Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanga Thambi Thangaiyare
Vaanga Thambi Thangaiyare
Vaanga Thambi Thangaiyare
Ebook312 pages1 hour

Vaanga Thambi Thangaiyare

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நல்ல விஷயங்களை அப்படியே சொன்னால் அதை ஏற்பதற்குப் பொதுவாக மனம் விரும்புவதில்லை. காரணம் அவ்வாறு சொல்பவர் தம் அதிகாரத்தை நிலைநாட்டுகிறாரோ, அதற்கு நாம் பணிய வேண்டுமோ என்று கேட்பவர் நினைத்துவிடுவதுதான். அதோடு தான் அறிவுரை சொல்லப்படும் அளவுக்கு நடந்துகொண்டுவிட்ட குற்ற உணர்வும் அந்த அறிவுரைகளை ஏற்க மறுக்கும். தானே அதுகுறித்து மனசுக்குள் வருந்திக் கொண்டிருக்கும்போது, அதை மேலும் கிளறும் வகையாகத்தான் அந்த அறிவுரையை நினைக்கத் தோன்றும்.

உடலுக்கு நல்லது செய்யும் அல்லது உடல் நோயை விலக்க உதவும் மருந்தை அதன் கசப்பு சுவை தெரியாதபடி கேப்ஸ்யூலுக்கு அடைத்துத் தருவது போலதான் நல்ல விஷயங்களைச் சொல்ல வேண்டியதும்.

பள்ளிக்கூடத்தில் குறிப்பிட்ட ஆசிரியரை மாணவர்களுக்குப் பிடிப்பதும் அவருடைய வகுப்பு என்றால் தவறாமல் ஆஜராவதும் அவர் இயல்பாகப் பாடம் நடத்தும் முறையால்தான். கணிதப் பாடத்தைக்கூட வெறும் சூத்திரங்களையும், வட்ட, சதுர, முக்கோண படங்களையும் வைத்துச் சொல்லாமல், கதைப்போக்கில் நடத்தக்கூடிய ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மனதில் ஒரு கருத்து நிலைக்க வேண்டுமானால் அதன் தொடர்பான ஏதாவது மனித உணர்வுடன் கூடிய சம்பவத்தோடு தொடர்புபடுத்திதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏதேனும் ஒரு முகவரியை ஒருவர் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவர் குறிப்பிடும் கடை அல்லது வீடு அல்லது அலுவலகத்திற்கு அருகே உள்ள கோயிலையோ, சினிமா தியேட்டரையோ, பிரபலமான கடையையோ குறிப்பிட்டு அந்த முகவரியை நாம் சொல்கிறோமே அதுபோலதான். நேரடியாக அந்த முகவரியை மட்டும் சொல்லிவிட்டு அமைந்துவிடுவோமானால், அதைத் தேடிச் செல்பவர் கூடுதல் அடையாளத் தகவல் எதுவும் இல்லாததால் தேடித் தேடிக் களைத்துவிடவும் கூடும்.

உதாரணங்களுடன் சொல்லப்படும் பாடப் பகுதிகள் போல, அடையாளங்களுடன் சொல்லப்படும் முகவரி போல, கதைகளுடன் சொல்லப்படும் நன்னெறி ஒழுக்கங்கள் விரைவில் அனைவராலும் புரிந்துகொள்ளப்படும் என்றே இன்றளவும் நம்பப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இந்தப் புத்தகத்தில் 150 குட்டிக்கதைகள் தம்முடன் நல்லொழுக்க அறிவுரைகளைத் தாங்கி வருகின்றன. அதே கதைகள் அல்லது அனுபவங்கள் நம் வாழ்விலும் நடைபெற வேண்டும், அப்போதுதான் அந்த அறிவுரையைத் தம்மால் மேற்கொள்ள இயலும் என்று, இந்த புத்தகத்தைப் படிப்பவர்கள் காத்திருக்க வேண்டாம். இது ஒரு ‘கோடி காட்டுதல்’தான்; இதே போன்ற ஆனால் வேறுவகையான சந்தர்ப்பங்கள் வரும்போது அதற்கேற்றார்போல நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580130605032
Vaanga Thambi Thangaiyare

Read more from Prabhu Shankar

Related to Vaanga Thambi Thangaiyare

Related ebooks

Reviews for Vaanga Thambi Thangaiyare

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanga Thambi Thangaiyare - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    வாங்க, தம்பி, தங்கையரே...!

