Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaipathu Niraiverum
Ninaipathu Niraiverum
Ninaipathu Niraiverum
Ebook127 pages47 minutes

Ninaipathu Niraiverum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தவறான புரிதல்களே வாழ்க்கையை கசப்பாக்கி விடுகிறது. மனம் விட்டுப் பேசுவதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுமே இல்லறத்தின் ஆனந்தத்திற்கு காரணம். நிலம், இயற்கை, குடும்பம் என்று அழகான வட்டத்திற்குள் வாழும் உதய பானு தன்னை விரும்பும் தயாளனை புரிந்து கொள்ளாமல், அவனோடு வாழப் பிடிக்காமல் வெறுப்பும் கசப்புமாய் வாழ்கிறாள்.

அவளை விரும்பி மணந்த தயாளன், அவளுக்குத் தன்னை புரிய வைக்க முயற்சிக்கிறான். ஒவ்வொரு முறையும் தோல்விதான் அடைகிறான். அவன் மனதிற்குள் பதிந்த தேவதை அவள். அந்த தேவதையின் மகிழ்வான வாழ்வே அவன் லட்சியம்.

இதை ஒருநாள் உதய பானம் புரிந்து கொள்கிறாள். அவனின் ஆழ்ந்த அன்பையும் அவன் செய்த ஒவ்வொன்றும் தனக்கானது என்று புரிய வர அவளுக்குள் பொங்கி பெருகும் காதல் உணர்வில் தானும் நனைந்து, தயாளனையும் நனைக்கிறாள். நல்ல எண்ணங்கள் மனதிற்குள் இருந்தால், நாம் நினைத்த அனைத்துமே நிறைவேறும்.

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580101010278
Ninaipathu Niraiverum

Read more from Ga Prabha

Related to Ninaipathu Niraiverum

Related ebooks

Reviews for Ninaipathu Niraiverum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaipathu Niraiverum - GA Prabha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நினைப்பது நிறைவேறும்

    Ninaipathu Niraiverum

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    சமர்ப்பணம்

    என்றும் எப்போதும் என் பெற்றோர்கள்

    தந்தை - ஸ்ரீ அனந்தநாராயணன்

    தாயார் - ஸ்ரீமதி சரோஜா

    என்னுரை

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு,

    அன்பான வணக்கங்கள். புஸ்தகா மூலம் உங்களை அடிக்கடி சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் அன்பும், வரவேற்பும்தான் மேலும், மேலும் எழுதும் ஆர்வத்தைத் தருகிறது. அதற்கு என் நன்றிகள் முதலில்.

    நம்மைச்சுற்றி கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கோடிக்கணக்கான மனிதர்களின் கதைகள் இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்வும் வித்தியாசமாக இருக்கிறது. எப்படி வாழ்வது? வாழக்கூடாது என்பதற்கு அவர்களின் வாழ்வே உணர்த்துகிறது.

    எந்த நேரத்திலும், மனிதாபிமானம், அன்பு, கருணை இதை மட்டும் விடக்கூடாது என்றுதான் நான் என் கதைகளில் வலியுறுத்துகிறேன். ஒருவர் மனதில் இந்த உணர்வுகள் பதிந்தாலும்போதும். அதுவே எனக்கு வெற்றி.

    என் நாவல்களை தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள், ஈ புத்தகமாக வெளியிட்டு நாவல் உலகில் நிலைத்திருக்க வழி செய்த, செய்யும் புஸ்தகா நிறுவனம் திரு ராஜேஷ், அழகாக வடிவமைக்கும் அவரின் குழுவினர் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி,

    அன்புடன்,

    ஜி.ஏ. பிரபா.

    1

    அருட்பெரும்ஜோதி, அருட்பெரும்ஜோதி

    கண்களைத் திறந்து எதிரே தெரிந்த சூரியனை நோக்கிக் கரம் குவித்தாள் உதயபானு.

    தகதகவென்று மின்னியது சூரியன். அதிகாலை வெளிச்சத்தில் கீழ்வானில் மெல்ல உதயமாகிக் கொண்டிருந்த சூரியன் வயல் வெளிகளுக்கிடையில் கம்பீரமாக எழுந்து கொண்டிருந்தது.

