Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayiliragu Gnabagangal
Mayiliragu Gnabagangal
Mayiliragu Gnabagangal
Ebook94 pages31 minutes

Mayiliragu Gnabagangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466855
Mayiliragu Gnabagangal

Read more from Arnika Nasser

Related to Mayiliragu Gnabagangal

Related ebooks

Related categories

Reviews for Mayiliragu Gnabagangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayiliragu Gnabagangal - Arnika Nasser

    1

    "தாரகை! தாரகைய்! தாரகேய்!" கூவி அழைத்தபடி வந்தான் தமிழ்க்கோ. தமிழ்க்கோவுக்கு வயது 50. மணிமேகலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணிபுரிகிறான். தாரகையின் அம்மாவின் பெயர் ரெங்கநாயகி. சமூகவியல் துறை பேராசிரியை.

    என்னப்பா? என வினவியபடி வெளிப்பட்டாள் தாரகை, தாரகைக்கு வயது 24 உயரம் 5’7", மாநிறம். சுஸ்மிதாஸென் சாயல். முதுகலை விவசாயம் படித்து முடித்திருப்பவள்.

    ஒரு நல்லசெய்தி!

    என்ன நல்ல செய்தி? அதை முதல்ல என்கிட்ட சொல்லாம மககிட்ட சொல்லனுமாக்கும்?... சரி சொல்லுங்க

    நாம ஒரு வீடு வாங்கிருக்கம்!

    பழைய வீட்டையா?

    அழகிய தோட்டத்துடன் கூடிய தனிவீடு. சிவசக்தி நகர் தாண்டியிருக்குது. ரெண்டு முணு பேர் கை மாறி நம்ம கைக்கு வந்திருக்கு. விலை பனிரெண்டு லட்சம்!

    பழைய வீட்டை இடிச்சிட்டு அதன் மேலயே புதுசா வீடு கட்டப்போறீங்களா? இல்லல்ல. இருக்ற வீட்டை பழுது பாத்து மெருகேத்தப் போறேன். பத்திரப்பதிவு என்னைக்கு?"

    நாளைக்கே!

    நீங்க எது செஞ்சாலும் அர்த்த பொருத்தமாத்தான் செய்வீங்க. ஓர் அழகிய தோட்டம் சூழ்ந்த வீட்டை வாங்கியதற்கு வாழ்த்துக்கள்!

    காரின் ஓட்டுநர் இருக்கையில் தமிழ்க்கோ அமர்ந்திருந்தான்- பக்கத்தில் ரெங்கநாயகி. பின்னிருக்கையில் தாரகை. பேட்ச் வொர்க் பாத்து உள்ளும் புறமும் பெயின்ட்டிங் பண்ணி வீட்டை ஆள் வச்சு கழுவிவிட்டு ஹோமம் வளர்த்து பால்காய்ச்சி, எல்லாம் ரெண்டே நாள்ல அவசர அவசரமா எதுக்கு செய்யனும்ப்பா?

    வீட்டை வாங்கின உடனே தாமதம் பண்ணாம வீட்ல குடியேறனும்னு ஆசை, குடியேறியாச்சு. இதில என்ன தப்பிருக்கு?

    ‘‘நல்ல நாள் பாக்கலாமில்ல?"

    எல்லா நாளும் நல்லநாள்தான்ம்மா!

    கார் அந்த வீட்டுக்குள் பிரவேசித்தது. இறங்கினாள் தாரகை. தோட்டத்தில் வேப்பமரமும் கொய்யாமரமும் எலுமிச்சை மரமும் குடை விரித்திருந்தன. பூஞ்செடிகளும் அவரை பூசணி சுரைக்கொடிகளும் பந்தல் விரித்திருந்தன. வாடகை வீட்டிலிருந்து அனைத்து சாமான்களையும் ட்ரக்கரில் எடுத்து வந்து வீட்டுக்குள் சீர்படுத்தி வைத்திருந்தனர்.

    மரங்களில் மைனாக்கள் கீச்கீச் என்று சப்தம் எழுப்பியபடி கிளைகள் மாறிமாறி அமர்ந்தன.

    வீட்டைச் சுற்றிலும் எல்லா பூக்களும் கலந்த வாசனை அடித்தது.

    தோட்டத்தில் நான்கைந்து நாட்டுக்கோழிகளும் சேவல்களும் கின்னிக்கோழிகளும் கழுத்தறுத்தான் கோழிகளும் உலாத்தின.