    Vaanga, Thambi, Thangaiyare…!

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பாலும் நெய்யும்

    2. சான்றோனாவது எப்படி?

    3. அன்பு அனைவருக்கும் பொது

    4. பசி தணிக்கும் பழம்

    5. இறந்த பாம்பு வளர்ந்தது

    6. கடவுளே காப்பாற்று!

    7. எனக்கு வேண்டாம்

    8. யார் புத்திசாலி?

    9. பொம்மைகள்

    10. கல் அறிவு

    11. மோதிரப் பாடம்

    12. தவிர்க்க முடியதது

    13. வாழ்க்கைக் கணக்கு

    14. சொத்து எனும் சுமை

    15. அங்கே பழக்கம் அப்படி

    16. முள்ளை அகற்றி முதன்மை பெற்றவன்

    17. ஏமாற்றியவன் ஏமாந்தான்

    18. பிடித்த பங்கு

    19. மனசுக்குள் இருக்குது மதிப்பு

    20. கண்ணாடி தெய்வம்

    21. முரண்டு பிடித்த குதிரை

    22. அடைக்கலம்

    23. முன் உதாரணம்

    24. யார் தகுதியானவர்?

    25. சந்தேக நோய்

    26. அவசரத் தேவை

    27. தேவைக்கும் அதிகமானது

    28. பிரச்னையின் மூலம்

    29. பெட்டிக்குள் என்ன?

    30. வயது தடையல்ல

    31. உயிரின் மதிப்பு

    32. மரமும், இரும்பும்

    33. நல்லவரும், நல்லவர் அல்லாதவரும்

    34. சோளம் தந்த ஞானம்

    35. குடையா, செருப்பா?

    36. தண்டனையில் பங்கு

    37. பாறையா, அலையா?

    38. தேடியும் கிடைக்காதது

    39. பாராட்டு

    40. படிக்கட்டா, சிலையா?

    41. மன்னரால் பார்க்க முடியுமே!

    42. பறவைக் கணக்கு

    43. முன்யோசனை

    44. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    45. கல்லும் கருத்தும்

    46. இருள் பிரச்னை

    47. நல்லதும், கெட்டதும்!

    48. அபிமானத்தைப் பெறுவது எப்படி?

    49. மனதை உழுபவர்

    50. வெற்றிக்குக் காரணம்?

    51. கனிவு

    52. எனக்கு வேண்டாம் வசதி

    53. சும்மா இருக்கும் நேரம்

    54. தோல்வியல்ல, வெற்றிதான்

    55. வேண்டாம் பேராசை

    56. ஏற்றத் தாழ்வு ஏன்?

    57. புல்வெளிப் புகலிடம்

    58. வாழ்க்கை ரகசியம்

    59. தொண்டு

    60. இறைவனுக்கு மகிழ்ச்சி

    61. தலைவனான சீடன்

    62. சொல்வன, சிந்தித்துச் சொல்

    63. வேண்டாம் விருந்து

    64. முழுமையில்லாத உதவி

    65. பொறுமையின் எல்லை

    66. வாசனைக்கு கட்டணம்

    67. ஊக்கம்

    68. சாமர்த்தியம்

    69. பாறை தந்த பாடம்

    70. நற்பணிக்கு வயது தடையா?

    71. ஈவதை இன்றே செய்

    72. மகானின் சுயநலம்

    73. உலராத ஆடை

    74. சீடனாக மாறிய திருடன்

    75. ஒரு மூட்டை குறை

    76. யாருக்கு மரியாதை?

    77. ஆயுட்காலம் எதுவரை?

