Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Seppu Mozhi Ainooru +
Seppu Mozhi Ainooru +
Seppu Mozhi Ainooru +
Ebook124 pages54 minutes

Seppu Mozhi Ainooru +

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிந்தனையாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், நடிக, நடிகையர் என பலரும் காலம் காலமாக முத்திரை வாக்கியங்களைச் சொல்லி அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்கின்றனர். இவைகளில் பல பொன் மொழிகள்; சில FUN மொழிகள்!

சிந்தனைக்கு விருந்தாகவும் வழிகாட்டியாகவும் அமைபவை பல; எனில் வேடிக்கையாகவும் நையாண்டி மொழிகளாகவும் மிளிர்பவை சில. காலம் காலமாக பல்வேறு நாடுகளிலும் பழமொழிகளும் சுவையானவை; சிந்தனைக்கு விருந்தளிப்பவை. அவ்வப்பொழுது இவற்றைப் பயன்படுத்தி அனைவரையும் மகிழ்விக்கலாம். உத்வேகமூட்டும் மொழிகளால் வாழ்க்கைப் பாதையை நல்ல விதமாகவும் வகுத்துக் கொள்ளலாம்.

இவற்றில் 500 + மொழிகளை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மூலம் உள்ளது; தமிழாக்கமும் செய்யப்பட்டுள்ளது. சிந்தனைக்கு விருந்தளிக்கும் தேன் மொழிகளை அனைவரும் படித்து ஆனந்திக்கலாம்.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580151009435
Seppu Mozhi Ainooru +

Read more from S. Nagarajan

Related to Seppu Mozhi Ainooru +

Related ebooks

Reviews for Seppu Mozhi Ainooru +

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Seppu Mozhi Ainooru + - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    செப்பு மொழி ஐநூறு +

    Seppu Mozhi Ainooru +

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. செப்பு மொழி முதல் நூறு! (1 முதல் 100 முடிய)

    2. செப்பு மொழி 101 முதல் 200 முடிய

    3. செப்பு மொழி 201 முதல் 300 முடிய

    4. செப்பு மொழி 301 முதல் 400 முடிய

    5. செப்பு மொழி 401 முதல் 500 + முடிய

    6. வாழும் வழி: கட்டளை புதிது!

    என்னுரை

    சிந்தனையாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், நடிக, நடிகையர் என பலரும் காலம் காலமாக முத்திரை வாக்கியங்களைச் சொல்லி அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்கின்றனர்.

    இவைகளில் பல பொன் மொழிகள்; சில FUN மொழிகள்!

    சிந்தனைக்கு விருந்தாகவும் வழிகாட்டியாகவும் அமைபவை பல; எனில் வேடிக்கையாகவும் நையாண்டி மொழிகளாகவும் மிளிர்பவை பல.

    காலம் காலமாக பல்வேறு நாடுகளிலும் பழமொழிகளும் சுவையானவை; சிந்தனைக்கு விருந்தளிப்பவை.

    அவ்வப்பொழுது இவற்றைப் பயன்படுத்தி அனைவரையும் மகிழ்விக்கலாம். உத்வேகமூட்டும் மொழிகளால் வாழ்க்கைப் பாதையை நல்ல விதமாகவும் வகுத்துக் கொள்ளலாம்.

    இவற்றையெல்லாம் அவ்வப்பொழுது படித்து அவற்றைத் தொகுத்துச் சேர்ப்பது எனது வழக்கமாக இருந்தது; ஆனால் இப்போதோ இவை இணைய தளத்தில் ஏராளமாக மிதக்கின்றன.

    இவற்றில் 500 + மொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து இங்கு தொகுத்துத் தருகிறேன்.

    ஆங்கிலத்தில் மூலம் உள்ளது; தமிழாக்கம் என்னுடையது.

    இவை அனைத்து செப்பு மொழி பதினெட்டு, பத்தொன்பது, இருபது என்று பற்பல கட்டுரைகளாக அவ்வப்பொழுது www.tamilandvedas.com தளத்தில் வெளி வந்தன. இவற்றை வெளியிட்ட லண்டன் திரு.ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    இந்த செப்பு மொழிகளைப் படித்து அவ்வப்பொழுது பாராட்டி ஊக்கமூட்டிய அனைத்து அன்பர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    இதை நூல் வடிவில் அழகுற வெளியிட முன் வந்த pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    நன்றி.

    பெங்களூர்

    ச.நாகராஜன்

    14-12-2022

    1. செப்பு மொழி முதல் நூறு! (1 முதல் 100 முடிய)

    1. சத்யமேவ ஜயதே - முண்டக உபநிஷத்

    சத்தியமே வெல்லும்.

    Satyameva Jayate - Mundaka Upanishad

    Truth alone triumphs.

