Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jaithu Kattuvom
Jaithu Kattuvom
Jaithu Kattuvom
Ebook201 pages1 hour

Jaithu Kattuvom

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுகதைகள் மனிதர்களின் வாழ்வை ஒரு சின்னச் சம்பவம் மூலம் சொல்லிச் செல்கின்றன. இவை அனாவசிய வார்த்தைகள், சம்பவங்கள், பாத்திரப் படைப்பு இல்லாமல், ஆனால் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்பவை. அனைவரையும் ஈர்க்கக் கூடியது.

இந்தச் சிறுகதைகள் அனைத்தும் வாழ்வை நேசிக்கும் மனிதர்களைப் பற்றியது. வாழ்வை அதன் குறை நிறைகளுடன் வாழும் மனிதர்களின் குணங்கள், சம்பவங்கள் பற்றிச் சொல்கிறது. சூழ்நிலைகளால் கேட்டவர்கள் ஆனவர்கள், நல்லவர்களாக மாறியவர்கள். தங்கள் உணர்வுகள் போலவே மற்றவர்களை நேசிப்பவர்கள். படியுங்கள், படித்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

Languageதமிழ்
Release dateNov 12, 2022
ISBN6580101009220
Jaithu Kattuvom

Read more from Ga Prabha

Related to Jaithu Kattuvom

Related ebooks

Reviews for Jaithu Kattuvom

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jaithu Kattuvom - GA Prabha

    http://www.pustaka.co.in

    ஜெயித்துக் காட்டுவோம்

    சிறுகதைகள்

    Jaithu Kattuvom

    Sirukadhaigal

    Author :

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அணில் ஆடும் முன்றில்

    அனைவருக்குமான அன்பு.

    காதலிக்கப் படுதல் இனிது.

    இந்த நொடி.

    தரை தொடும் பறவைகள்

    ஞாபகார்த்தம்.

    நேச நெஞ்சம்.

    பரமபதம்

    பலாமுள்

    மனப்பசி

    முடியும்!

    ஈர்ப்பு

    அப்பா ரொம்ப கோபக்காரர்

    சொத்து

    நம்பிக்கை நட்சத்திரம்.

    நன்றி

    பரிமாற்றம்

    பரிவு

    பேரன்பின் பிரியங்களுடன் தமிழ்

    மாவடு

    ஜெயித்துக் காட்டுவோம்

    நேசக் கடல்

    முன்னுரை

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்.

    சிறுகதைகள் நம்மைச் செம்மைப் படுத்துபவை. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பவை. ஒரு நாவல் இருநூறு பக்கங்களில் சொல்வதை நான்கு பக்கங்களில் சொல்லிச் சென்று விடுபவை.

    படிக்க நேரம் இல்லாதவர்கள், படிப்பதில் விருப்பம் இல்லாதவர்கள், என்று சகலரையும் சிறுகதைகள் ஈர்த்து விடுகின்றன. டிஜிடல் மயமாகி விட்ட இந்தக் காலத்தில் இனி ஈ புத்தகங்கள்தான் கதைகள் உலகை ஆளப் போகின்றன.

    சிறுகதைகள் மனிதர்களின் வாழ்வை ஒரு சின்னச் சம்பவம் மூலம் சொல்லிச் செல்கின்றன. இவை அனாவசிய வார்த்தைகள், சம்பவங்கள், பாத்திரப் படைப்பு இல்லாமல், ஆனால் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்பவை. அனைவரையும் ஈர்க்கக் கூடியது.

    ஈ புத்தகமாகப் படிப்பது, எளிதானது. பத்திரப் படுத்த முடியும். அன்பளிப்பாகக் கொடுக்க முடியும். இனி வருவது ஈ புத்தகங்கள் காலம்.

    இதில் உள்ள கதைகள் அனைத்தும் பிரபல வாரப் பத்திரிகைகளில் வெளியானவை. குமுதம், குங்குமம், சிநேகிதி, அவள் விகடன், குங்குமம் தோழி, இவற்றுடன், வாவ் தமிழா எனும் இணையப் பத்திரிகைகளில் வெளியானது. அந்தப் பத்திரிகை நிருவத்திற்கும், ஆசிரியர்களுக்கும் என் அன்பான நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அழகான அட்டைப்படம், நல்ல தெளிவான அச்சு எழுத்துக்கள் என்று கண் கவரும் விதத்தில் புத்தகம் சிறப்பாக அமைந்துள்ளது. அடிக்கடி போன் செய்து, சொல்லும் திருத்தங்களை முகம் கோணாமல் செய்து தந்த புஸ்தகா திருமதி சசிகலா, நிறுவனர் திரு ராஜேஷ் ஆகியோருக்கும் என் நன்றிகள்.