    78. கண்ணோட்டம்

    79. உள்ளம் குளிக்க வேண்டும்

    80. யோசி, வழி தெரியும்

    81. பணத்தின் மணம்

    82. பழம் தந்த பாடம்

    83. கனவில் வந்த ஆபத்து

    84. அடங்காது, ஆசைப்படும் மனது

    85. நிழல்

    86. மலைமேல் பொக்கிஷம்

    87. கல்லடி

    88. பிச்சைத் தத்துவம்

    89. விறகுக் கட்டு

    90. மூன்று பொம்மைகள்

    91. குட்டியும் முட்டையும்!

    92. அமைதியின் ரகசியம்

    93. கண்ணும் கல்லும்..!

    94. வெளியே தேடினால் கிடைக்குமா?

    95. அடிமைகளின் அடிமை

    96. மதிப்பு

    97. இழக்க மறுக்கும் மனம்

    98. ஒட்டடை படியும் மனசு

    99. உதாரண மனிதர்

    100. பற்றற்ற உள்ளம்

    101. உயர்ந்தவர்

    102. மதிப்புமிக்க கஞ்சத்தனம்

    103. எத்தனை மண்?

    104. நல்லவரும் தீயவரும்

    105. கழுதைச் சுமை

    106. ஆறுதல்

    107. யார் செய்த தவறு?

    108. இழப்பில் ஏற்படும் சந்தோஷம்

    109. உழைப்பில்லாமல் உயர்வில்லை

    110. நமக்குள்ளேயே இருக்கும் பொக்கிஷம்

    111. தேவைக்கும் அதிகமாக ஏன்?

    112. உன்னால் முடியும்

    113. கோடாரியை கவனி

    114. நல்லவனாக்கும் நான்கு உறுப்புகள்

    115. சத்தையா, கப்பலா?

    116. சரியான பாடம்

    117. பேசும் கிளி

    118. தண்ணீர், தண்ணீர்...

    119. தெரியாத மதிப்பு

    120. அதுதான் தாய்மை

    121. எப்படி இருக்கும்?

    122. காலி பானைக்குள் என்ன இருக்கிறது?

    123. புதையல்

    124. பிரச்னை ஒரு சுமையா?

    125. எல்லோரிடத்திலும் அன்பு

    126. கடமையை ஆற்றுவதில் கர்வம் ஏன்?

    127. பஞ்சு தந்த பாடம்

    128. சந்திரகாந்தக் கல்

    129. எது உண்மையான நட்பு?

    130. யாருக்கு உணவு?

    131. போதிப்பது என்ன?

    132. தங்கத்துக்கும் சோதனை

    133. கட்டுப்பாட்டுக்குள் அனுபவி

    134. ஈயும், தேனீயும்

    135. கண்டு பிடி

    136. ஈடுபாடு

    137. துணை போகாதே

    138. இரும்பும் தங்கமும்

    139. வாய்மூடி வாழ்க

    140. ஞானப் பொய்

    141. தர்ம நீதி

    142. மோதிர உத்தி

    143. யாரைப் பார்த்துக் கற்க வேண்டும்?

    144. சரியாக கவனி

    145. ஏன் முடியவில்லை இறை வழிபாடு?

    146. சமயோசிதம்

    147. பொறுப்பும், கண்காணிப்பும்

    148. உடல் நல ரகசியம்

    149. குற்றவாளி கோபம்

    150. நிம்மதியாக வாழ...

    ***

    முன்னுரை

    நல்ல விஷயங்களை அப்படியே சொன்னால் அதை ஏற்பதற்குப் பொதுவாக மனம் விரும்புவதில்லை. காரணம் அவ்வாறு சொல்பவர் தம் அதிகாரத்தை நிலைநாட்டுகிறாரோ, அதற்கு நாம் பணிய வேண்டுமோ என்று கேட்பவர் நினைத்துவிடுவதுதான். அதோடு தான் அறிவுரை சொல்லப்படும் அளவுக்கு நடந்துகொண்டுவிட்ட குற்ற உணர்வும் அந்த அறிவுரைகளை ஏற்க மறுக்கும். தானே அதுகுறித்து மனசுக்குள் வருந்திக் கொண்டிருக்கும்போது, அதை மேலும் கிளறும் வகையாகத்தான் அந்த அறிவுரையை நினைக்கத் தோன்றும்.

