Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ezhilmigu Ilangai Koyilgal
Ezhilmigu Ilangai Koyilgal
Ezhilmigu Ilangai Koyilgal
Ebook142 pages33 minutes

Ezhilmigu Ilangai Koyilgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நமது பாரத தேசத்தின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. அதிலும் தமிழகத்தின் தென்கோடியில் மிக அருகில் இருக்கும் நாடு. எனவே, இந்திய தேசத்திற்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு கொண்ட நாடாக இலங்கை திகழ்கிறது. மேலும் ஆன்மீக பூமியாகத் திகழும் நமது தேசத்தின் நீட்சியாக, அங்கும் இராமாயணம் தொடர்புடைய இடங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் ஆகியவை உள்ளன.

'எழில்மிகு இலங்கை கோயில்கள்' என்கிற இந்த நூல், இலங்கையில் உள்ள ஆலயங்களை பற்றி மிகத் தெளிவான ஒரு கண்ணோட்டதை நமக்கு அளிக்கிறது.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580160709482
Ezhilmigu Ilangai Koyilgal

Related to Ezhilmigu Ilangai Koyilgal

Related ebooks

Reviews for Ezhilmigu Ilangai Koyilgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ezhilmigu Ilangai Koyilgal - M. Nithyanandam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எழில்மிகு இலங்கைக் கோயில்கள்

    Ezhilmigu Ilangai Koyilgal

    Author:

    ம. நித்யானந்தம்

    M. Nithyanandam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-nithyanandam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அணிந்துரை

    1. முன்னேஸ்வரம்

    2. அனுராதபுரம் மகா போதி

    3. திருக்கேதீஸ்வரம்

    4. 'நயினாத் தீவு' நாகபூஷணி அம்மன் கோயில்

    5. நல்லூர் கந்தசாமி கோயில்

    6. மாவடிபுரம் கந்தசாமி கோயில்

    7. நகுலேஸ்வரம்

    8. திருகோணமலை

    9. நிலாவெளி ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில்

    10. திருகோணமலை பத்ரகாளி அம்மன் கோயில்

    11. கன்னியா வெந்நீர் ஊற்று

    12. ஈழத்து திருச்செந்தூர் முருகன் கோயில்

    13. தம்புள்ளா தங்கக் கோயில்

    14. மாத்தளை மாரியம்மன் கோயில்

    15. கண்டி கதிர்காமம் முருகன் கோயில்

    16. கண்டி புத்தர் கோயில்

    17. ரம்போடா அனுமன் கோயில்

    18. நுவரேலியா காயத்ரி அம்மன் கோயில்

    19. சீதா எலியா (அசோகவனம்)

    20. திவுரும்பொல (சீதை தீக்குளித்த இடம்)

    21. கதிர்காமம் முருகன் கோயில்

    22. செல்ல கதிர்காமம் விநாயகர் கோயில்

    23. தேவுந்தரா தொண்டீஸ்வரம் கோயில்

    24. கெலனியா விபீஷணன் கோயில்

    25. கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில்

    முன்னுரை

    நமது பாரத தேசத்தின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. அதிலும் தமிழகத்தின் தென்கோடியில் மிக அருகில் இருக்கும் நாடு. எனவே, இந்திய தேசத்திற்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு கொண்ட நாடாக இலங்கை திகழ்கிறது. மேலும் ஆன்மீக பூமியாகத் திகழும் நமது தேசத்தின் நீட்சியாக, அங்கும் இராமாயணம் தொடர்புடைய இடங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் ஆகியவை உள்ளன.

    அந்த வகையில் இலங்கை தேசத்தில் உள்ள திருக்கோயில்களை தரிசனம் செய்யும் பொருட்டு 2016 ஆம் ஆண்டு ஒருவார காலம் இலங்கையில் யாத்திரை மேற்கொண்டு 25 தலங்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு இறையருளால் கிட்டியது.

    தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரம், திருகோணமலை திருத்தலங்கள், திருப்புகழ் பாடல் பெற்ற கதிர்காமம், நகுலேஸ்வரம், கண்டி, இராமாயணத் தொடர்புடைய சீதா எலியா (அசோகவனம்), சீதை தீக்குளித்த இடமான திவுரம்பொல, விபீஷணன் அரண்மனையான கெலனியா, புத்தரின் புனிதப் பல் இருக்கும் கண்டி 'தலதமாலிகா', அனுராதாபுரம், தம்புள்ளை தங்க புத்தர் குடைவரைக் கோயில் உள்ளிட்ட தலங்களை இலங்கையில் தரிசிக்கலாம்.

    இலங்கையில் தரிசனம் செய்து மகிழ்ந்த தலங்களைப் பற்றி, அதன் தல வரலாறு, அமைப்பு, இலங்கையின் எந்த பகுதியில் உள்ளது போன்ற செய்திகளுடன் அனைவரும் எளிய முறையில் அறிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளேன். இது நமது அண்டை நாடான இலங்கைக்கும், நமக்கும் இருக்கும் பழம்பெரும் வரலாற்றை நமக்கு நினைவுப்படுத்தும்.

    எல்லாம் வல்ல திருப்போரூர் முருகப்பெருமான் கருணையினால் வெளிவரும் எனது இந்த ஐந்தாவது நூலுக்கு தனது பல்வேறு பணிகளுக்கிடையிலும் இந்த புத்தகத்தைப் படித்து அணிந்துரை வழங்கிய அன்பிற்குரிய பத்திரிகையாளர், நாவலாசிரியர், சரித்திர ஆய்வாளர் திரு. 'காலச்சக்கரம்' நரசிம்மா அவர்களுக்கு எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இலங்கைத் தலங்களை தரிசிக்கும் இந்த அரிய வாய்ப்பை அடியேன் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த 'நால்வரின் பாதையில்' யாத்திரைக் குழு நிறுவனர் திரு. சு. சுரேஷ் பிரியன், திருமதி சரஸ்வதி, திரு. மு. வேல் ஆகியோர் உள்ளிட்ட யாத்திரை குழுவினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ம. நித்யானந்தம்

    9841398516

    அணிந்துரை

    E:\Priya\Book Generation\Ezhilmigu ilangai Koyilgal\1-min.jpg

    தமிழகத்தின் கடலோரத்தில் இரண்டு சிறப்பு மிக்க தளங்கள் உள்ளன. ஒன்று புராண ரீதியாக புகழ் பெற்றது. மற்றொன்று சரித்திர ரீதியாக புகழ் பெற்றது. இந்த இரண்டு தளங்களும் இலங்கைக்கு போகும் பாதைகளே!

    புராண ரீதியாக புகழ் பெற்ற பெட்ரா இடம்தான், தனுஷ்கோடி. இங்கிருந்துதான், சீதையை தேடி கடலைத் தாண்டிச் சென்ற அனுமன், இலங்கையில் சீதையை கண்டு, இராமனிடம் சொல்லி, அவர்கள் கடலை கடந்து பாலம் கட்டி, இலங்கைக்கு சென்று ராவணனை கொண்டு, சீதையை மீட்ட இடம்.

    மற்றொன்று, சரித்திர ரீதியாக புகழ் பெற்ற இடம்! கோடியக்கரை! இங்கிருந்துதான் வந்தியத்தேவன் பூங்குழலியின் உதவியோடு, கடல் கடந்து சென்று, சோழ இளவரசர் அருண்மொழியைச் சந்தித்து, அவரை மீண்டும் சூடாமணி விகாரத்திற்கு அழைத்து வந்த இடம்.

    தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு 18 கி.மீ. கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு 37 கி.மீ. ஆனால் தனுஷ்கோடி, கோடியக்கரையை காட்டிலும், இன்னும் ஒரு எளிதான மற்றும் சிறப்பான பாதையில் சென்றால் உங்கள் இலங்கை பயணம் மிகவும் பயனுள்ளதாகவும் ,மறக்க முடியாத அனுபவங்கள் கொண்டதாகவும் அமையும்.

    'எழில்மிகு இலங்கை கோயில்கள்' என்கிற இந்த நூல், இலங்கையில் உள்ள ஆலயங்களை பற்றி மிகத்

    Enjoying the preview?
    Page 1 of 1