Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poi Mugangal
Poi Mugangal
Poi Mugangal
Ebook84 pages59 minutes

Poi Mugangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written BY Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466596
Poi Mugangal

Read more from Arnika Nasser

Related to Poi Mugangal

Related ebooks

Related categories

Reviews for Poi Mugangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poi Mugangal - Arnika Nasser

    7

    1

    டைரக்டர் நாற்பது வயதின் மத்தியில் இருந்தார். தடித்த இரட்டை நாடி உருவம். கவனமாய் தலைவாரப் படாத கேசம். தூக்கம் தேடும் போதைக் கண்கள். கண்களுக்குக்கீழ் கருவட்டம். ஒழுங்கீனமான மீசை. நிகோட்டின் உதடுகள். பீர்தொந்தி.

    டைரக்டரின் முன், புரடக்ஷன் மேனேஜர் வந்து நின்றார்.

    ஊட்டில முதல் ஷெட்யூல் ஷூட்டிங் 20ஆம் தேதி ஆரம்பம். எல்லா ஆயத்தங்களும் பண்ணிட்டீங்களா?

    ஹீரோ, ஹீரோயின், வில்லனுக்கு ‘சேரன்’ல ஏசி கோச் ரிசர்வ் பண்ணியாச்சு. அதே மாதிரி மூணு பேருக்கும் பொன் ஹில் இம்பீரியல், ஹோட்டல்ல ரூம் புக் பண்ணியாச்சு. உங்களுக்கு ஹோட்டல் சவோய்ல. நீங்க உங்க கார்ல வர்றதுனால உங்களுக்கு ட்ரெயின் ரிசர்வேஷன் பண்ணல சார்...

    கேமிராமேன் நல்லா தண்ணி சாப்பிடுவான். அவன் கேக்கறதை வாங்கிக் கொடுங்க...

    செய்றேன் சார்!

    தயாரிப்பாளர் உங்களைப் பாத்தாரா?

    முதல் ஷெட்யூலுக்கு ஆகும் பாதி செலவை கொடுத்துட்டு கேரளா போயிருக்கார். பாதி ஷூட்டிங்ல வந்திர்றாராம்...

    நொச்சு இல்லாத ஆளு... சரி அவுட்டோர் யூனிட் எப்ப புறப்படுது?

    இன்னிக்கி மத்தியானம் சார்! துர்கா அவுட்டோர் யூனிட் சார்! செம பங்க்சுவல்...

    அவங்க முன்னாடி போகட்டும். நான் ஆறுமணி நேரம் லேட்டாப் போய் அவங்களை முந்திக்கிறேன்...

    நல்லது சார்! நான் போய் அவுட்டோர் யூனிட்டை வழியனுப்பிச்சிட்டு வரேன் சார்! கும்பிட்டார் புரடக்ஷன் மேனேஜர்.

    தி. நகரில் - ஊட்டி செல்ல இரு வேன்களும் ஆயத்தமாயிருந்தன. ஒன்றில் படப்பிடிப்பு உபகரணங்களுடன் தொழிலாளர்கள். இன்னொன்றில் துணை நடிகைகள் பட்டாளம். இரு வேன்களின் டயர் அடியிலும் எலுமிச்சம் பழங்கள்.

    புரடக்ஷன் மேனேஜர் அழகாயிருந்த துணை நடிகையிடம் வம்பு செய்து கொண்டிருந்தார்.

    கோடம்பாக்கத்லதானே வீடு. ஷெட்யூல் முடிச்சு வருவல்ல ஒரு அசத்து அசத்திடுரேன்... இளித்தார்.

    யோவ்! குரூப் டான்ஸ்ல எனக்கு குளோசப்பு ஷாட் வைக்கச் சொல்லு... உனக்கு ஆய கலை அறுபத்தியஞ்சையும் சொல்லித்தரேன்! கிசுகிசுத்தாள்.

    வேன்களின் முன் தேங்காய் சூடம் கொளுத்தப்பட்டு உடைக்கப்பட்டது. முட்டை உடைக்கப்பட்டது.