    உடலுக்கு நல்லது செய்யும் அல்லது உடல் நோயை விலக்க உதவும் மருந்தை அதன் கசப்பு சுவை தெரியாதபடி கேப்ஸ்யூலுக்கு அடைத்துத் தருவது போலதான் நல்ல விஷயங்களைச் சொல்ல வேண்டியதும்.

    பள்ளிக்கூடத்தில் குறிப்பிட்ட ஆசிரியரை மாணவர்களுக்குப் பிடிப்பதும் அவருடைய வகுப்பு என்றால் தவறாமல் ஆஜராவதும் அவர் இயல்பாகப் பாடம் நடத்தும் முறையால்தான். கணிதப் பாடத்தைக்கூட வெறும் சூத்திரங்களையும், வட்ட, சதுர, முக்கோண படங்களையும் வைத்துச் சொல்லாமல், கதைப்போக்கில் நடத்தக்கூடிய ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மனதில் ஒரு கருத்து நிலைக்க வேண்டுமானால் அதன் தொடர்பான ஏதாவது மனித உணர்வுடன் கூடிய சம்பவத்தோடு தொடர்புபடுத்திதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

    ஏதேனும் ஒரு முகவரியை ஒருவர் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவர் குறிப்பிடும் கடை அல்லது வீடு அல்லது அலுவலகத்திற்கு அருகே உள்ள கோயிலையோ, சினிமா தியேட்டரையோ, பிரபலமான கடையையோ குறிப்பிட்டு அந்த முகவரியை நாம் சொல்கிறோமே அதுபோலதான். நேரடியாக அந்த முகவரியை மட்டும் சொல்லிவிட்டு அமைந்துவிடுவோமானால், அதைத் தேடிச் செல்பவர் கூடுதல் அடையாளத் தகவல் எதுவும் இல்லாததால் தேடித் தேடிக் களைத்துவிடவும் கூடும்.

    உதாரணங்களுடன் சொல்லப்படும் பாடப் பகுதிகள் போல, அடையாளங்களுடன் சொல்லப்படும் முகவரி போல, கதைகளுடன் சொல்லப்படும் நன்னெறி ஒழுக்கங்கள் விரைவில் அனைவராலும் புரிந்துகொள்ளப்படும் என்றே இன்றளவும் நம்பப்பட்டு வருகின்றது.

    அந்த வகையில் இந்தப் புத்தகத்தில் 150 குட்டிக்கதைகள் தம்முடன் நல்லொழுக்க அறிவுரைகளைத் தாங்கி வருகின்றன. அதே கதைகள் அல்லது அனுபவங்கள் நம் வாழ்விலும் நடைபெற வேண்டும், அப்போதுதான் அந்த அறிவுரையைத் தம்மால் மேற்கொள்ள இயலும் என்று, இந்த புத்தகத்தைப் படிப்பவர்கள் காத்திருக்க வேண்டாம். இது ஒரு 'கோடி காட்டுதல்'தான்; இதே போன்ற ஆனால் வேறுவகையான சந்தர்ப்பங்கள் வரும்போது அதற்கேற்றார்போல நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான். 

    -பிரபுசங்கர் 

    ***

    வாங்க, தம்பி, தங்கைகளே...!

    (சிறுவர் நன்னெறிக் கதைகள்)

    பிரபுசங்கர்

    1. பாலும் நெய்யும்

    'உழைப்புக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. அதனால் உழைக்க அஞ்சக்கூடாது' என்று எல்லோருக்கும் பொதுவாக அறிவுரை வழங்குவார் மகான். ஒவ்வொருவரும் அவரவர் மனப்பக்குவத்திற்கேற்றபடி அந்த அறிவுரையை எடுத்துக் கொண்டார்கள். ஆனால், பொதுவாகவே, உழைப்பின் பரிமாணத்தையும், அதற்குக் கிடைக்கக்கூடிய பலன் மதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து, தம் உழைப்புக்கு சமமானதாக அந்தப் பலன் இல்லை என்று சொல்லி சிலர் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். குறிப்பிட்ட சில இளைஞர்கள், எதற்காக உழைப்பானேன், பலனே இல்லை என்று வருந்துவானேன் என்றுகூட சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

    இந்த இளைஞர்களை அடையாளம் கண்டு கொண்டார் மகான். அவர்களை கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கடையில் பால், வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். கடைக்காரரிடம், இந்தப் பால் எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும்? என்று கேட்டார் மகான். எவ்வளவு நாளா? காலையில் கறந்து எடுத்து வந்தால், மதியத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் கெட்டுவிடும் என்று கடைக்காரர் பதில் சொன்னார்.

