Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Houseful
Houseful
Houseful
Ebook318 pages2 hours

Houseful

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

எதைச் செய்தாலும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும், எதை எழுதினாலும் ஒரு புதுமை இருக்க வேண்டும் என்று அமரர் எஸ்.ஏ.பி. வற்புறுத்தி வந்த காலத்தில் இந்த ‘ஹவுஸ்ஃபுல்’ தொடரை எழுதினேன்.

வேண்டுமென்றே நாலாவது அத்தியாயத்தில் 2 கதையை ஆரம்பித்து, ‘இதற்கு முன் என்ன நடந்தது?’ என்ற கேள்வியுடன் அந்த அத்தியாயத்தை முடித்து, பிறகு மூன்றாவது அத்தியாயத்தையும், அதன்பின் இரண்டாவது அத்தியாயத்தையும், பிறகு முதலாவது அத்தியாயத்தையும் எழுதி, ஐந்தாவது அத்தியாயத்திலிருந்து வரிசையாக எழுதினேன். கோமாளித்தனமான காரியம்தான். ஆனால் லட்சக் கணக்கான வாசகர்கள் ஆவலுடன் படித்தார்களே தவிர, யாரும் குழம்பவில்லை. முணுமுணுக்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று. ஐந்தாவது அத்தியாயம் ஆரம்பித்த போது, முந்தின நாலு கதையின் சுருக்கத்தையும் கொடுத்தேன்.

‘ஹவுஸ்ஃபுல்’ என்ற தலைப்பைப் பார்த்து, இரண்டு மூன்று வருஷத்துக்குமுன் வெளிவந்த ஒரு தமிழ்திரைப்படத்தின் கதை இது என்று சிலர் நினைக்கக்கூடும். அப்படியல்ல, நாற்பது வருஷத்துக்கு முன் கொடுக்கப்பட்ட தலைப்பு இது.

பிரபலமான தலைப்பைச் சினிமாக்காரர்கள் சுலபமாகக் கையாளுவது இன்று வழக்கமாகிவிட்டது.

‘யவன ராணி’ என்ற தலைப்பை ஒரு சினிமாக்காரர் கையாடிய போது சாண்டில்யன் மிகவும் போராடிப் பார்த்தார். சட்டப்படி எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு கையாடல்காரர்களுக்கு ஒரு தைரியம் வந்துவிட்டது. இறவாப் புகழ்பெற்ற படைப்பாளியான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கூட ஒரு தமிழ் சினிமாவிற்கு இன்று தலைப்பாகிவிட்டது. நான் எந்த மூலை?

- ரா.கி.ரங்கராஜன்

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580126705125
Houseful

Read more from Ra. Ki. Rangarajan

Related to Houseful

Related ebooks

Related categories

Reviews for Houseful

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Houseful - Ra. Ki. Rangarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஹவுஸ் ஃபுல்

    Houseful

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    முன்னுரை

    எதைச் செய்தாலும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும், எதை எழுதினாலும் ஒரு புதுமை இருக்க வேண்டும் என்று அமரர் எஸ்.ஏ.பி. வற்புறுத்தி வந்த காலத்தில் இந்த ‘ஹவுஸ்ஃபுல்’ தொடரை எழுதினேன்.

    வேண்டுமென்றே நாலாவது அத்தியாயத்தில் 2 கதையை ஆரம்பித்து, ‘இதற்கு முன் என்ன நடந்தது?’ என்ற கேள்வியுடன் அந்த அத்தியாயத்தை முடித்து, பிறகு மூன்றாவது அத்தியாயத்தையும், அதன்பின் இரண்டாவது அத்தியாயத்தையும், பிறகு முதலாவது அத்தியாயத்தையும் எழுதி, ஐந்தாவது அத்தியாயத்திலிருந்து வரிசையாக எழுதினேன். கோமாளித்தனமான காரியம்தான். ஆனால் லட்சக் கணக்கான வாசகர்கள் ஆவலுடன் படித்தார்களே தவிர, யாரும் குழம்பவில்லை. முணுமுணுக்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று. ஐந்தாவது அத்தியாயம் ஆரம்பித்த போது, முந்தின நாலு கதையின் சுருக்கத்தையும் கொடுத்தேன்.

