Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thalangalin Tharisanam
Thalangalin Tharisanam
Thalangalin Tharisanam
Ebook189 pages1 hour

Thalangalin Tharisanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில ஆண்டுகளுக்கு முன்னால் 'கண்ணன் நடந்த புண்ணிய பூமி' என்ற மகுடத்தோடு வடக்கிலும் தெற்கிலுமாய் பாரத நாட்டில் நான் தரிசித்து வந்த திருக் கோயில்களைப் பற்றிய என்னுடைய கட்டுரைகளை நூலாக வெளியிட்டது. இப்போது 'தலங்களின் தரிசனம்' என்ற நூல் உங்கள் கரங்களில்.

பயணம் என்பது ஒரு சுகமான அனுபவம் தான்; வாழ்க்கைப் பயணம் உட்பட! கலைச் சிறப்பும் ஆன்மிகச் சிறப்பும் உள்ள இடங்களுக்குச் சென்று வருவதும், அப்போது ஏற்படுகிற உணர்வுகளை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதும் எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கின்றன.

இந்தக் கட்டுரைகள், படிக்கிற வாசகர்களுக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருவதோடு, அந்த இடங்களுக்குச் சென்று வர வேண்டும் என்கிற ஆவலையும் தூண்டக் கூடும். பத்திரிகைகளில் படிக்கும் அன்பர்கள் அவ்வாறே எழுதுகிறார்கள்; என்னிடம் நேரிலும் கூறுகிறார்கள்.

மிக்க அன்புடன்
சுப்ர. பாலன்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580127904633
Thalangalin Tharisanam

Read more from Subra Balan

Related to Thalangalin Tharisanam

Related ebooks

Related categories

Reviews for Thalangalin Tharisanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thalangalin Tharisanam - Subra Balan

    http://www.pustaka.co.in

    தலங்களின் தரிசனம்

    Thalangalin Tharisanam

    Author:

    சுப்ர. பாலன்

    Subra Balan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/subra-balan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மாயாபுரி மகிமை

    2. புஷ்கர் ஏரியில் தீபதானம்

    3. தக்கோலங்களைக் காப்போம்!

    4. கிராம தேவதைகள்

    5. பவானிக் கூடல் சங்கமேசுவரர்

    6. கல்லெல்லாம் நரசிம்மம்! காடெல்லாம் தெய்வீகம்!

    7. ஆயர்பாடி அழகுகள்!

    8. தருமபுரத்துத் தமிழ்ப் பணி

    9. வியாழபகவான் கோயில்!

    10. தென்பெண்ணைக் கரையில் ஒரு பிருந்தாவனம்!

    11. மகாநந்தியின் அமிர்தப் பொய்கை!

    12. மலையாளப் புழா அம்மே!

    13. நங்கநல்லூரின் விஸ்வரூபர்!

    14. காஞ்சங்காடு ஆனந்தாஸ்ரமம்

    15. திருலோக்கி ஆலயங்கள்

    16. அத்திவரதர் அருள்!

    17. தொண்டமான் மன்னர்களின் குலதேவதை!

    18. மருவத்தூர் அம்மா

    19. ஞானம் பிறந்த பூமி!

    என்னுடைய முதல் வாசகர்...

    பயணம் செல்லும்

    இடங்களுக்கெல்லாம்

    உன்னையும்

    அழைத்துப் போக

    முடிவதில்லை...!

    கட்டுரைகளைப்

    படித்து மகிழும்

    உன் கண்களின்

    மெளன விமர்சனம்...!

    அதற்கு இந்தப்

    பயண நூல்...!

    சுப்ர. பாலன்

    *****

    என்னுரை

    சில ஆண்டுகளுக்கு முன்னால் 'கண்ணன் நடந்த புண்ணிய பூமி' என்ற மகுடத்தோடு வடக்கிலும் தெற்கிலுமாய் பாரத நாட்டில் நான் தரிசித்து வந்த திருக் கோயில்களைப் பற்றிய என்னுடைய கட்டுரைகளை நூலாக வெளியிட்டது. இப்போது 'தலங்களின் தரிசனம்' என்ற நூல் உங்கள் கரங்களில்.

    பயணம் என்பது ஒரு சுகமான அனுபவம் தான்; வாழ்க்கைப் பயணம் உட்பட! கலைச் சிறப்பும் ஆன்மிகச் சிறப்பும் உள்ள இடங்களுக்குச் சென்று வருவதும், அப்போது ஏற்படுகிற உணர்வுகளை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதும் எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கின்றன.