    பக்கத்திலிருந்த நெய்யை காண்பித்துக் கேட்டார் மகான்: இது எத்தனை நாள் கெடாதிருக்கும்? சுமாராக ஒரு மாதம் வரை கெடாது என்று பதில் கிடைத்தது.

    சரி, இந்த நெய் எப்படி தயாரிக்கப்பட்டது? என்று தொடர்ந்து கேட்டார் மகான். பாலைக் காய்ச்சி, ஆற வைத்து, அதில் சிறிது மோர் சேர்த்து, தயிராக்கி, அந்தத் தயிரை கடைந்து, வெண்ணெய் எடுத்து, அந்த வெண்ணெயைக் காய்ச்சி நெய் தயாரிக்கப்படுகிறது என்று விளக்கம் கிடைத்தது. சரி, பால் என்ன விலை, நெய் என்ன விலை?  மகான் கேட்டார். 'பால் ஒரு லிட்டர் பத்து ரூபாய்; நெய் ஒரு லிட்டர் நூற்றிருபது ரூபாய்' என்று விவரம் கிடைத்தது. மகான், தான் அழைத்து வந்திருந்த இளைஞர்களை பார்த்தார். சும்மா உட்கார்ந்திருந்தால் இந்த பாலின் கதிதான். ஆனால், சிரமப்பட்டு உழைத்தால் இந்த நெய்க்கு கிடைக்கும் மதிப்பு கிடைக்கும் என்றார்.

    இளைஞர்கள் புரிந்து கொண்டார்கள்.

    ***

    2. சான்றோனாவது எப்படி?

    மகானிடம் ஒரு தம்பதி வந்தனர். அவர்களுடன் பதினைந்து வயது நிரம்பிய அவர்களது மகன்.

    இவன், தான் பெரிய அறிவாளியாகவும், சான்றோனாகவும் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான் என்று சொன்னார்கள்.

    நியாயமான விருப்பம்தானே! என்று பாராட்டினார் மகான். யாரிடம் பாடம் கற்கிறான், இவன்?

    பெற்றோர்கள் அளித்த பதில் மகானைத் திடுக்கிட வைத்தது. ஆமாம், அந்த சிறுவன் அதுவரை யாரிடமும் கல்வி பயின்றதில்லை. கல்விச்சாலைக்கு அனுப்பி வைத்தாலும், படிக்கப் பிடிக்காமல் ஓடிவந்துவிடுகிறான். இவன் எப்படி சான்றோனாவான்?

    தன்னையே முறைத்துப் பார்த்து நின்றிருந்த அந்தச் சிறுவனை ஆதூரத்துடன் தோளில் தட்டி அணைத்துக் கொண்டார் மகான். வா, என்று சொன்னபடி அவனை அழைத்துச் சென்றார்.

    இருவரும் கடற்கரைக்குச் சென்றார்கள். அங்கே சிறுவனை சற்றுத் தொலைவில் நிற்கச் செய்த மகான், தன் கைகளால் கடற்கரை மணலை அள்ளி அள்ளி எடுத்து கடலுக்குள் போட்டார். வெகுநேரம் இவர் இவ்வாறு செய்வதைப் பார்த்துப் பொறுமை இழந்த சிறுவன், என்னதான் செய்கிறீர்கள்? என்று எரிச்சலுடன் கேட்டான்.

    நான் இந்த மணலை வைத்து இந்த கடலுக்குள் குறுக்காக ஒரு பாலம் கட்டப் போகிறேன் என்றார் மகான்.

    என்ன முட்டாள்தனம் இது? சிறுவன் அவரை கேலி செய்தான். வெறும் மணலால் பாலம் கட்டிவிட முடியுமா?