    ‘ஹவுஸ்ஃபுல்’ என்ற தலைப்பைப் பார்த்து, இரண்டு மூன்று வருஷத்துக்குமுன் வெளிவந்த ஒரு தமிழ்திரைப்படத்தின் கதை இது என்று சிலர் நினைக்கக்கூடும். அப்படியல்ல, நாற்பது வருஷத்துக்கு முன் கொடுக்கப்பட்ட தலைப்பு இது.

    பிரபலமான தலைப்பைச் சினிமாக்காரர்கள் சுலபமாகக் கையாளுவது இன்று வழக்கமாகிவிட்டது.

    ‘யவன ராணி’ என்ற தலைப்பை ஒரு சினிமாக்காரர் கையாடிய போது சாண்டில்யன் மிகவும் போராடிப் பார்த்தார். சட்டப்படி எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு கையாடல்காரர்களுக்கு ஒரு தைரியம் வந்துவிட்டது. இறவாப் புகழ்பெற்ற படைப்பாளியான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கூட ஒரு தமிழ் சினிமாவிற்கு இன்று தலைப்பாகிவிட்டது. நான் எந்த மூலை?

    அத்தியாயம் - 4

    … என் இரண்டாவது மகனான மல்லிஎன்ற மல்லிகாநாத் விளையாட்டுப் பிள்ளையாகவும், பொறுப்பு என்று வருகிறபோது ஓட்டம் பிடிப்பவனாயும் இருக்கிறபடியால்…

    ப்ளாப். ப்ளாப்.

    புட்டிகளின் மூடிகள் எகிறிக் குதித்து ரத்தினக் கம்பளத்தின் மீது மெத்து மெத்தென்று உருண்டோடின. கிளாஸ் டம்ளர்கள் ஒன்றோடொன்று உரசி ஙணஙணத்தன. ஹியர் ஃபில் மை கப் ஃபர்ஸ்ட்… மல்லி நான் வெகுநேரமாய்க் காத்திருக்கிறேன்… நோ நோ! இது உனக்கு நாலாவது டோஸ்! என்று கோரிக்கைகளும் மறுப்புக்களும் வினியோகங்களும் கலகலவென்ற சிரிப்புக்களும் போதைத்தனமான தள்ளாடல்களுடன் அறையெங்கும் நடமாடின.

    நமது அருமை நண்பர் நூறாண்டுக் காலம் வாழ்க! மேலும் மேலும் இது போன்ற மகிழ்ச்சிகரமான திரும்புதல்கள் வருவதாக!

    மூன்று வெவ்வேறு புட்டிகளிலிருந்து பானங்களை கலந்து எடுத்து வந்தான் மல்லி. ஷீலா! இதை டேஸ்ட் பண்ணிப் பார்!

    ஆடுகுதிரையில் ஆடுவது போல் நாற்காலியில் முன்னும் பின்னுமாய்ச் சாய்ந்து கொண்டிருந்த ஷீலா, அதை ஒரே உறிஞ்சில் இழுத்துவிட்டு, ஹா! மை காட்! பஞ்சேந்திரியங்களும் அவுட்! என்ன தயாரிப்பு இது மல்லி? என்றாள்.

    காக்டெயில்! என்று மல்லி பதிலளித்தான். அதாவது, ட்ரை ஏரியா பிராண்ட் பைனாப்பிள், கோலா, லெமன் மூன்றையும் கலந்து…

    இதை உறிஞ்சிய பிறகும் நான் சாம்பலாகாமல் இருப்பது ஆச்சரியம்தான்! என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையில், பார்ட்டி கொடுப்பவனான சுவாமி பட்பட்டென்று இரு கைகளையும் தட்டினான். பாடத் தெரிந்த பெண்மணிகள் பாடலாம் என்று அறிவித்தான்.

    எனக்கு எவரி மாட தான் தெரியும் என்றாள் ஒருத்தி.

    நான் அவ்வளவு மோசமில்லை. என் பாட்டி சொல்லித் தந்த நலங்குப் பாடல் நாலு முழுசாய்த் தெரியும் எனக்கு! என்றாள் இன்னொருத்தி. லில்லி தேவசகாயம் யார் அனுமதிக்காகவும் காத்திராமல் இங்கிலீஷ் பாட்டொன்றை எடுத்துவிட்டாள். அவள் பாடத்தொடங்கியது ட்ரினி லோபெஸின் ‘லெமன்ட்ரீ’ என்று தெரிந்ததும் உற்சாகம் கரை புரண்டது. கிதாரும் பாங்கோலம் கொண்டு வந்திருந்தவர்கள் அவளுடன் சேர்ந்து கொண்டார்கள். பாதிப் பாட்டின்போது மல்லியின் குரலும் இணைந்தது.

