Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Adharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal
Adharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal
Adharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal
Ebook161 pages1 hour

Adharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அதர்வண வேதத்தில் நிறைய சுவையான விஷயங்கள் இருக்கின்றன; மூலிகைகள் பற்றியும், பேய்களை விரட்டுவது பற்றியும், மந்திரங்கள் மூலம் நோய்களை குணப்படுத்துவது பற்றியும் மந்திரங்கள் இருக்கின்றன.

இந்த நூலில் பூமி சூக்தம் பற்றி விரிவாக விளக்கியுள்ளேன், அத்தோடு என்னுடைய வியாக்கினத்தையும் சேர்த்துள்ளேன். அதர்வண வேதத்தில் புரியாத பல விஷயங்களும் இருப்பதால் ஆராய அதிகம் வாய்ப்பு இருக்கிறது. உலக நலனுக்கான பல மந்திரங்கள் இருப்பதால் இதை பாதுகாப்பது அவசியமாகிறது.

Languageதமிழ்
Release dateNov 5, 2022
ISBN6580153509231
Adharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal

Read more from London Swaminathan

Related to Adharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal

Related ebooks

Reviews for Adharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Adharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal - London Swaminathan

    http://www.pustaka.co.in

    அதர்வண வேத பூமி சூக்தம் சொல்லும் வியப்பான செய்திகள்

    Adharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பூமி எப்படி விழாமல் நிற்கிறது? தமிழன், வேத ரிஷி கண்ட உண்மை!

    2. பிராமணர்களுக்கு தமிழர்கள் வாரி வழங்கியது ஏன்?

    3. எந்தையும் தாயும் போரிட்டு வென்றதும் இந்நாடே

    4. பூமாதேவிக்கு தங்க முலைகள், அமுத இதயம் – புலவன் வருணனை

    5. பூமா தேவியே நீ என் தாய், நான் உன் புதல்வன்

    6. ஐந்து இன இந்துக்கள் குடியேறிய நாடுகள்

    7.முனிவர்கள் விஞ்ஞானிகளா ? பூமியின் வேகம் எப்படித் தெரிந்தது ?

    8.பூமிக்குள் நெருப்பு – வேதம் சொல்லும் அதிசய விஞ்ஞானம்

    9.நான் திருமணப் பெண் போல மணக்க வேண்டும் – புலவன் ஆசை

    10.காக்கை, குருவி எங்கள் ஜாதி -பாரதி; குதிரை, யானை எங்கள் ஜாதி-

    11.பொறுமைக்கு உதாரணம் பூமாதேவி – தமிழன் கண்ட உண்மை

    12.பூமியின் இருதயத்தைப் பிளக்காதே – வேத முனிவன் அறிவுரை

    13.ஆடலும் பாடலும் நிறைந்த ஆனந்த வேத காலம்

    14.பூமியில் புதைந்துள்ள தங்கமும் வைரமும் தருக: புலவன் வேண்டுகோள்

    15.பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் – அதர்வண வேதப்புலவன் பாட்டு

    16.வெனி, விடி, விசி- ஜூலியஸ் சீஸரும் அதர்வண வேதமும்

    17.அவை, சட்டை, சட்ட – தமிழ் சொற்கள் இல்லை; சட்ட மேலவை என்பது ஸம்ஸ்க்ருதம்

    18.கீதை ஸ்லோகத்துடன் முடியும் பூமி சூக்தம்!

    19.அதர்வண வேதத்தில் ஒரு அற்புதப் பாடல்!

    20.அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம்- பிராணிகள் கற்பிக்கும் பாடம்-1

    21.அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம்- பிராணிகள் கற்பிக்கும் பாடம் -2

    22.அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம் - பிராணிகள் கற்பிக்கும் பாடம் 3

