Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tirupati
Tirupati
Tirupati
Ebook139 pages54 minutes

Tirupati

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தெரிந்த தகவல்களைத் திரட்டி எழுதுவது ஒரு வகை.
தெரியாத தகவல்களை - மிகவும் கஷ்டப்பட்டுத் திரட்டி அவற்றுக்கு ஒரு வடிவம் கொடுப்பது சுவாரஸ்யமான விஷயம். அப்படித்தான் இந்தத் தொடரை எழுதினேன்.
திருப்பதி லட்டு வந்த கதை, திருப்பதி உண்டியலில் விழும் காணிக்கைகள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள், எம்.எஸ். சுப்ரபாதம் ஒலித்து வரும் விஷயம், அப்துல் கலாம் வந்த நிகழ்வு என்று பல தகவல்களைச் சேகரித்து இதில் எழுதி இருக்கிறேன்.
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் இப்போது நூல் வடிவம் பெறுகின்றன.
புத்தகங்களைப் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், இல்லங்களில் நடக்கிற நல்ல நிகழ்வுகளுக்கு உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிசளியுங்கள்... படிக்கிற விஷயமும் அதிகரிக்கும். ஆன்மிக உணர்வும் அதிகரிக்கும்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138306247
Tirupati

Read more from P. Swaminathan

Related to Tirupati

Related ebooks

Related categories

Reviews for Tirupati

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tirupati - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    திருப்பதி

    Tirupati

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஏழுமலையானுக்கு நிவேதனம் சட்டியில் வைத்த தயிர் சாதம்

    2. தாமஸ் மன்றோவும் வெண்பொங்கலும்

    3. திருப்பதி லட்டு வந்த கதை

    4. ஆண்டுக்கு லட்டு விற்பனை பல கோடி ரூபாய்

    5. பாவாஜியும் பாலாஜியும்

    6. நிரம்பி வழியும் திருப்பதி உண்டியல்கள்

    7. கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா...

    8. நித்தமும் இங்கே திருக்கல்யாணம்

    9. மூதாட்டிக்குக் கிடைத்த முக்தி

    10. மோர்க்காரியின் பிடிவாதமும் ராமானுஜரின் சிபாரிசும்

    11. பிரமாண்ட உத்ஸவம் யுகாதி திருவிழா

    12. கோவிந்தா கோவிந்தா

    13. தாயாரே வாங்கிக் கொண்ட தங்க மோதிரம்

    14. குயவனின் பக்தியும் மன்னனின் பக்தியும்

    15. பாக்கியம் இருந்தால் தரிசனம் கிடைக்கும்

    16. திருப்பதி வந்த அப்துல் கலாம்

    திருப்பதி

    வியக்க வைக்கும் அற்புத கட்டுரைகள்

    'செந்தமிழ்க் கலாநிதி'

    'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'

    பி. சுவாமிநாதன்

    என்னுரை

    'திருப்பதி' - தெரியாதவர்கள் இருக்க முடியாது.

    'திருப்பதி லட்டு' - சுவைக்காதவர்கள் இருக்க முடியாது.

    'புரட்டாசி சனி விரதம்' - அனுஷ்டிக்காதவர்கள் இருக்க முடியாது.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் இன்றைக்கும் பலர் உண்டியல் ஏந்தி 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்தோடு வீடு வீடாகப் போய் 'பிக்ஷை' கேட்பதுண்டு. இவை எல்லாம் திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்ந்து கொண்டவை.

    கோயிலுக்குப் போய் மொட்டை போட்டால் அது பெரும்பாலும் திருப்பதி மொட்டையாகத்தான் இருக்கும்.

    'வாழ்க்கையில் ஏதாவது ஒரு திருப்பம் - அதாவது நல்ல மாற்றம் தேவைப்படுபவர்கள் திருப்பதிக்குச் சென்று வருவது என்பது இன்று நேற்றல்ல... காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

    வருகின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் எல்லா நேரமும் அன்னதானம். அதுவும் சுடச் சுட.

    இதைத் தவிர கல்வி, மருத்துவம், திருமண உதவி, திருப்பணிக்குக் காத்திருக்கும் ஆலயங்களுக்கு உதவுதல் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வரும் நற்காரியங்கள் கணக்கில் அடங்கா.