    இந்தக் கட்டுரைகள், படிக்கிற வாசகர்களுக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருவதோடு, அந்த இடங்களுக்குச் சென்று வர வேண்டும் என்கிற ஆவலையும் தூண்டக் கூடும். பத்திரிகைகளில் படிக்கும் அன்பர்கள் அவ்வாறே எழுதுகிறார்கள்; என்னிடம் நேரிலும் கூறுகிறார்கள்.

    மிக்க அன்புடன்

    சுப்ர. பாலன்

    *****

    கலைமாமணி யோகா

    அத்திவரதர் அனந்தபுஷ்கரணி

    கிராம தேவதைகள்

    மலையாளப் புழா நாகர் வழிபாடி (புள்ளுவன் பாட்டு)

    பவானி சங்கமேசுவரர் ஆலயம்

    பவானி இலந்தை மரமேடை

    தருமபுரம் மகா சந்நிதானம்

    மேல்மருவத்தூர் அம்மா

    0

    கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள்

    ஆனந்தாஸ்ரமம் சச்சிதானந்தர்

    உத்தராதி மடம் ஸத்யாத்ம தீர்த்தர் ஸ்வாமி

    பவநாசினி அருவிக்கு முன்னால் கட்டுரையாசிரியர்

    மலையாளப்புழா சமய விளக்கு வழிபாடு

    பரனூர் கோகுலாஷ்டமியில்

    அஹோபிலம் காட்டுவழியில்

    *****

    1. மாயாபுரி மகிமை

    பாரதத்திலுள்ள புனிதமான ஏழு நகரங்களுள் மூன்றாவதாக வைத்து எண்ணப்படுவது மாயாபுரி.

    'அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகாபுரி,

    த்வாராவதி, சைவ சப்தே தா மோக்ஷ தாயிகா!’

    என்று புகழ் பெற்ற சுலோக வரி உண்டு.

    மாயாபுரி என்று தேடினால் தெரியாது. ஹரித்வார் என்றால்தான் சட்டென்று புரியும். எனவே மாயாபுரியைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் ஹரித்வாரைப் பற்றிப் பார்க்கலாம். வடபாரதத்தில் உள்ள புண்ணியத் தலமான ஹரித்வார் புராண இதிகாச காலங்களிலிருந்தே புகழ் பெற்றது.

    இதற்கு 'கங்காத்வார்' என்றும் 'தபோவனம்' என்றும் பெயர்கள் உண்டு. சீன யாத்ரீகரான 'ஹியூன் சங்' என்பவர் இந்தப் புண்ணிய பூமியைக் கண்டு வியந்து எழுதினார். கங்காநதி. முதன் முதலில் தரையில் இறங்குகிற இடம் ஹரித்வார். அதற்கு முன்னால் இமயமலைத் தொடரில் ரிஷிகேசம் வழியாக, பாகீரதி நதி என்ற பெயரிலேயே வளைய வருகிறது கங்கை.

    புராணக் கதைகளின் படி, அஸ்வமேத யாகம் செய்ய விரும்பிய சகரன் என்னும் மன்னன் அனுப்பிய யாகக் குதிரையை, கபிலர் என்னும் முனிவரின் ஆசிரமத்துக்கு அருகில் ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டான் இந்திரன். யாகக் குதிரையைத் தேடி வந்த சகர மன்னனின் அறுபதாயிரம் பிள்ளைகள், கபிலர்தான் குதிரையைப் பிடித்துக் கட்டி விட்டார் என்று தவறாக எண்ணி, மோசமான வார்த்தைகளால் தவத்திலிருந்த முனிவரைத் திட்டியிருக்கிறார்கள். சட்டென்று தவம் கலையப் பெற்ற மகரிஷி கபிலர் கோபம் கொண்டு பார்த்த பார்வையில் அவ்வளவு பேரும் எரிந்து சாம்பலானார்கள்.

