Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neengalum Saathikkalam
Neengalum Saathikkalam
Neengalum Saathikkalam
Ebook179 pages1 hour

Neengalum Saathikkalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனைவருக்கும் பணிவான வணக்கம்.
வாழ்க்கையில் பணத்தை சம்பாதிப்பது எளிது. ஆனால் அன்பு, பாசம், கருணை, நேர்மை, பொறுமை போன்றவற்றை சம்பாதிப்பது மிகுந்த சவால் நிறைந்தது.
ஒருவரிடம் கெட்ட பெயர் எடுப்பது விநாடி நேர வேலை. அதே சமயம் அவரிடம் நல்ல பெயர் எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. நம்மை நாம் நிரூபிக்க வேண்டும்.
ஒரு மனிதனின் வெற்றிக்கும், முன்னேற்றத்துக்கும் தேவையான பல நற்குணங்களை எப்படி வளர்த்துக் கொள்வது என்று அழகான உதாரணக் கதைகளுடன் விவரித்து எழுதப்பட்ட அற்புதமான நூல்தான் ‘நீங்களும் சாதிக்கலாம்’.
இது ஒரு வித்தியாசமான நூல். கோயில், குளம், ஜீவ சமாதி என்று எழுதிய எனக்கு இந்த நூல் ஒரு மாறுதல் அனுபவத்தைத் தந்தது.
ஆன்மிகம் என்பது கோயிலுக்குப் போய் இறைவனை வணங்குவது மட்டுமல்ல. தன்னுடன் பணி புரியும் சக தொழிலாளர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும்; எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும்; சகல ஜீவ ராசிகள் மீதும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதெல்லாமே ஒரு வகையான பக்திதான்.
‘இவள் புதியவள்’ இதழில் ‘வெற்றியின் விதை’ என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் ‘நீங்களும் சாதிக்கலாம்’ என்கிற இந்த நூல். இத்தகைய நம்பிக்கை தரும் கட்டுரைகளைத் தனது இதழில் ஒரு தொடராக எழுத வாய்ப்பளித்த ‘இவள் புதியவள்’ ஆசிரியரும் வெளியிடுபவருமான டாக்டர் மை. கதிர்வேள் அவர்களுக்கு என் பிரத்தியேக நன்றி. இதை எழுதத் தூண்டிய என் நண்பன்
மை. பாரதிராஜாவுக்கும் நன்றி.
நேர்மையான மற்றும் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு படிப்பும் பணமும் மட்டும் அவசியம் இல்லை.
படிக்காதவர்கள் உலகை ஆண்டுள்ளார்கள்.
பணம் இல்லாதவர்கள் - அதாவது சமூகத்தின் அடித்தட்டில் இருந்த பலர், தங்களது உழைப்பாலும் உண்மையாலும் வரலாறே வியக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். அத்தகைய பல அன்பர்களின் உதாரணங்களை மேற்கோள் காட்டி, இந்தத் தொடரை எழுதினேன். ஒரு சில நல்ல விஷயங்களை சொல்ல முடிந்திருக்கிறது என்ற அளவில் எனக்குப் பெருமை.
இதில் உள்ள கதைகளும் அதன் மூலம் சொல்ல வருகிற செய்தியும் வாசக அன்பர்களை மிகவும் ஈர்க்கும் என்று நம்புகிறேன். நம் மனதைப் பாதிக்கிற தகவல்கள்தான் செயலாகின்றன. அதுபோல் இந்த நூலைப் படித்து, அதன்படி ஒருவர் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், தினம் தினம் திருநாள்தான்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580138306226
Neengalum Saathikkalam

Read more from P. Swaminathan

Related to Neengalum Saathikkalam

Related ebooks

Reviews for Neengalum Saathikkalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neengalum Saathikkalam - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    நீங்களும் சாதிக்கலாம்!

    Neengalum Saathikkalam

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. முதலாளியும் தொழிலாளியும்

    2. நல்ல மனம் வேண்டும்

    3. அணுகுமுறை அவசியம்

    4. முடியும்... நம்புங்கள்

    5. தாமதம் தவிருங்கள்

    6. திட்டமிட்டால் வெற்றி

    7. சோதனைகள் சாதனைகளாகட்டும்

    8. நிம்மதி வேண்டுமா?

    9. எண்ணமும் செயலும்

    10. நல்லவரா? கெட்டவரா?

    11. பாராட்டுங்கள்... பலன் பெறுங்கள்

    12. குறைகளைக் கண்டுபிடிக்காதீர்

    13. யதார்த்தம் நிலைக்கும்

    14. ஒவ்வொன்றும் ஒரு விதம்

    15. வாழும் வழி எது?