    எல்லோருடைய ‘ஷு’க்களும் டக்டக்கென்று தாளமிடத் தொடங்கின. அது முடிந்ததும், சுவாமி, அடுத்தபடியாக ஒரு கேம். ஜென்ட்ஸ் தயவு பண்ணி இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். லேடீஸ் பூரா அப்படியே வரிசையாய் நாற்காலியில் அமருங்கள் என்றான்.

    இரண்டு நிமிடத்தில் அவன் கட்டளைப்படி அணி பிரிந்தது.

    இப்போது விளக்குகளை அணைக்கப் போகிறேன். அதற்கு முன்பு ஒரே ஒரு நிமிடம் டயம். அந்த ஒரு நிமிடத்தில் ஜெண்ட்ஸ் அனைவரும் லேடீஸ் கால்களைக் கவனித்து வைத்துக்கொள்ள வேண்டும். விளக்கு அணைந்ததும் லேடீஸ் எல்லாரும், தங்கள் ஷுக்களில் ஒன்றைக் கழற்றி இதோ இந்த மூலையில் எறிந்துவிட்டு, மற்றதை முதுகுக்குப் பின்னால் மறைத்துக்கொள்ள வேண்டியது…

    ஆகா! என்ன ஐடியா, என்ன ஐடியா! சுவாமி! உன் மூதாதையர்கள் மன்ஹாட்டனிலிருந்து வந்திருக்க வேண்டுமப்பா! என்றான் மல்லி.

    நோ இன்ட்டரப்ஷன் ப்ளீஸ்! என்று கேட்டுக் கொண்டு விட்டு, சுவாமி தொடர்ந்தான்: விளக்கு அணைந்திருக்கும்போதே ஜென்ட்ஸ் ஆளுக்கொரு செருப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். விளக்கைப் போட்டதும், தங்கள் கையிலிருக்கும் செருப்பு எந்தக் கட்டழகியின் காலுக்குச் சேர வேண்டும் என்று ஊகித்து, மாட்டியும் விட வேண்டியது!

    வாஹ்வா! சபாஷ்! என்று ஆண்குரல்கள் பாராட்ட சில பெண்குரல்கள் போலியான ஊஹூம்களை வெளிப்படுத்தின.

    ஒன் டூ த்ரீ… சுவாமி விளக்குகளை அணைத்துவிட்டான்.

    லைட் ப்ளீஸ்! என்று கத்தினான் மல்லி. ஒரு விஷயம் சொல்லாமல் இருந்து விட்டாயேப்பா?

    என்ன?

    ஜெயித்தவர்களுக்கு என்ன பரிசு? தோற்றவர்களுக்கு என்ன தண்டனை?

    பத்து ரூபாய்! என்றான் சுவாமி. சரியான செருப்பை மாட்டிவிட்டால் அந்த லேடி அந்த ஜென்ட்டுக்குப் பத்து ரூபாய் பரிசளிக்க வேண்டும். தப்பான செருப்பை மாட்டப் பார்க்கிற ஆண் முட்டாள், அந்தச் சீமாட்டிக்கு அபராதம் பத்து ரூபாய் கட்ட வேண்டும்.

    ஓகே! என்றான் மல்லி.

    படபடவென்று செருப்புக்கள் வந்து விழுந்தன அறை மூலையில். அடுத்த நிமிடம் ஆண்கள் ஆளுக்கொரு செருப்பை எடுத்துக் கொள்ளும் சலசலப்புக் கேட்டது.

    ரெடி? என்று கேட்டுவிட்டு சுவாமி விளக்கைப் போட்டான். எவ்வளவு திகைப்பு! செருப்பையும், குறும்புச் சிரிப்புடன் காத்திருக்கும் குமரிகளையும் மாறி மாறிப் பார்த்த ஆண்கள், தங்கள் தங்கள் ஊகப்படி அணிவிக்க முயல, இன்பமான பிழையினாலும், உள்ளங்காலின் குறுகுறுப்பினாலும் பெண்கள் சிரித்து நெளிந்து குதூகலிக்க - மல்லி மட்டும் தயங்காமல் தடுமாறாமல், தான் எடுத்திருந்த செருப்பைச் சரியான காலில் மாட்டிவிட்டான்.

