Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulagin Athisaya Idangal!
Ulagin Athisaya Idangal!
Ulagin Athisaya Idangal!
Ebook126 pages48 minutes

Ulagin Athisaya Idangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூவுலகில் இயற்கை தரும் அதிசயங்கள் கோடானு கோடி... அவற்றில் ஆங்காங்கே இருக்கும் அற்புத இடங்கள் வர்ணனைக்கு அப்பாற்பட்டவை. நாம் அறியாத பல இடங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் பலவற்றைப் பற்றிய விவரங்களை 30 அத்தியாயங்களில் தெளிவாக அளிக்கிறது இந்த நூல்.

அமேஸான் நதி, வானவில் பாலம், வானெர்ன் ஏரி, உர்குப் கூம்புகள், வெர்டான் பள்ளத்தாக்கு, மரகதத் தீவு, ஃப்ராசாஸி குகைகள், கல் மரங்கள், உலகின் மிக உயரமான வெய்ல் நீர்வீழ்ச்சி, மிரள வைக்கும் சாவுக்கடல், கெய்சர் வெந்நீர் ஊற்றுக்கள், அண்டார்டிகா ஐஸ், அழகிய ஆல்ப்ஸ், மனித இனம் தோன்றிய அதிசயங்களின் நாடு, லூர்தேஸ் - கிறிஸ்தவர்களின் அற்புத நகரம், ஆதாம் ஏவாள் காதலித்த இடம் போன்ற பூமியின் அதிசய இடங்களை இந்த நூல் சுவைபட விளக்குகிறது. படிக்கவும் பரிசு கொடுக்கவும் ஏற்ற நூல் இது.

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580151010256
Ulagin Athisaya Idangal!

Read more from S. Nagarajan

Related to Ulagin Athisaya Idangal!

Related ebooks

Reviews for Ulagin Athisaya Idangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulagin Athisaya Idangal! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உலகின் அதிசய இடங்கள்!

    Ulagin Athisaya Idangal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    முன்னுரை

    1. நடந்தாய் வாழி அமேஸான்!

    2. வானவில் பாலம்

    3. பிரமிக்கவைக்கும் வானெர்ன் ஏரி

    4. உர்குப் கூம்புகள்!

    5. வெர்டான் பள்ளத்தாக்கு!

    6. மரகதத்தீவு!

    7. ஃப்ராசாஸி குகைகள்

    8. உயிருள்ள மியூசியம்

    9. கல்மரங்கள்

    10. உலகின் உயரமான வெய்ல் நீர்வீழ்ச்சி!

    11. இயற்கையின் ஆனந்தக் கண்ணீர்! இக்வாகு நீர்வீழ்ச்சி

    12. மிரளவைக்கும் சாவுக் கடல்!

    13. கெய்சர் வெந்நீர் ஊற்றுகள்!

    14. அண்டார்டிகா ஐஸ்!

    15. அழகிய ஆல்ப்ஸ்

    16. இமயமலை நமது மலையே!

    17. பனிமனிதன் இருக்கிறானா?

    18. பிரமிக்க வைக்கும் ஒட்டகச்சிவிங்கி!

    19. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி!

    20. அதிசய தீவு! ஈஸ்டர் ஐலேண்ட்

    21. எட்னா எரிமலை சீறுகிறது

    22. மனித இனம் தோன்றிய அதிசயங்களின் நாடு!

    23. மனிதன் தோன்றிய இடம்

    24. லூர்தேஸ் – கிறிஸ்தவர்களின் ‘அற்புத நகரம்’!

    25. ஆதாம் ஏவாள் காதலித்த இடம் கண்டுபிடிப்பு!

    26. இமயமலை குகையில் வாழ்ந்த லண்டன் பெண்மணி!

    27. பதினெட்டு பாலைவனங்களில் ஒரு பயணம்!

    28. புலிக்கும் முதலைக்கும் அஞ்சாத அரசி!

    29. ஐஸ் ராணி

    30. டயானா டூர்!

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    பூவுலகில் இயற்கை தரும் அதிசயங்கள் கோடானு கோடி...

