Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arul Tharum Aalayangal
Arul Tharum Aalayangal
Arul Tharum Aalayangal
Ebook170 pages56 minutes

Arul Tharum Aalayangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருத்தலங்களை வலம்வந்து அனுபவித்து என் உணர்வுகளைப் பதிவு செய்து உங்களோடு பகிர்ந்து கொள்ளும் கட்டுரைகளின் நாலாம் தொகுப்பு இந்த நூல்.

முன்பே ‘கண்ணன் நடந்த புண்ணிய பூமி'யும், 'தலங்களின் தரிசனம்' நூலும், புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த 'திருகோகர்ணம் தலப் பெருமை' நூலும் வாசக அன்பர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. அதேபோல், இந்தத் தொகுப்பும் உங்களை வந்தடைந்துள்ளது.

பல கட்டுரைகள், ஆண்டு தவறாமல் நான் தீபாவளி மலர்களுக்காகப் பயணம் மேற்கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள். இவற்றை வெளியிட்டு ஆதரவளிக்கும் கல்கி வார இதழ், லேடீஸ் ஸ்பெஷல், கோபுர தரிசனம் இதழ்களின் ஆசிரியர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

ஒவ்வொரு பயணத்தின் போதும் அனுபவங்கள் புதிது புதிதாய்க் கிடைக்கின்றன. இந்தப் பயணங்கள் பெரும்பாலானவற்றில் உடன்வந்து படப்பதிவு செய்து வழங்குகிறவர் என் இனிய நண்பர் கலைமாமணி 'யோகா' அவர்கள். இம்முறை ஒரு கோட்டோவியராக என்னுடன் நெல்லைக்கு வந்து படங்களை ஒவியங்களாகவும் தீட்டியிருப்பவர் நண்பர் ஒவியர். வேதா. இவர்களுக்கு என் நன்றி; எப்போதும்.

நூலை அழகுற ஒளியச்சுச் செய்து தரும் நண்பர் அழகர், அட்டைப்படத்தை மிகவும் பொருத்தமான முறையில் வடிவமைத்துத் தந்துள்ள ஓவியர் நாதன் ஆகியோருக்கு என் நன்றி.

அன்புடன்
- சுப்ர. பாலன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127904528
Arul Tharum Aalayangal

Read more from Subra Balan

Related to Arul Tharum Aalayangal

Related ebooks

Related categories

Reviews for Arul Tharum Aalayangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arul Tharum Aalayangal - Subra Balan

    http://www.pustaka.co.in

    அருள் தரும் ஆலயங்கள்

    Arul Tharum Aalayangal

    Author:

    சுப்ர. பாலன்

    Subra Balan

    For more books

    http://pustaka.co.in/home/author/subra-balan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. கோணார்க் (ஒரிசா மாநிலம்)

    2. பரசுராம் (மகாராஷ்டிரா மாநிலம்)

    3. புவனேஸ்வர் (ஒரிசா மாநிலம்)

    4. தௌலி (ஒரிசா மாநிலம்)

    5. கண்பதிபுலே (மகாராஷ்டிரா மாநிலம்)

    6. புரி (ஓரிசா மாநிலம்)

    7. மகாபலேஷ்வர் (மகாராஷ்டிரா மாநிலம்)

    8. ஓஸியான் (ராஜஸ்தான் மாநிலம்)

    9. அத்திப்போட்டா (கேரள மாநிலம்)

    10. காவஸ்ஸேரி (கேரளா மாநிலம்)

    11. வாவுல்லியாபுரம் (கேரளா மாநிலம்)

    12. வேலூர் (வட ஆற்காடு மாவட்டம்)

    13. திருநெல்வேலி

    14. விட்டலாபுரம் (திருநெல்வேலி மாவட்டம்)

    15. பேரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்)

    16. குமரமலை (புதுக்கோட்டை மாவட்டம்)

    17. பிள்ளைப்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்)

    18. திருவிடந்தை (கல்யாண வரம் தரும் திருத்தலம்-1)

    19. ஸ்ரீவில்லிபுத்தூர் (கல்யாண வரம் தரும் திருத்தலம்-2)

    20. மாங்காடு (கல்யாண வரம் தரும் திருத்தலம்-3)

    21. திருப்பதி (ஆந்திர மாநிலம்) (கல்யாண வரம் தரும் திருத்தலம்-4)

    22. காஞ்சிபுரம் (கல்யாண வரம் தரும் திருத்தலம்-5)

    23. கன்னியாகுமரி (கல்யாண வரம் தரும் திருத்தலம்-6)

    24. சுற்றுலா என்னும் காமதேனு

    என்னுரை

    திருத்தலங்களை வலம்வந்து அனுபவித்து என் உணர்வுகளைப் பதிவு செய்து உங்களோடு பகிர்ந்து கொள்ளும் கட்டுரைகளின் நாலாம் தொகுப்பு இந்த நூல்.