    கங்கிராஜுலேஷன்ஸ்! என்றாள் அவள். மற்ற எல்லோரும் எப்படித் தவிக்கிறார்கள் பாருங்கள்! நீங்கள் கெட்டிக்காரர்தான்.

    என் வெற்றியின் ரகசியம் என்ன என்று எந்தப் பத்திரிகை நிருபராவது கேட்டால் டாணென்று சொல்வேன் என்றான் மல்லி.

    என்னைப் பத்திரிகை நிருபரென்று வைத்துக் கொள்ளுங்களேன்.

    டாம் ஈஸி. மற்ற எல்லோரும், இந்த விளையாட்டைப் பற்றி சுவாமி அறிவித்த பிறகுதான் பெண்களின் கால்களையும் அவர்கள் அணிந்திருந்த செருப்புக்களையும் பார்த்தார்கள். நானோ நீ பார்ட்டிக்கு வந்த போதே உன் காலின் அழகையும், இந்த ஷுவின் பொருத்தத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். என் அதிர்ஷ்டம், இருட்டில் என் கையில் கிடைத்தது நான் ரசித்த அதே செருப்பு! நான் ரசித்த அதே காலுக்கு மாட்டிவிட்டேன்!

    அவளது முகம் நாணத்தாலும் பெருமையினாலும் பளபளத்தது. அம்மாடி! என்ன அளப்பு! என்றாள் வேண்டுமென்றே.

    கொஞ்சம் டயம் கொடுத்தால் காவியமே பாடிவிடுவேன் உன் காலைப் பற்றி. ஆனால் அவசரமாக வெளியே போக வேண்டியிருக்கிறது என்றான் மல்லி.

    அப்படி என்ன தலைபோகிற வேலை?

    பத்து ரூபாயைக் கபகபவென்று கரைப்பது ஒரு வேலையில்லையா? ஊம், ஊம்! கழற்று!

    ஐயோடா! அது வேறேயா? என்றாள் அவள். ஸாரி மிஸ்டர் மல்லி. இப்போது கையில் இல்லை. நாளைக்குத் தருகிறேன்.

    சரிதான்! உன்னிடமிருந்து ரூபாய் வசூலிப்பதற்காக நான் கையில் பிரம்பும் தலையில் முண்டாசுமாக, உன் வீட்டு வாசலில் ஈட்டிக்காரன் மாதிரி சைக்கிளில் வந்திறங்க வேண்டுமா, ‘க்யா ஸிஸ்டர்?’ என்று. எல்லாம் இருக்கும் பார், உன் கையில்.

    பிராமிஸாய் மல்லி! பிராமிஸாய் இல்லை! என்று அவள் தடுக்கத் தடுக்கக் கேளாமல் அவளுடைய ஹாண்ட்பாக்கைப் பறித்தான் மல்லி. மற்றவர்களும் அவனைச் சூழ்ந்துகொண்டு விட்டார்கள். பைக்குள் சிறு அலங்கார சாதனங்களைத் தவிர இரண்டொரு காகிதத் துண்டுகள் இருந்தன.

    ஆ! இதோ! இரண்டு ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கான ரிசர்வேஷன்!

    அவள், அவன் கையிலிருந்ததைப் பறிப்பதற்காகக் கையை நீட்டி எம்பினாள். ஐயையோ என் மம்மி கொன்றே விடுவாள்! அவளுக்கும் எனக்குமாக ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு ரிசர்வ் செய்த கூப்பன்… இன்று நைட்ஷோவுக்குப் போக வேண்டும்…

    மல்லி அமைதியாகப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டான் ரிசர்வேஷன் கூப்பனை. போனால் போகிறது. நீயும் வேண்டுமானால் என்னுடன் வா. ஐந்து ரூபாயை அனாதை ஆசிரமத்துக்கு வழங்கியதாக நினைத்துக் கொள்கிறேன். வருகிறாயா?

    மம்மியை விட்டுவிட்டதோடு இல்லாமல் நான் தனியாக வேறே போனேனென்று தெரிந்தால், அவ்வளவு தான் மம்மி என்னை…

    அம்மியில் வைத்து அரைத்து விடுவாளாக்கும்! டாட்டா பை பை நான் மட்டுமே போய்க்கொள்கிறேன். கண்ணைத் துடைத்துக்கொள் குழந்தாய் எவ்வளவு பேர் வேடிக்கை பார்க்கிறார்கள் பார்!