    23.அதர்வண வேத ரத்தினங்கள்

    24.வினவுங்கள் விடை தருவோம்: அதர்வ வேத புத்தகங்கள்

    முன்னுரை

    அதர்வண வேதத்தில் நிறைய சுவையான விஷயங்கள் இருக்கின்றன; மூலிகைகள் பற்றியும், பேய்களை விரட்டுவது பற்றியும், மந்திரங்கள் மூலம் நோய்களை குணப்படுத்துவது பற்றியும் மந்திரங்கள் இருக்கின்றன. நான் முன்னர் எழுதி வெளியிட்ட, மூலிகைகள், பேய்கள் தொடர்பான நூல்களில் பல கட்டுரைகள் இருக்கின்றன. உலக நலனுக்கும், நல்ல குணங்களைப் பெறுவதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. சகுனங்கள், கனவுகள், பழங்கால பழக்க வழக்கங்கள் பற்றிய விஷயங்கள் ஆராய்ச்சிக்குரியவை. இந்த நூலில் பூமி சூக்தம் பற்றி விரிவாக விளக்கியுள்ளேன், அத்தோடு என்னுடைய வியாக்கினத்தையும் சேர்த்துள்ளேன். அதர்வண வேதத்தில் புரியாத பல விஷயங்களும் இருப்பதால் ஆராய அதிகம் வாய்ப்பு இருக்கிறது. உலக நலனுக்கான பல மந்திரங்கள் இருப்பதால் இதை பாதுகாப்பது அவசியமாகிறது. இந்த வேதத்திலுள்ள வேறு பல விஷயங்கள் தனி நூலாக வரும். .பத்தாண்டுக் காலத்துக்கு மேல் தனித்தனி கட்டுரைகளாக என் பிளாக்கில் எழுதியதால் சில விஷயங்கள் திரும்ப வரவும் கூடும். முதலில் கட்டுரை வெளியான தேதியும், வரிசை எண்ணும் ஆங்காங்கங்கே காணப்படும். படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை எனக்கு அனுப்ப வேண்டுகிறேன்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    நவம்பர் 2022

    1. பூமி எப்படி விழாமல் நிற்கிறது? தமிழன், வேத ரிஷி கண்ட உண்மை!

    அதர்வண வேத பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை-1

    பூவுலகத்தைப் பற்றி வேதகால மனிதன் சிந்தித்திருக்கிறான். அது மட்டுமல்ல. அவனுக்கு பூமி பற்றி மிகப் பரந்த விஞ்ஞான அறிவு இருந்திருக்கிறது. .3 விஷயங்கள் வேதத்தில் தெளிவாக உள்ளன.

    1.பூமி என்பது வட்ட வடிவமானது .

    2.பூமி என்பது அந்தரத்தில் நிற்கிறது.

    3.அது விழாமல் இருப்பதற்கு ஈர்ப்பு விசையே காரணம்

    பூமியை அண்டம்/முட்டை, கோளம் என்றே வருணித்துள்ளனர்; பிரபஞ்சமே வட்ட வடிவில் பலூன் போல ஊதிப் பெருத்து வருகிறது என்பதையும் அவர்கள் அறிவர்; தமிழர்களும் இதை பின்பற்றி மிகவும் பிற்காலத்தில் பாடி வைத்தனர்

    பூமியை ஏதோ தாங்கி நிற்கிறது? அது எது? என்ற கேள்வியை எழுப்பி விடை காண்கின்றனர். அதிலிருந்து இந்த பூமி விழாமல் இருக்கிறது என்ற கருத்து தொனிப்பதைக் காணலாம். ஏன் ‘தாங்கி’, ‘பாரத்தைச் சுமந்து’ என்ற சொற்கள் வந்தன? பிற்காலத்தில் ஆதி சேஷன் தலையில் பூமி நிற்பதாகவும் , ஆமை முதுகில் நிற்பதாகவும் சொன்னதற்கு வேறு காரணங்கள் உள. .இதற்கு தார்மீக காரணம் ஒன்று; விஞ்ஞான காரணம் ஒன்று. அது பற்றி விரிவாகச் சொல்கிறேன்.