    16. புத்திமதிகளை புறக்கணிக்காதீர்

    17. பொறாமையை புறந்தள்ளுங்கள்

    18. மூளையை பயன்படுத்துங்கள்

    19. இங்கிதம் இக்கணமே

    20. ஆசை அறவே வேண்டாம்

    21. பணிவுதான் பலம்

    22. பயம் வேண்டவே வேண்டாம்

    23. விதி வலியது

    24. துன்பத்திலும் இன்பம்

    என்னுரை

    அனைவருக்கும் பணிவான வணக்கம்.

    வாழ்க்கையில் பணத்தை சம்பாதிப்பது எளிது. ஆனால் அன்பு, பாசம், கருணை, நேர்மை, பொறுமை போன்றவற்றை சம்பாதிப்பது மிகுந்த சவால் நிறைந்தது.

    ஒருவரிடம் கெட்ட பெயர் எடுப்பது விநாடி நேர வேலை. அதே சமயம் அவரிடம் நல்ல பெயர் எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. நம்மை நாம் நிரூபிக்க வேண்டும்.

    ஒரு மனிதனின் வெற்றிக்கும், முன்னேற்றத்துக்கும் தேவையான பல நற்குணங்களை எப்படி வளர்த்துக் கொள்வது என்று அழகான உதாரணக் கதைகளுடன் விவரித்து எழுதப்பட்ட அற்புதமான நூல்தான் ‘நீங்களும் சாதிக்கலாம்’.

    இது ஒரு வித்தியாசமான நூல். கோயில், குளம், ஜீவ சமாதி என்று எழுதிய எனக்கு இந்த நூல் ஒரு மாறுதல் அனுபவத்தைத் தந்தது.

    ஆன்மிகம் என்பது கோயிலுக்குப் போய் இறைவனை வணங்குவது மட்டுமல்ல. தன்னுடன் பணி புரியும் சக தொழிலாளர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும்; எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும்; சகல ஜீவ ராசிகள் மீதும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதெல்லாமே ஒரு வகையான பக்திதான்.

    ‘இவள் புதியவள்’ இதழில் ‘வெற்றியின் விதை’ என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் ‘நீங்களும் சாதிக்கலாம்’ என்கிற இந்த நூல். இத்தகைய நம்பிக்கை தரும் கட்டுரைகளைத் தனது இதழில் ஒரு தொடராக எழுத வாய்ப்பளித்த ‘இவள் புதியவள்’ ஆசிரியரும் வெளியிடுபவருமான டாக்டர் மை. கதிர்வேள் அவர்களுக்கு என் பிரத்தியேக நன்றி. இதை எழுதத் தூண்டிய என் நண்பன்

    மை. பாரதிராஜாவுக்கும் நன்றி.

    நேர்மையான மற்றும் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு படிப்பும் பணமும் மட்டும் அவசியம் இல்லை.

    படிக்காதவர்கள் உலகை ஆண்டுள்ளார்கள்.

    பணம் இல்லாதவர்கள் - அதாவது சமூகத்தின் அடித்தட்டில் இருந்த பலர், தங்களது உழைப்பாலும் உண்மையாலும் வரலாறே வியக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். அத்தகைய பல அன்பர்களின் உதாரணங்களை மேற்கோள் காட்டி, இந்தத் தொடரை எழுதினேன். ஒரு சில நல்ல விஷயங்களை சொல்ல முடிந்திருக்கிறது என்ற அளவில் எனக்குப் பெருமை.

    இதில் உள்ள கதைகளும் அதன் மூலம் சொல்ல வருகிற செய்தியும் வாசக அன்பர்களை மிகவும் ஈர்க்கும் என்று நம்புகிறேன். நம் மனதைப் பாதிக்கிற தகவல்கள்தான் செயலாகின்றன. அதுபோல் இந்த நூலைப் படித்து, அதன்படி ஒருவர் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், தினம் தினம் திருநாள்தான்.

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    1. முதலாளியும் தொழிலாளியும்

    இன்றைக்கு எல்லோரும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு கூடி விட்டது.

    தன்னிடம் பணி புரிபவர்களிடம் அதிக உழைப்பை எதிர்பார்க்கிறார் முதலாளி.

    முதலாளி எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், தன் திறமைக்கு இது குறைவு என்று இன்னும் எதிர்பார்க்கிறார் தொழிலாளி.