    மூஞ்சி என்று அழகு காட்டினாள் அவள்.

    இரவு மணி ஒன்பதே கால்

    தியேட்டரின் முன்புறம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஸ்கர்ட்டும் ஸாரியும், நைலானும் காஞ்சிபுரமும், ஸுட்டும் பஞ்சக்கச்சமும் கதம்பமும் டால்கம் பவுடரும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்தன தாழ்வாரமெங்கும்.

    மல்லி, ரிசர்வேஷன் சுப்பனைத் தந்து இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டான்.

    இன்னொரு டிக்கெட்டை என்ன செய்வது? இருக்கிற கிராக்கியைப் பார்த்தால் பிளாக்கிலே இருபது ரூபாய்க்குக்கூட விற்கலாம். சி! அது கேவலம். கண்ணியமான நபர் யாரேனும் நெருங்கி வந்து கேட்டால் தரலாம்…

    அவன் மனத்துக்குள் நினைத்ததைக் காதால் கேட்டுவிட்ட மாதிரி ஒரு பெண் அவனிடம் விரைந்து வந்தாள். வெகு நேரமாக அலைந்ததாலோ என்னவோ அவளுடைய வட்ட முகத்தில் பதற்றத்தின் முத்திரை பதிந்திருந்தது. கட்டவிழ்த்த கன்றுக்குட்டி போல இங்குமங்குமாய்த் தாவும் விழிகளில் தவிப்புத் தென்பட்டது. சிவத்த கழுத்தின் ஒரமாகப் பொடித்திருந்த வியர்வை, அவள் கழுத்தின் ஓரங்களை மெல்ல நனைத்திருந்தது.

    ஒரு ஸ்பேர் டிக்கெட் இருக்கிறதா உங்களிடம்? என்றாள் அவள்.

    வித் ப்ளெஷர் என்றான் மவ்லி. வாருங்கள், போகலாம்.

    எவ்வளவு… என்றபடி தன் கைப்பையைத் திறக்க முனைந்தாள்.

    பரவாயில்லை. அப்புறம் வாங்கிக் கொள்கிறேன் என்று மல்லி முன்னே நடந்தான்.

    இரண்டாவது வரிசையில், கடைசி இரண்டு நாற்காலிகள் அந்த எண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. அவர்கள் உட்காரவும் படம் தொடங்கவும் சரியாயிருந்தது.

    முதல் ஐந்து நிமிடம் வரைதான் மல்லியின் கவனம் திரையில் இருந்தது. பிறகு தன்னுடன் ஒட்டினாற்போல் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் சென்றது. அவளுக்கு அதிகம் போனால் இருபது வயது இருக்கலாம். அவளுடைய பேச்சுத் தமிழில் சற்று மலையாள நெடி அடிப்பதை ஆரம்பத்திலேயே கவனித்திருந்தான். அவள் மேனியிலிருந்து ஓர் இனிய மணம் வீசிக் கொண்டிருந்தது. சோப்பின் மணமா, கூத்தலின் வாசனையா அல்லது பர்ஃப்யூம் ஏதாவது தெளித்துக் கொண்டிருக்கிறாளா என்று அவனால் ஊகிக்க முடியவில்லை.

    திரையில் பளீரென்ற வெளிச்சமான காட்சிகள் வரும் போதெல்லாம் அவளுடைய முகத்தின் அழகை ஓரக்கண்ணால் ரசித்தான் மல்லி. ஆனால் அவனுக்கு ஓர் ஆச்சரியம். டிக்கெட் கிடைத்து, ஸீட் பிடித்து, படம் பார்க்கத் தொடங்கிய வெகு நேரம் ஆகியும் அவளுடைய முகத்திலிருந்த பதைப்புக் குறையக் காணோமே? ஏன்?

    அவளுடைய உள்ளத்துக்குள் நூறாயிரம் எண்ணங்கள் திரிந்து கொண்டிருப்பதை மல்லி உணர்ந்தான். சொல்லு சொல்லு என்பது போல அவள் கண் இமைகள் படபடக்க, சொல்லாதே சொல்லாதே என்று தடுப்பது போல் இதழ்கள் வெடவெடத்தன.