    இந்தச் சிறுகதைகள் அனைத்தும் வாழ்வை நேசிக்கும் மனிதர்களைப் பற்றியது. வாழ்வை அதன் குறை நிறைகளுடன் வாழும் மனிதர்களின் குணங்கள், சம்பவங்கள் பற்றிச் சொல்கிறது. சூழ்நிலைகளால் கேட்டவர்கள் ஆனவர்கள், நல்லவர்களாக மாறியவர்கள். தங்கள் உணர்வுகள் போலவே மற்றவர்களை நேசிப்பவர்கள்.

    படியுங்கள், படித்து உங்கள் கருத்தைக் கூறுங்கள். என் மற்ற கதைகளைப் படியுங்கள். படித்துத் தொடர்ந்து உங்கள் ஆதரவைக் கொடுங்கள். உங்கள் ஆதரவும், தரும் உற்சாகமும் என்னை அடுத்தடுத்து எழுத வைக்கிறது.

    என்னைத் தொடர்ந்து எழுத்துத் தளத்தில் இயங்க வைக்கும் அந்தப் பரம்பொருளுக்கு நான் என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி,

    அன்புடன்,

    ஜி.ஏ.பிரபா.

    அணில் ஆடும் முன்றில்

    அணில் ஒன்று எட்டிக் குதித்து முற்றத்தின் குறுக்கே ஓடியது.

    துள்ளிக் குதித்து விலகினான் கதிரவன்.

    சிறிது நேரம் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.

    "ச்சீ இதென்ன. அணில்தானே. இதற்கு இத்தனை பயமா? என்றாலும் அவ்வளவு பெரிய வீட்டில் தனிமையில் இருப்பது சிறிது பயமாக இருந்தது. சின்ன சப்தத்துக்குக் கூட படபடவென்றது.

    கதிரவன் வெளியில் வந்து எட்டிப் பார்த்தான். அணில் இப்போது வேப்ப மரத்தில் ஏறியிருந்தது. மேல் கிளையில் ஏறி இவனை திரும்பிப் பார்த்தது. இப்போது அங்கு துணைக்கு இன்னும் இரண்டு அணில்கள் சேர்ந்திருந்தது.

    அட, உனக்கும் கொரானா பயமா?- கதிரவன் வந்து வாசலில் அமர்ந்தான். வீட்டைச் சுற்றி தோட்டம், வாசலில் வேப்ப மரம், கொய்யா, அரளி, செம்பருத்திச் செடிகள். காம்பவுண்டுக்கு வெளியில் பக்கத்து வீடு, அக்கம்பக்கம், தெரு என்று மதியம் வெயிலில் வெறிச்சோடிப் போயிருந்தது.

    ஊரே ஒடுங்கி விட்டது. கொரானா பீதி. ஊரடங்கு உத்தரவு. உயிர் பயத்தில் யாரும் வெளியில் வரவில்லை. கொரானா குறைந்து விட்டது என்றாலும், பயம் இருக்கிறது. கதிரவனுக்கும் பள்ளி விடுமுறை. மனைவி குழந்தைகளுக்கு லீவ் என்றதும் தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள். கதிரவனுக்கு டெங்கு பீவர் என்றதும் கிளம்பி வரட்டுமா என்றாள்.

    அதெல்லாம் எதுவும் வேண்டாம். நான் சமாளிச்சுக்கறேன். டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கார்... நீ குழந்தைகளை அழைச்சுகிட்டு அங்கேயும், இங்கேயும் அலையாதே

    இருபத்தியொரு நாள், தனியா இருக்கணும்.

    முப்பது வருஷம் தனியாத்தானே இருந்தேன்.

    அதன் பிறகுதான் கதிரவனுக்கு திருமணம் நடந்து இன்று ஆறு, மூன்று வயதில் இரண்டு குழந்தைகள்.

    கலகலவென்று இருந்த வீடு இன்று அமைதியாக இருப்பது வித்தியாசமாக இருந்தது. காலத்தின் கட்டாயம். இருந்தே ஆகணும். உயிரைவிடப் பிரிவு பெரிது இல்லை. ஆயிற்று. வெற்றிகரமாக பத்து நாட்கள் ஓடி விட்டது.

    இந்தப் பத்து நாளில் சின்னச் சின்ன வேலைகள் செய்து எப்படியோ ஓட்டி விட்டான்.. அலமாரி, ஜன்னல், கதவுகளைச் சுத்தம் செய்து, வாஷிங் மெஷினில் பழைய துணிகளைத் தோய்த்து, வீட்டைச் சுற்றி கூட்டி, இலைகளைத் தூக்கி எறிந்து, தூங்கி என்று ஒருவிதமாய்ப் போனது. மாத்திரைகள் போட்டதில் தூக்கம் வந்தது.

