Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muppathu Katturaigalil Hindu Madha Athisayangal!
Muppathu Katturaigalil Hindu Madha Athisayangal!
Muppathu Katturaigalil Hindu Madha Athisayangal!
Ebook144 pages47 minutes

Muppathu Katturaigalil Hindu Madha Athisayangal!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

‘முப்பது கட்டுரைகளில் இந்து மத அதிசயங்கள்!’ என்னும் இந்த நூல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நான் எனது இரண்டு 'பிளாக்'குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

2011-ம் ஆண்டு முதல் 2021 வரை எழுதிய கட்டுரைகளின் முதல் பகுதிதான் இது. இந்து மதம் பற்றி இன்னும் நிறைய கட்டுரைகள் உள்ளன. அவை இன்னும் ஒரு தொகுதியில் இடம்பெறும். ஆங்கிலத்தில் இந்துமதம் பற்றியும் வேதங்களைப் பற்றியும் ஆயிரக்கணக்கான புதிய நூல்கள் உள்ளன. தமிழ் மொழியில் அத்தகைய நூல்கள் குறைவு. என்னுடைய இந்த நூல் கட்டுரைகளின் தொகுப்பு . கட்டுரைகளாக எழுதியதால் சொன்ன விஷயங்களே மீண்டும் வரக்கூடிய ஒரு குறைபாடு இருக்கும். இதன் மூலம் தமிழ் மக்கள் அறியாத பல புதிய விஷயங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன் . என்னுடைய கருத்துக்களை தனியாகவே நான் தந்துள்ளேன். அவைகளை ஏற்பதும் ஏற்காததும் உங்களின் தனிப்பட்ட உரிமை ஆகும்.

ஆங்கில நூலாசிரியர்கள் சொன்னதையே மொழி பெயர்க்காமல் ஆங்காங்கே தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒப்புவமைகளும் இருக்கும் . இந்து மதத்தின் பெருமையை எடுத்துக்காட்ட தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் தேதிகளுடனும், எனது பிளாக்கில் வெளியான எண்களுடனும் தரப்பட்டுள்ளன. படித்துப் பயனுறுமாறும் நம்முடைய மதத்தின் பெருமையை ஏனையோருக்கு எடுத்துரைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580153508499
Muppathu Katturaigalil Hindu Madha Athisayangal!

Read more from London Swaminathan

Related to Muppathu Katturaigalil Hindu Madha Athisayangal!

Related ebooks

Related categories

Reviews for Muppathu Katturaigalil Hindu Madha Athisayangal!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muppathu Katturaigalil Hindu Madha Athisayangal! - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முப்பது கட்டுரைகளில் இந்து மத அதிசயங்கள்!

    Muppathu Katturaigalil Hindu Madha Athisayangal!

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஆசிரியரைப் பற்றி

    1. அதிசயங்கள் நிறைந்த ஆகம நூல்

    2. அறுபது நகரங்களுக்குச் சென்ற மணி - சுவையான சம்பவங்கள்

    3. நீர் மேல் நடக்கும் அற்புத வித்தை!

    4. திருமந்திரத்தில் ரிக்வேத வரிகள்!

    5. மஹாலெட்சுமி வசிக்கும் இடங்கள்: புறநானூறு தகவல்

    6. வெள்ளைக்காரன் விளக்கங்களை நம்பாதே - குமாரிலபட்டர்

    7. தீர்த்த யாத்திரை அவசியமா?

    8. கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்? அப்பர் கேள்வி; பட்டினத்தார் முத்திரை

    9. நாடகமே உலகம்: அமீ யந்த்ரம், துமீ யந்த்ரீ

    10. அழுதால் அவனைப் பெறலாமே: ராமகிருஷ்ண பரமஹம்சர்

    11. இந்துக்களுக்கு ஏன் இவ்வளவு சட்ட புத்தகங்கள்? நாகரீக வளர்ச்சியா? பின்னடைவா?

    12. ஞானிகள், முனிவர்கள், மஹான்கள் எங்கே பிறப்பார்கள்?

    13. உடுப்பி கிருஷ்ணன் பற்றிய அதிசயத் தகவல்கள்

    15. அஷ்ட சரஸ்வதி, அஷ்ட சக்தி

    16. உள்ளம் பெருங்கோயில் - ‘சரீரமாத்யம் கலு தர்மசாதனம்’

    17. நலம் தரும் சொல்: திருமங்கை ஆழ்வார் கண்டுபிடிப்பு!

    18. ஆனந்தம் / மகிழ்ச்சி எத்தனை வகை?

    19. ஆற்றலின் மகனே! கட்டிளங் காளையே! அக்கினி தேவனே!

    20. கடவுளை வணங்க வேண்டிய நேரங்கள்

    21. ஏழு யக்ஞங்கள், ஏழு சந்தங்கள், ஏழு ஸ்வரங்கள்

    22. கல்லால் அடித்தாலும் காப்பாற்றுகிறாயே! தாயுமானவர் வியப்பு!