    அவற்றில் ஆங்காங்கே இருக்கும் அற்புத இடங்கள் வர்ணனைக்கு அப்பாற்பட்டவை. அவற்றில் சிலவற்றைச் சுட்டிக் காட்டும் இந்த நூல் முதலில் 2003ஆம் ஆண்டு அச்சுப் பதிப்பாக வந்தது. பின்னர் டிஜிடல் புத்தகமாக லண்டன் நிலாச்சாரல் சார்பாக திருமதி நிர்மலா ராஜு அவர்கள் வெளியிட்டார்.

    இப்போது பலரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் புத்தகம் மின்னணு நூலாகவும் அச்சுப் பதிப்பாகவும் வெளி வருகிறது.

    டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் இதை மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆண்டாண்டு காலமாக எனது எழுத்துப் பணிகளுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    பங்களூர்

    ச. நாகராஜன்

    9-9-2023

    முன்னுரை

    மேலை நாடுகளில் வாழும் சராசரி மனிதர் கூட தனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டு தோறும் சேமித்து வைத்து ஆண்டிற்கு ஒரு முறையேனும் சுற்றுலா இடங்களுக்குச் செல்வது வழக்கம்.

    சென்ற பல நூற்றாண்டுகளாக உலகின் பல்வேறு இடங்களுக்கு - அது எவ்வளவு கடினமாக பயணமாக இருந்தாலும் சரி - சென்று அதிசய இடங்களை ஆராய்ந்தோர் ஏராளம். இவர்களது துணிச்சல் நம்மை பிரமிப்புக்குள்ளாக்கும்.

    இப்படி இவர்கள் பார்த்து அறிந்த அதிசய இடங்கள் வியப்பூட்டுபவை! அறிவதற்கு ஆர்வம் ஊட்டுபவை! பல்வேறு சுவையான தகவல்களைத் தருபவை! நேரில் சென்று பார்க்கத் தூண்டுபவை!

    இவற்றை ‘இதயம் பேசுகிறது’ (பின்னால் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ என்ற பெயராக மாறியது) இதழில் வாரந்தோறும் கட்டுரைகளாக எழுதி வந்தேன். வாசகர்கள் படித்து மகிழ்ந்து பாராட்டினர்.

    புத்தக வடிவில் வந்தால் அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமையும் என்பதால் இது நூல் வடிவில் இப்போது மலர்கிறது.

    இந்தக் கட்டுரைகளைப் பிரசுரித்த சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கும், இதை எழுத ஊக்குவித்த திரு.மா.முருகன், திரு.தாய் பிரபு ஆகியோருக்கும் என் நன்றி உரித்தாகுக.

    இத்துடன் பல்வேறு ஆபத்துக்களை எதிர் கொண்டு புது இடங்களுக்குப் பயணித்தோர், இமயமலை குகை உள்ளிட்டஇடங்களில் புது அனுபவம் பெற்றோர் பற்றிய கட்டுரைகளும் லூர்தெஸ் நகர அற்புதம், பனி மனிதன் ஆகியக ட்டுரைகளும் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இவை ‘மினி பாக்யா’ வார இதழிலும், கோகுலம் கதிர் மாத இதழிலும் அவ்வப்போது வெளியிடப்பட்டவை. இவற்றை அழகுறப் பிரசுரித்த மினிபாக்யா ஆசிரியர் திரு.கே.பாக்யராஜ் அவர்களுக்கும் கோகுலம் கதிர் ஆசிரியர் திருமதி. கமலி ஸ்ரீபால் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நூலை வெளியிட அன்புடன் இசைந்த தெய்வானை பதிப்பகத்தாருக்கும் என் அன்பு கலந்த நன்றி.

    புதிய இடங்களைப் பற்றிய வியப்பூட்டும் செய்திகளைப் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த நூலைக் காணிக்கை ஆக்குகிறேன்.

    சென்னை

    ச.நாகராஜன

    5.10.2003

    1. நடந்தாய் வாழி அமேஸான்!