    ஏன்? நீ ஆசான் யாருமில்லாமலேயே, யாருடைய வழிகாட்டலுமில்லாமலேயே, எதையும் படித்தறியாமலேயே சிறந்த சான்றோனாக ஆகிவிட முடியுமானால், என்னாலும் இந்தக் கடலுக்குள் பாலம் கட்டிவிட முடியும்தான் என்றார் மகான்.

    சிறுவன் திகைத்தான். தன் எண்ணத்திற்கு சமாதி கட்டி, நல்ல ஆசானுக்கும் தனக்கும் இடையே ஒரு பாலம் கட்டிக்கொள்ள முடிவு செய்தான். அவனுடைய பெற்றோருக்கும் நிம்மதி.

    ***

    3. அன்பு அனைவருக்கும் பொது

    'அன்புதான் நிரந்தரமானது. அதைப் பகிர்ந்தளிக்கும்போது மகிழ்ச்சி பன்மடங்காக பெருகுகிறது' என்று மக்களுக்கு அறிவுறுத்தினார் மகான்.

    அதைக் கேட்ட ஒரு பணக்காரர், தான் எல்லோரிடமும் அன்பாக இருப்பதாக சொல்லிக்கொண்டார். தன் குடும்பத்தாருடன், தன் வேலையாட்களுடன் மற்றும் எல்லோரிடமும் தான் பரவலாக அன்பு காட்டுவதாக மகானிடம் தெரிவித்தார். ரொம்ப நல்லது என்று அவரைப் பாராட்டினார் மகான். எல்லோரும் உங்களைப் போலவே இருந்துவிட்டால் இந்த உலகத்துக்கே நல்லது என்றார்.

    ஒருநாள் மகான் தெருவழியே போய்க்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பணக்காரர் தன் வீட்டு வாசலில் நின்றபடி உயரே, மாடியில் விளையாடி கொண்டிருந்த தன் மகனை பார்த்தார். அடேய், ஜாக்கிரதை. தவறி விழுந்துவிடப் போகிறாய். வேண்டாம் இந்த விளையாட்டு; கீழே இறங்கி வா என்று பதறினார். அதைப் பார்த்த மகான், பரவாயில்லையே, நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் மிகவும் அன்பாக பழகுகிறீர்களே! என்று அவரைப் பாராட்டினார். அடுத்த இரண்டாவது வீட்டு மாடியில் இன்னொரு சிறுவன், அதேபோல விளையாடிக்கொண்டிருந்தான். யார் அந்தச் சிறுவன்? பதறியபடி கேட்டார் மகான். பணக்காரரும் அந்தப் பையனை பார்த்துவிட்டு, அவன் என் வியாபார எதிரியின் பையன். அடடா, இவன்தான் எவ்வளவு தைரியசாலி; எவ்வளவு சாமர்த்தியமாக விளையாடுகிறான்! என்று மெச்சினார்.

    அவரைப் பார்த்து சிரித்தார் மகான். இதுதான் நீங்கள் அன்பு பாராட்டும் லட்சணமா? உங்கள் மகன் விளையாடும்போது இருந்த பதற்றம் எதிரியின் பிள்ளை விளையாடும்போது இல்லையே, ஏன்? இப்படி ஒருதலை பட்சமாக காட்டப்படுவது அன்பு இல்லை. உங்கள் மகன் எவ்வளவுதான் தீரனாக விளையாடினாலும், அவன் கீழே விழுந்துவிடக் கூடாதே என்று பதறும்போது வெளிப்படும் அதே அன்பு, பிறருக்கும் போகவேண்டும். அதுதான் சரி. அப்போதுதான் உலகம் மொத்தமும் ஒருவருக்கொருவர் அன்புகொண்டவராக திகழ முடியும் என்றார்.

    பணக்காரர் புரிந்துகொண்டார். மகான் காட்டிய வழியில் நடக்க முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.

    ***

    4. பசி தணிக்கும் பழம்

    ஒரு குறிப்பிட்ட ஊரில் பல சிறப்புகளை

    Enjoying the preview?
    Page 1 of 1