்டுக்காரர்கள் கதவைச் சாத்தியிருந்தால் கூட மணியடித்து உள்ளே போய் அவர்கள் சொல்லாமலே நாற்காலியில் உட்கார்ந்து பார்த்து விட்டு வருகிறேன்.

    நியூஸ் வாசிக்கையில், எத்தனை வாக்கியங்கள் ஆனவுடன் தாங்கள் விழிகளை உயர்த்தி, தலையை லேசாக அசைப்பீர்கள் என்பது எனக்கு அத்துப்படி. ஆரம்பத்தில் வணக்கம் போடும்போது எத்தனை பற்கள் தெரியும்படி சிரிப்பீர்கள், முடிவு வணக்கத்தில் எத்தனை பற்கள் தெரியும் என்பதெல்லாம் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூடக் கச்சிதமாய்ச் சொல்லுவேன். இன்று கட்டிக் கொண்டுள்ள பூப்போட்ட புடவையை இதற்கு முன் என்றைக்குக் கட்டிக் கொண்டீர்கள் என்ற தகவல் என் டைரியில் இடம் பெற்றிருக்கிறது. ஒருநாள் நீங்கள் வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் போர்த்திக் கொண்டிருந்தால், ஏன் இப்படிக் கழுத்தை மூடிக் கொண்டிருக்கிறாள் என்று தவித்துப் போவேன். தங்கள் உருவத்துடன் பானு என்ற பெயரையும் காட்டும்போது, 'பானு பானு பானு' என்று நூறு தரம் அதை என் வாயால் சொல்லிப் பார்ப்பேன்.

    இத்தனை நாட்களில் நேற்று இரவு தான் உங்கள் முகத்தில் கலக்கத்தையும் கண்ணில் ஈரத்தையும் கண்டேன். கண்டது முதல் மனசு படும் பாட்டைச் சொல்ல முடியாது. இதுவரை தங்களுக்கு ஒரு கார்டுகூட எழுதியிராத நான், இன்று இத்தனை நீளமான கடிதம் எழுதியிருப்பதிலிருந்தே என் வேதனையைத் தாங்கள் புரிந்து கொள்ளலாம்.

    கிருஷ்

    ***

    திரு. கிருஷ் அவர்களுக்கு,

    வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது. என் மனதைத் தொட்டது. வாரத்தில் மூன்று நாள் டெலிவிஷன் ஸ்டுடியோவுக்கு வருகிறேன். அன்று என்ன செய்தி வாசிக்க வேண்டுமோ அதை வாங்கிக் கொள்கிறேன். கண்ணாடி முன் ஒரு நிமிடம் டச்-அப் செய்து கொண்டு, காமிரா முன்னால் அமர்ந்து, படிக்க வேண்டியதைப் படித்துவிட்டுப் போய்விடுகிறேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1