    23. ஆண்டவா! என்னால் பிரயோசனம் உனக்கு ஏதுண்டு? - பட்டினத்தார்

    24. மனைவி பற்றி யஜூர் வேதம்

    25. ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கிய சான்றுகள்

    26. பக்தர்கள் ஆனாலும் மருந்து சாப்பிடுக: ஆதிசங்கரர் அறிவுரை

    27. இந்துக்கள், இலக்கணத்தை வழிபடுவது ஏன்?

    28. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! அதிதி தேவோ பவ;

    29. ஆண் புலி பாண்டு மஹாராஜன்! செக்ஸ் பற்றிய உண்மை!

    30. மந்திரமும் யந்திரமும் யாருக்குப் பலன் தரும்? தமிழர் கண்டுபிடிப்பு!

    முன்னுரை

    ‘முப்பது கட்டுரைகளில் இந்து மத அதிசயங்கள்!’ என்னும் இந்த நூல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நான் எனது இரண்டு ‘பிளாக்’குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

    2011-ம் ஆண்டு முதல் 2021 வரை எழுதிய கட்டுரைகளின் முதல் பகுதிதான் இது. இந்து மதம் பற்றி இன்னும் நிறைய கட்டுரைகள் உள்ளன. அவை இன்னும் ஒரு தொகுதியில் இடம்பெறும். ஆங்கிலத்தில் இந்துமதம் பற்றியும், வேதங்களைப் பற்றியும் ஆயிரக்கணக்கான புதிய நூல்கள் உள்ளன. தமிழ் மொழியில் அத்தகைய நூல்கள் குறைவு. என்னுடைய இந்த நூல் கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகளாக எழுதியதால் சொன்ன விஷயங்களே மீண்டும் வரக்கூடிய ஒரு குறைபாடு இருக்கும். இதன்மூலம் தமிழ் மக்கள் அறியாத பல புதிய விஷயங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய கருத்துக்களை தனியாகவே நான் தந்துள்ளேன். அவைகளை ஏற்பதும், ஏற்காததும் உங்களின் தனிப்பட்ட உரிமை ஆகும்.

    ஆங்கில நூலாசிரியர்கள் சொன்னதையே மொழி பெயர்க்காமல் ஆங்காங்கே தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒப்புவமைகளும் இருக்கும்.

    இந்து மதத்தின் பெருமையை எடுத்துக்காட்ட தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் தேதிகளுடனும், எனது பிளாக்கில் வெளியான எண்களுடனும் தரப்பட்டுள்ளன. படித்துப் பயனுறுமாறும், நம்முடைய மதத்தின் பெருமையை ஏனையோருக்கு எடுத்துரைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

    உங்கள் கருத்துக்களை எழுதுவதற்காக எனது ஈமெயில் முகவரிகளையும் கொடுத்து இருக்கிறேன். அச்சடித்த புஸ்தகம் வேண்டுமாயின் எழுதவும்.

    பாரதியார் சொன்னதை இங்கு நினைவுபடுத்தல் பொருத்தமாக இருக்கும்:

    எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில்

    வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர்

    தப்பாதே இவ்வுலகில் அமரநிலை

    பெற்றிடுவார்! சதுர் வேதங்கள்

    மெய்ப்பான - சாத்திரங்கள் எனும் இவற்றால்

    இவ்வுண்மை விளங்கக் கூறும்

    துப்பான மதத்தினையே ஹிந்துமத

    மெனப் புவியோர் சொல்லுவாரே

    அன்புடன்

    ச. சுவாமிநாதன்,

    மே, 2022

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன் (SANTANAM SWAMINATHAN), தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக்கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ. பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் (Dr. Stuart Blackburn) இணைந்து செயல்பட்டார்; 2014 முதல் ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார்.

    லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். பத்து தமிழ் புஸ்தகங்களையும், 6000 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மூன்று நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவருடைய தந்தை வெ. சந்தானம் (V. SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும், பிளாக் விவரங்களும் பின்வருமாறு:-

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697

    Blogs:

    tamilandvedas.com

    swamiindology.blogspot.com

    1. அதிசயங்கள் நிறைந்த ஆகம நூல்

    இருபத்தெட்டு சைவ ஆகம நூல்களில் பத்தாவது இடத்தில் நிற்கும் ஆகம நூல் - சுப்ரபேதாகமம். அதன் புதிய பதிப்பு வெளிவரப்போகிறது என்று திரு. கல்யாண சுந்தர சிவாச்சார்யார் சொன்னவுடனே அது பற்றி அறிய ஆவல் எழுந்தது. ஆகமம் என்றவுடனே ஏதோ சிவாச்சார்யார்களுக்கும், பட்டாச்சார்யாக்களுக்குமே பயன்படும் என்று நினைத்து பெரும்பாலோர் படிக்காமல் விட்டுவிடுவார்கள். அது மட்டுமல்ல; இது பற்றிய எந்தக் கட்டுரை அல்லது நூலை எடுத்தாலும் பாமர மக்களுக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1