    முற்றியிருந்த நெற்பயிர்களின் ஊடே, வளரும் வாழ்வின் வெற்றிகள்போல் எழும்பிக் கொண்டிருந்தான் சூரியன். வெளி வாசலிலிருந்து எழும்பும் சூரியனைப் பார்ப்பதே ஒரு ஆனந்தம் என்றால், முற்றிய நெல் பயிர்களும், ஓரத்தில் வரிசைகட்டி நிற்கும் தன்னை மரங்களும், வளர்ந்து அள்ளித் தெளிக்கும் இயற்கை அழகை ரசிப்பது அதைவிட ஆனந்தம்.

    பானு, கண்ணை இமைக்காமல் சூரியனையும், பசேல் என்று வளர்ந்து, நெல் முற்றித் தலை சாய்த்து நிற்கும் கதிர்களையும் பார்த்தபடி நின்றாள்.

    முன் வாசல் பெரிது. அங்குதான் கதிர் அடிப்பார்கள். கரும்பு காய்ச்சுவார்கள். புழுங்கல் அரிசி வேகும். கரும்புப் பாகின் மணமும், அரிசி வேகும் மணத்தை நுகர்வதே சுகமானது.

    வயலின் ஒற்றையடிப் பாதை வழியே சென்றால் நகரத்திற்குச் செல்லும் தார்ச் சாலை. உதயபானு கல்லூரிக்குச் செல்லும் சமயம் ரோடிலிருந்து பஸ் ஹாரன் கேட்ட பிறகுதான் வீட்டிலிருந்து ஓடுவாள்.

    வயலுக்கு நடுவில்தான் வீடு. ரெண்டு ஏக்கரா நெல் வயல். ஒரு ஏக்கர் தோட்டம். வீடு மட்டும் அரை ஏக்கர். பழைய கால ஒட்டு வீடுதான். நடுவில் முற்றம், சுற்றி ரேழி, கொல்லையில் கிணறு, மல்லிகை, ரோஜா என்று செடிகளும் நிறைந்து, அன்பான மனிதர்கள் நிரம்பிய வீடுதான்.

    அப்பாவின் உயிரே இந்த வயலும், வீடும்தான்.

    கண்ணு, இந்த வயல்தான் நம்ம குலசாமி. சோறு போடற தெய்வம் தாயி. விவசாயி இல்லைன்னா வாழ்வே இல்லை என்பார். அவரின் அப்பா காலத்தில் கட்டிய வீடு. இந்தச் செங்கல்லு, காரை எல்லாத்திலேயும், எங்கப்பா, அம்மாவோட வியர்வை கலந்திருக்கு. அவங்க கையால் சிமெண்ட் குழைச்சிப் பூசிய வீடு கண்ணு என்று உருகுவார்.

    தரையில்தான் படுத்துத் தூங்குவார்.

    அம்மா மடியில் படுத்துத் தூங்கும் சுகம் என்பார் இப்போதும், வெளி வாசல் அருகே இருந்த தக்காளி, கத்தரிச் செடிக்கு மருந்து வைத்துக் கொண்டிருந்தார்.

    எழுந்துட்டியா கண்ணு?

    ஆமாம்பா.

    நம்ம தோட்டத்துல நீ வச்சியே ரோஜாச் செடி. அதுல பூ விரிஞ்சிருக்கு கண்ணு.

    ஹை உற்சாகமானாள். என்ன கலர்பா?

    ரத்த சிவப்பு.

    பரிச்சிட்டீங்களா

    மொத பூ. நீதான் உன் கையால தொட்டுப் பறிக்கணும்.

    சூப்பர். குதித்தாள் பானு. இப்பவே போய்ப் பறிக்கிறேன்.

    இரு, இரு அப்பா தடுத்தார். மொத பூ சாமிக்கு. அதை சுத்த பத்தமா தொடணும். குளிச்சிட்டு போய்ப் பறி.

    அதுக்குள்ளே யாரானும் பறிச்சிட்டா?