    ‘கிரஹ’ (GRIP, GRAB, GRAVITY – ALL ARE DERIVED FROM SANSKRIT GRAHA) என்று சூரியன், சந்திரன், பூமி எல்லாவற்றுக்கும் பெயரிட்டனர் முன்னோர்கள். இதன் பொருள் ‘பிடித்தல்’. ‘பாணிக் கிரஹணம்’ என்றால் ‘கைப்பிடித்தல்’ = கல்யாணம்; ‘சந்திர கிரஹணம், சூரிய கிரஹணம்’ என்றால் ஒரு நிழல் அவைகளைப் பிடிக்கிறது. ஆங்கிலத்தில் பிடித்தல், ஈர்த்தல் என்ற எல்லா சொற்களும் ‘கிரஹ’ (GRIP, GRAB, GRAVITY) என்ற வேர்ச் சொல்லில் இருந்தே வருகிறது. ஆக, கிராவிடி GRAVITY என்னும் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே. தமிழர்களும் சம்ஸ்கிருதத்தை அப்படியே மொழி பெயர்த்து ‘கோள்’ என்றனர். கொள் (USED AS SUFFIX IN REFLEXIVE VERBS MEANING YOU KEEP IT FOR YOURSELF- YOU GRAB IT) என்ற வினைச் சொல்லுக்கும் ‘பற்றுதல், பிடித்தல்’ என்றே பொருள்.

    அதர்வண வேதத்தின் 12 ஆவது காண்டத்தின் முதல் துதி பூமி சூக்தம்; 63 பாடல்கள் அல்லது மந்திரங்கள் அடங்கியது. இதை உலகம் முழுதும் கட்டாய பாடமாக (COMPULSORY LESSON FOR ALL STUDENTS) வைக்கவேண்டும். அற்புதமான விஞ்ஞான, சமூக, இயற்கை, மற்றும் புறச் சூழல் விஷயங்களை ஒருவர் அருமையாகப் பாடியுள்ளார்..

    அதை விரிவாக ஆராய்வதோடு ஆங்காங்கே ஒப்பிட்டும் காட்டுகிறேன்.

    ‘வையகமும் துயர் தீர்கவே’ என்று சம்பந்தர் பாடினார்; அது ‘லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து’ என்பதன் மொழியாக்கம். அந்தக்கருத்து இந்தப்பாடலில் வருகிறது. ‘மைத்ரீம் பஜத’ என்ற சம்ஸ்கிருதப் பாடலை இயற்றி, அதை எம்.எஸ் சுப்புலக்ஷ்மி மூலம் ஐ.நா சபையில் பாடவைத்தார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ;அந்தக் கருத்தும் இதில் வருகிறது .

    ஒன்று பரம்பொருள் – நாம் அதன் மக்கள் உலகு இன்பக் கேணி என்று பாரதியார் சொல்லும் கருத்ததும் இப்பாடலினின்று பிறந்த கருத்தே .

    காண்டம் 12; சூக்தம் 474; பூமி (12 ஆவது காண்டத்தில் முதல் துதி)

    ஸத்யம் ப்ருஹத்துதமுக்ரம் தீக்ஷ தபோ ப்ரஹ்ம யக்ஞ ப்ருதிவீம் தாரயந்தி

    ஸா நோ பூதஸ்ய பவ்யஸ்ய பத்ன்யுரும் லோகம் ப்ருதிவீ நஹ க்ருணோது

    எவ்வளவு எளிமையான சொற்கள்; இந்திய மொழிகள் அறிந்த அனைவருக்கும் தெரிந்த சத்யம் /வாய்மை, தவம், தீட்சை, ருதம், பிரம்மம், யக்ஞம், பிருத்வீ, உக்ரம் — இவைதான் முதல் மந்திரத்தில் வருகின்றன .

    இந்த உலகம் எப்படி இன்றும் விழாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது ? பூமி முட்டை வடிவில் இருந்தால் சமுத்திர நீர் ஏன் கீழே விழாமல் இருக்கிறது? வட்ட வடிவ அண்டத்தில் (அண்டம் = முட்டை) கீழே இருப்போர் எப்படி தலை கீழாக நின்றும் விழாமல் இருக்கிறார்கள்?

    இவ்வளவு கேள்விகளுக்கும் தமிழன் சொன்ன விடை :-

    புறநானூறு பாடல் 182. உண்டாலம்ம இவ்வுலகம்!

    பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (182).

    இவன் புறநானூற்றில் உள்ள இப்பாடலை இயற்றியதோடு மட்டுமல்லாமல், திருமாலின் பெருமையைப் புகழ்ந்து பரிபாடலில் உள்ள 15-ஆம் செய்யுளையும் இயற்றியவன்.

    உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

    அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

    தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

    துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

    புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

    உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

    அன்ன மாட்சி அனைய ராகித்

    தமக்கென முயலா நோன்தாள்

    பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

    "இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம்

    Enjoying the preview?
    Page 1 of 1