    ஆக, உலகமே கொண்டாடக் கூடிய ஒரு தெய்வம் - திருமலை திருப்பதி வேங்கடவன்.

    இப்பேர்ப்பட்ட சிறப்பு கொண்ட வேங்கடாசலபதி பற்றி நிறைய புராணத் தகவல்கள் உண்டு. ஏராளமான எழுத்தாளர்களும் எழுதி இருக்கிறார்கள்.

    கல்கி குழுமத்தில் இருந்து வரும் 'தீபம்' ஆன்மிக இதழில் திருப்பதி பற்றி ஒரு தொடர் எழுதுமாறு சொன்னார்கள். 'அதுவும் - இதுவரை பக்தர்கள் அவ்வளவாகக் கேள்விப்பட்டிராத தகவல்களாக இருக்கட்டும்' என்றும் சொன்னார் அதன் பொறுப்பாசிரியர் திரு. ஸ்ரீநிவாச ராகவன்.

    தெரிந்த தகவல்களைத் திரட்டி எழுதுவது ஒரு வகை.

    தெரியாத தகவல்களை - மிகவும் கஷ்டப்பட்டுத் திரட்டி அவற்றுக்கு ஒரு வடிவம் கொடுப்பது சுவாரஸ்யமான விஷயம். அப்படித்தான் இந்தத் தொடரை எழுதினேன்.

    திருப்பதி லட்டு வந்த கதை, திருப்பதி உண்டியலில் விழும் காணிக்கைகள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள், எம்.எஸ். சுப்ரபாதம் ஒலித்து வரும் விஷயம், அப்துல் கலாம் வந்த நிகழ்வு என்று பல தகவல்களைச் சேகரித்து இதில் எழுதி இருக்கிறேன்.

    இந்தக் கட்டுரைகள் அனைத்தும் இப்போது நூல் வடிவம் பெறுகின்றன.

    புத்தகங்களைப் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், இல்லங்களில் நடக்கிற நல்ல நிகழ்வுகளுக்கு உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிசளியுங்கள்... படிக்கிற விஷயமும் அதிகரிக்கும். ஆன்மிக உணர்வும் அதிகரிக்கும்.

    என்னை ஆதரித்து, என்னை மென்மேலும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் வாசக அன்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

    என் குலதெய்வம் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மன் மற்றும் கலியுக தெய்வம் காஞ்சி மகா பெரியவா திருவடிகளுக்கு அனந்தகோடி நமஸ்காரம் செலுத்தி, இந்த நூலை அர்ப்பணிக்கின்றேன்.

    மகா பெரியவா சரணம்.

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    98401 42031

    email: swami1964@gmail.com

    https://www.facebook.com/swami1964

    http://pswaminathan.in

    1. ஏழுமலையானுக்கு நிவேதனம் சட்டியில் வைத்த தயிர் சாதம்

    உலகிலேயே மாபெரும் பணக்காரக் கடவுள் யார் என்று கேட்டால், சிறு குழந்தைகூட 'திருப்பதி வேங்கடாசலபதி' என்று யோசிக்காமல் சொல்லி விடும். அந்த அளவுக்குப் பிரசித்தமானவர் ஏழுமலையான் எனப்படும் ஏழுமலைகளுக்குச் சொந்தக்கார திருப்பதி பெருமாள்.

    விசேஷ காலங்களில் தினப்படி காணிக்கையாக இவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் குவிகிறது என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்!

    இன்றைக்குத்தான் என்றில்லை. பண்டைய மன்னர்கள் காலத்தில் இருந்தே திருப்பதி ஏழுமலையான் 'வசூல் ராஜா'வாகத்தான் விளங்கி வந்திருக்கிறார். இவரது சந்நிதிக்குச் செல்லும் எந்த ஒரு பக்தரும் பணத்தைக் கொட்டிவிட்டுத்தான் தரிசனம் செய்து திரும்புகிறார்கள்.

    'திருப்பதி சென்று வந்தால் ஒரு திருப்பம் நிகழும்' என்பர். எனவே, வீட்டிலோ, தொழிலிலோ, உத்தியோகத்திலோ நல்ல மாற்றங்களையும் உயர்வுகளையும் எதிர்பார்க்கும் அன்பர்கள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் திருப்பதிக்குப் பயணப்பட்டுத் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறப் பெறுகிறார்கள்.