    இவள் கல்லூரி மாணவியா. வேலைக்குப் போகும் பெண்ணா என்று மல்லி யோசிக்கையில், அவையில் சிரிப்பொலி எழுந்தது. ‘சந்தோஷமான அலெக்ஸாண்டர்’ என்ற வேடிக்கைப் படம் அது. கதாநாயகன் தன் நாய்க்குட்டிக்காகப் படாத அவஸ்தையெல்லாம் படுவதைக்கண்டு, தியேட்டர் மொத்தமும் சிரிக்கையில் தான் மட்டும் படத்தைப் பாராதிருப்பது குற்றமாகத் தோன்றியது மல்லிக்கு. திரையில் பார்வையையும் கவனத்தையும் செலுத்தலானான்.

    சில நிமிடங்கள் தான்.

    என்ன இது?

    வலது தோளில் ஒரு மென்மையான ஸ்பரிசம் படுவதை உணர்ந்தான். உடம்பை அசைக்காமல் பார்வையை மட்டும் மெல்ல நகர்த்தினான். ஆம். அவள் தான் அவன் பக்கமாகத் தலையைச் சாய்த்துக் கொண்டிருந்தாள். தற்செயலாகவா, வேண்டுமென்றா? கொஞ்ச நேரம் பொறுத்தான். அவளுடைய சுருள் கூந்தலின் இழைகள் லேசாய்ச் சிலுசிலுத்து அவன் கன்னத்திலும் காதிலும் உரசிக் கொண்டுதான் இருந்தது.

    கொஞ்சம் வலப்புறமாக நகர்ந்து கொண்டான் மல்லி. கூடவே அவளுடைய தலையும் அவன் தோளை ஒட்டினாற்போல நகர்ந்தது.

    மல்லி இதை எதிர்பார்க்கவில்லை. அவளிடம் அவனுக்கு ஏற்பட்டிருந்த கவர்ச்சி உடனே குறைந்துவிட்டது. சட்! மட்டரகம் போலிருக்கிறதே! ஆனால் கேவலம் ஒரு சினிமா டிக்கெட்டுக்காக அவ்வளவு பதறிப் பதைத்துப் போயிருந்த பெண்ணிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

    அவளுடைய தலையின் அழுத்தம் இம்மி இம்மியாக அதிகரிப்பது போலிருந்தது. அவனுடைய கவனத்தைக் கவரவில்லை என்று நினைத்து அதிகமாக அழுத்திச் சாய்கிறாளோ?

    அவளுடைய தொடையில் மெதுவாய்த் தட்டினான் மல்லி. கொஞ்சம் நகர்ந்து கொள்ளுங்கள் என்று தாழ்ந்த குரலில் சொன்னான்.

    காதில் விழாதவள் போலவே இருந்தாள் அவள். நன்றாய்த் திரும்பி அவள் முகத்தைக் கவனித்தான். இன்பக் கிளுகிளுப்பில் லயித்திருப்பவளைப் போல அவள் கண்கள் செருகிக் கொண்டிருந்தன.

    ஸ்! உங்களைத் தான்! என்று இன்னும் சற்றுப் பலமாக அவள் தொடையில் விரலினால் சுண்டினான். தோளில் தட்டினால் அருகிலிருப்பவர்கள் பார்த்துப் பரிகசிக்க - இடம் ஏற்படும் என்று, இடுப்புக்குக் கீழிருந்த இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு அவளை மேலும் பலமுறை தட்டினான். அவள் உணர்வதாகத் தெரியவில்லை. மல்லிக்கு முதல் தடவையாகத் திகில் ஏற்பட்டது. என்னதான் தரக்குறைவான பெண்ணாக இருந்தாலும் அவ்வளவு குறிப்புணர்த்திய பிறகும் ரோஷம் கொள்ளாமல் இருக்க மாட்டாள்… இவள் சாய்ந்திருப்பது கெட்ட எண்ணத்துடனா அல்லது… அல்லது?

    ஹலோ… உங்களைத் தான்! என்று அவள் முழந்தாளைப் பலமாகப் பிடித்து அசைத்தான் மல்லி.

    மிக மிக லேசாய் இமைகள் திறந்தன. ‘என்ன?’ என்கிற மாதிரி அவனைப் பார்த்தாள்.