    முன்பே ‘கண்ணன் நடந்த புண்ணிய பூமி'யும், 'தலங்களின் தரிசனம்' நூலும், புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த 'திருகோகர்ணம் தலப் பெருமை' நூலும் வாசக அன்பர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. அதேபோல், இந்தத் தொகுப்பும் உங்களை வந்தடைந்துள்ளது.

    பல கட்டுரைகள், ஆண்டு தவறாமல் நான் தீபாவளி மலர்களுக்காகப் பயணம் மேற்கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள். இவற்றை வெளியிட்டு ஆதரவளிக்கும் கல்கி வார இதழ், லேடீஸ் ஸ்பெஷல், கோபுர தரிசனம் இதழ்களின் ஆசிரியர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

    ஒவ்வொரு பயணத்தின் போதும் அனுபவங்கள் புதிது புதிதாய்க் கிடைக்கின்றன. இந்தப் பயணங்கள் பெரும்பாலானவற்றில் உடன்வந்து படப்பதிவு செய்து வழங்குகிறவர் என் இனிய நண்பர் கலைமாமணி 'யோகா' அவர்கள். இம்முறை ஒரு கோட்டோவியராக என்னுடன் நெல்லைக்கு வந்து படங்களை ஒவியங்களாகவும் தீட்டியிருப்பவர் நண்பர் ஒவியர். வேதா. இவர்களுக்கு என் நன்றி; எப்போதும்.

    நூலை அழகுற ஒளியச்சுச் செய்து தரும் நண்பர் அழகர், அட்டைப்படத்தை மிகவும் பொருத்தமான முறையில் வடிவமைத்துத் தந்துள்ள ஓவியர் நாதன் ஆகியோருக்கு என் நன்றி.

    அன்புடன்

    - சுப்ர. பாலன்

    1. கோணார்க் (ஒரிசா மாநிலம்)

    சூரியனுக்காக எழுந்த ஒரு கலைக்கூடம்!

    ஆண்டுதோறும் டிசம்பர் முதல் வாரத்தில், ஒரிசா மாநிலம் கோணார்க்கில் உள்ள சூரியன் கோவிலின் முன்னேயுள்ள நிரந்தரமான மேடையில் நாட்டிய விழா நடத்துகிறது சுற்றுலாத்துறை. அந்த மேடையில் ஏறி நின்றால் யாருக்கும் நடனம் ஆடவரும்; கலைகளை ரசிக்கிற பக்குவம் ஏற்படும். அத்தனை அழகான, நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் நிரம்பிய நான்கு தூண்களோடு அமைந்த திறந்தவெளி மேடை அது.

    பதின்மூன்றாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கோணார்க் கலைக்கூடம், ஒரிசாவின் கட்டடக் கலைச் சிறப்புக்கும், சிற்பக்கலைக் சிறப்புக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

    கோவில்- பிரதானக்கோவில் மட்டும் பெரும் அளவில் சேதமடைந்துபோய், இப்போது இந்தியத் தொல்பொருட் துறையினரால் செப்பனிடும் வேலை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே இரும்புச் சட்டங்களும் தூண்களும் சாரங்களாகக் கட்டப்பட்டு உண்மையான அழகைக் காணமுடியாமல் ஒரு நிலை தற்போது நிலவுகிறது."

    சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேய அரசில், அப்போதைய 'பெங்கால்' மாகாணத் துணை கவர்னராக இருந்தவர் ஜே.ஏ. போர்ட்லியன் என்பவர். அவருடைய முயற்சியால் இந்தக் கலைக்கருவூலம் மேலும் சேதமடையாமல் காக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாய்த் தெரிகிறது. சூரியன்கோவில் 'கருவறை'யின் உட்புறத்துக்குள் யாரும் நுழைய முடியாமல் தடுக்கும் வண்ணம் முழுமையாக நான்குபுற வாயில்களும் மூடப்பட்டுள்ளன. அதுபற்றிய கல்வெட்டு, பின் கண்டவாறு சொல்கிறது.

    TO PRESERVE THIS SEPERB SPECIMEN OF INDIAN ARCHITECTURE, THE INTERIOR WAS FILLED IN BY ORDER OF THE HONOURABLE J.A. BOURDILION, C.S.I., LEUIT, GOVERNOR OF BENGAL. A.D. 1903.