    இனி மற்ற நாட்களை எப்படித் துரத்துவது?-பிரமிப்பாய் இருந்தது. அடுத்த வாரத்தில் இருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கு வரலாம் என்றார்கள் என்றாலும் மாணவர்கள் இல்லாத பள்ளியில் ஆறேழு ஆசிரியர்கள் எத்தனை நேரம் எந்தக் கதை படிப்பது? பேசுவது? மார்ச் கடந்து மே வந்து ஜுன் வரப் போகிறது.

    எவ்வளவு நேரம் பாட்டு கேட்பது? புஸ்தகம் படிப்பது? மொபைலில் பேசலாம் என்றால் மனைவி தவிர யார் கூடவும் அவ்வளவு நெருக்கம் இல்லை. எந்த உறவுகள் கூடவும் நெருக்கம் இல்லை. எந்த உறவுகள் வீட்டுக்கும் போனதில்லை. இப்போது ஊரடங்கு வந்த பிறகு அக்கம்பக்கம், கடைவீதி என்று யாரிடமும் நெருங்கிப் பேச முடியவில்லை. விலகி நின்று ஒரு அச்சத்துடன் நடமாட வேண்டியிருக்கிறது.

    பொதுவாகவே அவன் யாரிடமும் நெருங்கிப் பழகியதில்லை. அவர் ரிசர்வ்டு டைப் என்று பத்மா பெருமையாக கூறிக் கொள்வாள். அது எத்தனை பொய்மையானது என்பது இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டுக்குள் ஒடுங்கி இருக்கும்போது புரிகிறது.

    விடுமுறை தினங்களில் சுற்றுலா போய் விடுவான். உறவுகள் இருப்பது கிராமத்தில். அங்கெல்லாம் போய் எந்த வசதியும் இல்லாமல், குழந்தைகள் இருக்க முடியாது. படிக்காத கிராமத்து பசங்க கூட பழகி கெட்ட வழக்கங்கள் வந்து விடும் என்று எதோ ஒரு சாக்கு. இவன் கொஞ்சம் வசதியாக இருப்பதால் மற்றவர்கள் ஒட்டிக் கொள்வார்களோ என்ற பயம்.

    பொதுவாகவே கதிரவனும், அவன் மனைவி பத்மாவும் உறவுகளுடன் அதிகம் நெருங்கியதில்லை. பத்மாவும் அவள் வீட்டுப் பக்கம் ஒரே பெண்.

    இந்த வீடும் ஒரு காலத்தில் கலகலவென்று இருந்த வீடுதான். அப்பா, சித்தப்பா, அத்தை, தாத்தா, பாட்டி என்று பத்து பேருக்கு மேல் இணைந்து வாழ்ந்த குடும்பம். வீட்டில் எந்த விழா, பண்டிகை என்றாலும் அம்பது பேரானும் சாப்பிட அமர்வார்கள்.. அம்மா சமையல் ரூமே கதியாக இருப்பாள். ஆனால் அவளிடம் ஒரு மலர்ச்சி, ஆனந்தம் இருந்தது.

    நாம ஒரு டம்ளர் பாயாசம் வைத்தால் அதைக் குடிக்க நாலு பேரானும் வரணும்டா- என்பாள். அவளுக்கு வீடு முழுக்க ஜனம் இருக்கணும். அப்பா, அம்மா பக்கம் எந்த உறவுகளும் கோவை வந்தால் இங்குதான் தங்குவார்கள். அப்பாவுக்கு விவசாயம். தாத்தா கட்டிய வீடு இது. நாலு பக்கம் வராண்டா. நடுவில் முற்றம். மேலே கம்பி போட்டு, பின் பக்கம் சமையலறை. வராண்டாவின் எதிரும் புதிருமாக அறைகள் என்று பழைய காலத்து வீடு.

    அத்தை, அவனின் பெரிய அக்கா கல்யாணம் எல்லாம் இந்த முற்றத்தில்தான் நடந்தது. நாலு சென்ட் இடம். அப்பா இறந்து பங்கு பிரிக்கும்போது அவனுக்கு இந்த வீடு கிடைத்தது. அவனுக்கு இந்த ஊர் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை, மாற்றல் கிடையாது. சின்னக் குழந்தைகள். எனவே இப்போதைக்கு இந்த வீட்டை இடிக்காமல் அப்படியே வைத்திருக்கிறான். புது மாடலில் கட்ட வேண்டும் என்பது பத்மாவின் ஆசை. இந்த வருடம் கட்டலாம் என்று திட்டம். அதற்குள் கொரானா பீதி.

    அவனுக்குமே காய்ச்சல் வந்து ஆரம்பத்தில் கொரானா என்று பயந்து விட்டான். சென்ற மாதம் நண்பனின் தங்கை திருமணம் என்று சென்னை போய்விட்டு வந்த பிறகு பயமாகத்தான் இருந்தது. நல்லவேளை டெங்கு மாதிரி இருக்கு. ரெஸ்ட் எடுங்க. எதற்கும் தனியாக இருங்க- என்றார் டாக்டர்.