    ஏன் இப்படிச் சாய்கிறீர்கள்? என்று கிசுகிசுத்தான் மல்லி.

    ஒன்றுமில்லை… மயக்கமாயிருக்கிறது. பசி மயக்கம்… என்றாள் அவள். பிறகு பழையபடி அவன் தோளில் சாய்ந்துவிட்டாள்.

    என்ன? மல்லி திடுக்கிட்டு அவள் முகத்தை முழுமையாகப் பார்க்க முயன்றான்.

    ஆனால் முன்னும் பின்னும் உட்கார்ந்திருந்தவர்களிடமிருந்து, உஷ் உஷ்! என்ற ரகசிய அதட்டல்கள் அவர்களை நோக்கி வந்தன. பின்புறமிருந்த ஒரு பெண் தன் கையிலிருந்த டைம் பத்திரிகையினால் மல்லியின் முதுகில் தட்டி, ப்ளீஸ்! என்று கிண்டலாகப் பல்லைக் காட்டினாள்.

    பொறுமையாயிருப்பது மல்லியினால் முடியாத காரியமாகிவிட்டது. பசி? பசியென்று தான் சொன்னாளா? வேறு ஏதாவதா? மயக்கமேற்படும் அளவுக்குப் பசியுடன் இருப்பவள், சினிமா பார்க்க அதிலும் மேல் வகுப்புக்கு வருவாளா?

    அவளுடைய மடியிலிருந்த கைப்பை நழுவிவிழும் போலிருந்தது. மல்லி அதை எடுத்துப் பிரித்தான். அதற்குள் எதுவுமே இல்லை, மூன்றே மூன்று பைசாவைத் தவிர. ஆக, டிக்கெட்டுக்குப் பணம் தருவது போல் சும்மாதான் நடித்திருக்கிறாள். தான் அழகி என்பதைத் தெரிந்து கொண்டிருக்கும் அழகி அவள். எந்த வாலிபனும் தன்னிடம் பணம் வாங்க மாட்டான் என்ற தன்னம்பிக்கையுடன் இருந்திருக்கிறாள்.

    அவளை மணிக்கட்டில் பலமாகப் பிடித்தான் மல்லி. வெளியே போகலாம் வாருங்கள் என்றான்.

    அவள் அவன் மீது பலமாகச் சாய்ந்தவாறு அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள். அவள் கை தன் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான் மல்லி. உண்மையிலேயே பலவீனமான நிலையில் இருக்கிறாள் என்று அப்போது தான் புலப்பட்டது.

    சொல்லு.

    காப்பி பாரின் உயரமான முக்காலிகளில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். உள்ளே படம் நடைபெறும் நேரமாகையால் இங்கே ஈ காக்கையில்லை. இருந்த ஒரே ஒரு சிப்பந்தியும் மல்லி கேட்ட ப்ரெட் பட்டரையும் காப்பியையும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போய் விட்டான்.

    ஜாம்கூடத் தடவிக்கொள்ளாமல் வெறும் ப்ரெட்டை ஆவலுடன் சாப்பிட்டு விட்டு, காப்பியையும் பாதி குடிக்கிற வரையில் அவள் எதுவும் பேசவில்லை. உணவு உள்ளே செல்லச் செல்ல, உயிரின் களை அவள் கன்னங்களில் ஏறத் தொடங்கியது.

    கடைசியில் தலையைக் குனிந்து கொண்டு சொன்னாள்: என் பெயர் மாதவி. எர்ணாகுளத்திலிருந்து வந்தவள்.

    வேலைக்கா?

    சினிமாவில் நடிக்க.

    அப்படி வந்த ஐம்பதாயிரத்து எட்டாவது பெண் நீ.

    அவளது மனச் சுமையைக் குறைக்கவே மல்லி வேடிக்கையாகப் பேசினான். ஆனால் அவள் புன்னகை கூடச் செய்யவில்லை. ஹைஸ்கூல் படிப்பை முடித்திருந்தேன். வேலை தேடியிருக்கலாம். என் மாமன் ஒருவன் ஆசை காட்டினான். என் அம்மாவும் சம்மதித்து அனுப்பிவிட்டாள்…

    மீதிக் காப்பியையும் குடி. ஆறுகிறது.

    மாதவி உறிஞ்சிக் கொண்டே சொன்னாள்:

    Enjoying the preview?
    Page 1 of 1