    ஆட்டோக்காரரிடம் அதிகபட்சம் எவ்வளவு குறைக்கலாம் என்று சாமர்த்தியமாக பேரம் பேசுகிறார் கஸ்டமர்.

    ஆனால், ஆட்டோக்காரரோ, கிடைத்த கஸ்டமரிடம் கறந்தது வரை லாபம் என்று பெட்ரோல் விலையையும், ஒன் வே டிராஃபிக்கையும் காரணம் காட்டுகிறார்.

    மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பதும், கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பதும் அதிகமோ அதிகம்.

    ஆனால் -

    இவை எல்லாம் சாத்தியம் தெரியுமா?

    இந்த சுகங்களை அனுபவித்து வருபவர்களுக்குத்தான் இதன் ரகசியம், சூட்சுமம் புரியும்.

    நேரம் காலம் பார்க்காமல், வீட்டைப் பற்றிய சிந்தனை இல்லாமல் வேலை பார்க்கும் தொழிலாளிகள் உண்டு. குறிப்பிட்ட சில தொழிலாளிகளுக்குப் பிறர் அறியா வண்ணம் சம்பளத்தைக் கொட்டிக் கொடுக்கும் முதலாளிகள் உண்டு.

    நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு மீட்டர் தொகையைக் குறைத்துக் கேட்கும் ஆட்டோ டிரைவரும் உண்டு. இறங்கிய பிறகு, பேசியதைவிட கூடுதலாகக் கொடுக்கும் கஸ்டமரும் உண்டு.

    மனைவியும் கணவனும் அடுத்தவர் பொறாமைப்படும் அளவுக்கு அந்நியோன்னியமாக இருப்பதும் உண்டு.

    இவை எல்லாம் எப்போது சாத்தியம்?

    ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்தும்போது! பரஸ்பரம் என்ன தேவை என்பதை அறிந்து உதவும்போது!

    ஆனால், இன்றைய தேதியில் பெரும்பாலானவர்களால் யாரையும் எதிலும் சந்தோஷப்படுத்த முடியவில்லை. இன்றைக்கு இருக்கின்ற பெரும் பிரச்னையே இதுதான்!

    வீட்டில் என்னதான் நாயாக உழைத்தாலும் - அது கணவன், மனைவி, குழந்தை என்று யாராக இருந்தாலும் சரி... ஒருவர் மற்றவரைத் திருப்தி செய்ய முடிவதில்லை.

    அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தங்களின் உயர் அதிகாரிகளைத் திருப்தி செய்ய முடிவதில்லை.

    பலூனை ஒரு அளவுக்கு மேல் ஊதிக் கொண்டே போனால் வெடித்து விடும் என்பது தெரிந்தும் காற்று என்கிற பளு ஒவ்வொருவர் மேலும் சுமத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    விளைவு - மன அழுத்தம், மன இறுக்கம், தவறான புரிந்து கொள்ளுதல், வீண் சண்டை, விவாகரத்து, தனிக்குடித்தனம், தவறான பாதை என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.

    குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்து விட்டால், பிரச்னை என்று எதுவுமே இருக்காது!

    ஆனால், இன்றைக்குப் பலருக்கும் இருக்கின்ற எண்ணற்ற குறைகளுள் ஒரு பெரும் குறை என்ன தெரியுமா?

    ‘நேரம் போதவில்லையே!’

    தேர்வுக்குப் படிக்கின்ற குழந்தை, ‘ச்சே... மேக்ஸ் மிஸ் சட்டுன்னு பேப்பரைப் புடுங்கிட்டுப் போயிட்டாங்க... இன்னும் கொஞ்சம் நேரம் கிடைச்சுதுன்னா, எல்லாத்துக்கும் ஆன்ஸர் பண்ணி இருக்கலாம்’ என்று புலம்புவது பெரும்பாலான வீடுகளில் சகஜம்.

    இல்லத்தரசியாக இருப்பவர், ‘காலை வேளைல எத்தனை சீக்கிரம் ஏந்திருச்சாலும் பசங்களையும், இவரையும் சமாளிக்க முடியலியே... இவங்க கேக்கறதைப் பண்ணிப் போட முடியலியே... நாளைக்காவது இன்னும் கொஞ்சம் சீக்கிரம் ஏந்திருக்கணும்’ - இது எல்லா வீடுகளிலும் இயல்பு.

    அலுவலகம் செல்லும் கணவன், ‘எப்படியாவது இன்னிக்கு ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் கௌம்பி வீட்டுக்குப் போகணும். மனைவியையும், குழந்தைகளையும் வெளியில் கூட்டிக் கொண்டு போக வேண்டும். நல்ல ஓட்டலில் டின்னரை முடிக்க வேண்டும்’ என்று தீர்மானிப்பான். ஆனால், க்ளைமாக்ஸ் என்ன என்பது உங்களுக்கே தெரியும்.