    அவனுக்கு உள்ளுக்கும், வாசலுக்கும் நடந்து போரடித்தது.

    இன்னும் பதினைந்து நாட்களை எப்படிச் சமாளிப்பது? என்று தெரியவில்லை அக்கம்பக்கம் ஒரு மனித நடமாட்டம் இல்லை. இருக்கிற பிரெட், ஜாம் உப்புமா, சாதம், தயிர் என்று சமாளிக்கிறான்..

    இப்போது அணில்கள் வீட்டின் மேற்புறம் கம்பிகளில் ஏறிக் குதித்து, விளையாடிக் கொண்டிருந்தது. ஒன்றை ஒன்று துரத்தி மேலே ஏறிக் குதித்து ஆடும் இவிகளுக்கு சமூக இடைவெளி இல்லையா? மனதில் கேள்வியுடன் அவன் சிறிது நேரம் அவைகளை வேடிக்கை பார்த்தான். அவ்வளவு பெரிய வீட்டில் தனிமை, கொடுமையாக இருந்தது. மனைவி இல்லை என்றால் வாழ்வு இப்படி வெறிச்சோடிப் போகுமா?

    ஆனால் பத்மா நேரத்துக்கு பார்த்து, பார்த்துச் செய்து தருவாள். ஏண்டா பட்டா என்று அவள் கேட்பதிலேயே உள்ளம் உருகி விடும். தன் வீடு, குழந்தைகள் என்று இருந்தவனை கொரானா வந்து பிரித்து விட்டது.

    அவன் மீண்டும் டீ போட்டுக் குடித்தான். முற்றத்தில் வந்து அமர்ந்தான்.

    வெயில் சுள்ளென்று அடித்தது. தனிமை அவனின் பழைய ஞாபகங்களை கிளப்பி விட்டது. இந்த முற்றத்தில்தான் அவனும் அண்ணாவும் விளையாடினார்கள். கதவு இடுக்கில் வைத்து மாங்காய் நசுக்கிக் கொடுப்பான். அம்மா எல்லாரையும் உட்கார வைத்து கையில் சாதம் பிசைந்து போடுவாள். பாட்டி கதை சொல்லி தூங்க வைப்பாள்.கோடை காலத்தில் இந்த முற்றத்தில்தான் படுத்துக் கொண்டு அப்பா கதை சொல்வார். கோடை மாரியம்மன் குண்டத்துக்கு வீடே நிரம்பி வழியும். எண்ணெய் நெடி, சாம்பார் வாசம், இனிப்பு பலகாரம் செய்யும் வாசனையுடன் எல்லா உறவுகளும் கூடி திருவிழாவுக்குப் போவதில் உற்சாகம் களை கட்டும்.

    அக்கா வளர்ந்ததும் இவர்களுக்குப் பிடித்த மாதிரி சமைத்துப் போடுவாள். பாவாடையில் மறைத்து தின்பண்டம் கொண்டு வந்து தருவாள். கடலை மிட்டாயை காக்கா கடி கடித்து தம்பிகளுக்கு பங்கித் தருவாள்.

    விவசாயம் பொய்த்துப் போன நிலையில் திட்டிரென்று அப்பாவும் இறந்து போக தம்பிகள் படிக்க அக்கா தன் படிப்பை நிறுத்திக் கொண்டாள். இவர்களுக்காக ஒரு துணிக்கடையில் வேலைக்குப் போனாள். அதில்தான் இவர்களுக்கு தின்பண்டம், நோட்டு, புத்தகங்கள் வாங்கித் தருவாள். தம்பி நீங்க படிக்கணும் சாமி என்று அம்மா கூலி வேலைக்குப் போனாள். வயலை விற்று அக்கா திருமணம் நடந்தது. அண்ணாவுக்கு வேலைக்கு டெபாசிட் கட்டினாள் அம்மா. ஒற்றுமையும், அன்பும் நிறைந்துதான் வாழ்க்கை இருந்தது.

    அந்த அன்பும், பரிவும் பாசமும் எங்கு போனது?

    அம்மா என்று கொஞ்சிப் பேசிய அன்பும், பாசமும் எங்கே?. இன்று அம்மா முதியோர் இல்லத்தில் இருக்கிறாள். அண்ணாவுக்கு லவ் மேரேஜ். டில்லியில் மாமனார் வீட்டுடன் இருக்கிறான்.. அப்பா இறந்த போது வந்தவன் பங்கு பிரித்துக் கொண்டு அம்மாவை தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாது என்று போய் விட்டான். பங்கு பிரித்ததில் அம்மாவின் நகை

    Enjoying the preview?
    Page 1 of 1