    இதெல்லாம் ஏதுப்பா?

    வீட்டை விலைக்கு வித்தவங்க ஆசையா வளர்த்த கோழிகள் இது. எடுத்திட்டு போக மனசில்லாம நமக்கே விட்டுட்டுப்போய்ட்டாங்க...

    உைறய்யா! குதூகலித்தாள் தாரகை. வேகமாக ஓடினாள். கொய்யாமரத்தில் ஏறினாள். கொய்யாக்காய் பறித்துக்கொண்டு இறங்கினாள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கொய்யாக்கள் வழங்கிவிட்டு தனது பங்கை தின்ன ஆரம்பித்தாள்.

    வீட்டுக்குள் போயினர். இரு படுக்கையறைகள். நவீனமயமாக்கப்பட்ட சமையலறை. வரவேற்பறை, உணவறை. பூஜையறை. கழிவறை, குளியலறை, பழைய சாமான்கள் சேமிப்பு அறை. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் ஒரு செய்நேர்த்தி காணக் கிடைத்தது.

    வீட்டின் பளிங்குக்கல் தரையில் உருண்டாள். இரவு உணவு சாப்பிட்டு முடித்ததும் வீ. உண்ணாமலையின் ‘காலந்தோறும் அறிவியல்’ படித்துக்கொண்டிருந்த அப்பாவை பின்னுக்கு இருந்து கட்டிக்கொண்டாள்.

    இந்த வீட்டை யார்கிட்டயிருந்து வாங்னீங்கப்பா?

    ‘‘ஒரு தாசில்தார்கிட்டயிருந்து. ஆனா அவர் இந்தவீட்டை கட்டல. அவருக்கு முன்னாடி முணுபேரு வாங்கியிருக்காங்க. வீட்டோட ஒரிஜினல் ஓனர் யாருன்னு எனக்குத் தெரியாது."

    வீடு இருக்ற மாதிரியே இருக்கட்டும். எந்த சிறுமாறுதலும் செய்ய வேண்டாம்.

    சரி!

    உயிரில்லாத இந்த வீட்டுக்கு உயிர் இருக்குப்பா. நான் கார்லயிருந்து எறங்கினதுமே என்கிட்ட பேசுச்சுப்பா, இதுவரைக்கும் வந்த நாலு ஹவுஸ் ஓனர்ஸ் இந்த வீட்டை இதம்பதமா பாத்துக்கலையாம். என்னை பாத்ததும் இந்த வீட்டுக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம். மரங்கள் தங்களின் குதூகலத்தை காட்டின. கோழிகளும் சேவல்களும் கும்மாளமிட்டன. இந்த வீட்டின் ஒரிஜினல் ஓனர்ஸ் மிகமிக கலைநயம் மிக்கவங்க. வீட்டோட கதவுகளை பாத்தீங்களா, செட்டிநாட்டு கலாச்சாரம் பளீர் இடுது.

    நீ ரொம்ப எக்ஸைட் ஆகுற. ரெண்டு நாள் கழிச்சுப்பார் இந்த வீட்ல இருக்கும் குறைபாடுகள் உன் கண்ணுக்கு டக்கென்று தெரியும். நான் வீட்டை உன்னை மாதிரி ரசிக்றவன் இல்லை. வாங்கின காசுக்கு வீடு தேறுமான்னு பாப்பேன். ரீஸேல் வேல்யூ உண்டான்னு பாப்பேன். வீட்டோட ராசி பார்ப்பேன், தோட்டத்ல இத்னி மரங்கள் இருக்கே பூச்சி பொட்டு வராமயிருக்குமான்னு பாப்பேன்!

    சிரித்தாள் தாரகை. ஏம்ப்பா இப்டி வறண்டு போய்ட்டீங்க? உங்க ரசனைகளெல்லாம் எங்க போச்சுது?

    "அம்பது வயசாய்ட்டா ஒரு மனுசனோட குணம் தலைகீழா மாறிப்போய்டும். இருபத்தியைஞ்சு வயசுல எந்த படிச்ச அழகான வேலைக்குப் போற நம்ம ஜாதிகாரப்பய்யன்களை பாத்தாலும் இவன் நமக்கு மருமகனா வரமாட்டானான்னு மனசுக்குள்ள கேள்வி ஓடுது.

    Enjoying the preview?
    Page 1 of 1