    2. அஹம் ப்ரஹ்மாஸ்மி

    நானே பிரம்மம் - பிருஹதாரண்யக உபநிஷத்

    Aham Brahmasmi - Brihadaranyaka Upanishad

    I am Brahma - the divine

    3. ஏகமேவாத்வீதியம் ப்ரஹ்ம - சாந்தோக்ய உபநிஷத்

    ப்ரம்மம் (உண்மை) ஒன்றே, இரண்டில்லை

    Ekamevadvitiyam Brahma - Chandokya Upanishad

    Brahman - the divine is one without a second

    4. மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ,

    அதிதி தேவோ பவ - தைத்ரீய உபநிஷத்

    தாயே தெய்வம், பிதாவே தெய்வம், ஆசார்யரே தெய்வம்,

    அதிதியே தெய்வம்.

    Matrudevo bhava, Pitrudevo bhava, Acharyadevo bhava, Atithidevo bhava – Taittiriya Upanishad

    Let your mother be a goddess unto you. Let your father be a god unto you. Let your teacher be a god unto you. Let your guest be a god unto you.

    5. அஸதோ மா ஸத் கமய

    தமஸோ மா ஜோதிர் கமய்

    ம்ருத்யோர் மா அம்ருதம் கமய

    அஸத்திலிருந்து ஸத்திற்கு என்னை இட்டுச் செல்

    இருளிலிருந்து ஒளிக்கு என்னை இட்டுச் செல்

    இறப்பிலிருந்து இறவாமைக்கு என்னை இட்டுச் செல் -

    - ப்ருஹதாரண்யக உபநிஷத்

    Asato Ma Sadgamaya,

    Tamaso Ma Jyotirgamaya,

    Mrtyorma Amrtam Gamaya

    From falsehood lead me to truth,

    From darkness lead me to the light,

    From death lead me to immortality.

    – Brihadaranyaka Upanishad

    6. கனவு நனவாவது மாஜிக்கினால் அல்ல. வியர்வை, உறுதி, கடும் உழைப்பு ஆகியவையே அதற்குத் தேவை. - காலின் பாவெல்

    A dream doesn't become reality through magic; it takes sweat, determination and hard work."

    - Colin Powell.

    7. எனக்கு நேரமில்லை என்று சொல்லாதீர்கள். ஹெலன்கெல்லர், பாஸ்டர், மைக்கேல் ஏஞ்சலோ, மதர் தெரஸா, லியனார் டோ டாவின்சி, தாமஸ் ஜெஃபர்ஸன், ஆல்பர் ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் இருந்ததோ அதே அளவு நேரம் உங்களுக்கும் இருக்கிறது - ஹெச். ஜாக்ஸன் ப்ரௌன் ஜூனியர்

    Don't say you don't have enough time. You have exactly the same number of hours per day that were given to Helen Keller, Pasteur, Michelangelo, Mother Teresa, Leonardo da Vinci, Thomas Jefferson, and Albert Einstein.

    - H. Jackson Brown Jr.

    8. உலகில் உள்ள மிக அருமையான அழகான விஷயங்கள் இதயத்தினால் உணரப்பட வேண்டும்.

    - ஹெலன் கெல்லர்

    The best and most beautiful things in the world must be felt with the heart.

    - Helen Keller

    9. வெற்றிகரமான வாழ்க்கையின் முழு ரகசியம் ஒருவனுடைய விதி அவனை என்ன செய்யச் சொல்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதைச் செய்வது தான்! - ஹென்றி ஃபோர்ட்

    The whole secret of a successful life is to find out what is one's destiny to do, and then do it.

    - Henry Ford

    10. வாழ்க்கையின் மிக மோசமான தருணங்களில் தான் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும்.

    - அரிஸ்டாடில் ஒனாஸிஸ்

    It is during our darkest moments that we must focus to see the light.

    - Aristotle Onassis.

    11. விஷயங்களைச் சிறப்பாகச் செய்யும் வழியை அமைக்கும் ஒருவருக்கே விஷயங்கள் சிறப்பாக அமைகின்றன.

    - ஜான் வுடன்

    Things work out best for those who make the best of the way things work out.

    - John Wooden.

    12. நேற்று நான் மிகவும் புத்திசாலித்தனத்துடன் இருந்தேன். ஆகவே நான் உலகை மாற்ற விரும்பினேன். இன்று நான் விவேகத்துடன் இருக்கிறேன். ஆகவே நான் என்னை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    - ரூமி

    Yesterday I was clever, so I wanted to change the world. Today I am wise, so I am changing myself.

    - Rumi.

    13. நான் நான்கு ஆணைகளைக் கடைப்பிடிக்கிறேன். எதிர் கொள். ஏற்றுக் கொள், நடவடிக்கை

    Enjoying the preview?
    Page 1 of 1