Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Anbu Kuzhanthaigale....
En Anbu Kuzhanthaigale....
En Anbu Kuzhanthaigale....
Ebook113 pages41 minutes

En Anbu Kuzhanthaigale....

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், நம் நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து பல தலங்களில் அருளுரை ஆற்றியிருக்கிறார்கள். ஞானியர், கல்விமான்கள், ஆஸ்திக பிரமுகர்கள் பலர் முன்னிலையில் அவர் ஆற்றியிருக்கும் சொற்பொழிவுகள், பல அரிய, நற்கருத்துகளை கேட்போர் மனங்களில் விதைத்திருக்கின்றன.
குறிப்பாகத் தாம் பங்குபெறும் ஆன்மிகப் பொதுக் கூட்டங்களில் முன் வரிசைகளில் சிறுவர்கள் அமர்ந்திருந்தார்களென்றால், அவர்கள் மனம் கவரும் வகையில் சிற்சில கதைகளைச் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தவும் செய்வார்.
அவ்வாறு பெரியவர் அருளிய சில கதைகளைத் தொகுத்து இதோ உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். ஸ்ரீ ஜயேந்திரர் இப்போது காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்திலுள்ள அதிஷ்டானத்தில் சமாதி கொண்டு நம்மை அசிர்வதித்தபடிதான் இருக்கிறார் என்பது பல்லாயிரக்கணக்கான ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கை.
உங்கள் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தோ அல்லது நீங்கள் படித்துச் சொல்லியோ அவர்களுடைய மனதையும், அறிவையும் விசாலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580130605094
En Anbu Kuzhanthaigale....

Read more from Prabhu Shankar

Related to En Anbu Kuzhanthaigale....

Related ebooks

Reviews for En Anbu Kuzhanthaigale....

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Anbu Kuzhanthaigale.... - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    என் அன்புக் குழந்தைகளே….

    பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

    En Anbu Kuzhanthaigale...

    Poojyashree Jayendra Saraswathi Swamigal

    Author:

    பிரபு சங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என் அன்புக் குழந்தைகளே....

    1. வளர்த்தவாளை மறக்காதே!

    2. வாக்கு மாறாதே!

    3. கடவுள் ஊட்டிய சாதம்!

    4. பேராசை வேண்டாம்!

    5. கவனம் முக்கியம்!

    6. உத்தம புத்திரன்!

    7. துஷ்டனைக் கண்டா, தூர விலகு!

    8. வெறும் ஏட்டுப் படிப்பு மட்டும் போறாது!

    9. துர்க்குணத்துக்கு முழுக்கு!

    10. தைர்ய லட்சுமியின் திடமான அருள் தேவை!

    11. ஆயிரம் கோடி புண்ணியம்!

    12. கங்கா ஸ்நானம் பாவம் போக்குமா?

    13. தகப்பன் சுவாமி

    14. குருவே சரணம்!

    15. அண்ணா தம்பி பாசம்

    16. படிப்புக்கு மரியாதை

    17. அழகன் ஆனைமுகன்

    18. நவராத்திரி

    19. நல்லதை நினைப்பவரே ஆசார்யன்!

    20. சந்தோஷம், நிம்மதி, உற்சாகம்!

    முன்னுரை

    காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், நம் நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து பல தலங்களில் அருளுரை ஆற்றியிருக்கிறார்கள். ஞானியர், கல்விமான்கள், ஆஸ்திக பிரமுகர்கள் பலர் முன்னிலையில் அவர் ஆற்றியிருக்கும் சொற்பொழிவுகள், பல அரிய, நற்கருத்துகளை கேட்போர் மனங்களில் விதைத்திருக்கின்றன.

    குறிப்பாகத் தாம் பங்குபெறும் ஆன்மிகப் பொதுக் கூட்டங்களில் முன் வரிசைகளில் சிறுவர்கள் அமர்ந்திருந்தார்களென்றால், அவர்கள் மனம் கவரும் வகையில் சிற்சில கதைகளைச் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தவும் செய்வார்.

    அவ்வாறு பெரியவர் அருளிய சில கதைகளைத் தொகுத்து இதோ உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். ஸ்ரீ ஜயேந்திரர் இப்போது காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்திலுள்ள அதிஷ்டானத்தில் சமாதி கொண்டு நம்மை அசிர்வதித்தபடிதான் இருக்கிறார் என்பது பல்லாயிரக்கணக்கான ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கை.

    உங்கள் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தோ அல்லது நீங்கள் படித்துச் சொல்லியோ அவர்களுடைய மனதையும், அறிவையும் விசாலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    என் அன்புக் குழந்தைகளே....

    என் அன்புக் குழந்தைகளே!

    உங்க எல்லார்க்கும் என் ஆசிர்வாதம்.