    திருப்பதி கோயிலுக்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் ஏராளமான தங்க, வைர ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கி இருக்கிறார்.

    இதில் ஒரு கூத்து தெரியுமா?

    கிருஷ்ணதேவராயரின் இரண்டு மனைவியருக்கு இடையே எதற்கெடுத்தாலும் போட்டிதான். 'வசூல் ராஜா'வான திருப்பதி பெருமாளும் இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டார் போலும். கண்களைப் பறிக்கும் வண்ண வேலைப்பாடுகள் அமைந்த ஒரு தங்கப் பேலாவை கிருஷ்ணதேவராயரின் ஒரு மனைவி திருப்பதி கோயிலுக்கு தானமாகக் கொடுத்தாள் என்றால், அடுத்த மனைவி சும்மா இருப்பாளா? தன் பகட்டைக் காட்டுவதற்காக அதைவிடப் பெரிய தங்கப் பேலாவை ஓரிரு வருட இடைவெளியில் திருப்பதி பெருமாளுக்கு தானம் கொடுத்திருக்கிறாள்.

    இந்த இரு மனைவியரும் தங்கப் பேலாவை தானம் கொடுத்த விவரம் கன்னட பாஷையில் கல்வெட்டில் காணப்படுகிறது.

    எண்ணற்ற குறுநில மன்னர்கள், ராஜாக்கள், பிரபுக்கள் போன்றோர் நிலங்கள், நகைகள், பொற்காசுகள், ஆபரணங்கள் என்று சகட்டுமேனிக்கு வாரி வழங்கி உள்ளனர் திருப்பதி பெருமாளுக்கு. தற்போது திருப்பதி தேவஸ்தானம் பாதுகாத்து வரும் நகைகளின் மதிப்பு மட்டும் பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும் என்பது ஒரு கணக்கு. இந்த நகைகள் அத்தனையும் மன்னர்கள் காலத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் காணிக்கையாக வழங்கியவை.

    திருப்பதி பெருமாளுக்கு வேண்டிக் கொண்டு உண்டியலில் தாலி உட்பட தங்கத்தைக் காணிக்கையாக வழங்குகிற பக்தர்கள் ஏராளம்.

    இன்றைக்குக் கோடீஸ்வரன் என்றாலும், தன் திருமணத்தை நிகழ்த்திக் கொள்வதற்காக குபேர பகவானிடம் திருப்பதி பெருமாள் கடன் வாங்கியதாகப் புராணம் சொல்கிறது. ஸ்ரீபத்மாவதித் தாயாரைத் திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கினார் ஸ்ரீநிவாசப் பெருமான். கடனை எப்போது அடைப்பதாகச் சொன்னாராம்? 'கலியுகம் முழுதும் வட்டி கட்டி விட்டு, கலியுகம் நிறைவடையும்போது அசலைத் தருகிறேன்' என்ற நிபந்தனையில் கடன் வாங்கித் திருமணம் செய்து கொண்டாராம்.

    மாலவன் வாங்கிய கடனுக்கு வட்டியைச் செலுத்துவதற்காகத்தான் அவரது அருளுக்குப் பாத்திரமான அடியவர்கள் இன்று திருமலைக்குப் போய்க் கொட்டோ கொட்டென்று பணத்தையும் தங்கத்தையும் கொட்டி வருகிறார்கள் போலிருக்கிறது.

    பணக்காரக் கடவுள் என்பதற்கு ஏற்ப பெருமாளின் வழிபாடு சம்பந்தப்பட்ட சில தகவல்கள் நமக்குப் பிரமிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன.

    ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் அங்குள்ள பக்தர்களால் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், லவங்கம் போன்ற வாசனைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    பெருமாளின் அபிஷேகத்துக்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீஸில் இருந்து வாசனை திரவியங்கள் போன்றவை வரவழைக்கப்படுகின்றன. பெருமாளின் விமரிசையான ஒரு அபிஷேகத்துக்கு உண்டான செலவு மட்டும்

    Enjoying the preview?
    Page 1 of 1