    மகாத்மா காந்தியடிகள் தினமும் அதிகாலை நான்கு மணிக்கே விழித்தெழும் வழக்கம் உடையவர். அவரது ஆசிரமத்தில் முதலில் விழித்தெழுபவர் காந்திஜிதான். தான் எழுந்த பின் மற்றவர்களை எழுப்பி விடுவார். ஒருமுறை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்ற ஒரு நிமிடம் தாமதமாக வந்த காந்திஜி, மிகவும் சங்கடப்பட்டு அங்குள்ளவர்களிடம் மன்னிப்புக் கேட்டது, நேரத்தை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம்.

    ‘ஒரு நிகழ்ச்சிக்கோ, விசேஷத்துக்கோ மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது ஒரு நிமிடம் தாமதமாகப் போவதைவிட உயர்ந்தது’ என்பார் ஷேக்ஸ்பியர்.

    நேரம் தவறாமையைப் பின்பற்ற முடியாத மனிதர்கள் தங்கள் வாழ்வின் எல்லா விஷயங்களிலும் தாமதத்தையே கொண்டிருக்கிறார்கள். நேரம் தவறாமையை ஆரம்பத்தில் இருந்தே பழக்கிக் கொண்டால், பல பிரச்னைகளில் இருந்து வெளி வர முடியும்.

    ‘முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள். அதில் நேரம் வீணாகிறது. நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்’ என்பார் ஆபிரஹாம் லிங்கன்.

    முன்னேற்றத்தையும், நம்பிக்கையையும் இணைத்துச் சொல்லும் ஒரு அழகான பாரசீகக் கதை ஓஷோவில் உண்டு.

    ஒரு குருடனும் அவனது நண்பனும் பாலைவனத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். இருவரும் இணைந்து புறப்பட்டவர்கள் அல்ல. தனித் தனியாகக் கிளம்பி, யாத்திரையின்போது தற்செயலாக வழியில் சந்தித்தவர்கள்.

    அது குளிர்காலம் வேறு. எனவே, குருடனைக் கைப்பிடித்துத் தன்னுடன் ஜாக்கிரதையாக அழைத்துச் சென்றான் நண்பன். அவர்களது பயணம் தொடர்ந்தது. இணைந்தே நடந்தனர். உண்டனர். உறங்கினர்.

    ஒரு நாள் காலை குருடன் முதலில் எழுந்து விட்டான். தட்டுத் தடுமாறி தனது கம்பைத் தேடினான். கையில் அகப்படவில்லை. சட்டென்று ஒரு கம்பு அவன் கைக்குக் கிடைத்தது. அது வழவழவென்று இருந்தது.

    குருடனின் கெட்ட நேரம்... அது கம்பு அல்ல. ஒரு பாம்பு. குளிரில் மிகவும் விறைத்து, கம்பைப் போல் கிடந்தது. கையில் எடுத்துக் கொண்டான். குருடனுக்கோ சந்தோஷம். ‘இறைவா... என் பழைய தடியை நீ எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக - வழவழப்பான அழகான ஒரு தடியைத் தந்திருக்கிறாய்’ என்று நன்றி சொன்னான்.

    ‘எழுந்திரு... பொழுது புலர்ந்து விட்டது. பயணத்தைத் தொடர்வோம்’ என்று அந்தக் கம்பால் நண்பனைத் தட்டி எழுப்பினான் குருடன்.

    கம்பைப் பார்த்துத் திடுக்கிட்டான் நண்பன். ‘அடேய்... நீ கையில் பிடித்திருப்பது உன் கம்பு அல்ல. அது கொஞ்சம் தொலைவில் கிடக்கிறது. உன் கையில் இருப்பது ஒரு பாம்பு. அதை முதலில் வீசி எறி. உயிரை மாய்த்து விடும்’ என்றான் பதட்டமாக.

    குருடன் நம்பவில்லை. ‘நண்பனே... அழகான ஒரு தடி எனக்குக் கிடைத்திருக்கிறதே என்கிற பொறாமை உனக்கு. அதனால்தான் இதை பாம்பு என்கிறாய்’ என்றான் அலட்சியமாக.

    நண்பன் பதறினான். ‘ஏய்... சொன்னால் கேள். உன் கையில் இருக்கும் பாம்பை

    Enjoying the preview?
    Page 1 of 1