    அவர்களைக் கடைத்தேற்றுவதற்காக கங்கையை வரவழைக்க எண்ணித் தவமிருந்தான் சகரன். அவனுக்குப் பிறகு சூரிய குலத்து அரசனான அஸமஞ்சன், இதே கங்கையை வரவழைக்க ஒரு லட்சம் ஆண்டுகள் தவமிருந்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய பிள்ளையான அன்ஷுமான் என்பவன் ஒரு லட்சம் ஆண்டுகள் தவமியற்றினான். அவனாலும் வானுலகிலிருந்து கங்கையை வரவழைக்க முடியவில்லை. அதன் பிறகு அன்ஷுமானின் பிள்ளையான பகீரதன் ஒரு லட்சம் ஆண்டுகள் கடுந்தவம் இருந்தான். யாருக்கும் இரங்காத கங்கா தேவியும், பகீரதன் தவத்தில் மகிழ்ந்து பூமிக்கு வந்தாள். பகீரதனும் தன்னுடைய முன்னோர்களுக்கு இறுதிக்கடன் நிறைவேற்றி அவர்களுக்கு நல்வழி தேடித் தந்தான். இது 'தேவீ பாகவதத்'தில் வருகிற கதை. நூறு யோஜனை தொலைவிலிருந்து ஒருவன் ‘ஸ்ரீ கங்கா' என்று குரல் கொடுத்தாலும் போதும். அவனுடைய பாவங்கள் அகலும், அவன் மகாவிஷ்ணுவின் திருவடியைச் சென்றடையலாம், என்கிறது தேவீ பாகவத சுலோகம்.

    (ஒரு யோஜனை என்பது நம்முடைய கி.மீ. கணக்கில் சுமாராகப் பதினோரு கிலோ மீட்டராகும்)

    பிற்காலத்தில் இதே புண்ணிய பூமியில் தக்ஷப் பிரஜாபதி என்னும் மன்னன் ஒரு யாகம் செய்தான். அவனுடைய யாகபூமி பரவியிருந்த பகுதி முழுவதும் மாயாபுரி என்று வழங்கப்பட்டது. உலகத்தைப் படைத்துக் காத்து அழிப்பவள் மாயாதேவி. அவளே அனைவருக்கும் முக்தி தருகிறவள்.

    ஷிவாலிக் குன்றுகள் உள்ள பகுதியில் முக்கோண வடிவில் அமையும் இடங்களில் மூன்று ஆலயங்கள் உள்ளன. ஒன்று மானஸாதேவி ஆலயம். மற்றவை, மாயா தேவி, சண்டிதேவி ஆலயங்கள். இந்த மூன்று ஆலயங்களும் ஒரு முக்கோண யந்திர அமைப்பில் அமைந்திருப்பதால், தாந்த்ரிக் முறையில் இவற்றை விசேஷமானதாய்க் கருதுகிறார்கள்.

    இந்த மூன்று ஆலய இடங்களும் சித்தர் பீடங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஷிவாலிக் மலைத் தொடரின் மேற்கில் வில்வ பர்வதத்தில் இருப்பது மானஸாதேவி ஆலயம். கங்கைக் கரை தாண்டி, கிழக்குப் பக்கத்து நீல மலைக் குன்றில் இருப்பது சண்டி தேவி ஆலயம். தென் புறத்தில் சமதளத்தில் இருப்பது, மாயாதேவியின் ஆலயம்.

    மாயாதேவியும் சண்டிதேவியுமே மானஸாதேவியை வழிபட்டார்களாம். ஆகையால் மானஸாதேவி தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மூன்று முகங்களோடு கூடிய மானஸாதேவியின் பளிங்குத் திருமேனி, அமர்ந்த கோலத்தில் கொள்ளை அழகு. மிகவும் சிறிய கருவறை. குனிந்து. பவ்வியமாகத்தான், ஆனாலும் வெகு அருகே, தொட்டு விடும் தூரத்தில் அம்பிகையை தரிசிக்கலாம்.

    இந்த மூன்று தேவியரின் முன்னாலும் போய் நின்று மனம் நெகிழ்ந்து பிரார்த்தனை செய்தால், அவர்கள் விரும்புவது கைகூடும் என்று நம்புகிறார்கள்.

    மானஸாதேவி ஆலயத்துக்கும், சண்டிதேவி ஆலயத்துக்கும் நடந்து போகிறவர்கள் வெகு குறைவு. ஹரித்வாரிலிருந்து கம்பிப்பாதை போட்டிருக்கிறார்கள். உயரழுத்த மின் கம்பங்கள் மாதிரி

    Enjoying the preview?
    Page 1 of 1