    ‘நதிமூலம் ரிஷிமூலம்’ பார்க்காதே என்பார்கள். ஆனால் உலகின் இரண்டாவது பெரிய நதியான அமேஸானின் ஆதிமூலத்தை அறிவியல் பார்க்கத் துணிந்து விட்டது.

    பெருவிலுள்ள ஆண்டஸ் மலையில் 17000 அடி உயரத்தில் உள்ளது அழகிய ஏரி லாரிகோச்சா. இதுவே அமேஸான் நதியின் மூலம்.

    இங்கிருந்து பிறக்கும் நதி 4000 மைல் தூரம் நடை பயின்று ‘நடந்தாய் வாழி காவேரி’ என்று நம் காவேரியைப் புகழ்வது போல் ‘வாழி அமேஸான்’ என்ற புகழுடன் பல இடங்களில் பல பெயர்களால் அழைக்கப்பட்டு, அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் கலக்கிறது.

    நைலுக்கு அடுத்தபடியாக ‘உலகின் இரண்டாவது பெரிய நதி’ என்று பெயர் பெற்ற அமேஸானில் 1500 வகைக்கும் மேலான மீன் வகைகள் உயிர் வாழ்கின்றன!

    இந்த எண்ணிக்கை, ஐரோப்பாவில் உள்ள அனைத்து நதிகளில் வாழும் மீன் வகைகளை விடப் பத்து மடங்கு அதிகம்! ஆப்பிரிக்காவின் ‘ஜைரே’ நதியின் மீன்வகைகளைப் போல மூன்று மடங்கு அதிகம்.

    பதினாறு அடி நீளமுள்ள ‘பிராருகு’ என்ற 200 கிலோஎடை உள்ள மீன் வகை, ஆக்சிஜன் குறைந்த சதுப்பு நிலத் தண்ணீரிலே கூட வாழ்கிறதாம்! ‘சிவப்பு பிரான்ஹா’ என்ற இன்னொரு வகை மீன், காயம் பட்ட மிருகங்களைச் சில நொடிகளில் எலும்புக் கூடாக்கி விடும்!

    மனிதர்களைத் தாக்கி மகிழும் ‘கருப்பு கைமன்’ என்னும் முதலை ரகம்-’கறுப்பு யமன்’ என்று பெயர் மாற்றி அழைக்க வேண்டிய அளவு அபாயகரமான ரகம்!

    இந்த நதியின் நீரின் அளவு மூளையைக் கிறங்கடித்து விடும்.

    1100 கிளை நதிகளுடன் (இவற்றில் 17, ஐரோப்பாவின் ரைனை விடப் பெரியதாம்!) ஆவேசமாக ஓடிவரும் நதியில்,ஒரு நாள் ஓடும் நீரின் அளவு, உலகில் ஓடும் நதிகளில் மூன்றில் இரண்டு பங்கு நீருக்குச் சமம்!

    ஒரு வருடத்தில் தேம்ஸ் நதி, கடலில் சங்கமமாக்கும் நீரின் அளவை ஒரே நாளில் கடலில் கலக்கிறது அமேஸான்!

    அசுர வேகத்தில் கடலில் கலக்கும் அமேஸான், கடலின் உப்பு நீரை 100 மைல் தூரம் பின்னுக்குத் தள்ளி, தூய நீர்ப் பரப்பை ஏற்படுத்துகிறது என்றால் அது சாதாரண விஷயமா என்ன?

    ‘ரியோ நீக்ரோ’ என்ற பெரிய (கறுப்பு நீர்) கிளை நதியும்; ‘சொலிமோஸ்’ என்ற பெரிய (தூயநீர்) நதியும் இணைந்து அமேஸானாகப் பிறக்கும் தருணத்தில், இந்த இரு நதிகளின் எல்லையற்ற வேகத்தால் 4 மைல் தூரம் இணையாக இரண்டும் ஓடியபி ன்னரே ஒன்றாகக் கலக்கமுடிகிறது!

    1542-ம் வருடம் 60 ஸ்பானிஷ் வீரர்களுடன் ‘காப்டன்பிரான்ஸிஸ்கோ டீ ஒரில்லனா’ என்பவர் அமேஸானை

    Enjoying the preview?
    Page 1 of 1