    குழந்தைகள்னாலேயே குதூகலம்தான். கள்ளமில்லாத பட்டாம் பூச்சியாக சுத்தி சுத்தி வர்ர பிஞ்சுகள். உங்களோட இந்த சந்தோஷமான பருவத்திலே, நீங்கள்லாம் நல்ல விஷயங்களை நெறைய தெரிஞ்சுக்கணும். மாதா, பிதா, குரு, தெய்வம்னு உங்க ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்திருப்பா இல்லையா? அதேமாதிரி அம்மா-அப்பாவுகுக் கீழ்ப்படிதலா நீங்கள்லாம் நடந்துண்டு வரேள்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு சாதம் போட்டு, டிரெஸ் எடுத்துக் கொடுத்து, பள்ளிக்கூடத்ல சேர்ப்பிச்சு, நன்னாப் படிக்க வெச்சு, உங்களை முன்னுக்குக் கொண்டுவர அவா ரொம்ப சிரமப்படறா. அதனால அவா மனசு கோணாம நடந்துண்டு, படிப்பிலேயும் நன்னா தேர்ச்சி அடையறதுதான் நீங்க அவாளுக்குக் காட்டற பிரதியுபகாரம்.

    உங்களை நல்வழிபடுத்த எத்தனையோ கதைகளை உங்க அம்மா, அப்பா உங்களுக்குச் சொல்லியிருப்பா. அந்த மாதிரி நானும் உங்களுக்குக் கதைகள் சொல்லப் போறேன். நான் சொல்றதை வெறும் கதையா கேட்டுண்டு விட்டுடாம, அந்தக் கதை என்ன நீதி சொல்றதுங்கறதைப் புரிஞ்சுண்டு, மனசிலேயும் பதிய வெச்சுண்டா, உங்க மனசை அது பக்குவப்படுத்தும்.

    சரியா? கதை சொல்லட்டா?

    1. வளர்த்தவாளை மறக்காதே!

    ஒரு பெரிய காட்டிலே நிறைய மரங்கள் இருந்தன. பெரிசு, பெரிசாய், உசரமா நிறைய்ய மரங்கள். அந்த மரங்கள்ல நிறைய பக்ஷிகள் கூடு கட்டிண்டு சொகுசாக இருந்தது. மரத்லே பழுத்துத் தொங்கற பழங்கள்லாம்தான் அந்த பக்ஷிகளுக்கு ஆகாரம். இதைத் தவிர, தன்னோட குஞ்சுகளுக்காக ஸ்பெஷலா இரை தேடி, அந்த மரத்தை விட்டு அம்மா, அப்பா பறவைகள் எங்காவது போகும். போய், உணவைத் தேடி எடுத்துண்டு வந்து, குஞ்சுகளுக்கு ஊட்டும். பெரிய பறவைகள், வெளியே எந்த காரணத்துக்காகப் போனாலும், சாயங்காலம் சூரியன் அஸ்தமிக்கறச்சே, கரெக்டா மரத்துக்கு, தங்களோட கூட்டுக்குத் திரும்பி வந்துடும்.

    பறவைகள் நிறைய இருக்கற காடுங்கறதால வேடர்களும் அந்தக் காட்டுக்கு வந்து வேட்டையாடுவா. வலைவீசி பறவைகளைப் பிடிக்கறதோட, அம்பால அடிச்சும் சாகடிப்பா. அப்படி யாராவது வேடன் வர்ர சந்தடி கேட்டாப் போறும், அவ்ளோதான், எல்லாப் பறவைகளும் படபடன்னு சிறகடிச்சுண்டு மரத்தை விட்டுப் பறந்தோடிப் போகும். வேடன் பயம் போனப்புறம், திரும்ப வந்து மரக்கிளைகள்ல ஜம்முனு உட்காரும்.

    அப்படித்தான் ஒரு நாளைக்கு, ஒரு வேடன் பறவைகளை வேட்டையாட வந்தான்.

    அவனைப் பார்த்ததும் பறவைகள்லாம் படபடன்னு அடிச்சுண்டு பரிதவிச்சுது. தங்களை வலை வீசி பிடிச்சுண்டு போயிடுவானோ... அம்பால அடிப்பானோ... வலிக்குமோ...!

    ஆனா, வந்த வேடனோ, பொல்லாதவனா இருந்தான். ஒரு மரத்தை முழுசா மேலேருந்து கீழேவரைக்கும் நோட்டம் விட்டான். அப்புறம், தன்னொட அம்பறாத் தூணியிலேர்ந்து ஒரு அம்பை எடுத்து வில்லை வளைச்சு, விட்டான்.

    பாய்ந்து வந்த அம்பு எந்தப் பறவையையும் தாக்கலே. நேராக, மரத்தோட நடுவிலே குத்திண்டு நின்னுத்து. பக்ஷிகள்லாம் பயந்து போய் பறந்தோடிப் போச்சு. ஆனா, மரம்தான், பாவம், பட்டுப் போச்சு.

    ஏனாம்?

    வேடன் அடிச்சானே, அது விஷ அம்பு! தன்னோட பராக்கிரமத்தைத் தானே பாரட்டிண்ட வேடன், அந்த மரத்லேர்ந்து எல்லாப் பறவைகளும் பறந்தோடிப் போறதைப் பார்த்து, ‘ஹே, ஹே...’ன்னு சிரிச்சான்.

    ஆனா, அந்த மரத்ல ஒரே ஒரு கிளி மட்டும் தத்தித் தத்தி, அந்த மரத்தைச் சுத்திச் சுத்தி வந்தது.

    இந்தக்

    Enjoying the preview?
    Page 1 of 1