    நம்மளை மீறி யார் கண்ணு அங்க போகமுடியும்? இதோ நான் தென்னை மரத்துக்கு மருந்து வைக்க அங்கதான் போறேன். நீ குளிச்சுட்டு நிதானமா வா.

    தலையாட்டிவிட்டு சிட்டாக உள்ளே பறந்தாள்.

    காபியைக் குடி. அண்ணி சுகந்தி.

    பல் தேச்சியா? அண்ணன் மோகன்.

    நான் போனவாரமே தேச்சிட்டேன்.

    சுத்தம் தலையில் அடித்துக் கொண்டான் மோகன்.

    குளிப்பியா? இல்லை அதுவும் போன வாரமா?

    இல்லை. அது போன மாசம்.

    அம்மா, என்னம்மா இப்படி ஒரு சூறைப் புள்ளை?

    டேய்ய் சும்மா இரு. அம்மா அதட்டினாள். உங்க தாத்தா எல்லாம் வாரம் ஒருக்கதான் குளியல்.

    அய்யே! நான் பாரு. என்ன பளபளப்பா இருக்கேன்? அண்ணா பெருமையுடன் தன் உடலைப் பார்த்துக் கொண்டான். உண்மையில் அண்ணா பளிச் என்றுதான் இருப்பான். ஒரு கம்பெனியில் ரெப்பாக இருக்கிறான். அதுக்கு ஏற்ற விதத்தில் பேண்ட், இன் செய்த ஷர்ட், டை என்று இருப்பான். பைக்கில் கம்பீரமாக வருவதைப் பார்க்கவே கண் ஜோராக இருக்கும்.

    அவனுக்கு ஏற்ற ஜோடி அண்ணி சுகந்தி. அன்பும், பெரியவர்களிடம் மரியாதையும், பெரியவர்களை அனுசரித்துப் போகும் குணம். அவளால் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவுகிறது.

    அம்மாவுக்கு குழந்தைகளே உலகம். அப்பாவுக்கு செடிகளே உலகம். அப்பாவுடன் சேர்ந்து உதயபானுவுக்கும் பயிர்களே, தெய்வங்கள்.

    இப்போதும் பானு குளித்து வரும்போது அம்மா மஞ்சளும், குங்குமம் கொடுத்தாள்.

    முதல் பூ. செடிக்கு இதை வச்சு கும்புட்டுக்கோ. நிறையப் பூ பூக்கணும்னு.

    அப்பா எங்கம்மா?

    வழக்கம்போல செடிகிட்ட பேசிட்டிருக்கார்

    விவசாயிக்கு செடிகள்தான் தெய்வம் அத்தை சுகந்தி.

    ஒரு தெய்வச் சிலையைத் தொட்டு வணங்குவது போலதான் அப்பா ஒவ்வொரு செடிகளையும் தொடுவார். வரப்பில் செருப்பு போட்டு போகமாட்டார். தெய்வத்துடன் மானசீகமாக உரையாடுவது போல் செடிகளுடன் பேசுவார்.

    இன்னைக்கு ரொம்ப வெயிலா இருக்கு. தண்ணீர் விடவா? குளிருதா? மருந்து நிறைய வச்சுட்டேனா? என்று உருகுவார். பரிவும், பாசமுமாய் அதை தடவிக் கொடுப்பார். அவர் அன்பில் உருகியே செடிகள் பூத்துக் குலுங்கும்.

    செடிகளுக்கும் உயிர் உண்டும்மா. மனிதனைப் போலத்தான் அதுவும். இந்த உலகில் ஒவ்வொன்றும் இறைவன் படைப்பு. அனைத்திலும் அவன் நிறைந்து இருக்கிறான். அப்படி இருக்கும்போது அதை தெய்வமாக நினைத்து வழிபட வேண்டாமா? என்பார்.

    அவரின் குணமே பானுவிடமும் பதிந்துவிட்டது.

    அம்மா கொடுத்த மங்கலப் பொருட்களுடன் வாசலுக்கு வந்தாள். பக்கவாட்டில் தோட்டத்துக்கு வழி. அங்கிருந்து வரப்புக்கு பாதை போகும். அப்பா வரப்பில்

    Enjoying the preview?
    Page 1 of 1