    வேனுக்கு ஒருவரிடம் புரடக்ஷன் மேனேஜர் பணம் எண்ணிக் கொடுத்து குறித்துக்கொண்டார். விநியோகிக்கும் முறையை விளக்கினார்.

    இரு வேன்களும் உருமி புறப்பட்டன. கையாட்டினார். துணை நடிகைகளின் வேனில் பாட்டும் கும்மாளமும் உரக்கக் கேட்டன.

    வீட்டுக்குள் நுழைந்தார் அந்தக் குடும்பத் தலைவர். நுழையும்போதே உரத்தக் குரலில் மனைவியை விளித்தார். சமையலறையிலிருந்து மனைவி வெளிப்பட்டாள்.

    என்ன ஒரே குஷியா வரீங்க?

    எனக்கு ஆபிசுல லீவ் ட்ராவல் கன்ஸெஷன் சாங்ஷன் ஆயிருக்கு.

    ஏங்க... ஒவ்வொரு தடவையும் நாம டூர் போனதா பொய் சொல்லி பணம் வாங்கிக்கிரம்... இந்த தடவையாவது நிஜமாவே எங்கயாவது டூர் போய் வருவோமே!

    மூன்று மகள்களும் ஓடிவந்தனர்.

    டாடி டாடி! ஊட்டி போவோம் டாடி! ஊட்டி பாக்கணும்னு ஆசையா இருக்கு டாடி!

    ப்ளீ ஸ் டாடி!

    நானும் டாடி!

    என்னைக் கொஞ்சம் பேச விடுறீங்களா அம்மாவும் பொண்ணுகளும். ஊட்டிதான் போகப் போறோம். அதுவும் இன்னைக்கு நைட்டே டீலக்ஸ் கோச்ல புறப்படுறோம். ரிசர்வ் பண்ணிட்டு வந்துட்டேன்... அப்பா மேல நம்பிக்கையில்லைன்னா இதோ டிக்கெட் பாருங்க! நீட்டினார்.

    மனைவி ரேஷனாய் குதூகலித்தாள். மகள்கள் கும்மாளித்தனர்.

    ஏங்க! ஊட்டில ரொம்ப குளிருமே... ஆளுக்கு ஒரு ஸ்வெட்டர் வேணாம்?

    விலைக்கு வாங்கச் சொல்றியா? நம்மளால முடியாதுடி. பட்ஜெட் தாங்காது!

    கவலைப்படாதீங்க... உங்க பழைய ஸ்வெட்டர் பீரோக்குள்ள இருக்கு. மீதி நாலு இரவல் வாங்கிடுறேன்...

    டாடி! பிலிம் ரோலுக்கு மட்டும் காசு குடுத்திடுங்க. நான் ஜோஹரா வீட்ல காமிரா வாங்கிட்டு வந்துர்றேன்...

    டாடி! மலைமேல ஏறுனா எனக்கு வாந்தி வரும். ரெண்டு ‘பெரிநார்ம்’ வாங்கிடுங்க...

    ஊட்டில வர்க்கி பேமஸ் தோட்டத் தேயிலை பேமஸ், யூகலிப்டஸ் ஆயில் பேமஸ். வரும்போது அதுவும் நிறைய இங்கிலீஸ் காய்கறிகளும் கொண்டு வரணும். மறு நாளே சூப்பர் விஜிடபிள் பிரியாணி பண்ணிரலாம்...

    முடிஞ்சா அப்படியே முதுமலைக்காடுகளுக்கும் போய்ட்டு வரணும்...

    பேக்கிங் முடிந்து புறப்படும்வரை ஒரே பேச்சு பேச்சு பேச்சுதான். அண்டை அயலார் பணம் கொடுத்து சில பொருட்கள் வாங்கி வரச்சொன்னார்கள்.

    ஐவரும் டீலக்ஸ் கோச்சில் ஏறி அமர்ந்தனர். பத்து கண்களிலும் ஊட்டி கனவுகள் நனைந்தன.

    இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன். பெட்ரோல் நிரப்ப வரிசையாக

    Enjoying the preview?
    Page 1 of 1