    கிழக்குப்பார்த்த இந்தக் கோணார்க் சூரியக் கோவில், ஒரு பிரும்மாண்டமான ரதவடிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும் பன்னிரண்டு சக்கரங்கள். இந்தச் சூரியத்தேரை ஏழு குதிரைகள் பாய்ந்து இழுத்துச் செல்வது போன்ற அமைப்பு. குதிரைகள் சிதைந்தும் காணாமலும் போயிருக்கின்றன.

    கட்டுமான அமைப்பு - முதலில் நடன அரங்கம், இடப் புறத்தில் ஒரு கிணறும் சமையல் கூடமும், மையப் பகுதியில் சூரியத்தேர், அதன் வலப்புறம் குளியல் அறையும் கிணறும், பின்புறம் இடப்புறத்தில் சாயா தேவியின் ஆலயம் என்று உருவாக்கப்பட்டிருக்கிறது. பின்புறம், இடப்புறக்கோடியில் செங்கற்களால் ஒரு கோவில் எடுப்பிக்கப்பட்டு அரைகுறையாய் நிற்கிறது.

    'முகசாலா' என்று வழங்கப்படுகிற முன்புற நுழை வாயிலின் இருபுறமும் கம்பீரமான சிங்கங்கள், யானைகளின் மீது ஆக்ரோஷமாக அமர்ந்திருப்பதைக் காணலாம். அருகில் நெருங்கிப் பார்த்தால், யானைகளின் பிடியில் வீரர்கள் துவண்டு நெளிவதையும் காணலாம். ஒன்றைவிட ஒன்று ஆற்றலில் மேலோங்கியுள்ள இயற்கையின் நியதியைச் சொல்கிற மாதிரி! இவற்றையே பார்த்துக் கொண்டிருந்தால் போதுமா?

    படிகளில் ஏறி நடந்து நடன மண்டபம் என வழங்கப்படும் 'நட்மந்திர்' வரலாம். கம்பீரமான நான்கு சிற்பத் தூண்களோடு அதிகம் சிதைவுறாமல் உள்ள அரங்கம் இது. இன்னும் இறங்கி நடந்தால் சூரியத்தேரைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டே இருக்கலாம். அத்தனை சிற்ப நுட்பங்கள். 'கஜுராஹோ'வில் உள்ளவை போன்று EROTIC வகைச் சிற்பங்களும் பெரும் அளவில் உள்ளன. ஆனால் முழுமையும் அவைதாம் என்பதற்கில்லை. நடன மாதர்கள், இசைக் கலைஞர்கள், போரிடும் வீரர்கள், யானைகளின் அணி வகுப்பு, நாக கன்னிகையர், வேட்டைக்காட்சிகள், மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் முனிவர்கள், வாணிகக் காட்சிகள், புராணக் காட்சிகள் என்று மனம்போன படியெல்லாம் வெகு நுட்பமான ஆற்றலோடு கல்லில் விளையாடியிருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. வெகு நுட்பமாகப் பொன் வெள்ளி ஆபரணங்களில் செதுக்குகிற மாதிரி எந்தக் கருவிகளைக் கொண்டு இந்த வடிவங்களை உருவாக்கினார்கள் என்பதை நினைத்து பார்க்கக்கூட முடியவில்லை.

    கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்க்கிற உயரத்தில், ஆளுயரச் சிற்பங்கள் அசத்தும் அழகோடு நிற்கின்றன. தேர்ச் சக்கரத்தின் ஆரக்கால்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் கதைகளைச் சொல்கிற நேர்த்தியில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

    தேரின் நான்கு திக்கிலும், சூரியக் கடவுளின் சிற்பங்கள் மட்டும் கருப்பு நிறக் கற்களில் ஆள் உயரத்துக்கும் அதிகமான ஆகிருதியில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன. அனைத்தும் கைகால்கள் முகங்கள் என்று உடைக்கப்பட்டுள்ள நிலையிலும் அழகுக்குக் குறைவே இல்லை. நம்முடைய மனசைக் கல்லாக்கிக் கொண்டுதான் பார்த்து ரஸிக்கவேண்டும் என்று காலமும், காதகர்களும் செய்துவிட்டிருக்கிறார்கள்.

    இந்த அழகுக்கலை வடிவங்களைச் சிதைத்து உருக்குலைத்து ஆனந்தப்பட்ட அரச பரம்பரையினரும் கால வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகப்பட்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

    ஒவ்வொரு புறமும், இடிபாடுகளைக்

    Enjoying the preview?
    Page 1 of 1